Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆடி அமாவாசையும், ஆத்ம தர்ப்பணமும்! - ஒரு பார்வை
4 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
ஆடி அமாவாசையும், ஆத்ம தர்ப்பணமும்! - ஒரு பார்வை
ஆடி அமாவாசை தர்ப்பண பூஜை - மண்ணுலகை விட்டு விண்ணுலகெய்தி சிவபதம் அடைந்த சகல ஆத்மாக்களுக்கும் செய்யப்படும் பூஜை ஆகும். இந்த வருடம், எதிர்வரும் ஜூலை 30ம் திகதி (சனிக்கிழமை) ஆடி அமாவாசை தர்ப்பண தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
ஆட்மாக்கள் மோட்சகதி அடைந்து இறைவன் அடி சேர்ந்தபின் எமது வாழ்க்கையில் நடக்கும் துன்பங்கள் தொடராமல் இன்பங்கள் பெருகி வளமான வாழ்வு வாழ்வதற்க்கு ஆத்மாக்களின் ஆசிர்வாதம் எப்போதும் வேண்டும்.
சீரும் சிறப்பும் பெற்று நாம் வாழ்வதிலும் நோய் நொடி இன்றி சுகத்துடன் இருப்பதற்கும் எத்துறையிலும் முன்னேற்றம் காண்பதற்கும் ஆடிஅமாவாசை தினத்தன்று ஆத்மதர்ப்பணம் செய்து அவர்களை நினைவு கூற வேண்டும்.
முக்கியமாக தாய்தந்தையர்களை இழந்தவர்கள் இதில் பெரும் பங்கெடுத்து கடமைகளை செய்யவேண்டும். மற்றும் தாத்தா பாட்டி மாமனார் மாமியார் சுற்றத்தவர்கள் என எம்மை விட்டு அமரர்களாகிய அனைவருக்கும் இது போற்றி வணங்கத்தக்க நாளாகும்.
அப்பா அம்மா உறவுகள் என அனைவர்க்கும் நீத்தார் கடன் செய்யத் தவறியவர்கள், சந்தர்ப்பவசத்தால் செய்ய முடியாதவர்கள், இறந்த காலங்களில் ஒருமாத கால முடிவில் தீட்டு துடக்கு முடிந்த பின் பிதுர் கடன் செய்ய முடியாதவர்கள், இந்த ஆடிஅமாவாசை நாளில் ஒவ்வொரு வருடமும் தர்ப்பணம் செய்தல் அவசியமாகும்.
Re: ஆடி அமாவாசையும், ஆத்ம தர்ப்பணமும்! - ஒரு பார்வை
பிதிர்க்கடனுக்கு பிரசித்தி பெற்ற கீரிமலை நகுலேஸ்வர தீர்த்தம்
மனிதர்களாகிய நாம் பெற்றகடன்கள் பலவாகும். அவற்றுள் மூன்று கடன்கள் பெரும் கடன்களாக கருதப்படுகிறது. அவையாவன தேவர்கடன், முனிவர்கடன், பிதிர்க்கடன் என்பவையாகும். தேவர்கடன் இறைவனை வழிபடுவதாலும், முனிவர்கடன் வேதம் ஓதுதலாலும், திருமுறை பாராயணம் (தேவாரம் திருவாசகம்) பாடுவதாலும், பிதிர்க்கடன் இறந்த ஆத்மாக்களை நினைந்து எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்தல் மூலமாகவும் இக்கடன்கள் தீர்க்கப்படுகின்றன. நீத்தார்கடன் எனப்படும் பிதிர்க்கடனை தீர்க்கவும், இக்கடமையை செய்ய ஏற்ற நாளாககவும் வருவது இந்த ஆடி அமாவாசை தினமாகும்.
Re: ஆடி அமாவாசையும், ஆத்ம தர்ப்பணமும்! - ஒரு பார்வை
கேரளாவில் ஆத்ம தர்ப்பணம்
சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்க கூடிய நாளாகிய இவ் அமாவாசை திகதியன்று காலையில் கடலில் நதியில் ஆற்றில் மூழ்கி குளித்து அல்லது வீடுகளில் குளித்து சுத்தமான ஆடை அணிந்து விபூதி பூசி பொட்டு வைத்து, ஆலயம் சென்று சிவன் தரிசனம் செய்து ஆலய குருவின் வழிகாட்டலில் முதலில் தர்ப்பை கையில் அணிந்து சங்கல்பம் செய்து, அமரத்துவம் அடைந்தவர்கள் பெயர்நாமங்களை குருவிடம் சொல்ல வேண்டும்.
Re: ஆடி அமாவாசையும், ஆத்ம தர்ப்பணமும்! - ஒரு பார்வை
பிதிர்க்கடனுக்கு பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் - சேதுக்கடல் அக்னி தீர்த்தம்
இறந்த தாய் தந்தையர் அவர்கள் பெயர்களை முதலில் சொல்லி பின்பு தாத்தா பாட்டி தலைமுறை சொல்லி அதன் பின் ஏனைய உறவினர் நன்பர்கள் இறந்திருந்தால், அவர்கள் பெயர்களும் சொல்லி எள்ளும் தண்ணீரும் சேர்த்து இறைத்து தர்ப்பணம் செய்து அவர்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்ய வேண்டும். அதன்பின் மோட்சதீபம் ஏற்றி இறைவனை வழிபட்டு அர்ச்சனை செய்து ஆராதிக்க வேண்டும்.
எள்ளு நீருடன் தர்ப்பைப்புல் நுனியால் இறைத்து விடுவதால் பிதிர்கள் திருப்தி அடைவார்கள். தர்ப்பணம் என்பது திருப்திப்படுத்துதல் என்று பொருள் படும்.
பகவான் விஸ்னுவின் தேகத்தில் இருந்து வெளிப்பட்டதும் சகல பாபங்களையும் தீர்க்க வல்லதும் ஆகிய எள்ளும், தாகத்தை தீர்க்கும் நீரும், கொண்டு தர்ப்பணம் செய்து பிதிரின் ஆசியையும் குருவின் ஆசியையும் பெற வேண்டும். பின் குருவிற்கு தானம் வேட்டிசால்வை அரிசி காய்கறி குரு தட்சனை வழங்கி ஆசிர்வாதம் பெறவேண்டும்.
வீட்டில் அமரர்கள் படத்தின் முன்பு சைவமாக சமைத்து, வாழை இலை உணவு படைத்து கற்பூர ஆராதனை செய்து வணங்கி உறவினருடன் கூடி மதியபோஷனம் உண்ணவேண்டும்.
ஆகவே இறைபதம் எய்திய ஆத்மாக்களுக்கு நீங்களும் ஆத்ம தர்ப்பணம் செய்ய இந்நாளை பயன்படுத்தி இறையருளை பெறுங்கள், ஆனந்த வாழ்வு வாழுங்கள்.
Re: ஆடி அமாவாசையும், ஆத்ம தர்ப்பணமும்! - ஒரு பார்வை
இதெல்லாம் ஏமாற்று வேலை.
பகவான் விஸ்னுவின் தேகத்தில் இருந்து வெளிப்பட்டதும் சகல பாபங்களையும் தீர்க்க வல்லதும் ஆகிய எள்ளும், தாகத்தை தீர்க்கும் நீரும், கொண்டு தர்ப்பணம் செய்து பிதிரின் ஆசியையும் குருவின் ஆசியையும் பெற வேண்டும்.
இதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. இதுபற்றி தனியாக எழுதுகிறேன் . தற்போது நேரமில்லை
பகவான் விஸ்னுவின் தேகத்தில் இருந்து வெளிப்பட்டதும் சகல பாபங்களையும் தீர்க்க வல்லதும் ஆகிய எள்ளும், தாகத்தை தீர்க்கும் நீரும், கொண்டு தர்ப்பணம் செய்து பிதிரின் ஆசியையும் குருவின் ஆசியையும் பெற வேண்டும்.
பின் குருவிற்கு தானம் வேட்டிசால்வை அரிசி காய்கறி குரு தட்சனை வழங்கி ஆசிர்வாதம் பெறவேண்டும்.
இதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. இதுபற்றி தனியாக எழுதுகிறேன் . தற்போது நேரமில்லை
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum