Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சட்டப்படி குற்றம் - Sattappadi Kuttram
Page 1 of 1
சட்டப்படி குற்றம் - Sattappadi Kuttram
காட்டில் பதுங்கி சமூக அவலங்களை சாடும் போராளிகளின் கதை.
நேர்மையான போலீஸ் அதிகாரியான சுபாஷ் சந்திரபோஸை தனது வீட்டிற்கு அழைத்து அவமானப்படுத்துகிறார் தொகுதி எம்.பி. தனது செருப்பை எடுத்து வரும்படி சொன்ன எம்.பி. மீது கோபம் கொண்ட போஸ், அதே செருப்பால் எம்.பி.யை நாலு சாத்து சாத்திவிடுகிறார்.. கோபம் கொண்ட எம்.பி., போஸின் குடும்பத்தையே வேரறுத்துவிட.. போஸ் போலீஸ் வேலையில் இருந்து ஒதுங்குகிறார்..
நேருக்கு நேராக எம்.பி.யுடன் மோதி ஜெயிக்க முடியாது என்பதை உணர்ந்த போஸ், இதேபோல் அரசியல்வியாதிகளால், அதிகார அமைப்புகளால் பாதிக்கப்பட்ட இளைஞர்களையும், இளைஞிகளையும் திரட்டி அவர்கள் மூலமாக ஊழல்வியாதிகளையும், அரசியல்வியாதிகளையும் ஒழித்துக் கட்ட முடிவெடுக்கிறார். இதனை எப்படிச் செய்து முடிக்கிறார் என்பதுதான் படமே..!
இந்தக் காலக்கட்டத்தில் தமிழ்நாட்டுக்கு மிக அவசியமான திரைப்படம்தான் இது.. தற்போதைய அரசியல் சூழலை அக்குவேறு ஆணிவேறாக அர்த்தப்படுத்தியிருந்தாலும், இது அத்தனைக்கும் யார் காரணம் என்று குறிப்பிடும்போது மட்டும் சொதப்பிவிட்டார் எஸ்.ஏ.சி. என்ன காரணமோ? பயமா? அல்லது மரியாதையா என்று தெரியவில்லை..!
நித்தியானந்தா-ரஞ்சிதா மேட்டரும் ஒரு கிளைக் கதையாக வருகிறது..! சென்ற தேர்தலில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட கதையும் வருகிறது..! ஆ.ராசாவின் ஸ்பெக்ட்ரம் ஊழலை உரித்துத் தொங்கவிட்டிருக்கிறார். 'ராசா.. ராசா.. ராசா..' என்று ராசாவின் பெயர் இடைவேளைக்குப் பின்பு பல முறை திரையரங்கில் ஒலிக்கிறது..!
ஆ.ராசாவுக்கு எஸ்.ஏ.சி. வழங்கியிருக்கும் தண்டனை ஆயுட்காலம் முழுவதும் சிறைதான்.. சிறைக்குள்ளேயே செத்தால்கூட பொணத்தை வெளியே கொண்டு வரக் கூடாது. அதையும் சிறைக்குள்ளேயே புதைத்துவிடுங்கள் என்கிறார்..!
உயர்நீதிமன்ற நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், போலீஸ் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் என்று 40 பேரை காட்டுக்குள் கடத்தி வர வைக்கிறார் போஸாக நடித்திருக்கும் சத்யராஜ்.. கடத்தப்பட்டு வருபவர்களிடம் தங்களின் சோகக் கதையைக் கூறி, நாடு இன்றைக்கு இருக்கும் நிலைமையை எடுத்துச் சொல்லி தாங்கள் நடத்தவிருக்கும் புதிய சுதந்திரப் போராட்டத்திற்கு அவர்களிடத்தில் உதவி கேட்கிறார்.. ஒரு நீதிபதி ஒத்துக்கொள்ள.. அவருடைய தலைமையிலேயே அரசியல்வியாதிகளுக்கு எதிராக தனது போராட்டத்தைத் துவக்குகிறார் சத்யராஜ். இதற்கு இன்னுமொரு போலீஸ் அதிகாரியும் ஒத்துழைப்பு கொடுக்க முதலில் அரசியல்வியாதிகளின் அல்லக்கைகள் மானாவாரியாக சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
பின்பு.. மக்கள் சொத்துக்களை சுருட்டி வைத்திருக்கும் அரசியல்வியாதிகளின் மேல் போலீஸ், நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க வைக்கிறார். அரசியல்வியாதிகள் அனைவரும் அடுத்த இரண்டு நாட்கள் இடைவெளியில் அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் தாங்கள் முறைகேடாக சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் ஒப்படைக்காவிட்டால் அனைவரும் கூண்டோடு கைலாசந்தான் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.
மந்திரி பிரதானிகளும், எம்.எல்.ஏ.க்களும் கட்சித் தலைவரிடம் போய் இது பற்றி முறையிட.. அவர் தன் சோகத்தைப் புலம்புவதுதான் படத்தின் ஹைலைட்.. "நான் இதுவரைக்கும் எவ்வளவோ நல்ல பேர் சம்பாதிச்சு வைச்சிருந்தேன். அத்தனையும் குழி தோண்டி புதைச்சுட்டீங்க. உங்களையெல்லாம் எவ்ளோ நம்பியிருந்தேன். கடைசில என் குடும்பத்துல இருக்குறவங்களே எனக்குத் துரோகம் பண்ணிட்டாங்க.." என்று முழு பிளேட்டையும் மாற்றிப் போட்டுப் பேச.. அதுவரையிலும் படத்தின் மீதிருந்த மரியாதை இந்த இடத்தில் பட்டென்று உடைந்துபோனது.
வெறும் குரலை மட்டுமே காட்டும் அந்தக் காட்சியில் அந்தத் தலைவர் யார் என்பது தெளிவாகத் தெரிந்து தியேட்டரில் கை தட்டல்கள் ஒலித்தன என்றாலும், எஸ்.ஏ.சி.யின் இந்தச் சறுக்கல் யாருமே நினைத்துப் பார்க்காதது...! இதுதான் இப்படியென்றால் படம் முழுக்கவே ஒருவித முழுமையற்ற இயக்கம்தான் தென்படுகிறது. ஏனென்று தெரியவில்லை. உண்மையாகவே எஸ்.ஏ.சி.தான் இயக்கம் செய்தாரா? அல்லது வேறு யாராவது செய்தார்களா என்றும் சந்தேகம் வருகிறது..!
சத்யராஜ் சேகுவேரா ஸ்டைலில் உருமாறியிருக்கிறார். நீண்ட வருடங்களாக அவர் எதிர்பார்த்திருந்த வேடம். இப்போதுதான் சிக்கியிருக்கிறது. ஏதோ தன்னால் முடிந்த அளவுக்கு எடுபட்டிருக்கிறார்..! குவார்ட்டரை கொடுத்துவிட்டு புல் அடித்த போதையில் ஆடும்படி சொன்னால் எப்படி ஆடுவார்..? அப்படித்தான் இருக்கிறது அவரது நடிப்பு..! ஆனாலும் தாத்தாவை திட்டுவதுபோல் வரும் ஒரு வசனத்தை உச்சரித்திருக்கும் தைரியத்திற்கு ஒரு சபாஷ்..! ஆனாலும் வெளிப்படையாக என்றைக்கு அவர் தனது முகமூடியைக் கழட்டப் போகிறார் என்று தெரியவில்லை. பார்ப்போம்..!
வழக்கறிஞராக நடித்திருக்கும் சீமானின் வாதம் சுவாரஸ்யமாக உள்ளது. வில்லனாக நடித்திருக்கும் வெங்கடேஷின் கெட்டப்பும், நடிப்பும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப அமைந்திருக்கிறது. விக்ராந்த், ஹரிஷ் கல்யாண், பானு, ராதாரவி, சுரேஷ் என மற்ற கதாபாத்திரங்களும் தங்களுடையை வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ராதாரவி நீதிபதி கேரக்டரில்.. அவர் வாசிக்கின்ற தீர்ப்பு வாசகங்கள் மிக காமெடி.. அதைவிடக் காமெடி அசுர வேகத்தில் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு சொல்வது..! நிச்சயமாக தற்போதைய சூழலில் அது போன்று நடத்தவே முடியாது. ஆனாலும் இயக்குநரின் ஆசை போலும்..!
காட்டுக்குள் இத்தனை இளைஞர்களையும் திரட்டிக் கொண்டு போய் அமர்த்தி தனியே டிரெயினிங் கொடுப்பதை கற்பனையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை என்றாலும் வீரப்பன் கதையைக் கொஞ்சம் தொட்டுத் தொட்டு அதனை நம்பும்படியாக ஆக்கியிருக்கிறார் இயக்குநர்..
கருவறை சாமியார், நடிகையுடன் சல்லாபமாக இருந்த சாமியார் என்று துவங்கி, ஊழலில் ராசாவாக திகழும் அரசியல்வாதிகள் என அத்தனை பேரையும் துவைத்து காயப்போட்டிருக்கும் இயக்குநர், அவ்வப்போது தனது மகன் விஜயின் புகழ் பாடவும் செய்திருக்கிறார். பத்திரிகை செய்திகளை காட்சிகளாக எடுத்துகொண்டு அதை ஒன்றுக்குப் பின் ஒன்று இணைத்து படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் லாஜிக் என்ற விஷயத்தையே சுத்தமாக மறந்துவிட்டார். அதுவும் மாறுவேடத்தில் காட்டுக்குள் செல்லும் காவல்துறை அதிகாரி துப்பாக்கியை அனைவருக்கும் தெரியும் வகையில் வைத்துகொண்டு போவதெல்லாம் கொஞ்சமல்ல ரொம்பவே ஓவர்.
'ஊமை விழிகள்' படத்தின் 'ராத்திரி நேரத்து பூஜையில்' பாட்டை ரீமிக்ஸ் செய்து கொலை செய்திருக்கிறார் விஜய் ஆண்டனி. கொத்து புரோட்டா போடுவதைப் போல பல சினிமா பாடல்களை இணைத்து இன்னொரு ஜுகல்பந்தியையும் நடத்தியிருக்கிறார். மற்றபடி படத்துக்கு இவர் எந்தவிதத்திலும் உதவவில்லை..!
காட்சியமைப்புகளில் இருக்கும் உருப்படியில்லாத தன்மையும், நாடகத்தனமான வசன உச்சரிப்புகளும் படத்தின் தொய்வுக்கு மிக முக்கிய காரணமாக உள்ளன. அரசியல் விமர்சகர்களுக்கு வேண்டுமானால் இத்திரைப்படம் பிடித்தமாக இருக்கலாம் மற்றவர்களுக்கு..? நிச்சயமாக இத்திரைப்படம் சட்டம் ஒரு இருட்டறையே, நான் சிகப்பு மனிதனோ இல்லை.. அவைகளில் இருந்த ஒரு விறுவிறுப்பு, இதில் இல்லாமல் போனது என்னவே? உண்மைதான்..!
எப்பாடுபட்டாவது இத்திரைப்படத்தை தேர்தலுக்குள் கொண்டு வந்தாக வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டிருக்கிறார் எஸ்.ஏ.சி. அந்த ஒரு விஷயத்திற்காகவும், இந்த நேரத்தில் திரையுலகில் யாருக்குமே தோன்றாத அளவுக்குத் தைரியத்துடன் ஆளும் கட்சியை நேரடியாகவே தாக்கி ஒரு திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டதற்காக தாராளமாக பாராட்டலாம் எஸ்.ஏ.சியை.
சட்டப்படி குற்றம் - சாட்டையடி!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum