சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்.. Khan11

இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்..

5 posters

Go down

இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்.. Empty இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்..

Post by ஜிப்ரியா Thu 28 Jul 2011 - 7:24

இஸ்லாம் அறிவின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட மார்க்கமாகும். அது அறிவு, ஆராய்ச்சிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அதிசயிக்கத்தக்கதாகும். கல்வியினதும், அதனைக் கற்பதனதும் சிறப்புக்களைப் பற்றி இஸ்லாம் மிக விரிவாக விளக்குகிறது. அல்குர்ஆனை நோக்கும் போது இஸ்லாம் அறிவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

அல்-குர்ஆன் கல்வித்துறைக்கு அளிக்கும் முக்கியத்துவம்

அறிவு எனும் பொருள்படும் ‘இல்ம்’ என்ற பதம் அல்குர்ஆனில் 80 இடங்களில் இடம்பெற்றுள்ளது. இப்பதத்தில் இருந்து பிறந்த சொற்களோ அல்குர்ஆனில் பல நூறு தடவைகள் வந்துள்ளன. அறிவு எனும் கருத்தைக் கொடுக்கும் அல்பாப் எனும் சொல் அல் குர்ஆனில் 16 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பொருளைத் தரும் அந்நுஹா என்ற சொல் 2 தடவைகள் வந்துள்ளன. அல் குர்ஆனில் பகுத்தறிவு என்ற பொருளைக் கொடுக்கின்ற அல்-அக்ல் என்ற வினையடியிலிருந்து பிறந்த சொற்களின் எண்ணிக்கை 49 ஆகும். சுpந்தனை என்ற கருத்தில் பயன்படுத்தப்படும் அல்-பிக்ர் என்ற சொல்லிலிருந்து பிறந்த 18 சொற்களும் அதில் இடம்பெற்றுள்ளன. அல்-பிக்ஹ் (விளக்கம்) என்ற பதத்திலிருந்து பிறந்த 21 சொற்களும் காணப்படுகின்றன. ‘அல்ஹிக்மா’ ஞானம் என்ற பதம் 20 தடவைகள் வந்துள்ளதுடன், ஆதாரம் என்னும் பொருள்படும் அல்- புர்ஹான் என்ற சொல் 07 தடவைகளும் அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுடன் ‘ஆராய்தல்’ ‘நோக்குதல்’ ‘சிந்தித்தல்’ போன்ற கருத்துக்களைத் தரும் பல சொற்களும் அல்குர்ஆனில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன.

இவை அனைத்துக்கும் மேலாக, முதன் முதலாக இறங்கிய அல்-குர்ஆன் வசனங்களே அறிவைப் பற்றியும் அறிவின் அவசியத்தைப் பற்றியும், அதன் அதன் அடிப்படைகளாகத் திகழும் வாசிப்பு, எழுத்து, எழுதுகோள் என்பனபற்றியும் பேசுவதைப் பார்க்கின்றோம்.

படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! ஆவனே மனிதனை ஒட்டிக்கொண்டிருக்கும் அட்டை போன்ற ஒன்றிலிருந்நு படைத்தான். நீர் ஓதும்.
உமது இறைவன் மாபெரும் கொடையாளி. ஆவன்தான் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
(96: 1-5)

இவ்வசனங்களைத் தொடர்ந்து இறங்கிய வசனங்களும் அறிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவனவாகவே அமைந்துள்ளதைக் காணலாம்
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்.. Empty Re: இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்..

Post by ஜிப்ரியா Thu 28 Jul 2011 - 7:24

நூன் எனும் எழுதுகோளலின் மீதும் அதனைக் கொண்டு எழுதுபவை மீதும் சத்தியமாக. (68: 1)


ஆராயுமாறும் சிந்திக்குமாறும் மனிதனைத் தூண்டுகின்ற சுமார் 35 வசனங்கள் அல்குர்ஆனில் காணப்படுகின்றன.

Eg:
அவற்றின் கனிகளை நோக்குவீர்களாக! அவை பூத்துக் காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாகும் விதத்தையும் உற்று நோக்குவீர்களாக. வுசுவாசிகளுக்கு இதில் பல அத்தாட்சிகள் உள்ளன. (6:99)

கல்வியைத் தேடி உலகில் பயணம் செய்யுமாறு தூண்டும் சுமார் 50 வசனங்களை குர்ஆனில் காண முடியும்.
Eg:
நபியே நீர் கூறும், பூமியில் சுற்றித் திரிந்து (ஆரம்பத்தில்) சிருஷ்டிகளை எவ்வாறு படைத்தான் என்பதைப் பாருங்கள். (29:9)

அல்குர்ஆனில் பிரபஞ்சம் தொடர்பாகவும் அறிவியல் அத்தாட்சிகள் தொடர்பாகவும் பேசுகின்ற சுமார் 750 வசனங்கள் காணப்படுகின்றன.

ஆல்குரஆனில்,
இயற்கை விஞ்ஞானம்
வுhனவியல்
தாவரவியல்
விலங்கியல்
விவசாயம்
சமுகவியல்
மானிடவியல்
மனோதத்துவம்
மருத்துவம்
வரலாறு
புவியியல்

போன்ற துறைகளுடன் தொடர்பான பல உண்மைகளும், அவற்றோடு தொடர்பான பல அடிப்படைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அல்குர்ஆன் அறிவின் அவசியத்தை எந்தளவு வலியுறுத்துகின்றதெனில், அறிஞர்களே அல்லாஹ்வைச் சரியாகப் பயப்படுபவர்களாக இருப்பர் என்று கூறுகின்றது.

“அல்லாஹ்வை அவனது அடியார்களில் அஞ்சுபவர்கள் அறிஞர்களே” (35:28)
மேலும், அல்குர்ஆன் அறியாமையையும் மடமையையும் நரகத்தின் பாதையென வர்ணிக்கின்றது.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்.. Empty Re: இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்..

Post by ஜிப்ரியா Thu 28 Jul 2011 - 7:25

“நிச்சயமாக மனிதர்களிலும் ஜின்களிலும் அதிகமானோரை நாம் நரகத்திற்காகவே படைத்திருக்கின்றோம். ஆவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன் எனினும் அவற்றைக் கொண்டு அவர்கள் உணரமாட்டார்கள். அவர்களுக்குக் கண்கள் இருக்கின்றன. எனினும், அவற்றைக் கொண்டு அவர்கள் பார்க்கமாட்டார்கள். அவர்களுக்குக் காதுகள் உண்டு, அவற்றைக்கொண்டு கேட்கமாட்டார்கள். இத்தகையவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள். அன்றியும், அவற்றைவிட மோசமானவர்கள்”. (7;179)

ஸ_ன்னா கல்வித்துறைக்கு அளிக்கும் முக்கியத்துவம் பெரும்பாலான ஹதீஸ் கிரந்தங்களில் ‘கிதாபுல் இல்ம்’ என்ற பெயரில் அறிவைப் பற்றிப் பேசும் ஹதீஸ்களைக் கொண்ட ஒரு தனியான அத்தியாயத்தைக் காண முடியும்.


அறிவுடன் தொடர்பான பல ஹதீஸ்கள் வேறு பல அத்தியாயங்களி;லும் இடம்பெற்றிருக்கின்றன.
Eg:
கிதாபுத் திப்பி (மருத்துவம் பற்றியது) எனும் அத்தியாயம்

நூற்றுக்கணக்கான ஹதீஸ் கிரந்தங்களில் ஒன்றான ஸஹீஹ_ல் புஹாரியில் மாத்திரம் கிதாபுல் இல்ம் என்ற அத்தியாயத்தில் 102 நபிமொழிகள் காணப்படுகின்றன.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்.. Empty Re: இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்..

Post by ஜிப்ரியா Thu 28 Jul 2011 - 7:25

அறிவின் சிறப்பைக் கூறும் ஹதீஸ்கள்

ஓருவர் ஓர் அறிவைத் தேடி ஒரு பாதையில் சென்றால் அல்லாஹ் அதனைக் கொண்டு அவருக்கு சுவனம் செல்லும் ஒரு பாதையை இலேசாக்கிக் கொடுக்கிறான். (முஸ்லிம்)

நிச்சயமாக அறிவைத் தேடிச் செல்பவனுக்கு மலக்குகள் அவன் செய்யும் அவ்வேலையில் திருப்தியடைந்து தமது இறக்கைகளை விரிக்கின்றனர். ஆறிஞனுக்காக நீரிலுள்ள மீன்கள் உட்பட வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் பாவ மன்னிப்புக் கோருகின்றன. ஓர் ஆபித் (வணக்கவாளிக்கு) முன்னால் ஓர் அறிஞனின் சிறப்பு நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் போது சந்திரனுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்.
மேலும் அறிஞர்கள் நபிமாரின் வாரிசுகளாவர். நுபிமார்கள் தங்க நாணயத்தையோ அல்லது வெள்ளிக் காசுகளையோ வாரிசுச் சொத்துக்களாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள் வாரிசுச் சொத்துக்களாக விட்டுச் சென்றதெல்லாம் அறிவையே ஆகும். ஆதனைப் பெற்றுக்கொண்டவர் பெரும் பாக்கியத்தையே அடைந்து கொண்டவராவார். (அபூ தாவூத், அஹ்மத்)

அறிவின் சிறப்பு தொடர்பான நமது முன்னனோரின் கருத்துகள்
1. முஆத் பின் ஜபல் (ரழி)

அறிவைக் கற்றுக் கொள்ளுங்கள்;;,
அதனை அல்லாவுக்காகக் கற்பது இறையச்சமாகும்.
அதனைத் தேடுவது இபாதத் ஆகும்.
அதனை மீட்டுவது தஸ்பீஹ் ஆகும்.
அதனைப் பற்றி ஆராய்வது ஜிஹாத் ஆகும்.
அறியாதவருக்கு அதனைக் கற்பிப்பது ஸதக்காவாகும்.
அதனை அதற்குரியவனுக்கு வழங்குவது நற்கருமமாகும்.

அறிவு,
தனிமையின் தோழன்
மார்க்கத்தின் வழிகாட்டி
இன்ப துன்பத்தில் உதவியாளன்
நண்பருக்கு மத்தியில் மந்திரி
நெருக்கமானவர்களுக்கு மத்தியில் நெருங்கியவன்
சுவனப் பாதையின் ஒளி விளக்கு

அறிவைக் கொண்டு அல்லாஹ் சிலரை உயர்த்தி, அவர்களை நன்மையான விடயங்களுக்கு முன்னோடியாகவும் ஆக்கிவிடுகிறான்.
அவர்களின் அடிச்சுவட்டில் பலர் செல்வர்.
ஆவர்களின் தோழமையை மலக்குகளும் விரும்புவர்.
மலக்குகள் அவர்களைத் தமது இறக்கைகளால் தடவி விடுவர்.
கடலில் உள்ள மீன்கள், ஏனைய ஜீவராசிகள், கரையில் உள்ள மிருகங்கள், கால் நடைகள், வானம், நட்சத்திரங்கள் உட்பட பசுமையான, காய்ந்த அனைத்தும் அவர்களுக்காகப் பிரார்த்திக்கின்றன……….



2. ஹஸனுல் பஸரீ (ரஹ்)
அறிஞர்கள் இல்லாதிருந்தால் மனிதர்கள் மிருகங்களைப் போன்றிருப்பர்.

3. யஹ்யா இப்னு முஆத் (ரழி)
அறிஞர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினர்மீது, அவர்களின் பெற்றோரைவிட அன்பு கொண்டவர்கள். ஏnனில் அவர்களது பெற்றோர் உலக நெருப்பிலிருந்து அவர்களைப் பாதுகாக்கின்றனர். அறிஞர்களோ அவர்களை மறுமை நெருப்பிலிருந்து பாதுகாக்கின்றனர்.

4. அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்)
இவரிடம் மனிதர்கள் யார் என வினவப்பட்டது. ஆதற்கு அவர் அறிஞர்களே எனப் பதிலிறுத்தார்.

5. இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்)
மனிதனுக்கு உணவு, பாணம் ஆகியவற்றின்பால் உள்ள தேவைகளைவிட,அறிவின்பால் உள்ள தேவையே அதிகம் ஆகும்.

6. இஸ்லாமிய அறிஞர்களின் பொதுவான கருத்து
ஸ_ன்னத்தான வழிபாடுகளைவிடக் கல்வி கற்பதிலும், அறிவைத் தேடுவதிலும் ஈடுபடுவது சிறந்தது. ஏனெனில், அறிவின்றி வணக்கத்தில் ஈடுபடுவது அத்திவாரமின்றி ஒரு கட்டடத்தை எழுப்புவது போன்றதாகும்.
அறிவின் மூலமே ஒருவனால் வணக்கங்களின் முறைகள், ஒழுங்குகள், நிபந்தனைகள் போன்றவற்றையெல்லாம் அறிய முடிகிறது.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்.. Empty Re: இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்..

Post by ஜிப்ரியா Thu 28 Jul 2011 - 7:26

எனவேதான், அறிவைத் தேடுவது மிகச் சிறந்ததொரு வணக்கமாக இமாம்கள் கருதுகின்றனர். இதனை விளக்கும் சில பெரியார்களின் கருத்துக்களைக் கீழே தெரிந்து கொள்வோம். “கல்வி கற்பது ஒரு வணக்கமாகும்” (இப்னு மஸ்ஊத்). “சிறிதுநேரம் கல்வி கற்பது ஓர் இரவு நின்று வணங்குவதை விட மேலானதாகும்” (அபூதர்தா). “சிறிது நேரம் இருந்து எனது மார்க்கத்தைப் பற்றிய அறிவைப் பெறுவது ஓர் இரவு முழுவதும் விடியும் வரை நின்று வணங்குவதை விட எனக்கு விருப்பமானதாகும்” (அபூ ஹ_ரைரா).

“கடமையான பர்ளுகளை அடுத்து அறிவைத் தேடுவதை விடச் சிறந்ததோர் அமல் இல்லை” (இமார் அஸ்ஸெளரி). “நபீலான தொழுகையை விட அறிவைப் பெறுவது சிறந்தது” (இமார் அஷ்ஷாபி).

அறிவைத் தேடுவது அடிப்படையான, கடமையான வணக்க வழிபாடுகளுக்குத் தடையாக அமைவது கூடாது என்பதை மனதிற் கொள்ள வேண்டும்.

ஆறிவைப் பெறுவது இஸ்லாத்தில் மிக மேலான அமலாகக் கருதப்படும். ஜிஹாதை விடச் சிறந்தது என்றும் கருதப்படுகின்றது. ஏனெனில் ஜிஹாதின் சிறப்பு, அதன் வரையறைகள், நிபந்தனைகள் போன்றவற்றையும் அறிவைக் கொண்டே விளங்க முடியும். ஆறிவைப் பெறுவது ஜிஹாதை விடச் சிறந்தது என்ற கருத்தைக் கீழ்வரும் வாக்குகள் உறுதிப்படுத்தகின்றன.

“எனது ஆத்மா எவன் கைவசம் இருக்கின்றதோ, அவன் மீது சத்தியமாக, அல்லாஹ்வின் பாதையில் கொலை செய்யப்பட்ட ஷஹீதுகள் மறுமையில் அறிஞர்களின் அந்தஸ்தைக் கண்டு, தாங்களும் அறிஞர்களாக எழுப்பப்பட்டிருக்க வேண்டுமே என விரும்புவார்கள்.” (அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்)
அறிஞனின் பேனா மையையும், ஷஹீதுகளின் இரத்தத்தையும் நிறுத்துப் பார்த்தால்,அறிஞனது பேனாவின் மையே கனமானதாக இருக்கும். (ஹஸனுல் பஸரீ)

அறிவு குறைந்து, உலகில் அறியாமை இருள் சூழும்போது உலக வாழ்வு நிலைப்பதில்லை. இந்நிலை உலகின் அழிவுக்குக் கட்டியம் கூறுவதாக இருக்கும் என்ற கருத்தைத் தரும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களைக் காணமுடிகிறது.

“அறிவு உயர்த்தப்படுவதும், அறியாமை நிலை பெறுவதும் யுக முடிவின் அடையாளங்களில் ஒன்றாகும்.” ஏன நபியவர்கள் கூறியுள்ளார்கள். (புஹாரி)

இதிலிருந்து இந்த உலகமும் அறிவின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது என்ற உண்மையை விளங்க முடிகின்றது.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்.. Empty Re: இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்..

Post by இன்பத் அஹ்மத் Thu 28 Jul 2011 - 7:27

நன்றி தோழி அருமையான தொகுப்பு
இன்னும் தொடருங்கள் நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்.. Empty Re: இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்..

Post by ரிபாய் Thu 28 Jul 2011 - 7:28

பகிர்வுக்கு நன்றி சிஸ்டர்

ரிபாய்
புதுமுகம்

பதிவுகள்:- : 188
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்.. Empty Re: இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்..

Post by ஜிப்ரியா Thu 28 Jul 2011 - 7:30

அப்துல் றிமாஸ் wrote:நன்றி தோழி அருமையான தொகுப்பு
இன்னும் தொடருங்கள் நன்றி பகிர்வுக்கு

இன்ஷா அல்லாஹ் நிச்சயாமாக தொடர்வேன்..னன்றி றிமாஸ்..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்.. Empty Re: இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்..

Post by ஜிப்ரியா Thu 28 Jul 2011 - 7:31

ரிபாய் wrote:பகிர்வுக்கு நன்றி சிஸ்டர்

நன்றி ...உறவே..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்.. Empty Re: இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்..

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Jul 2011 - 9:23

அறிவைக் கற்றுக் கொள்ளுங்கள்;;,
அதனை அல்லாவுக்காகக் கற்பது இறையச்சமாகும்.
அதனைத் தேடுவது இபாதத் ஆகும்.
அதனை மீட்டுவது தஸ்பீஹ் ஆகும்.
அதனைப் பற்றி ஆராய்வது ஜிஹாத் ஆகும்.
அறியாதவருக்கு அதனைக் கற்பிப்பது ஸதக்காவாகும்.
அதனை அதற்குரியவனுக்கு வழங்குவது நற்கருமமாகும்.


நல்லவிளக்கங்களுடனான அருமையான பதிவு நன்றி


இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்.. Empty Re: இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்..

Post by நண்பன் Thu 28 Jul 2011 - 9:42

மிக மிக ஒரு அருமையான கட்டுரையை பகிர்ந்தீர்கள் உறவே மிக்க நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்.. Empty Re: இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்..

Post by ஜிப்ரியா Thu 28 Jul 2011 - 9:49

சாதிக் wrote:
அறிவைக் கற்றுக் கொள்ளுங்கள்;;,
அதனை அல்லாவுக்காகக் கற்பது இறையச்சமாகும்.
அதனைத் தேடுவது இபாதத் ஆகும்.
அதனை மீட்டுவது தஸ்பீஹ் ஆகும்.
அதனைப் பற்றி ஆராய்வது ஜிஹாத் ஆகும்.
அறியாதவருக்கு அதனைக் கற்பிப்பது ஸதக்காவாகும்.
அதனை அதற்குரியவனுக்கு வழங்குவது நற்கருமமாகும்.


நல்லவிளக்கங்களுடனான அருமையான பதிவு நன்றி

அன்பு நன்றிகள் சாதிக்..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்.. Empty Re: இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்..

Post by ஜிப்ரியா Thu 28 Jul 2011 - 9:50

நண்பன் wrote:மிக மிக ஒரு அருமையான கட்டுரையை பகிர்ந்தீர்கள் உறவே மிக்க நன்றி

மிக்க நன்றி ஆருயிர் நண்பனே..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்.. Empty Re: இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum