Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சோதனைகளைத் தாண்டி சாதனை படைத்த நீலவேணி!
+3
இன்பத் அஹ்மத்
Atchaya
நேசமுடன் ஹாசிம்
7 posters
Page 1 of 1
சோதனைகளைத் தாண்டி சாதனை படைத்த நீலவேணி!
"எனக்கு 'பேக்ரவுண்ட்' சரியில்ல... இல்லாட்டா எவ்வளவோ சாதிச்சிருப்பேன்" என்று புலம்பல் கீதம் பாடுபவர்களை நீலவேணியின் முன்னால் நிறுத்த வேண்டும். சோதனைகளைத் தாண்டிவந்து சாதனை படைத்திருக்கும் பெண் இவர். ஹெப்டத்லானில் 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தேசிய சாம்பியன். தொடர்ந்தும் வெற்றிப் பயண முனைப்பில் இருக்கும் நீலவேணியிடம் பேசினோம்...
"தஞ்சாவூர் எனது சொந்த ஊர். அங்குள்ள பி.வி. செல்வராஜ் மகளிர் மேனிலைப் பள்ளியில் படித்தேன். 7-ம் வகுப்பு முதல் தடகளப் போட்டியில் பங்கேற்றுவந்த நான், 9-ம் வகுப்பு படிக்கும்போது சென்னையில் செயின்ட் ஜோசப் அகாடமி நடத்திய விளையாட்டு முகாமில் பங்கேற்றேன். நீளம் தாண்டுதலில் ஒரு சீனியர் வீராங்கனைக்கு அடுத்து இரண்டாவது இடம் பிடித்தேன். அப்போது, "உன்னிடம் நல்ல தடகளத் திறமை இருக்கு. நீ ஏன் சென்னைக்கு வரக் கூடாது?" என்று பயிற்சியாளர் நாகராஜன் கேட்டார். ஆனால் அப்போது எங்கள் பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டார்கள். 10-ம் வகுப்பு முடித்ததும் சான்றிதழை வாங்கிக் கொண்டு சென்னை வந்தேன்.
ஹெப்டத்லான்
பள்ளியில் பயிலும்போது மும்முறை தாண்டுதல், 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில்தான் பங்கேற்று வந்தேன். மாவட்ட அளவிலும் பல வெற்றிகளைப் பெற்றேன். 'நீ ஹெப்டத்லானில் கவனம் செலுத்து' என்று ஆலோசனை கூறியவர் நாகராஜன் சார்தான். 100 மீ., தடை ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், 200 மீ., ஓட்டம், 800மீ., ஓட்டம் ஆகியவை அடங்கியது ஹெப்டத்லான். அடுத்தடுத்து இந்தப் போட்டிகளில் பங்கேற்பதும், வெற்றி பெறுவதற்கு எல்லாவற்றிலும் முன்னிலையில் இருக்க வேண்டும் என்பதும் கஷ்டம்தான். ஆனால் கடினமான போட்டியில் கிடைக்கும் வெற்றிதானே இனிக்கும்?
முதல் வெற்றி
2007-ம் ஆண்டு கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் 'பென்டத்லானில்' பங்கேற்றேன். ஐந்து போட்டிகள் கொண்டது 'பென்டத்லான்'. அதில் வெள்ளிப் பதக்கம் வென்றேன். மாநில அளவில் நான் பெற்ற முதல் வெற்றியாகும் அது. கடந்த 2009-ல் மதுரையில் தேசிய இளையோர் போட்டி நடைபெற்றது. அதில் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் நான் தங்கப் பதக்கம் தட்டி வந்தேன். முதல்முறையாகத் தேசியப் போட்டியில் வென்றதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என்னைவிட எங்கள் பயிற்சியாளருக்கு அதிக மகிழ்ச்சி. ஆரம்பத்தில் சற்றுத் தடுமாறிய நான், இறுதியில் வென்று சாதித்துவிட்டேன். தொடர்ந்து 2009-ல் சண்டிகரில் நடைபெற்ற தேசியப் போட்டி, பெங்களூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஓபன் நேஷனல் போட்டிகளிலும் இரண்டாவது இடம்பெற்றேன்.
எனது பலவீனம்
இரண்டு தேசியப் போட்டிகளில் கடைசிவரை முன்னணியில் இருந்த நான், இறுதியில் இரண்டாமிடத்துக்குச் சறுக்கியதற்குக் காரணம் 800 மீ. ஓட்டத்தில் இரண்டாமிடம் பெற்றதுதான். 'ஸ்டாமினா' குறைவு, போதுமான பயிற்சியின்மை, பதட்டம் போன்றவையே ஓட்டத்தில் நான் தோல்வியுற்றதற்குக் காரணம். அதுபோல உயரம் தாண்டுதலிலும் தொழில்நுட்ப ரீதியாக என்னிடம் சில குறைபாடுகள் உள்ளன. அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். அதில்தான் தற்போது நான் கவனம் செலுத்தி வருகிறேன்.
வாலிபாலும் ஆடுவேன்
தஞ்சாவூரில் பள்ளியில் படித்தபோது வாலிபால் ஆடியிருக்கிறேன். மாவட்ட அளவிலான போட்டிகளில் எங்கள் அணி வெற்றி பெற்றிருக்கிறது. தடகளத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியபின் வாலிபாலை துறந்துவிட்டேன். ஆனால் இன்றும் எனக்கு வாலிபால் பிடிக்கும்.
எனது இலக்குகள்
எனது உடனடி இலக்கு என்று பார்த்தால், இந்த மாதம் கோவையில் நடைபெறவிருக்கும் மாநில சீனியர் போட்டியில் வெற்றி பெறுவது. தேசிய அளவில், ஹெப்டத்லானில் 4 ஆயிரத்து 500 புள்ளிகள் குவிக்க வேண்டும். அப்போது இயல்பாகவே தங்கம் வென்றுவிடலாம். அஞ்சுபாபி ஜார்ஜ் போல இந்தியா சார்பில் சர்வதேச தடகளப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இன்னும் இரண்டு, மூன்றாண்டுகளில் அதை நிறைவேற்றிக் கொண்டுவிடலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. படிப்பைப் பொறுத்தவரை, நான் தற்போது இளநிலை சமூகவியல் முதலாமாண்டு பயில்கிறேன். படித்து முடித்தபின் ஒரு நல்ல வேலையில் இணைய விரும்புகிறேன்.
எனது வெற்றிகளின் பின்னணியில்...
பள்ளி நாட்களில் என்னை ஊக்குவித்துப் பயிற்சி அளித்த விளையாட்டு ஆசிரியர்கள் சபாபதி, சீதாலெட்சுமி, விக்டோரியா, தலைமையாசிரியை கண்மணி, இப்போதைய பயிற்சியாளர் நாகராஜன், செயின்ட் ஜோசப் அகாடமி இயக்குநர் பாபு மனோகரன், எல்லாவற்றுக்கும் மேலாக, எனக்காகவே வாழும் எங்கம்மா விஜயலட்சுமி ஆகியோர் தான் எனது வெற்றிகளின் பின்னணி. நான் பெற்ற, பெறப் போகும் வெற்றிகள் எல்லாம் இவர்களுக்கே சமர்ப்பணம்.
அப்பா... அம்மா...
எனது அப்பா சுப்பிரமணியன் டீ மாஸ்டராக இருந்தவர். நான் ஆறாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது திடீரென்று ஒருநாள் மூளையில் ரத்தக் குழாய் வெடித்து இறந்துவிட்டார். அப்போது அம்மாவும் அருகில் இல்லை. சிங்கப்பூரில் ஒரு வீட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அதிகம் விவரம் தெரியாத வயது என்பதால் அப்போது அப்பாவின் இழப்பு பெரிதாகத் தெரியவில்லை. இப்போதுதான் அந்த வலியை உணர்கிறேன். பெரியம்மா வீட்டில் தங்கிப் படித்த நான், வருடம் ஒருமுறை இந்தியாவுக்கு வரும் அம்மாவைச் சந்திப்பேன்.
ஆனால் அம்மாவின் நம்பிக்கை, சொந்தம் எல்லாம் நான்தான். நான் போட்டிகளில் வெற்றி பெற்றதை போனில் சொன்னால் அம்மா ஆனந்தக் கண்ணீர் வடிப்பார். எனது வெற்றி குறித்த செய்தி வெளிவந்த தமிழ் செய்தித்தாளை தேடிப் பிடித்து வாங்கிப் படித்து மகிழ்வார். எனக்காக எங்கோ வெளிநாட்டில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் அம்மாவுக்கு ஒரு வீடு கட்டி நிம்மதியாக உட்காரவைத்துச் சோறு போட வேண்டும் என்பது எனது ஆசை. அம்மாவுக்காகவே நான் போட்டிகளிலும், வாழ்க்கையிலும் வெல்வேன்!"
Re: சோதனைகளைத் தாண்டி சாதனை படைத்த நீலவேணி!
நானும் சாதணையாளன் தான் பாருங்க.
:,;: :,;: :,;: :,;: :,;: :,;: :running: :running: :running: :running: :running:
:,;: :,;: :,;: :,;: :,;: :,;: :running: :running: :running: :running: :running:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: சோதனைகளைத் தாண்டி சாதனை படைத்த நீலவேணி!
நீலவேணி போன்று இன்னும் எத்தனை சாதனை உள்ளங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் வெளியில் கொண்டு வர அவர்களின் திறமைகளை காண்பிக்க சரியான சந்தர்ப்பம் கிடைப்பதில்லை வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்ள கடைமைப்பட்டுள்ளோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சோதனைகளைத் தாண்டி சாதனை படைத்த நீலவேணி!
எனக்காக எங்கோ வெளிநாட்டில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் அம்மாவுக்கு ஒரு வீடு கட்டி நிம்மதியாக உட்காரவைத்துச் சோறு போட வேண்டும் என்பது எனது ஆசை. அம்மாவுக்காகவே நான் போட்டிகளிலும், வாழ்க்கையிலும் வெல்வேன்!"
இறைவன் தருவான் .
இறைவன் தருவான் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» 121 கோடியைத் தாண்டி சாதனை படைக்கும் இந்தியா
» சாதனை படைத்த ராகுல் டிராவிட்
» சாதனை படைத்த லூசிபர் திரைப்படம்
» சாதனை படைத்த நடிகைகள் - புகைப்படங்கள்
» சாதனை படைத்த சோலார் விண்கலம்
» சாதனை படைத்த ராகுல் டிராவிட்
» சாதனை படைத்த லூசிபர் திரைப்படம்
» சாதனை படைத்த நடிகைகள் - புகைப்படங்கள்
» சாதனை படைத்த சோலார் விண்கலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum