சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

ஆரண்ய காண்டம் - Aaranya Kaandam Khan11

ஆரண்ய காண்டம் - Aaranya Kaandam

2 posters

Go down

ஆரண்ய காண்டம் - Aaranya Kaandam Empty ஆரண்ய காண்டம் - Aaranya Kaandam

Post by நண்பன் Wed 27 Jul 2011 - 22:26

ஆரண்ய காண்டம் - Aaranya Kaandam Aaranya-kaandam-654

இராமாயணத்தின் ஏழு காண்டத்தில் மூன்றாவது காண்டம்தான் ஆரண்ய காண்டம். இது ராமன், சீதா, லஷ்மணன் காட்டில் வசித்த காலத்தை கூறுவது. ஆனால் இந்த ஆரண்ய காண்டம், ஒரு நாள் பொழுதில் நடக்கும் போர்க்களக் காட்சிகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. நமக்கு எது தேவையோ அதுவே தர்மம் என்ற சாணக்யரின் கூற்றுதான் படத்தின் ஒன்லைன். இருட்டில் வாழும் மனித மிருகங்களின் இருண்ட பகுதிதான் ஆரண்ய காண்டம்..! நல்ல பொருத்தமான தலைப்புதான்!!
சிங்கப்பெருமாள் ஒரு அண்டர்கிரவுண்ட் தாதா. அவரது வலது கையாக பசுபதி. இதேபோல கஜேந்திரன் மற்றொரு தாதா. அவரது வலது கையாக கஜபதி. இவர்களுக்கு மத்தியில் கஜேந்திரனுக்கு சேர வேண்டிய ஒரு போதைப்பொருள் சரக்கை பசுபதி கைப்பற்ற நினைக்கிறார். ஒரு கட்டத்தில் சிங்கப்பெருமாள், கஜேந்திரன் இருவருமே பசுபதியை பழி தீர்த்தார்களா இல்லையா என்பதே மீதிக்கதை.
சிறந்த படம், மிகச் சிறந்த படம், உள்ளூர் தரம், இந்தியத் தரம், உலகத் தரம் என்று எத்தனை வகைகளில் பிரித்துப் பார்த்தாலும் இத்திரைப்படம் தமிழ்ச் சினிமாவுலகில் சினிமா விமர்சகர்களால் மட்டுமே கொண்டாடப்படக் கூடிய ஒரு யதார்த்தவாத திரைப்படம்தான்.. அதில் சந்தேகமில்லை..!
வெற்றி, தோல்வி என்கிற இரண்டு அம்சத்தை மையமாக வைத்து பார்த்தீர்களேயானால் இது நிச்சயமாக வணிக ரீதியாக தோல்வியடைந்த படம். ஆனால் படம் பார்த்தவர்களை சிறிதளவேனும் பிரமிக்க வைத்திருக்கிறது..! அதே சமயம் கோடிக்கணக்கான தமிழர்களை பார்க்க வைத்திருக்க வேண்டிய இத்திரைப்படத்தைத் தயாரித்தவர்களே, சில ஆயிரம் பேர் இந்தப் படத்தைப் பார்த்தாலே போதும் என்று நினைத்து செயல்பட்டதினால் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய கிரீடத்தை தாங்களே இழந்துவிட்டிருக்கிறார்கள்.
படத்தின் ஆரம்பக் காட்சியில் வயதான தாதா, சினிமாவில் நடிக்க வைக்கிறேன் என்று ஆசை வார்த்தைக்காட்டி கூத்தியாளாக வைத்துக் கொண்டிருக்கும் சுப்புவிடம் உடலுறவில் முடியாமல் போகும் காட்சியும், தன் இயலாமையை மறைக்க, அவளை அடிக்க.. சுப்பு 'உன்னால முடியலைன்னா ஏன் என்னை அடிக்கிறே?' என்று அழும் காட்சியில் ஆரம்பிக்கும் ஆச்சர்யங்கள் படம் நெடுக தொடர்கிறது.
பசுபதியாய் சம்பத். மனிதர் வரவர கலக்கிக் கொண்டிருக்கிறார். மிக இயல்பான பாடிலேங்வேஜ். பல இடங்களில் கண்களில் தெரியும் சிறு சிறு மாற்றங்களில் பல உணர்வுகளை கொண்டு வருகிறார்.
சுப்புவாக யாஸ்மின் பொன்னப்பா.. ஆரம்பத்தில் பார்க்கும் போது பரிதாபப்பட வைக்கிறார். சுப்புவுக்கும் சப்பைக்குமான திடீர் காதலும், காமமும் அதிர்ச்சியென்றால் பின்னால் நடக்கும் காட்சிகள் அட போட வைக்கின்றன.
சப்பையாக ரவிகிருஷ்ணா. மிகச் சரியான கேரக்டர் அவருக்கு. இவரின் கேரக்டரை பற்றிச் சொன்னால்.. சுவாரஸ்யம் போய்விடும். கிராமத்திலிருந்து கடனுக்கு பயந்து சேவல் சண்டையில் ஜெயிக்க வரும் வாழ்ந்து கெட்ட ஜமீந்தாரும், அவரது ஸ்மார்ட் பையனும் சரியான கேரக்டர்கள். எதிர்பார்ட்டியான கஜேந்திரன், அவனின் தம்பி, அய்யா டீமில் வரும் ஆன்ட்டிகளைப் மேட்டர் செய்யும் இளைஞன், என்று பார்த்து பார்த்து ஆட்களை பொறுக்கியிருக்கிறார்கள். கேஸ்டிங் என்றால் மிக சரியான கேஸ்டிங்.
சிங்கப்பெருமாளாக வரும் ஜாக்கி ஷெராஃப், அலற வைத்திருக்கிறார். இவரது கதாபாத்திரத்தின் தன்மை, இதை இவர் மட்டுமே செய்திருக்க முடியும் என்ற பிரமையை ஏற்படுத்துகிறது. படு அலட்சியமான நடிப்பு. கிட்டத்தட்ட, சைத்தான் தமிழில் நடித்தால் அது இப்படித்தான் இருக்கும். அதை எழுதிப் புரியவைப்பது அசாத்தியம். படத்தைப் பார்த்தால் மட்டுமே அது புரியும். அவருக்கு அடுத்து கொடுக்காப்புளியின் தந்தை. அது, கூத்துப்பட்டறை சோமசுந்தரம். இந்த இருவரும், கூடவே கொடுக்காப்புளியாக நடித்த சிறுவனும்,(மாஸ்டர் வசந்த்) மனதில் நிற்கின்றனர்.
கஜேந்திரனாக ஸ்டன்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமார். இவரது நடிப்பை பார்த்தால் சில சமயங்களில் சிரிப்பு தான் வருகிறது.( பாவம், மனிதர் இப்போது படத்தை பார்க்க உயிருடன் இல்லை என்பது வருத்தம்தான்!) இன்னும் சில கதாப்பாத்திரங்கள். அப்புறம் அஜய்ராஜ், இவர்தான் படத்தில் ஆன்ட்டி-ஹீரோ. இவர் பேசும் வசனங்களை கேட்கும்போது சுவாமி சரக்கானந்தா பளிச்சென்று நினைவுக்கு வந்தார்.
முதல் படம் போலவே தெரியவில்லை.. நிச்சயம் இயக்குநர் தியாகராஜா குமாரராஜாவை வெகுவாகப் பாராட்ட வேண்டும். அதிலும் காளையன், கொடுக்காப்புளியின் கேரக்டர்களை வடிவமைத்திருப்பதற்கு ஸ்பெஷல் பாராட்டு..! காளையனுக்கும், அவனது மகனுக்குமான நட்பை எந்த வகையிலும் தந்தை, மகனாக பார்க்க முடியாத அளவுக்கு கொண்டு சென்றிருக்கிறார். அப்பாவைத் திட்டாதப்பா என்று காளையன் சொல்கின்ற வார்த்தையில் இருக்கும் ஏக்கத்தை அவர் முகமும் காட்டுவிடுகிறது..! பெர்பெக்ட் ஆக்ஷன் அண்ட் டைரக்ஷன்..!
'அப்பா மேல அவ்ளோ பாசமா?' என்ற சம்பத்தின் கேள்விக்கு, 'அப்படியில்லை. ஆனா அவர் என் அப்பா..' என்று கொடுக்காப்புளி சொல்லும்போது தியேட்டரே அதிர்ந்தது. இது ஒன்று போதும் இயக்குநருக்கு..!
திரைக்கதையுடன் பல்லாங்குழி ஆடியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். அந்த பாவா லாட்ஜை அக்குவேறு, ஆணி வேறாக அத்தனை கோணத்திலும் படம் பிடித்திருக்கும் அந்த ஷாட்டுகள் கண்ணுக்கு அழகு..! விறுவிறுவென்ற காட்சியமைப்புக்கு ஒளிப்பதிவாளர் வினோத் பெரும் உதவி செய்திருக்கிறார்.. கேமிரா கோணம் வைப்பதில் வித்தியாசம் இருந்தாலும் அதற்குப் பெரிதும் துணையாய் இருக்க வேண்டியது லொகேஷன்கள்தான்..! அதுவும் இந்தப் படத்தில் பெர்பெக்ட்..!
பசுபதியின் வீடு, பசுபதி கஜேந்திரனின் ஆட்களிடம் இருந்து தப்பித்து போகும் வழிகள், பாவா லாட்ஜ், காளையன் காத்திருக்கும் தெரு, கஜேந்திரனின் வீடு, சிங்கப்பெருமாளின் வீடு, சேவல் சண்டை நடக்கும் இடம், க்ளைமாக்ஸ் சண்டை நடைபெறும் இடம் என்று அத்தனையும் விதவிதமான ரகங்கள்..! ஒளிப்பதிவாளரின் ஜெயிப்புக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்..! சென்சார் கத்திரிக்கு தப்பியதை பிரவீனும் ஸ்ரீகாந்த்தும் கத்தரித்த விதம் அருமை!
சுப்புவும், சப்பையும் வெளியில் ஊர் சுற்றும்போது விமானத்தை வாயில் முழுங்குவதைப் போல செய்து காட்டி சுப்புவை சிரிக்க வைக்கும் காட்சியைத் தொடர்ந்து ஒரு காதல் பாடல் இருந்தது..! அதேபோல் இடைவேளைக்கு பின்பு அத்தனை பேருக்குமான காட்சிகளையும் ஒருங்கிணைத்தும் ஒரு பாடல் இருந்ததாம்..! காட்சியின் தீவிரம் கெடுகிறதே என்று பலரும் சொன்னதால் பாடல்கள் கட் செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள்..!
ஆனால் இதற்குப் பதிலாக பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா. பாவா லாட்ஜ் துரத்தல்.. காளையனும், கொடுக்காப்புளியும் ஓடுவது..! சம்பத்தின் ஓட்டம்.. சரக்கை எடுத்துக் கொண்டு கொடுக்காப்புளி சம்பத்தை காண வரும்போது பின்னாடியே வரும் இசை, காளையன்-கொடுக்காப்புளியின் வாய்ச்சண்டை முடிந்து போய் நிற்கும் அந்தத் தருணத்தில் ஒலிக்கும் ரிதம்.. மெல்ல மெல்ல நம்மை அவர்களிடத்தில் கொண்டு போய்விட்டது..! ஹாட்ஸ் ஆஃப் யுவன்..!
க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி மட்டுமே சொதப்பல் என்றாலும் பசுபதி ஜெயித்தாக வேண்டும் என்ற இக்கதையின் முடிவின்படி அவர் ஜெயிக்க வைக்கப்பட்டிருக்கிறார். இது மட்டுமல்ல.. காளையன் வைத்திருந்த பேப்பர், அடுத்தக் காட்சியில் கொடுக்காப்புளியின் கையில் இருப்பது.. யாரும் சொல்லாமலேயே லாட்ஜ் ஆள் காளையனை கை காட்டுவது.. சிங்கப்பெருமாள் செத்தவுடன் எந்தப் பேச்சும் கேட்காமல் பசுபதியை தலைவனாக ஏற்கும் அடியாள் படை.. என்று சில கேள்விகள் எழத்தான் செய்கிறது.. இதையெல்லாம் அதுவரையிலும் நம்மை ரசிக்க வைத்ததற்காக மன்னித்து விட்டுவிடலாம்.
ஆரண்யகாண்டம் - விசித்திரமான காடு!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆரண்ய காண்டம் - Aaranya Kaandam Empty Re: ஆரண்ய காண்டம் - Aaranya Kaandam

Post by kalainilaa Wed 27 Jul 2011 - 22:32

நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஆரண்ய காண்டம் - Aaranya Kaandam Empty Re: ஆரண்ய காண்டம் - Aaranya Kaandam

Post by நண்பன் Wed 27 Jul 2011 - 22:34

kalainilaa wrote:நன்றி தோழரே .
:];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆரண்ய காண்டம் - Aaranya Kaandam Empty Re: ஆரண்ய காண்டம் - Aaranya Kaandam

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum