Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காவலன் - Kaavalan
Page 1 of 1
காவலன் - Kaavalan
பெரிய இடத்துப் பெண் மேல் காதல் கொண்டு எஜமானின் கோபத்தை சம்பாதிக்கும் பழைய காவலன் கதைதான்.
விஜய் வெற்றிக்காக எவ்வளவு தூரம் இறங்கி வந்து இருக்கிறார் என்பதற்கு ரோஜாவிடம் அவர் அடி வாங்கும் காட்சி ஒன்றே போதும். விஜய்யின் முந்தைய படங்களிலிருந்து சற்று வித்தியாசமான பாணியில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் சித்திக். ஓவர் பந்தாவாக லாஜிக்கை மீறிய விஜய்யின் அறிமுகம் இல்லாமல் சாதாரண அறிமுகத்துடன் காவல் வேட்டையை ஆரம்பிக்கிறார் விஜய். அறிமுகப் பாடலான 'விண்ணை காப்பான் ஒருவன்' பாடல் கூட 30 நிமிடங்களின் பின்புதான் என்றால் பாருங்களேன்!
பிளாஷ்பேக் கதையாக ஆரம்பமாகிறது படம். சண்டை சச்சரவு என ஊதாரியாகத் திரியும் விஜய், அவரின் மாமா மூலம் ராஜ்கிரணுக்கு பாடிகார்டாக வேலைக்கு சேருகிறார். வில்லன் மகாதேவனால் தனது மகள் அசினுக்கு ஆபத்து வருமென அறிந்த ராஜ்கிரண் அசினுக்கு பாடிகார்டாக இருக்கும்படி புரோமோஷன் கொடுத்து விடுகிறார். அசின் படிக்கும் காலேஜ்லேயே பாடிகார்டாக வேலை பார்த்துக் கொண்டு படிக்கிறார் விஜய். அதன் பின்பு போனில் கதைப்பது அசின்தான் என அறியாமலே லவ் பண்ணுகிறார் விஜய்.(அசினுக்கு தெரியும்) இறுதியில் ஒருவரை ஒருவர் சந்தித்தனரா? அவர்களின் காதல் வெற்றி பெற்றதா? என்பதே மீதி கதை.
பில்ட்-அப் ஓப்பனிங், சூப்பர்மேன் சூரத்தனம், பஞ்ச் பராக்கிரமம், ஆக்ஷன் அவதாரம் என எந்த அலட்டல் மிரட்டலும் இல்லாத 'ஸோ ஸாஃப்ட்' விஜய் சினிமா! காதலியை முதன்முதல் சந்திக்கப் போகும் தவிப்பில் பூங்கா இருக்கையில் இடறி விழுந்து சமாளிப்பதும், 'எனக்காக வேண்டிக்கங்க!' என்று கலங்கிய கண்களுமாக... வெல்கம் விஜய்!
ஒரு மாஸ் ஹீரோ காமெடிக் காட்சிகளிலும் கலக்கினால்தான் அவன் நிலைத்திருக்க முடியும். அந்த வகையில் இந்தப் படத்தில் நகைச்சுவை விருந்தும் படைத்திருக்கிறார் விஜய். அசினுடன் கல்லூரிக்குச் செல்லும் காட்சியில் பேசிக்கொண்டே லேடிஸ் டாய்லெட்டில் நுழைவது, வடிவேலுவை மிரட்டும் காட்சிகள் என துறுதுறுவென விஜய் செய்யும் அட்டகாசங்கள் கலக்கல்.
வடிவேலு ஓரளவு சிரிக்க வைக்கிறார். விஜய்யிடம் மொபைலை கொடுத்து விட்டு வடிவேல் சொல்லும் டயலாக் 'யாரோ பார்வதி நம்பியாராம் சார்' அதற்கு விஜய் "டேய் லூசு, அது பார்வதி நம்பியார் இல்ல. 'ப்ரைவேட் நம்பர்' டா" என சொல்லும் காட்சியில் தியேட்டர் குலுங்குகிறது. 'டிஸ்யூம்' படத்தில் 'அமிதாப்' எனும் ரோலில் வரும் குள்ளமான மலையாள நடிகர் அறிமுகமாகும் காட்சி நல்ல நகைச்சுவை. அவரை வரவேற்று மாலை போட, அதனுள் புகுந்து வெளியே வந்து அவர் சொல்லும் வசனம் 'மாலையா..ஆர்ச் என்று நினைச்சேன்'. நல்ல வசனம்.
'காவலன்' கண்டிப்பாக விஜய்க்கு மீண்டும் ஒரு மலர்ச்சியைத் தரும் என நம்பி இருக்கையில், இரண்டாம் பாதியில் அசின் கிளிசரின் மழை பொழிந்து சொதப்புகிறார். மேடம் கஷ்டப்பட்டு நடிக்க முயற்சி செய்கிறார். நடக்கவில்லை. விஜய்யின் காதலை சோதிக்க அசின் மேடம் ப்ளட் டெஸ்டைத் தவிர எல்லா டெஸ்டும் வைக்கிறார். நமக்குதான் ப்ளட் கொதிக்கிறது. ராஜ்கிரண், ரோஜா, எம்.எஸ்.பாஸ்கர் யாருக்குமே பெரிதாக வேலை இல்லை.
குத்துப்பாட்டு, ஆபாசம், வன்முறை இல்லை. அது பாராட்டப்பட வேண்டியதே. ஆனால் அதே சமயம் படமும் சுவாரஸ்யமாகத் தொய்வின்றி செல்ல வேண்டுமே? முதல் பாதியில் ஓரளவிற்கு நன்றாகப் போகும் படம் இரண்டாம் பாதியில் அசின் விஜய்யின் ஃபோன் கடலையை மட்டுமே கடைசி வரை காட்டியிருப்பது நம்மை நூறு முறை கொட்டாவி விட வைக்கிறது...
ரொமாண்டிக்கான படங்களுக்கு இன்னொரு முக்கியமான விஷயம் இசை. அது இந்தப் படத்தில் மிஸ்ஸிங். ஒரே ஒரு பாடலான 'யாரது யாரது' க்யூட் மெலடி. மற்ற பாடல்கள் பெரிதாய் நினைவில் நிற்கவில்லை. வழக்கமாய் விஜய் படங்களில் குத்து பாடல் போன்ற நடனப் பாடலான 'ஸ்டெப்..ஸ்டெப்' பாடலை விஜய்யின் நடனத்துக்காக பார்க்கலாமே தவிர.. வேறொன்றும் ஸ்பெஷலாக இல்லை.
படத்தின் க்ளைமாக்ஸ் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. போன் காதலில் ஏற்படும் சின்ன சின்ன எதிர்ப்பார்ப்புகள் படத்தை லேசாகத் தூக்கி நிறுத்துகிறது. நல்ல கதையைத் தேர்வு செய்துவிட்டு மோசமான திரைக்கதையில் சறுக்கிவிட்டார் இயக்குநர் சித்திக். வழக்கமான மசாலாக்களை விட்டு விட்டு நல்ல கதையைத் தேர்வு செய்ததற்கு விஜய்க்கு ஒரு பாராட்டு..
அசினின் தோழிக்கு எப்போது விஜய் மேல் ஒரு தலையான காதல் வந்தது? அசினுக்கு வேண்டுமானால் விஜய் மீது காதல் வந்திருக்கலாம் ஆனால் விஜய்க்கு அசின் மேல் எப்போது காதல் வந்தது? ஒரு வேளை போன் பேசும் அம்முக்குட்டியின் மேல் உள்ள காதல் அசின் மேல் ட்ராவல் ஆகும் என்று நினைத்தீர்களா இயக்குநரே? மொத்தத்தில் கொஞ்சமே கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் நிச்சயம் ஒரு சூப்பர் ஹிட் படத்தை ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் அளித்திருக்க முடியும். மொத்தத்தில் கடைசியாக வந்த விஜய் படங்களை ஒப்பிட்டால் இது நூறு சதவீதம் மேல்.
காவலன் - வேலி!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» காவலன் காதலன்
» காவலன் பாடல் வெளியீடு தமிழ்நாட்டிலேயே நடக்கட்டும்.!!
» வரும் ஆனா வராது :காவலன்
» ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிட காவலன் தேர்வு
» 'காவலன்' படத்துக்கு வந்த பிரச்சனை.
» காவலன் பாடல் வெளியீடு தமிழ்நாட்டிலேயே நடக்கட்டும்.!!
» வரும் ஆனா வராது :காவலன்
» ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிட காவலன் தேர்வு
» 'காவலன்' படத்துக்கு வந்த பிரச்சனை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum