சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

2016-ம் ஆண்டு ஒலிம்பிக்தான் இலக்கு: மிருணாளினி Khan11

2016-ம் ஆண்டு ஒலிம்பிக்தான் இலக்கு: மிருணாளினி

Go down

2016-ம் ஆண்டு ஒலிம்பிக்தான் இலக்கு: மிருணாளினி Empty 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்தான் இலக்கு: மிருணாளினி

Post by நேசமுடன் ஹாசிம் Mon 25 Jul 2011 - 12:20

2016-ம் ஆண்டு ஒலிம்பிக்தான் இலக்கு: மிருணாளினி Mirunalini-jpg-1040
பெண்கள் அரிதாக ஈடுபடும் விளையாட்டான பாய்மரப் படகுப் போட்டியில் சென்னைப் பெண்கள் சிலர் நாட்டின் கொடியை உயர்த்திப் பிடித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர், மிருணாளினி. தண்ணீரைக் கிழித்துக் கொண்டு சீறும் இவரது படகு, பல வெற்றிகளைத் தட்டி வந்திருக்கிறது. கல்லூரி மாணவியான மிருணாளினி, தேர்வு, அதை முடித்ததும் வெளிநாட்டுப் பயணத்துக்குத் தயாராவது என்று பர பரப்பாய் இருந்தார். அந்த அவசரத்திலும் நமது கேள்விகளை புன்னகையோடு எதிர்கொண்டார்...

வித்தியாசமான விளையாட்டான பாய்மரப் படகு செலுத்துதலில் இறங்கியது எப்படி?

தனியார் நிறுவனத்தில் உயரதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற அப்பா ரவி சந்தானம், பாய்மரப் படகுப் போட்டியில் ஆர்வம் கொண்டவர். பொழுதுபோக்காக அவர் அதில் ஈடுபட்டு வந்தார். சென்னை துறைமுகப் பகுதிக்கு அவர் படகு செலுத்தச் செல்லும்போது நானும் உடன் போவேன். அப்படியே எனக்கும் இதில் ஆர்வம் பற்றிக் கொண்டது. முதலில் விளையாட்டாகப் படகு செலுத்திய நான், தேசிய அளவில் பெற்ற வெற்றிகளால் இதில் தீவிரமாகி விட்டேன்.

நீங்கள் முதலில் வென்ற தேசிய அளவிலான போட்டி எது?

பாய்மரப் படகுப் போட்டிகள், கடலோரப் போட்டிகள் (கோஸ்டல்), உள்நாட்டு நீர்நிலைப் போட்டிகள் (இன்லாண்ட்) என்று இரு பிரிவாக நடத்தப்படுகின்றன. கடலோரப் போட்டிகள், கடற்கரையை ஒட்டிய பகுதிகளிலும், உள்நாட்டு நீர்நிலைப் போட்டிகள், ஏரிகள், ஆறுகள் போன்றவற்றிலும் நடத்தப்படும். நான் முதன்முதலில், ஐதராபாத்தில் உள்ள உசேன் சாகர் ஏரியில் நடைபெற்ற தேசிய உள்நாட்டு நீர்நிலைப் போட்டியில் பங்கேற்றேன். அதில் மூன்றாவது இடம் பெற்றது 'த்ரில்லிங்'காக இருந்தது. பெரும் உற்சாகத்தையும் அளித்தது. அதே மகிழ்ச்சியோடு தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தேன்.

தொடர்ந்து பெற்ற வெற்றிகள்...?

2006 மே மாதம் சென்னையில் தேசிய கோஸ்டல் சாம்பியன்ஷிப் போட்டியில் 'லேசர் 4.7' பிரிவில் பெண்களில் முதலிடம், 2007 ஆகஸ்ட்டில் ஐதராபாத்தில் நடைபெற்ற 'இன்லாண்ட்' போட்டியில் முதலிடம், 2008-ல் சென்னையில் நடந்த 'கோஸ்டல்' சாம்பியன்ஷிப்பில் 'லேசர் ரேடியல்' பிரிவில் முதலிடம் என்று தொடர்ந்து தேசிய அளவில் பல வெற்றிகளைப் பெற்றேன். கடைசியாக, கடந்த ஆண்டு ஜூலையில் ஐதராபாத்தில் தேசிய லேசர் இன்லாண்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களில் 2-வது இடமும், ஒட்டுமொத்தமாக 8-வது இடமும் பெற்றேன். கடந்த 5 ஆண்டுகளாக, நாட்டின் 'டாப்' வீராங்கனைகளில் ஒருவராக இருந்து வருகிறேன்.

நீங்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்கிறீர்களா... அவற்றில் வெற்றியை எட்டியிருக்கிறீர்களா?

முதல்முறையாக கடந்த 2008-ம் ஆண்டில் டென்மார்க்கில் நடைபெற்ற வால்வோ உலக இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றேன். அதில் வெற்றிவாய்ப்புப் பெறவில்லை. கடந்த 2009-ம் ஆண்டு ஜூனில் பஹ்ரைனில் அல் பரே சர்வதேச ரெகட்டா போட்டி நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் நான் பங்கேற்று, மூன்றாவது இடம் பெற்றேன். முதல்முறையாக ஒரு சர்வதேசப் போட்டியில் வெற்றி பெற்றது எனது தன்னம்பிக்கையைப் பெருமளவு கூட்டியது. அதே ஆண்டிலேயே ஜப்பானில் நடைபெற்ற லேசர் ரேடியல் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும், கடந்த ஆண்டு சிங்கப்பூர், ஸ்காட்லாந்தில் நடைபெற்ற போட்டிகளிலும் பங்கேற்றேன். அவற்றில் வெற்றி கிட்டவில்லை என்றபோதும், எனது நிலையைத் தெரிந்துகொள்ளவும், இன்னும் எவற்றில் நான் என்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறியவும் உதவின.

பெண்கள் அதிகம் நாட்டம் கொள்ளாத இவ்விளையாட்டில் பெண்களுக்கான பயிற்சி வசதிகள் எப்படி இருக்கின்றன?

நான் தற்போது பெரும்பாலும் ஆண்களுடன்தான் பயிற்சி பெற்று வருகிறேன். பெண் பயிற்சியாளர்கள் யாருமே இல்லை. நம் நாட்டில் இவ்விளையாட்டு இப்போதுதான் வளர்ந்து வருகிறது. பயிற்சி வசதிகள் குறைவு என்றாலும், ஆதரவு சிறப்பாக உள்ளது. போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும்போது நானே பயிற்சியாளர் ஆகலாம்!

இவ்விளையாட்டுக்கு உடல் தகுதி மிகவும் அவசியமா?

நிச்சயமாக. ஆண்களுக்கு இயல்பாகவே உடல் வலிமை அதிகம். ஆனால், பெண்களுக்கு மனவலிமை அதிகம். அது, உடல் வலிமையை ஈடுகட்டிவிடும். ஆனாலும் கூட நான் எனது உடல்தகுதியைக் கட்டிக் காப்பதில் கவனமாக இருக்கிறேன். அதற்காக உடற்பயிற்சிகள், சிறப்புப் பயிற்சிகளில் ஈடுபடுகிறேன். தியானமும் செய்கிறேன்.

உள்நாட்டு நீர்நிலைப் போட்டிகள், கடலோரப் போட்டிகள்... எது சவாலானது?

கேள்வியே வேண்டாம். 'கோஸ்டல்' போட்டிகள்தான். அங்கு, காற்றின் வேகம், அலைகளின் தீவிரம் போன்ற பல சவால்கள் இருக்கும். ஆனால் அவற்றை எதிர்கொள்வதுதான் சுவாரசியம். வெளிநாடுகளில் கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதுடன், குளிராகவும் தண்ணீ­ரை வாரியடிக்கும். அவற்றைச் சமாளிக்க வேண்டும். போட்டிகளில் தனியாக ஈடுபடும்போது சந்திக்க நேரும் பிரச்சினைகளைச் சுயமாகச் சரிசெய்துகொள்ள வேண்டும். எல்லாவற்றையும் தாண்டி இதில் என்னை ஆர்வம் கொள்ளவைப்பது, இயற்கை அன்னையுடன் நெருங்கி உறவாடும் அந்தத் தருணங்கள் தான்.

சர்வதேசப் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு, அந்தச் சூழ்நிலை நிலவும் வெளிநாடுகளில் பயிற்சி பெறுவது அவசியமல்லவா?

அதற்காகத்தான் நான் நான்கு மாத கால ஐரோப்பியப் பயணத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஸ்பெயின், ஆலந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் பயிற்சி பெறப் போகிறேன். பயணம், பயிற்சிக்கான செலவுகளை மத்திய அரசு அளிக்கிறது. வெளிநாடுகளில் பெறும் பயிற்சியின் மூலம், ஒலிம்பிக் போன்ற சர்வதேசப் போட்டிகளில் குறிப்பிடத்தக்க வகையில் செயல்பட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அடுத்த ஆண்டு லண்டனில் நடைபெறவிருக்கிற ஒலிம்பிக் போட்டியை ஒரு படிக்கல்லாகத்தான் நினைக்கிறேன். எனது இலக்கு, 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்தான். அதில் இந்தியாவுக்கு இவ்விளையாட்டில் முதல் பதக்கத்தைப் பெற்றுத் தர முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இவ்வளவு கடினமான விளையாட்டில் ஏன் ஈடுபட வேண்டும் என்று வீட்டில் எப்போதாவது அலுத்துக் கொண்டிருக்கிறார்களா?

இல்லவே இல்லை. அப்பாவே பாய்மரப் படகு செலுத்துபவர் என்பதால் பிரச்சினையில்லை. அம்மா நந்தினி, அக்கா தர்ஷினி, கல்லூரி, தமிழ்நாடு பாய்மரப் படகுச் சங்கத்தினரும் எனக்குப் பின்னணியாக உள்ளனர். அவர்கள் அனைவரும் பெருமையடையும்படி வென்று காட்டுவேன்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum