Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பெண்ணிற்குள் சத்தமில்லாமல் இருக்கும் ஒரு பிரச்சனை!
+3
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
abuwasmee
7 posters
Page 1 of 1
பெண்ணிற்குள் சத்தமில்லாமல் இருக்கும் ஒரு பிரச்சனை!
ஆறு ஆண்களுக்கு ஒரு டாக்டர் சிகிச்சை அளிப்பது, ஒரு பெண்ணுக்குச் சிகிச்சை அளிப்பதற்குச் சமம்’ என்று ஒரு ஸ்பானியப் பழமொழி உண்டு. ஆண் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் பழமொழியாக இது இருந்தாலும் கூட பெண்ணின் சிறுநீர்ப் பிரச்சினைகளைப் பொறுத்தவரை இப்பழமொழி வெளிப்படுத்தும் கருத்து உண்மை.
ஆண்களைப் போல் அல்லாமல் பெண்களுக்கு கர்ப்பப் பை (Uterus), சிறுநீர்ப் பை (UrinaryBladder) கர்ப்பப் பை வாய்க்குழாய் (Vagina), சிறுநீர் குழாய் (Urethra) மலக் குடல் (Rectum) ஆகியவை ஒன்றோடு ஒன்று நெருக்கமாக அமைந்துள்ளன. இதனால் பிரசவத்தின்போதும், கர்ப்பப் பை தொடர்பான அறுவைச் சிகிச்சையின் போதும் சிறுநீர்ப் பை உள்பட சிறுநீர் தொடர்பான உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. விளைவு, சிறுநீரை அடக்க முடியாத பிரச்சினை (Incontinence) 63 சதவீத பெண்களுக்கு உள்ளது.
இப்பிரச்சினையை வெளியே சொல்லுவதற்கு பெண்களிடம் தயக்கம், கூச்ச சுபாவம் இன்னமும் தொடர்கிறது. மருத்துவ முன்னேற்றம் காரணமாக இப்பிரச்சினைக்குத் தீர்வு காண நவீன சிகிச்சை உள்ளது.
ஓசையின்றி பெண்களுக்கு உள்ள இப் பிரச்சினை குறித்து விரிவான தகவல்கள்:
மகளிர் சிறுநீர்ப் பிரச்சனைக்குச் சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவப் பிரிவு உள்ளதா?
ஆண் பெண் இருபாலரின் சிறுநீர்ப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொது மருத்துவப் பிரிவுக்கு ‘யுராலஜி (Urology) என்று பெயர். மகளிர் நோய்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பிரிவுக்கு ‘கைனகாலஜி’
(Gynaecology) என்று பெயர்.மகளிர் சிறுநீர்ப் பிரச்சினைகளுக்கு மட்டும் பிரத்தியேகமாகச் சிகிச்சை அளிக்க ‘யுரோகைனகாலஜி’ (Urogynaecology) என்ற சிறப்பு மருத்துவப் பிரிவு உள்ளது. இந்தியாவில் மகளிர் நோய்க்குச் சிகிச்சை அளிப்போரில் (Gynaecologists) நான்கு டாக்டர்கள் மட்டுமே இத்துறையில் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ள னர். இவ்வாறு மகளிர் சிறுநீரியல் மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ள டாக்டருக்கு ‘யுரோகைனகாலஜிஸ்ட்’ (Urogynaecoligist) என்று பெயர்.இந்தியாவில், தமிழ் நாட்டில், சென்னை திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனையில் இச் சிறப்பு பிரிவு உள்ளது.
சிறுநீர் கழிப்பதைப் பொறுத்தவரை பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை என்ன?
ஒரு பெண் வளர்ந்து பூப்பெய்து, திருமணம் செய்து கொள்ளும் வரை பெரும்பாலும் தொடர் சிறுநீர்ப் பிரச்சினைகள் வருவதில்லை. ஏற்கெனவே சொன்னது போல், பெண்களுக்கு இயற்கையிலேயே கர்ப்பப் பை, சிறுநீர்ப் பை, கர்ப்பப் பை வாய்க்குழாய், சிறுநீர்க் குழாய், மலக்குடல் ஆகியவை மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளன.
இயல்பான பிரசவத்தின் போது குழந்தை வெளியே வரும்போது கர்ப்பப் பையை ஒட்டினாற்போல் உள்ள சிறுநீர்ப் பை, சிறுநீர்க் குழாய் ஆகியவை அழுத்தத்துக்குள்ளாகி சிறுநீர்ப் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. இதே போன்று பிரசவம் தாமதமாகி ஆயுதம் பயன்படுத்தப்படுதல், சிசேரியன், கர்ப்பப் பை நீக்குதல் அறுவைச் சிகிச்சைகளின் போதும் இந்த உறுப்புகளில் பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக சிறுநீர்ப் பை, சிறுநீர்த் தாரையில் ஓட்டை ஏற்படலாம். இதனால் சிறுநீரை வெளியேற்றும் கட்டுப்பாட்டை சிறுநீர்ப் பை இழக்க )Incontinence) நேரிடும். தொடர்ந்து சிறுநீர் ஒழுகிக் கொண்டே இருக்கும்.
சிறுநீரை வெளியேற்றும் பிரச்சினை வகைகள் யாவை?
சிறுநீரை வெளியேற்றும் கட்டுப்பாட்டை இழப்பது அல்லது அடக்க முடியாத தன்மையில் (Incontinence) சில வகைகள் உள்ளன. அறிகுறிகளும் வேறுபட்டதாக இருக்கும்.
1. கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து சிறுநீர் வெளியேறும் பிரச்சினை )Continuous Incontinence) பிரசவம் உள்பட அறுவைச் சிகிச்சைகளின் போது சிறுநீர்ப் பை, சிறுநீர்த் தாரை ஆகியவற்றில் ஏற்படும் காயம் (Fistula) காரணமாக இந்த வகை சிறுநீர்ப் பிரச்சினை ஏற்படும்.
ஆரோக்கியமான நிலையில் மூளையிலிருந்து நரம்புகள் மூலம் சிறுநீரை வெளியேற்றும் உத்தரவு சிறுநீர்ப் பைக்கு வருகிறது. எனவே நரம்பியல் தொடர்பான பிரச்சினைகள் காரணமாகவும் இத்தகைய கட்டுப்பாடு இல்லாத தொடர்ந்து சிறுநீர் வெளியேறும் பிரச்சினை ஏற்படலாம்.
2. திடீர் அசைவுகள் காரணமாக ஏற்படும் கட்டுப்பாடு இல்லாமல் சிறுநீர் வெளியேற்றம் பிரச்சினை (Stress Incontinence): இருமல் (Coughing), தும்முதல் )Sneezing), சிரித்தல் (Laughing), பொருள்களை தூக்குதல் (Lifting), குனிதல் (Bending), ஓட்டம் (Running) ஆகிய உடல் அசைவுகளின் போது கட்டுப்பாடு இல்லாமல் சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீர் கசியத் தொடங்கும்.
3. அவசரமாக சிறுநீர் கழிக்கும் பிரச்சினை :எவ்வித முன்னெச்சரிக்கை அறிகுறியும் இன்றி திடீரென சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்ப ட்டு கழிப்பறையை நோக்கி கால்களை அவசரமாக நடக்கச் செய்யும் பிரச்சினை இது. சில நேரங்களில் கழிப்பறையை அடையும் வரை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு ஆடையிலேயே சிறுநீர் வெளியேறி விடும்.
4. சிறுநீர்ப் பை நிரம்பி வழியும் பிரச்சினை (Urge Incontinence): இந்த வகைப் பிரச்சினையில் சிறுநீர்ப் பையிலிருந்து முழுமையாக சிறுநீர் வெளியேறாது. அதாவது சிறுநீர் முழுவதுமாக உள்ள சிறுநீர்ப் பையில் சிறுநீரகங்களிலிருந்து மேலும் சிறுநீர் வந்து சேரும். விளைவு, நீர் நிரம்பிய பாத்திரத்தில் திறந்துள்ள குழாயிலிருந்து வரும் தண்ணீர் வழிவது போல், சிறுநீர் கசியத் தொடங்கும்.
அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டும் காரணிகள் யாவை?
அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டும் காரணிகள் :
1. காபி, டீ மற்றும் பால் சார்ந்த பொருள்கள்; 2. எலுமிச்சை ஆரஞ்சு பழச்சாறுகள், தக்காளி; 3. சர்க்கரை, செயற்கை இனிப்பூட்டிகள்; 4. ஏ.சி. அறையில் உட்காருதல்.
சிறுநீர்ப் பிரச்சினை உள்ளதற்கான ஆரம்ப அறிகுறி என்ன?
பகல் நேரங்களில் 6 முதல் 7 தடவை சிறுநீர் கழிப்பதும் இரவில் ஒன்று அல்லது இரண்டு முறை சிறுநீர் கழிப்பதும் இயல்பானது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் சிறுநீர்ப் பிரச்சினை உள்ளதாக அர்த்தம். மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
பிரச்சினையைக் கண்டுபிடிக்க சோதனைகள் யாவை?
வழக்கமான ரத்தம், சிறுநீர்ப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். பிறகு சிறுநீர்ப் பிரச்சினையின் தன்மைக்கு ஏற்ப அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிறுநீர்ப் பையை முழு மையாக ஆய்வு செய்தல் மற்றும் சிறுநீர்ப் பாதையில் அடைப்பு உள்ளதைக் கண்டுபிடிக்கும் சிஸ்டாஸ்கோப்பி கருவி சோதனைகள் செய்யப்படும்.
இறுதியாக ‘யுரோடைனமிக் ஸ்டடி’ (Urodynamic Study) என்ற கருவி சோதனை உள்ளது. இச் சோதனையின் மூலம் சிறுநீர்ப் பை, சிறுநீர்த் தாரையின் செயல்பாட்டைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். விடியோவுடன் இணைந்த கருவி என்பதால் பிரச்சினையைப் படமாக்கி பதிவு செய்ய முடியும். சிறுநீர்ப் பை சிறுநீர்த் தாரையின் அழுத்தம், சிறுநீர்ப் பையின் மொத்தக் கொள்ளளவு, நோயாளி சிறுநீர் கழித்த பிறகு சிறுநீர்ப் பையில் தேங்கும் சிறுநீரின் அளவு (Residual Urine) போன்றவற்றை இச்சோதனை மூலம் துல்லியமாகக் கணக்கிட்டுவிட முடியும்.
நோயாளியை, சிறுநீர் கழிக்கச் சொல்லி வரைபடம் மூலம் சிறுநீர் வெளியேறும் வேகத்தைக் கணக்கிடும் சோதனையும் (கிச்சை அளிக்க உதவும்.
சிறுநீர் கட்டுப்பாடு இல்லாத பிரச்சினைகளுக்குச் சிகிச்சை என்ன?
சிறுநீர் கட்டுப்பாடு இல்லாமல் வெளியேறும் பிரச்சினைக்கு (Uroflowmeter) பிரச்சினையின் தன்மைக்கு ஏற்ப கூபகத் தசைப் பயிற்சி, மருந்துகள், அறுவைச் சிகிச்சை ஆகியவை பலன் அளிக்கும்.
சிறுநீரை வெளியேற்றுவதில் சிறுநீர்ப் பைக்குப் பயிற்சி (Bladder Training): பெண்கள் வீட்டை விட்டு வெளியிடங்களுக்குச் செல்லும் நிலையில், சிறுநீர் கழி த்துவிட்டுப் புறப்படுவது நல்லது. ஏனெனில் போகும் இடத்தில் கழிப்பறை இருக்குமோ, இருக்காதோ என்ற சந்தேகம். இதனால் சிறு நீர்ப்பை முழுவதும் நிரம்பாமலேயே சிறுநீரை வெளியேற்றும் பழக்கம் ஆரம்பிக்கிறது. இதனால் சிறிதளவு மட்டுமே சிறுநீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தன்மைக்கு சிறுநீர்ப்பை (Bladder) உட்படு கிறது. தொடர் பழக்கம் காரணமாகச் சிறிதளவு சிறுநீர் சேர்ந்தவுடனேயே வெளியேற்றும் தன்மையும் உருவாகி விடுகிறது. இது நல்லது அல்ல.
குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள், அலுவலகத்தில் கழிப்பறை சுகாதாரமின்மையை மனத்தில் கொண்டு மாலை வரை சிறுநீரை அடக்கிக் கொள்வார்கள். இதனால் சிறுநீர்ப் பையில் சிறுநீர் நிரம்பு நோய்த் தொற்றும் ஏற்படும். எனவே அலுவலகத்திலும் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை சிறுநீர் கழிப்பதைப் பழக்கமாகக் கொள்ள வேண்டும். மேலும் கழிப்பறைக்குச் செல்வதில் குறிப்பிட்ட நேரங்களை ஆரம்பம் முதலே நிர்ணயித்துக் கொள்ளுதல் நல்லது.
கூபகத் தசைகளுக்குப் பயிற்சி (Pelvic Floor Exercises): கூபகத் தசைகளுக்கு எளிய பயிற்சிகள் கொடுத்து சிறுநீர்ப் பையின் கட்டுப்பாட்டுத் தன் மையை மேம்படுத்த முடியும். மிகவும் எளிமையான இந்த பயிற்சிகளை (பயிற்சிகள் குறித்து டாக்டர் விளக்குவார்). பெண்கள் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். தினந்தோறும் செய்ய வேண்டிய இப் பயிற்சிகளின் பலன் வெளிப்படுத்துவதற்கு சில வாரங்கள், சில மாதங்கள் ஆகலாம். பொறுமை அவசியம்.
மருத்துவ சிகிச்சை : சிறுநீர்க் கட்டுப்பாடு இல்லாத வகைக்கு ஏற்ப அதைத் தீர்க்க நல்ல மாத்திரைகள் உள்ளன. பிரச்சினைக்கு ஏற்ப மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
அறுவைச் சிகிச்சை : சிறுநீர்க் கட்டுப்பாடு இல்லாமல் வெளியேறும் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தற்போது நவீன சிகிச்சை முறை உள்ளது. டிவிடி (Tension Free Vaginal Tape) என்ற இந்த நவீன சிகிச்சை முறையில் டேப்பைக் கொண்டு பாதிப்புக்கு வலுப்படுத்தப்படும். இந்த நவீன எளிய சிகிச்சையை காலையில் செய்து கொண்டு மாலையில் வீடு திரும்பி விடலாம்.இச்சிகிச்சை,லாப்ராஸ்கோப்பி சிகிச்சையைக் காட்டிலும் எளிமையானதும் சிறந்த பலனை அளிக்கக்கூடியதும் ஆகும்
Re: பெண்ணிற்குள் சத்தமில்லாமல் இருக்கும் ஒரு பிரச்சனை!
மிக முக்கியமான பிரச்சினையினை விவரித்திருக்கின்ற விதம் மிகவும் ஆச்சரியமாக இரக்கிறது கட்டுரையாளருக்கும் பகிர்ந்த சகோதரர்க்கும் மிக்க நன்றி
இங்கு விபரித்திருக்கும் விடயங்களை கடைப்பிடித்தாலே இந்தப்பிரச்சினையிலிருந்து விடுபடலாம்
தேவையெனில் வைத்தியரை நாடுவதுதான் மிக முக்கியமான விடயமாகும்
அதிகமாக நீண்ட தூரப்பயணங்களிலேயே இப்பிரச்சினையினை பெண்கள் சந்திக்கிறார்கள்
மிக்க நன்றி
இங்கு விபரித்திருக்கும் விடயங்களை கடைப்பிடித்தாலே இந்தப்பிரச்சினையிலிருந்து விடுபடலாம்
தேவையெனில் வைத்தியரை நாடுவதுதான் மிக முக்கியமான விடயமாகும்
அதிகமாக நீண்ட தூரப்பயணங்களிலேயே இப்பிரச்சினையினை பெண்கள் சந்திக்கிறார்கள்
மிக்க நன்றி
Re: பெண்ணிற்குள் சத்தமில்லாமல் இருக்கும் ஒரு பிரச்சனை!
மிகச்சிறந்த மருத்துவக் குறிப்புக்கு நன்றி உறவே
பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களும் ஆண்களும்
தெரிந்து வைத்திருக்க வேண்டிய கட்டுரை நன்றி
தொடருங்கள்
பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களும் ஆண்களும்
தெரிந்து வைத்திருக்க வேண்டிய கட்டுரை நன்றி
தொடருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பெண்ணிற்குள் சத்தமில்லாமல் இருக்கும் ஒரு பிரச்சனை!
சிறந்த கட்டுரை பகிர்வுக்கு நன்றி
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: பெண்ணிற்குள் சத்தமில்லாமல் இருக்கும் ஒரு பிரச்சனை!
நல்ல மருத்துவக் குறிப்பு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று வாழ்த்துக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum