Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழிby rammalar Tue 10 Dec 2024 - 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36
» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30
» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29
» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28
» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26
» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25
» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
அம்மா என் அம்மா (மழலையின் ஏக்கம்)
+2
முனாஸ் சுலைமான்
Atchaya
6 posters
Page 1 of 1
அம்மா என் அம்மா (மழலையின் ஏக்கம்)
கணினித் துறையில் வேலைபார்க்கும் தாயே,
என்ன காப்பகத்தில் விட்ட நீயே,
நகரத்துல வளந்த தாயே,
என்ன நரகத்துல விட்ட நீயே....
நம்ம வீட்டுக் குருவிக்கும்,
வளக்கும் நாயிக்கும்,
என் அழுகை தான் புரியுதே,
உன் அன்பின் மடியில
ஆசையா தூங்க,
இந்த பிஞ்சு மனசு தவிப்பது,
உனக்கு புரியுதா?..
உன் அன்புக்கும், உன் தீண்டலுக்கும்,
உன் முத்தத்திற்கும்,
உன் அன்பு மொத்தத்திற்கும்,
எனக்கு வார இறுதி நாள் மட்டும் உண்டு...
கணினித் துறையில் வேலைபார்க்கும் தாயே,
என்ன காப்பகத்தில் விட்ட நீயே,
நகரத்துல வளந்த தாயே,
என்ன நரகத்துல விட்ட நீயே..
ஏசி காத்துல வேலை செய்வா,
ஏழு லோகம் தாண்டியும் பேசிடுவா,
அன்பு மகன் என் நினைவு வந்தா,
அலைபேசியில் என் குரல் கேட்ப்பா,
பாவமப்பா...
கணினி பாத்தே அவள் காலம் தொலைப்பா,
என் காலம் வலமாக, அவள் இளமை தொலைப்பா,
நாளைக்கு தருகின்ற தாய்ப் பாலையும்,
புட்டிப் பாட்டிலுல சிறைபிடிப்பா,
தியாகமப்பா....
இரவு வரும்போது போகுறா,
பொழுது விடியும் போது தூங்குறா,
அவ உடம்ப இரும்பாக்கி உழைக்கிறா,
ஆசையாய் அவ மடிசாஞ்சா,
அலுப்பா இருக்கு கண்ணான்னு அனுப்புறா,
கணினித் துறையில் வேலைபார்க்கும் தாயே,
என்ன காப்பகத்தில் விட்ட நீயே,
நகரத்துல வளந்த தாயே,
என்ன நரகத்துல விட்ட நீயே..
அம்மா என் அம்மா
என் அருகில் இல்லை,
ஆனாலும் அவ பாசமெனக்கு
புரியாமயில்லை,
அவ அன்பைத்தவிர எனக்கு,
எந்த குறையுமில்லை...
அம்மா காசு இல்லா வீட்டில் சிரிப்பு இருக்கு,
படிக்காத அம்மா வீட்டில் பாசம் இருக்கு,
என் அம்மா நெஞ்சிலும் அன்பு இருக்கு,
அந்த அன்ப காட்ட அவளுக்கு நேரமிருக்கா?.....
அம்மா உன் அன்பில் என்ன வஞ்சம்மா,
அட்டவணை போட்டு
நீ கொடுக்கும் அன்புக்கு,
என் மனசு ஏங்குதம்மா..
நீ சமைக்கும் சமையல,
ஊட்டி விடச் சொல்லி,
இந்த பாவி மனசு தவிக்குதம்மா..
காசு பணம் எல்லாம் இருக்குது,
அது என் பாசத்த உங்கிட்ட குறைக்குது,
பணம் கொடுத்து வாங்குன,
வாடகை தாய்கிட்ட (ஆயா )
என் அன்பு முழுவதும் போகுது...
உன் பூ முகம் எனக்கு மறக்குது...
நாலு ஒன்னொன்னும் போகுது,
அது தூரமா உன்ன கட்டுது.
நான் மொத மொத உச்சரிக்கும்
அம்மா என்ற சொல்ல,
நீ உச்சி முகர்ந்து கேட்கனும்னு தோணுது,
அந்த அம்மா என்ற சொல்லும்,
ஆயாவுக்கு சொந்தமாய் போகுது...
கணினித் துறையில் வேலைபார்க்கும் தாயே,
என்ன காப்பகத்தில் விட்ட நீயே,
நகரத்துல வளந்த தாயே,
என்ன நரகத்துல விட்ட நீயே..
நன்றி ரேவா
ரேவா கவிதைகள்
Re: அம்மா என் அம்மா (மழலையின் ஏக்கம்)
நம்ம வீட்டுக் குருவிக்கும்,
வளக்கும் நாயிக்கும்,
என் அழுகை தான் புரியுதே,
உன் அன்பின் மடியில
ஆசையா தூங்க,
இந்த பிஞ்சு மனசு தவிப்பது,
உனக்கு புரியுதா?..
சூப்பரான கவிதை :!@!: :pale:
வளக்கும் நாயிக்கும்,
என் அழுகை தான் புரியுதே,
உன் அன்பின் மடியில
ஆசையா தூங்க,
இந்த பிஞ்சு மனசு தவிப்பது,
உனக்கு புரியுதா?..
சூப்பரான கவிதை :!@!: :pale:
Re: அம்மா என் அம்மா (மழலையின் ஏக்கம்)
பகிர்விற்க்கு நன்றி அண்ணா
வலிகள் நிரம்பிய வரிகள் கொண்டு எழுதிய கவிதை இதை ரசிக்க எங்களுக்கும் பகிர்ந்தமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.
குறிப்பு:-நான் இந்த கவிதையை இதன் முன் பார்க படிக்ககிடைக்கவில்லை இன்று ஒரு நல்ல உள்ளம் மடல் அனுப்பியபின்தான் படித்தேன் கவிதைக்கு சொந்தமான இடத்துக்கும் சென்று வாழ்த்து கூறினேன்.
இது போன்ற எழுத்தாளர்களின் வரிகள் உலகம் முழுவதும் பரவவேண்டும் அனைவரும் படிக்க வேண்டும் அவர்களை இன்னும் இன்னும் எழுத உற்ச்சாகம் கொடுக்க வேண்டும் எங்களின் மறுமொழியில்.
இக்கவியை எழுதிய உள்ளத்துக்கு நன்றிகள் பல பூ மாலையாக சேரட்டும்.உங்களின் எழுத்து பயணம் தொடர எங்களின் வாழ்த்துக்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அம்மா என் அம்மா (மழலையின் ஏக்கம்)
இன்றைய நிலையை சொல்லும் கவிதை .அருமை .நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அம்மா என் அம்மா (மழலையின் ஏக்கம்)
என் அன்பு முழுவதும் போகுது...
உன் பூ முகம் எனக்கு மறக்குது...
கவி பார்த்து கதை சொல்ல முடியல்ல
நன்றி ரேவா தொகுத்த அன்பருக்கும் நன்றி
உன் பூ முகம் எனக்கு மறக்குது...
கவி பார்த்து கதை சொல்ல முடியல்ல
நன்றி ரேவா தொகுத்த அன்பருக்கும் நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: அம்மா என் அம்மா (மழலையின் ஏக்கம்)
@. @.*சம்ஸ் wrote:பகிர்விற்க்கு நன்றி அண்ணா
வலிகள் நிரம்பிய வரிகள் கொண்டு எழுதிய கவிதை இதை ரசிக்க எங்களுக்கும் பகிர்ந்தமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.
குறிப்பு:-நான் இந்த கவிதையை இதன் முன் பார்க படிக்ககிடைக்கவில்லை இன்று ஒரு நல்ல உள்ளம் மடல் அனுப்பியபின்தான் படித்தேன் கவிதைக்கு சொந்தமான இடத்துக்கும் சென்று வாழ்த்து கூறினேன்.
இது போன்ற எழுத்தாளர்களின் வரிகள் உலகம் முழுவதும் பரவவேண்டும் அனைவரும் படிக்க வேண்டும் அவர்களை இன்னும் இன்னும் எழுத உற்ச்சாகம் கொடுக்க வேண்டும் எங்களின் மறுமொழியில்.
இக்கவியை எழுதிய உள்ளத்துக்கு நன்றிகள் பல பூ மாலையாக சேரட்டும்.உங்களின் எழுத்து பயணம் தொடர எங்களின் வாழ்த்துக்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum