சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

குழந்தைக்கு வயிற்றுப்போக்கு Khan11

குழந்தைக்கு வயிற்றுப்போக்கு

Go down

குழந்தைக்கு வயிற்றுப்போக்கு Empty குழந்தைக்கு வயிற்றுப்போக்கு

Post by நண்பன் Tue 26 Jul 2011 - 19:39

குழந்தைக்கு வயிற்றுப்போக்கு Zinc

தினமும் திட நிலையில் வெளியேறும் மலம் திடீரென்று நீர்த்த நிலையிலோ, தண்ணீராகவோ ஒருநாளைக்கு மூன்று முறைக்கு மேல் வெளியானால் அதை பேதி என்று சொல்வார்கள்.
அந்தச் சமயத்தில், மலம் எத்தனை தடவை வெளியேறுகிறது என்பதைவிட, மலத்தின் தன்மை மாறி ஏன் தண்ணீராகப் போகிறது என்பதற்கான காரணத்தைத் தெரிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பதினான்கு நாள்களுக்கு மேல் பேதி தொடர்ந்து இருந்தால் அதற்கு தொடர் பேதி (Persistant Diarrhea) என்று சொல்வார்கள். பேதியோடு, மலத்தில் ரத்தமும் சீழும் கலந்து வெளியேறுதல், காய்ச்சல், வயிற்று வலி போன்றவை இருந்தால் அதை அக்யூட் டிசென்டரி என்று சொல்வார்கள்.
பேதிக்கான காரணம்
* ரோட்டா வைரஸ்
* ஈ கோலி பேக்டீரியா
* காலரா
* சிகெல்லா
* சால்மோனல்லா
* காம்பெல்லோ பாக்டீரியா
போன்ற நுண்கிருமிகளால் பேதி ஏற்படலாம்.
அறிகுறிகளும், பாதிப்புகளும்
* உடலில் இருந்து அதிக அளவில் நீர் உப்புகள், வைட்டமின்கள் வெளியேறுகின்றன.
* சத்துக் குறைபாடு ஏற்படும்.
* உணவில் இருந்து மைக்ரோ மற்றும் மேக்ரோ நுணூட்டச் சத்துகளை திசுக்கள் உறிஞ்ச முடியாமல் போகும்.
* புரோட்டின் சத்தும் வீணாகும்.
* பசி எடுக்காது.
* ரத்த அளவு குறையும்.
* நாடித் துடிப்பும் குறையும்.
* ரத்த அழுத்தம் குறையும்.
* கை, கால்கள் சில்லிட்டுப் போகும்.
* வெளியேறும் சிறுநீரின் அளவு குறையும்.
* சிறுநீரகம் பாதிக்கப்படும்.
*ரத்ததில் பொட்டாசியம் அளவு குறைவதால் வயிறு வீக்கம், குடல் வேலை செய்யாத நிலை ஏற்படும்.
* பைகார்பனேட் வெளியேறுவதால், அசிடிமியா (Acidemia) பிரச்னை ஏற்பட்டு மூச்சுவிடுவதல் வேகமாகவும், ஆழமாகவும் இருக்கும்.
பரிசோதிக்கும் முறைகள்
பேதியால் பாதிக்கப்ட்ட குழந்தைகளைப் பரிசோதித்து, உடலில் இருந்து நீர் மற்றும் உப்புச் சத்துகள் மிகவும் அதிகமாகக் குறைந்துள்ளதா, மிதமாகக்

குறைந்துள்ளதா, குறையவில்லையா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
குழந்தை சோர்வாக இருத்தல் அல்லது மயக்கம் அடைதல், குழி விழுந்த கண்கள், வயிற்றுப் பகுதி தோலை இழத்துவிட்டால், மிக மெதுவாகப் பழைய

நிலையை அடைதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், நீர் மற்றும் உப்புச் சத்துகள் மிகவும் அதிகமாகக் குறைந்துள்ளது என்று அர்த்தம்.

குழந்தை நன்றாக விளையாடிக் கொண்டிருத்தல், கண்கள் குழி விழாமல் இருத்தல், வயிற்றுப் பகுதி தோலை இழுத்துவிட்டால், உடனே பழைய

நிலைக்குத் திரும்புதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், நீர் மற்றும் உப்புச் சத்துகள் குறையவில்லை என்று அர்த்தம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைக்கு வயிற்றுப்போக்கு Empty Re: குழந்தைக்கு வயிற்றுப்போக்கு

Post by நண்பன் Tue 26 Jul 2011 - 19:40

சிகிச்சைகள்
பேதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மூன்று வகைகளாகப் பிரித்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வேண்டும்.
சிகிச்சை முறை (நீர் குறையாத குழந்தைகளுக்கானது)
திரவ உணவை அதிகமாகக் கொடுக்க வேண்டும்.
தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளுக்கு அரிசிக் கஞ்சி, மோர், எலுமிச்சைச் சாறு, இளநீர், பருப்பு நீர்,பால், காய்கறி சூப் ஆகியவற்றைக் கொடுக்கலாம்.
வழக்கமாக கொடுக்கும் திரவ உணவுடன், ஒவ்வொருதடவை பேதி ஆகும்போதும் கீழ்க்கண்ட அளவு நீகீகு எனப்படும் உப்பு & சர்க்கரைக் கரைசல்

கொடுக்கவேண்டும்.
இரண்டு வயதுக்கு உள்பட்ட குழந்தைக்கு 50 மில்லி & 100 மில்லி

இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு 100 மில்லி & 200 மில்லி.

தாய்மார்களுக்கான அறிவுரை
1. ORS திரவத்தை கரண்டி அல்லது பாலாடையில் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்க வேண்டும்.
2. குழந்தை வாந்தி எடுத்தால் பத்து நிமிடங்களுக்குப் பிறகு ளிஸிஷி திரவத்தை மீண்டும் கொடுக்க வேண்டும்.
3. பேதி நிற்கும் வரை ளிஸிஷி திரவத்தையும், பிற திர உணவுகளையும் கொடுக்க வேண்டும்.
சிகிச்சை முறை (மிதமான நீர் குறைந்த குழந்தைகளுக்கானது)
ORS திரவத்தை வயதுக்கும் எடைக்கும் ஏற்ப கொடுக்க வேண்டும். முதல் நான்கு மணி நேரத்துக்குள் கொடுக்க வேண்டும்.
கொடுக்க வேண்டிய அளவு
* பிறந்து 4 மாதங்களும், 6 கிலோ எடையும் உள்ள குழந்தைக்கு 200 மில்லி & 400 மில்லி.
* 4 முதல் 12 மாதமும், 6 முதல் 10 கிலோ எடையும் உள்ள குழந்தைக்கு 400 மில்லி & 700 மில்லி
* ஒன்று முதல் இரண்டு வயது வரையும் 10 முதல் 12 கிலோ எடையும் உள்ள குழந்தைக்கு 700 மில்லி & 900 மில்லி.
* இரண்டு முதல் ஐந்து வயது வரையும் 12 முதல் 19 கிலோ எடையும் உள்ள குழந்தைக்கு 900 மில்லி & 1400 மில்லி.
நான்கு மணி நேரத்துக்குப் பிறகு குழந்தையின் நிலையை மீண்டும் பரிசோதித்து அப்போதைய நிலைக்கு ஏற்பட சிகிச்சை அளிக்க வேண்டும்.

குழந்தைக்குத் தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

சிகிச்சை முறை
(மிகவும் அதிக அளவு நீர் குறைந்த குழந்தைகளுக்கானது)
குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்குக் கொடு சென்று, ரிங்கர் லாக்டேட் என்ற மருந்து நீரை உடலில் ஏற்ற வேண்டும்.
மிகவும் அதிக அளவு சத்துகள் குறையாமல் தடுக்க கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
* எப்போதும் சாப்பிடுவதற்கு முன் கை, கால்களைக் கழுவ வேண்டும்.
* கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரைத் தான் குடிக்க வேண்டும்.
* திறந்த வெளியில் கொசுக்களோ, ஈக்களோ மொய்த்த உணவுப் பொருள்களைச் சாப்பிடக்கூடாது.
* சூடு ஆறிய உணவைச் சாப்பிடக்கூடாது.
* பழைய, கெட்டுப்போன உணவைச் சாப்பிடக்கூடாது.
* டின்னில் அடைக்கப்பட்டுக் கிடைக்கும் உணவுப் பொருள்களைச் சாப்பிடக்கூடாது.



நன்றி-தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum