Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காஞ்சனா
3 posters
Page 1 of 1
காஞ்சனா
தன்னை கொலை செய்தவர்களை பழிவாங்க வேறு ஒரு உடலில் புகுந்து பழிவாங்கும் பேய் கதை.
'முனி' படத்தின் இரண்டாம் பாகம் இது. அதில் ராஜ்கிரண், இதில் சரத்குமார். ஆனாலும் முதல் பாகத்தைவிட டபுள் ஸ்பீடில் பறக்கிறாள் இந்த 'காஞ்சனா'.
பத்து பேரை புரட்டி எடுக்கும் வீரனாக திகழும் லாரன்ஸ், 6 மணி என்றால் வெளியே போகாமல் வீட்டுக்கு போய் விடுவார். வீட்டிலேயும் தனது அம்மாவுடன்தான் படுப்பார். ஏன் பாத்ரூம் போக வேண்டும் என்றால்கூட தனது அம்மாவை துணைக்கு அழைத்துச் செல்லும் பயந்தாகோளியாகிவிடுவார். எல்லாம் பேய் பயம்தான். இப்படி பேய்க்காக பயப்படும் லாரன்ஸ் நண்பர்களுடன் ஒரு காலி வீட்டு மனையில் கிரிக்கெட் விளையாடச் செல்ல, அங்கேதான் ஆரம்பிக்கிறது பேயின் அட்டகாசம். ஏற்கனவே மூன்று பேரை கொலை செய்து அந்த வீட்டு மனையில் புதைத்திருக்க, அந்த மூன்று ஆவிகளும் லாரன்ஸ் உடலில் ஏறிக்கொள்கிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.
லாரன்ஸ் வழக்கப்படி நன்றாக டான்ஸ் ஆடுகிறார். ரஜினியை இமிடேட் செய்கிறார். லட்சுமிராயுடன் சல்லாபிக்கிறார். டபுள் மீனிங்கிலும், சிங்கிள் மீனிங்கிலும் அம்மா, அண்ணன், அண்ணி, என்று மொத்த குடும்பமே பேசிக்கொள்கிறது. அம்மா பக்கா கோவை பாஷை பேசுகிறார். அண்ணி அய்யராத்து பாஷை பேசி சிக்கன் சமைத்து போடுகிறார். அண்ணன் சாதாரண தமிழ் பேசுகிறார். என்ன எழவுக்கென்றே தெரியவில்லை. முதல் பாதி முழுவதும் தேவையில்லாத சண்டைக் காட்சிகள், குத்து பாட்டுகள் என்று போனாலும், பேய் மேட்டர் ஆரம்பித்ததும் கொஞ்சம் சுறுசுறுப்படையத்தான் வைக்கிறார் லாரன்ஸ்.
படத்தில் சரியான எண்டர்டெயினர் என்றால் அது கோவை சரளாதான். இவர் உச்சரிக்கும் ஒவ்வொரு வசனத்திற்கும் அத்தனை அப்ளாஸ். அதுவும் சாமியாரிடம் 'இது ரொம்ப டிஃபிகல்ட்டா இருக்கு சாமி' என்று சொல்லுகையில் வெடிச்சிரிப்பு எழுகிறது.. பேய் இந்தியில் சம்ஜே என்று கேட்க, அதுக்கு இவர் சமஞ்சிட்டேன் என்று சொல்லுமிடத்தில் சிரிக்காதவர் யாருமே இருக்க முடியாது.. கோவைசரளாவிற்கு சரியான பக்கவாத்தியமாக சேர்ந்து சிரிக்க வைக்கிறார் தேவதர்ஷினியும்.. ஸ்ரீமன் பேய் வரும்போதெல்லாம் வாயை கோணியபடியே படுத்துக்கொள்ளும் காட்சிகள் எல்லாம் அக்மார்க் சிரிப்புக்கு உத்திரவாதம்.
லட்சுமிராய்க்கு படத்தில் பெரிதாக ஒன்றும் வேலை இல்லை.. வருகிறார். ஆடுகிறார், பாடுகிறார், லாரன்ஸை முத்தமிடுகிறார். ஜஸ்ட் ஃபார் பிஸினஸ் வேல்யூ. அம்மணிக்கு அவ்வளவுதான் வேலை.. லாரன்ஸூக்கும் லட்சுமிராய்க்கும் இடையே காதல் வருவதற்கு சொல்லப்பட்டிருக்கும் டெக்னிக்.. ஐயோ தாங்க முடியலைடா சாமி...
பாதிப்படத்திற்கு மேல் நம்மை ஆச்சர்யத்தில் உறைய வைக்கும் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார். இவரா? இப்படி ஒரு கதாபாத்திரத்திலா? என்று நம்பவே முடியாமல் ஆச்சர்யத்தில் அதிர்ந்துதான் போகிறோம். அவர் பாடிலேங்குவேஜாகட்டும், மேனரிசமாகட்டும், வசன உச்சரிப்பாகட்டும் எல்லாமே கைத்தட்டலை அள்ளுகிறது.. கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்று இல்லாமல் இது போன்ற சவாலான கதாபாத்திரத்திலும்கூட நான் நடிப்பேன் என்று சரத்குமார் புகுந்து விளையாடி இருப்பது ஆச்சர்யமளிக்கிறது, மூத்த நடிகர்களுக்கு கதாபாத்திர தேர்வுகளில் சரத் இந்தப்படத்தின் மூலம் ஒரு முன்னோடியாய் மாறி இருக்கிறார் வெல்டன் சரத்ஜி.. ஹாட்ஸ் ஆஃப்.. நடிப்புச் சாதனையாளர் நடிகர் திலகம் நடிக்க விரும்பி, கடைசிவரை வாய்க்காமல் போன பாத்திரம், சரத்துக்கு கிடைத்தது எவ்வளவு பெரிய புண்ணியம்? சரத்தின் கேரியரில் குறிப்பிடத் தகுந்த மைல்கல் காஞ்சனா. சரத்குமாரின் அந்த கதாபாத்திரத்தை சொல்வதைவிட, திரையில் பார்ப்பதில்தான் அத்தனை சுவாரஸ்யம்.
காஞ்சனாவும் இதர இரண்டு ஆவிகளும் லாரன்சுக்குள் புகுந்திருக்கிறார்கள் என்பதை காட்டும் அந்த டைனிங் டேபிள் காட்சி அநியாயத்துக்கு நீளம். ஆனாலும் நீளம் தெரியாதவகையில் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தியிருப்பதில், தான் 'ரியல் மாஸ்' என்பதை நிரூபிக்கிறார் லாரன்ஸ். நடனக் காட்சியில் மாற்றுத் திறனாளிகளை புகுத்தியிருப்பது துருத்திக் கொண்டு தெரிகிறது என்றாலும் நல்ல முயற்சி.
எம்.எல்.ஏ., இந்த பாத்திரத்தை தைரியமாக ஒத்துக்கொண்டு நடித்த எம்.எல்.ஏ.,வை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கொஞ்சம் பிசகியிருந்தாலும் ஓவர் ஆக்டிங் ஆகியிருக்கக் கூடிய அபாயம்.
படம் முழுக்க நல்ல காமெடியாக? இருந்தாலும், திகில் காட்சிகளில் குலை நடிக்க வைத்து விடுகிறார்கள். தமனின் பின்ணனி இசை நன்றாக இருக்கிறது ஆனால் இன்னும் கொஞ்சம் பயமுறுத்தி இருக்கலாம். ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. கேமரா கோணங்களில் பெரிதாய் பயமுறுத்தாமல் சின்னச் சின்ன ஷாட்களில் நம்மை ஜில்லிட வைக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
லாஜிக் மீறல்கள் இருந்தாலும் இது போன்ற திகில் படங்களில் அதை நாம் எதிர்பார்க்க முடியாது. ஆகவே அதை மன்னித்து விடலாம்.
வெறும் திகில் படம் என்று நினைக்காமல் அதில் ஏதாவது நல்ல விஷயத்தை சொல்ல வேண்டும் என்று நினைத்த லாரன்ஸ், திருநங்கைகள் சமூகத்தின் கஷ்டத்தை இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறார். அதையும் கமர்ஷியல் ஃபார்மூலாவுடன் சொல்லியிருக்கும் லாரன்ஸ் 'காஞ்சனா'வை கச்சிதமாக செதுக்கியிருக்கிறார் என்று சொல்லலாம்.
காஞ்சனா - அசத்திட்டா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காஞ்சனா
இந்தப் படத்தில் சரத்குமார் திரு நங்கையாக நடித்துள்ளார் சூப்பரா இருக்கு சாதிக்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காஞ்சனா
பொழு போக்கு நல்லம் சிரிக்கலாம் அடுத்த மாதம்தான் நீங்கள் பார்க்க முடியும் புரிஞ்சிதாசாதிக் wrote:பார்க்கவில்லை பார்க்கணும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» காஞ்சனா - திரைப்பட தரவிறக்கம்
» காஞ்சனா பார்த்த ரஜினி : லாரன்சுக்கு பாராட்டு
» சொத்துக்களை இழந்து வீதிக்கு வந்தார்; பழைய நடிகை காஞ்சனா - கோவிலில் பிரசாதம் வாங்கி சாப்பிட்டு வாழ் நாளை கழிப்பு
» காஞ்சனா பார்த்த ரஜினி : லாரன்சுக்கு பாராட்டு
» சொத்துக்களை இழந்து வீதிக்கு வந்தார்; பழைய நடிகை காஞ்சனா - கோவிலில் பிரசாதம் வாங்கி சாப்பிட்டு வாழ் நாளை கழிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum