சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

மனைவியின் திறமையை மறுக்கும் ஆண்கள்! Khan11

மனைவியின் திறமையை மறுக்கும் ஆண்கள்!

Go down

மனைவியின் திறமையை மறுக்கும் ஆண்கள்! Empty மனைவியின் திறமையை மறுக்கும் ஆண்கள்!

Post by நண்பன் Sun 24 Jul 2011 - 20:36

மகிழ்ச்சியான வாழ்க்கைக்காகவும், கூடுதலான வருமானத்திற்காகவும் கணவரை போலவே வேலைக்கு செல்லும் பெண்கள் இன்றைய சூழ்நிலையில் அதிகம். வேலைக்குச் செல்லும் பெண்கள், தங்கள் திறமைக்கு ஏற்ற வாய்ப்புகளை அவர்களாகவே உருவாக்கிக் கொள்கிறார்கள்.

ஆனால், குடும்பத்தை நிர்வகிக்கும் குடும்பத் தலைவிகள் நிலைதான் தலைகீழ்! கணவன் உற்சாகப் படுத்தியதால் சாதித்தவர்களும் இவர்களில் உண்டு; கணவன் கண்டுகொள்ளாததால் ஏதோ வாழ்ந்துவிட்டு போனவர்களும் உண்டு.
அதனால், குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் மனைவியரின் மனதிற்குள் என்னென்ன திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன என்பதை அறிய வேண்டிய பொறுப்பு கணவர்களுக்கு வேண்டும்.

அதற்காக ஆராய்ச்சியெல்லாம் செய்யத் தேவையில்லை. யதார்த்தமான சூழ்நிலையில் கூட மனைவியின் திறமை பளிச்சிடலாம்.

உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் உயரிய ஆலோசனை

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தோழர்களும் உம்ராச் செய்ய வந்த போது தடுத்து நிறுத்தப்படுகின்றார்கள். இதைத் தொடர்ந்து ஹுதைபிய்யா உடன்படிக்கை கையெழுத்தாகின்றது. கையெழுத்தான இந்த உடன்படிக்கையின் ஷரத்துக்கள் முஸ்லிம்களுக்குப் பாதிப்பைத் தரும் அம்சங்களாக இருந்தன.

இந்த நேரத்தில் நபித்தோழர்கள் சோகத்தில் மூழ்கிப் போயிருந்தனர். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "எழுந்திருங்கள்! அறுத்துப் பலியிடுங்கள்! தலைகளை மழித்துக் கொள்ளுங்கள்!'' என்று கட்டளையிடுகின்றார்கள்.
ஆனால் ஒருவரும் எழுந்திருக்கவில்லை. கட்டளைக்கு மாறு செய்ய வேண்டும் என்பது நபித்தோழர்களின் நோக்கமல்ல! ஒப்பந்தத்தில் இருக்கும் பாதகமான அம்சங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது தான் அவர்களின் எதிர்பார்ப்புகள்! அதனால் தான் அசையாமல் உட்கார்ந்திருந்தார்கள்.

அப்போது உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா, யோசனை வழங்குகின்றார்கள்.

"அல்லாஹ்வின் தூதரே! பலிப் பிராணியை அறுத்து விட்டு, தலைமுடி களைந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? புறப்படுங்கள். நீங்கள் குர்பானி ஒட்டகங்களை அறுத்து விட்டு உங்கள் நாவிதரை அழைத்து. அவர் உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்'' என்று உம்மு ஸலமா அவர்கள் கூறினார்கள்.
உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்து விட்டு, தம் நாவிதரை அழைத்துத் தலைமுடியைக் களைந்து கொண்டார்கள். அதுவரை அவர்கள் எவரிடமும் பேசவில்லை.

இவற்றைக் கண்டவுடன் மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று பலிப் பிராணிகளை அறுத்து. ஒருவர் மற்றவரின் தலை முடியைக் களையத் துவங்கினார்கள். ஒருவர் மற்றவரை நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவுக்குப் போட்டி போட்டுக் கொண்டு (பலிப் பிராணிகளை அறுக்கவும் முடி களையவும்) சென்றனர். (அறிவிப்பவர்: உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2732)

இந்த நெருக்கடியான கட்டத்தில் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் புத்திக் கூர்மை மிக்க யோசனை உண்மையில் சாதாரணமான ஒரு பிரச்சனை அல்ல! போர் தவிர்க்கப்பட்டு சமாதானம் உருவாவதற்கு அடிப்படையாக அமைந்தது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனைவியின் திறமையை மறுக்கும் ஆண்கள்! Empty Re: மனைவியின் திறமையை மறுக்கும் ஆண்கள்!

Post by நண்பன் Sun 24 Jul 2011 - 20:36

சூழ்நிலையின் பங்கு

''மிதத்தல் விதி''யை கண்டுபிடித்த ஆர்க்கிமிடிஸ் யதார்த்தமான சூழ்நிலையில் தான் அதை கண்டறிந்தார். அவர் வாழ்ந்த நாட்டின் மன்னனின் பெயர் சைரகூஸ். புதிதாக தங்கக் கிரீடம் ஒன்று செய்து, அதை, தான் அணிந்து அழகு பார்க்க வேண்டும் என்பது மன்னரின் ஆசை. சில நாட்களில் தங்கக் கிரீடத்தை தயார் செய்து கொடுத்தனர், அமைச்சர்கள்.
தன்னுடைய விருப்பபடிதான் அந்த கிரீடம் தயார் செய்யபட்டு இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள விரும்பிய மன்னன், அந்த தங்கக் கிரீடத்தின் ஒட்டுமொத்த அளவையும் தெரிந்து கொள்ள ஆசைபட்டார். ஆனால், அவருக்கு அதை எப்படி அளவெடுப்பது என்று தெரியவில்லை. அதுபற்றி யோசித்தவருக்கு குழப்பம்தான் மிஞ்சியது.

உடனே, ஆராய்ச்சியாளர் ஆர்க்கிமிடிசை வரவழைத்தார். நடந்த விஷயத்தை சொன்னார். மன்னர் சொன்னபடி பல நாட்கள் யோசித்துஸ யோசித்து, அவரும் குழம்பி போனதுதான் மிச்சம். கிரீடத்தின் வெளி அளவுகளை வேண்டுமானாலும் அளந்து விடலாம், மொத்த கொள்ளளவையும் எப்படி கண்டுபிடிப்பது என்று பரிதவித்தார்.ஒருநாள் குளியலறையில் நீர் நிரப்பபட்டு இருந்த தொட்டிக்குள் அமர்ந்து குளிக்க ஆரம்பித்தார் ஆர்க்கிமிடிஸ். அப்போது சிறிதளவு தண்ணீர் தொட்டியில் இருந்து வெளியேறி கொட்டியது. அப்போதுதான் அவரது முளையில் அந்த ஐடியா பளிச்சிட்டது. தங்கக் கிரீடத்தின் மொத்த கொள்ளளவை கண்டுபிடிக்க உதவிய `மிதத்தல் விதி’யை கண்டறிந்தார்.
அந்த மகிழ்ச்சியில், குளியலறையில் இருந்து எழுந்த ஆர்க்கிமிடிஸ், தான் ஆடையின்றி இருப்பதைக்கூட மறந்து மகிழ்ச்சியில் மன்னரின் சந்தேகத்திற்கு தீர்வு சொல்ல ஓடினார் என்ற தகவலும் உண்டு.

ஆக, பல நாட்கள் குழம்பித் திரிந்த ஆர்க்கிமிடிஸ், நீர் நிரம்பிய தொட்டியில் குளித்ததால்தான் மிதத்தல் விதியை கடறிந்தார். அந்த சூழ்நிலை அவருக்கு யதார்த்தமாகவே அமைந்தது.

அதுபோன்ற சூழ்நிலைகளை ஒவ்வொரு கணவன்மார்களும், தங்களது மனைவியருக்கு ஏற்படுத்திக் கொடுத்தால், இல்லத்தரசிகளும் சாதனை அரசிகளாக ஜொலிப்பார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனைவியின் திறமையை மறுக்கும் ஆண்கள்! Empty Re: மனைவியின் திறமையை மறுக்கும் ஆண்கள்!

Post by நண்பன் Sun 24 Jul 2011 - 20:36

என்ன செய்யலாம்?

சில பெண்கள் குடியிருக்கும் வீட்டை அழகாக அலங்கரித்து வைத்திருப்பார்கள். இவர்களிடம் கற்பனை நிறையவே கொட்டிக்கிடக்கும். அதை, எப்படி வெளியில் உபயோகிப்பது என்று தெரியாமல், வீட்டுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வருவார்கள். அவர்களை சரியாக ஊக்கபடுத்தினால், `இன்டீரியர் டெகரேஷன்' எனப்படும் உள் அறை அலங்காரத்தில் ஜொலிப்பார்கள்.
சிலர், தங்களது கற்பனைக்கு ஏற்ற பொருட்களை, குபையில் வீசப்படும் பொருட்களை பயன்படுத்தியே உருவாக்கி விடுவார்கள். இவர்களை கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெறும் இடங்கள், கைவினை பொருட்கள் விற்கபடும் ஷோ ரும்களுக்கு அழைத்துச் சென்று ஊக்கபடுத்தினால் இன்னும் திறமைகளை வளர்த்துக் கொள்வார்கள். அந்த துறையில் தொழிலதிபராக வரக்கூடிய வாய்புகளும் உண்டு.

சில இல்லத்தரசிகள் அதிகம் படித்தவர்களாக இருப்பார்கள். வேலைக்கு செல்லாத காரணத்தால் அவர்களது திறமைகள் அவர்களுக்குள்ளாகவே முடங்கிபோய் கிடக்கும். இவர்களிடம் ஆங்கில பேச்சாற்றல் திறன் இருந்தால், `ஸ்போக்கன் இங்கிலீஷ்' வகுப்பு நடத்தவோ, அல்லது பிற பாடங்களுக்கு `டியுஷன்' எடுக்கவோ ஊக்குவிக்கலாம்.
இன்றைய பெரும்பாலான இல்லத்தரசிகள் எம்ராய்டரிங், டெய்லரிங் ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். எம்ராய்டரியில் எவ்வளவோ லேட்டஸ்ட் டிசைன்கள் வந்துவிட்டன. அந்த டிசைன் ஆடைகள், படங்கள் போன்றவற்றை இவர்களுக்கு வாங்கிக்கொடுத்து ஊக்குவிக்கலாம்.

டெய்லரிங்கிலும் அப்படித்தான். எந்தவொரு வித்தியாசமான ஆடைக்கும் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உண்டு. அதனால், அவர்களது கற்பனையை மெருகூட்டும் வகையில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

அவ்வப்போது மனைவியை உறவினர்களின் இல்லங்களுக்கு, சுற்றுலாத்தலங்களுக்கு அழைத்துச் சென்று மகிழ்விப்பது, அவரது மனதில் புதிய ஆரோக்கியமான எண்ணங்கள் தோன்ற வழிவகுக்கும்.

சிலபேர் மனைவி எவ்வளவுதான் சுவையாக சமைத்தாலும் ஏதேனும் குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் குடும்ப வாழ்வின் சுவையை உணரத்தவறியவர்கள்.

பெண்களைப்பொருத்தவரை எதற்கும் ஒரு அங்கீகாரம் கொடுத்தால், உடனே உற்சாகம் பிறந்துவிடும். உங்கள் மனைவி செய்யும் சின்னச்சின்ன சாதனைகளைக் கூட பிரமாதமாய் வரவேற்றிடுங்கள். உங்களது இந்த வரவேற்பு, அவரை பல சாதனைகளைச் செய்யத் தூண்டும்.

nidur.info


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனைவியின் திறமையை மறுக்கும் ஆண்கள்! Empty Re: மனைவியின் திறமையை மறுக்கும் ஆண்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum