Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தெய்வத்திருமகள்
Page 1 of 1
தெய்வத்திருமகள்
ஒரு தந்தை-மகளின் பாசப் போரட்டத்தை சொல்லும் கதை.
'ஐ யாம் சாம்' என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல்தான் இந்த 'தெய்வத்திருமகள்' என்றாலும், தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படம். வக்கிர அழுக்கும் மசாலா தூசும் நிறைந்த கோடம்பாக்கத்தில் சுத்தமாக துடைத்தெடுத்து வந்த ரவிவர்மா ஓவியம் மாதிரி அத்தனை நேர்த்தி.
ஊட்டி அருகே ஒரு கிராமத்தில் வாழும் மன வளர்ச்சி குன்றிய விக்ரமிற்கு அழகான பெண் குழந்தை பிறக்கிறது, ஆனால் விக்ரமின் காதல் மனைவி பிரசவத்தில் இறக்கிறார். மகளின் மேல் தந்தைக்கு உயிர். தந்தை மேல் மகளுக்கு உயிர். அழகான அந்தக் குழந்தைகளின் வாழ்வில் விக்ரமின் பணக்கார மாமனார் குடும்பம் குறுக்கிடுகிறது.
விக்ரமின் குழந்தை இறந்து போன தங்கள் மகளின் நினைவாக வேண்டும் என்று விக்ரமை ஏமாற்றி, பேத்தியை தூக்கிச் செல்கின்றனர். சென்னைத் தெருவில் அனாதையாக விடப்படும் விக்ரமிற்கு உதவ முன்வருகிறார் வக்கீல் அனுஷ்கா. மனவளர்ச்சி குன்றியவரிடம் குழந்தையைக் கொடுக்க முடியாதென விஷயம் கோர்ட்டுக்குப் போகிறது. பாசமுள்ள தந்தையும் மகளும் இணைந்தார்களா? என்பதே கதை.
விக்ரமின் நடிப்பில் மற்றொரு மைல்கல் இந்தப் படம். மனவளர்ச்சி குன்றியவராக அவர் காட்டும் மேனரிசங்கள் அற்புதம். ஐந்து வயது குழந்தையின் மனநிலை கொண்டவராக வாழ்ந்திருக்கிறார் விக்ரம். விரல்களில் ஆரம்பித்து ஒவ்வொரு நகக்கணுவும் நடிக்கின்றது. எந்த வித ஹீரோயிசமும் செய்யாமல் தெய்வத்திருமகனாக வாழ்ந்திருக்கிறார். குழாயில் ஒழுகும் தண்ணீரைக் கண்டுகொள்ளாமல் 'நார்மல்' மக்கள் கடப்பதும், விக்ரம் அதை மூடுவதும் ஒரு நிமிடத்தில் நமக்குள் பல சிந்தனைகளைத் தோற்றுவிக்கும் காட்சி. மனைவி இறந்த செய்தி கேட்டு, அவர் கொடுக்கும் க்ளோசப் எக்ஸ்பிரசன் நம்மையும் கண்கலங்க வைக்கிறது. கயிற்றில் நடப்பது போன்ற கதாபாத்திரமாக இருப்பினும், எந்த இடத்திலும் அதிகப்படியான நடிப்பை வெளிப்படுத்தாமல் ரசிகர்களை கண்கலங்க வைக்கிறார் விக்ரம்.
படத்தின் உயிரூட்டம் என்றால் அது விக்ரமின் குழந்தை நிலா(சாரா) தான். அறிமுகமான ஆரம்பத்தில் இருந்தே மனதை கவர்கிறார். அசத்தலான முகபாவனை செய்து எல்லோருடைய மனதிலும் ஆழமாக பதிந்திருப்பார் என்றால் மிகையல்ல. விக்ரமும், நிலாவும் பேசிக்கொள்ளும் காட்சிகள் கொள்ளை கொள்ளும் அழகு. குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு தனக்கு தெரிந்தவிதத்தில் விக்ரம் பதிலளிப்பது போன்று காட்சி அமைத்திருப்பது இயக்குநரின் சாமர்த்தியம். நிலா, விக்ரம் பாசம் அழகிற்கு படப்பிடிப்பு நடத்தி இருக்கும் மலைப்பகுதியும், குளிரும் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவின் கைவண்ணத்தால் இன்னும் அழகு சேர்த்திருக்கிறது.
'அருந்ததி'க்கு அப்புறம் அனுஷ்காவிற்கு நடிப்பதற்கு வாய்ப்புள்ள படம். கதையின் முக்கியப் பாத்திரமாக வருகிறார். 'விழிகளில்' பாடலில் அனுஷ்கா அழகோ அழகு. இந்த அளவிற்கு அவரைக் குளோசப்பில் வேறு யாரும் காட்டியதும் இல்லை. குழந்தையை விக்ரமோடு சேர்க்க என்ன தடாலடித்தனம் செய்யவும் தயாராக இருக்கும் காட்சியிலும், கோர்ட்டில் எதிர்க்கட்சி வக்கீல் நாசரை மூக்கறுக்க வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டு அதற்காக அனுஷ்கா அலைவது இன்னும் இண்ட்ரஸ்டிங்.
அமலா பாலிற்கு பெரிதாக நடிக்க வாய்ப்பில்லை. காலை-மாலை மட்டுமே யூஸ் ஆகும் ஆவின் பால் ரேஞ்சுக்கே டீல் செய்திருக்கிறார்கள். இருந்தாலும் அமலாபாலும், நிலாவும் சந்திக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. அதேநேரத்தில் குழந்தையை தந்தையிடம் இருந்து பிரித்துவைக்கும் காட்சிகளில் நம் எதிர்ப்பை சம்பாதித்துகொள்கிறார்.
சந்தானம் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டினாலும் கதையோடு ஒரு கேரக்டராய் வலம் வருவதால் ஆங்காங்கு எனர்ஜி பூஸ்டராய் இருக்கிறார். அனுஷ்காவுக்கு அஸிஸ்டெண்டாய் வரும் ப்ரியா.. நிச்சயம் கவனிக்கத்தக்க நடிப்பு. இவருக்கும், எதிர்க்கட்சி வக்கீல் கோஷ்டியிலிருக்கும் வக்கீலுக்குமான காமெடி காதல் சுவை.
ஊட்டி கதைப்பகுதியில் காமெடிப் பொறுப்பு ஏற்பது எம்.எஸ்.பாஸ்கரும், பாண்டும். வழக்கமான பொண்டாட்டி மேல் சந்தேகப்படும் காமெடி தான் என்றாலும், சீரியசான படத்தில் பெரிய ரிலீஃப் அது தான். வில்லன் வக்கீலாக வரும் நாசர் கம்பீரமாக அந்தப் பாத்திரத்திற்குப் பொருந்திப் போகிறார்.
கொஞ்சம் மெதுவாக செல்லும் திரைக்கதை. அழுத்தமாய் சொல்லி நெகிழ வைக்க வேண்டிய காட்சிகளில், ஆங்கில பட இம்பாக்டில் மெலோ ட்ராமா இல்லாமல் ப்ளாட்டாக இருப்பது, தேவையேயில்லாமல் அனுஷ்காவை கட்டிப்பிடித்ததும் வரும் கனவு பாட்டு. நிறைய காட்சிகள் அப்படியே 'ஐ யாம் சாமி'லிருந்து வசனங்கள் உட்பட எடுத்தது, ஐ.க்யூ டெஸ்டில் விக்ரமுக்கு மார்க் வாங்க செய்யும் காட்சிகள், ஊட்டியில் பின்னால் வரும் திரைக்கதைக்கு வில்லன் வேண்டும் என்று எம்.எஸ்.பாஸ்கர் கேரக்டரையும், அவரின் மனைவி கேரக்டரையும் சிதைத்தது. க்ளைமாக்ஸில் நிஜ மனநலம் குன்றியவர்களை விட மோசமாக ரியாக்ட் செய்யும் எம்.எஸ்.பாஸ்கர் பேசும் காட்சி, என்று குறையாய் சில காட்சிகள் இருந்தாலும், அதையும் மீறி இக்கதையை எடுத்த விதத்தில் இயக்குநர் விஜய் பாராட்டைப் பெறுகிறார்.
நா.முத்துக்குமாரின் வரிகளுக்கு இனிமையான மெட்டுக்களை கொடுத்திருக்கும் ஜீ.வி.பிரகாஷ்குமார், பின்னணி இசையிலும் இப்படத்தின் மூலம் முன்னணிக்கு வருவார். ஒவ்வொரு காட்சிகளுக்கும் உணர்வுப்பூர்வமான பின்னணி இசையை கொடுத்திருக்கும் ஜீ.வியின் இசைகூட ஒரு கதாபாத்திரமாகவே வலம் வருகிறது.
'பாப்பா', 'வெண்ணிலவே' பாடல்கள் நன்றாக உள்ளன. கதை சொல்லும் பாடல் கேட்க சுமார் என்றாலும் எடுத்திருக்கும் விதம் குழந்தைகளையும் கவரும். பாட்டி வட சுட்ட கதையை ராஜா கதையுடன் மிக்ஸ் பண்ணி விக்ரம் சொல்லும் அழகும், கிராஃபிக்ஸ் உதவியுடன் காட்டிய விதமும் அழகு.
கள்ளங்கபடமற்ற அன்பை படம் முழுதும் தெளித்து நம்மைப் பல இடங்களில் கண்கலங்க வைக்கிறார்கள். படத்தின் முக்கிய பலம் வசனங்கள். படம் நெடுகே மெல்லிய நகைச்சுவை பரவிக்கிடக்கிறது, அதுவே இப்படத்தை ஃபீல் குட் வகையில் சேர்க்கிறது.
நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு, ஆண்டனியின் படத்தொகுப்பு என அத்தனை தொழில்நுட்பங்களும் கதையுடன் பயனித்திருக்கிறது.
இரண்டே முக்கால் மணி நேரம் ஓடுகின்ற இந்த நீளமான படத்தை, தனது உணர்ச்சிகரமான திரைக்கதையால் அதை மறக்கடிக்கச் செய்திருக்கிறார் இயக்குநர் விஜய். ரத்தமும், கலவரமும், சதையும், கவர்ச்சியையும் நம்பி உலா வரும் படங்களிடையே, நம்முள் உறைந்து கிடக்கும் பாச உணர்வுகளை, 'தெய்வத்திருமகள்' மூலமாய் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியிருக்கும் விஜய்யை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
தெய்வத்திருமகள் - தேவதை!
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum