Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மக்கள் மத்தியில் விசாரிக்க வேண்டும்: நார்வே தாக்குதல் குற்றவாளி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
மக்கள் மத்தியில் விசாரிக்க வேண்டும்: நார்வே தாக்குதல் குற்றவாளி
நார்வேயில் கடந்த வெள்ளிக்கிழமை குண்டு வைத்தும், துப்பாக்கியால் சுட்டும் 93 பேரைக் கொன்ற ஆன்டர்ஸ் பெரிங் பிரீவிக், தன்னை பொதுமக்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் பிரதமர் அலுவலக கட்டடம் அருகே கடந்த வெள்ளிக்கிழமை குண்டு வெடித்ததில் 7 பேர் இறந்தனர். இந்த சம்பவம் நடைபெற்ற 2 மணி நேரத்தில், தலைநகரின் அருகே உள்ள ஒட்டோயோ தீவில் குழுமியிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களை போலீஸ் உடையில் வந்த இளைஞர் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றார். இந்த இரு சம்பவத்துக்கும் காரணம் என ஆன்டர்ஸ் பெரிங் பிரீவிக் என்ற 32 வயது இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனது குற்றத்தை ஒப்புக்கொள்வதாக தனது வழக்கறிஞர் கெர் லிப்பெஸ்டாட் மூலம் தெரிவித்துள்ள பிரீவிக், நேற்று பிற்பகல் 1 மணிக்கு டவுன்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆஜராவதற்கு முன், அவர் தன் வழக்கறிஞர் மூலம் நீதிபதிக்கு சில வேண்டுகோள்கள் விடுத்திருந்தார். அதன்படி, போலீஸ் உடையில், மக்கள் முன்னிலையில் தோன்றி, தான் குண்டு வெடிப்பு நடத்தியது எதற்காக என்று விளக்கப் போவதாகவும், அதற்கு அனுமதி அளிக்கும்படியும் கோரியிருந்தார்.மேலும், யூரோப்பை காப்பாற்றும் இந்தப் பணியில் இளைஞர்களை ஈடுபடுத்தும் பிரசார முயற்சியாக இதைப் பயன்படுத்தப் போவதாகவும் கூறியிருந்தார். ஆனால், இச்சம்பவங்களில் தான் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டால், அங்கு என்ன சொல்ல வேண்டும் என்பதையும் அவர் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ளார்.
பிரீவிக்கின் கோரிக்கைகளை நிராகரித்த நீதிபதி, முதல் விசாரணை, நீதிமன்றத்தில் மூடிய அறைக்குள் நடக்க வேண்டும் பத்திரிகையாளர்கள் உட்பட யாருக்கும் அனுமதி அளிக்கப்பட மாட்டாது என திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். அதன்படி, நேற்று சுவிஸ் நேரப்படி நண்பகல் 12 மணியளவில் பிரீவிக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை 35 நிமிடங்கள் நடந்தது. விசாரணையில் பிரீவிக் கூறுகையில், "குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு இரண்டையும் நான் தான் நடத்தினேன். ஆனால், அது குற்றச் செயல் அல்ல. சட்டப்படி இது குற்றமும் அல்ல. இஸ்லாமியர்கள் யூரோப்பாவில் தொடர்ந்து குடியேறி வருகின்றனர். அதனால், அவர்களிடம் இருந்து யூரோப்பாவைக் காப்பாற்றத் தான் நான் இப்படி செய்தேன். இதன் மூலம் மக்களுக்கு உறுதியான செய்தி அளிக்க முடிவெடுத்தேன்" என்றார்.
விசாரணை முடிவில், அவருக்கு எட்டு வார தனிமை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அவருக்கு 21 ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு முன்னதாக லண்டன் முகவரியிட்ட 1,500 பக்க அறிக்கை ஒன்றை எழுதியுள்ளார். அதில், தனது தலைவர் இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்டு. இஸ்லாத்தை பொறுத்துக்கொள்ளும் ஐரோப்பிய நாடுகளை கவிழ்ப்பதற்காக என்னைப் போல 80 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று அதில் குறிப்பிட்டுள்ளதாக "தி டெலிகிராப்" நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து, லண்டனுக்கு பிரீவிக் எப்போது வந்து சென்றார் என்பது பற்றி ஸ்காட்லாந்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் உடோயா தீவில், தண்ரில் மூழ்கி இறந்தோரை தேடும் பணி தொடர்கிறது. நார்வே இளவரசரின் உறவினரான ஓர் இளைஞரும் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார். இதையடுத்து, இரு சம்பவங்களிலும் பலியானோர் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது. பிரீவிக் வெளியிட்டுள்ள 1,500 இணையப் பக்கங்களில், இந்தத் தாக்குதல் குறித்து எவ்வாறு திட்டமிட்டது, ஆயுதங்கள் வாங்கியது, ஆயுதங்களின் வகைகள் ஆகியவை குறித்து விரிவாகவே விளக்கியுள்ளார்.
இந்நிலையில் நார்வே தலைநகர் ஓஸ்லோ அருகே கட்சிக் கூட்டத்துக்குள் நடந்த தீவிரவாத தாக்குதலில் 'டம்-டம்' எனப்படும் உடலை கிழிக்கும் துப்பாக்கி குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் இந்த தகவலை நேற்று வெளியிட்டனர். இந்த வகை குண்டுகள் மிகவும் லேசானவை. வெவ்வேறு தொலைவில் இருந்தபடி மிகத் துல்லியமாக இலக்கை நோக்கி துப்பாக்கியால் சுட முடியும். மேலும், உடலுக்குள் புகுந்த பிறகு வெடிக்கும் தன்மை கொண்டவை. இதனால், உடல் திசுக்களில் சிதறல்களாக பரவி விடும்.
16 பேரின் பிணங்களை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் காலின் பூலே என்பவர், 'உடல்களில் இருந்து மிக நுண்ணிய துப்பாக்கி துகள்களை மட்டுமே சேகரிக்க முடிந்தது. துகள்களாக பரவி இருப்பதால் சிகிச்சை பெறுபவர்களின் எக்ஸ்-ரே படங்களும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன' என்றார்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum