Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பதினாறு - Pathinaru
2 posters
Page 1 of 1
பதினாறு - Pathinaru
காதல் என்றால் பொய், ஏமாற்று வேலை என ஒரு வாதம் இருந்து கொண்டே இருக்கும். இன்னொரு வகையில், காதல் என்றால் உண்மை, கடவுள் போன்ற வாதமும் இருக்கும். உண்மைக் காதல் என்றுமே தோற்காது என ஒரு சாரார் கூறுவார்கள். காதலர்கள் தோற்றாலும், காதல் என்றுமே தோற்காது என ஆண்டாண்டு காலமாகக் கூறுவார்கள். இவை எல்லாவற்றையும் மையப்படுத்தி தமிழ் சினிமாவில் நிறைய காதல் படங்கள் வந்து போயிருக்கின்றன. அப்படியான கதைக் களத்துடன் வெளிவந்திருக்கும் படம் தான் இந்த 'பதினாறு'.
சிவா - மது ஷாலினி காதலர்கள். சாதாரண பள்ளி, கல்லூரி காதல் தான். தனியாகச் சந்திப்பது, சுற்றுவது என அவர்களது கல்லூரி நாட்கள் கழிகின்றன. பெண்ணின் பெற்றோர்களுக்கு இவர்கள் காதல் பிடிக்கவில்லை. காதல் பொய்யானது என்ற கருத்தை எடுத்துரைத்து மனதை மாற்ற முயல்கிறார்கள். முடியாது போகவே 'பதினாறு' என்ற ஒரு கதைப் புத்தகத்தை (டைரி) இருவருக்கும் வாசிக்க கொடுத்து, 'இப்படித் தான் காதல் இருக்கும்' என தெளிவு படுத்துகிறார்கள்.
டைரியில் இருக்கும் கதை ஒரு அழகான கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறது. படத்தின் பெரும்பகுதி அங்கேயே நகர்ந்து விடுகின்றது. அந்த கிராமத்திலும் ஒரு அழகான காதல் கதை உண்டு. அந்த கதையை படித்த பின்பும் மனம் மாறாத சிவா, அந்த கதையில் இடம்பெற்ற பாத்திரங்களைத் தேடிப் புறப்படுகிறார். அவ்வாறு புறப்பட்ட சிவாவிற்கு கிடைத்த விடை என்ன? எத்தனையோ காதல் கதைகள் இருந்தும் பதினாறு கதையை மது ஷாலினியின் அம்மா இந்த ஜோடியிடம் படிக்கக் கொடுக்க காரணம் என்ன? சிவா - மது காதல் கடைசியில் கைகூடியாதா, இல்லையா? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு இனிமையாகவும், இளமையாகவும் விடையளிக்கிறது படத்தின் மீதிக்கதை!
'சிவா என்றாலே சிரிப்பு' என்று சொல்லும் அளவுக்கு பேர்வாங்கிய அதே சிரிப்பு கதாநாயகன் சிவாதான் இதே படத்திலும் பிரதிபலிக்கிறார். மச்சான் மச்சான் என்று காதலியை செல்லமாக அழைக்கும் சிவாவுக்கு ஆங்காங்கே அவருக்கே உரித்தான நையாண்டித்தனமும், நக்கலும் வெளிப்பட்டாலும் படத்தின் இயல்பு மாறாமல் நகரத்து காதலராக நடித்திருக்கிறார். சிவா-மது ஷாலினியின் காதல் இனிப்பு என்றால், கிராமத்து காதல் கோடியான வினிதா, கிஷோர் காதல் ஆந்திர காரத்தையே மிஞ்சும் அளவுக்கு அமைந்திருக்கிறது.
மது ஷாலினியின் நடிப்பும், முகமும் முன்னணி நடிகைகளின் வரிசையில் இடம்பிடிக்க தேவையான தகுதிகள்.
அப்புறம் அந்த ப்ளாஷ்பேக்.. (புதுமுகங்கள் வினிதா, கிஷோர்) டென்த் படிக்கிற வயசு. மனசு முழுக்க கிளைடாஸ்கோப் கொட்டி ரசிக்கிறார்கள் இருவரும். இளவரசிக்கு ஐ, கோபிக்கு ஜி என்று அடையாளம் கொள்ளும் கோபி, சுவர் முழுக்க 16... 16 என்று எழுதிவைக்க, இந்த 6 என்பது ஆங்கில எழுத்தான ஜி என்பதே அப்புறம்தான் விளங்குகிறது! ஒரு காட்சியில் முறைப் பையனோடு பைக்கில் போகும் வினிதா தென்னை மரங்களில் எழுதப்பட்டிருக்கும் நம்பர்களில் ஒன்றான 16 ஐ பார்த்து பரவசப்படுவது விசிலடித்து ரசிக்க வேண்டிய விஷூவல்!
கோபத்தில் கடுகடுப்பாகும் வினிதா, தன் குடும்பத்தையே எதிர்த்துக் கொண்டு செய்கிற அட்டகாசங்கள் ஒவ்வொன்றும் பயங்கரம். நேரில் பார்க்கிற ரசிகர்கள் நாலு அறை விட்டால் கூட ஆச்சர்யம் இல்லை. அவன் சம்பாத்தியத்துல ஒரு துணி மணி கூட வாங்கி தர முடியாது என்ற ஒற்றை வார்த்தைக்காக கோவிலுக்குள் புகுந்து கொண்டு எல்லாவற்றையும் அவிழ்த்துப்போடும் அவளது கோபம் இவள் பெண்ணா, பேயா என்றே கலங்க வைக்கிறது.
வினிதாவின் காதல் தாண்டவத்தை பார்த்து படபடக்கும் அப்பாவாக நடித்திருக்கும் பத்திரிகையாளர் குணாவின் நடிப்பு சிறப்பு. எல்லை மீறி அட்டகாசம் செய்யும் பெண்ணை கட்டுப்படுத்த முடியாமல் கலங்கி தவிப்பதை தனது பாடிலேங்குவேஜ் மூலம் வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பலே வாங்கிச்செல்கிறார்.
சின்னத்திரை நடிகர், இயக்குநர் அபிஷேக், 'கனாக்காணும் காலங்கள்' புகழ் பாண்டி உள்ளிட்ட சிலரும் வருகிறார்கள். ஒரு காட்சியில் வந்தாலும் கஸ்தூரியின் கதாபாத்திரம் பலமாக மனதில் நிற்கிறது.
இடைவேளைக்குப்பிறகு தனது காதலில் நாயகி உறுதியாக இருப்பது போல் காட்ட நினைத்தவர் வீம்பு பிடித்த பெண்ணாக காட்டியது திரைக்கதை கோளாறா? கேரக்டர் வடிவமைப்பில் ஏற்பட்ட பிழையா?
பொதுவாக எல்லாரையும் நல்லவராக காட்ட நினைக்கும் இயக்குநரின் நல்லஎண்ணம் புரிகிறது. ஆனால் முறை மாமனை, நல்லவனாக காட்டியதால் அவர் மீது பரிதாபம் ஏற்பட்டு இந்த காதல் ஜோடி சேர்ந்துதான் ஆக வேண்டுமா? என்ற எண்ணம் நமக்கு ஏற்படுவது படத்தின் வெற்றிக்கு மாபெரும் மைனஸ்.
அச்சு அசலான கிராமம். அங்கு அச்சுவெல்லத்தை விளைய வைத்த மாதிரி வசனங்கள் என்று கவனிக்க வைத்திருக்கிறார் வசனகர்த்தா மகாலிங்கம்! கிராமம், நகரம் என்று எல்லா திசைகளிலும் நமது கையை பிடித்துக் கொண்டு நடக்கிறது யுவன் சங்கர்ராஜாவின் பின்னணி இசை. பாடல்களும் இனிமை. அருள்தாசின் ஒளிப்பதிவில் கிராமம் குளுமை.
ஒரு சூப்பர் ஹிட் ஆக வேண்டிய படத்தை இயக்குநர் கவனக்குறைவால் சாதாரண லவ் சப்ஜெக்ட் ஆக்கி விட்டாரே!
பதினாறு - பருவக் கோளாறு!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum