Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சகோதரர் பி.ஜே அவர்களை அல்லாஹ் ஆக்க சதித்திட்டமா?
+4
abuajmal
kalainilaa
முனாஸ் சுலைமான்
பாயிஸ்
8 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
சகோதரர் பி.ஜே அவர்களை அல்லாஹ் ஆக்க சதித்திட்டமா?
அன்புச் சகோதரர்களே!
முதல் முறையாக தனிப்பட்ட மனிதருடைய பெயரை முன்மொழிந்து பதில் பதிக்கிறேன் எந்தவொரு தனிப்பட்ட நபரின் அனுமதியுமின்றி அவரது பெயரால் பதில் கொடுப்பது என்னைப் பொருத்தவறையில் தவறுதான் எனினும் இன்று சில முட்டாள் முல்லாக்கள் மார்க்கத்தை கேளிக்குறியதாக ஆக்கி மார்க்க அறிஞரான சாகோதரர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு ஸலாம் கூறலாமா? கூறக்கூடாதா? என்று பாட்டிமன்றம் நடத்துகிறார்களாம் எனவேதான் சமூகத்தில் இதுபோன்ற கேடுகெட்ட செயல்கள் தொடரக்கூடாது என்று கருதி அந்த தனிப்பட்ட சகோதரர் என்னுடைய செயலை மன்னிப்பார் என்று கருதிக்கொண்டு அவருடைய பெயரை முன்மொழிந்து கருத்து பதிக்கிறேன்! என்னில் தவறு இருப்பின் அனைவரும் மன்னிக்கவும்! அல்லாஹ் கிருபை செய்வானாக!
இங்கு சகோதரர் பி.ஜே அவர்களின் பெயர் அடிபடுவதால் அந்த பெயரை வைத்தே பதில் கூறுகிறேன் இதை வைத்துக்கொண்டு அண்ணன் பி.ஜேவுக்கு வக்காளத்து வாங்குகிறாயா? என்று உங்களில் கேள்வி எழுப்பினால் எழுப்புங்கள் நான் கீழ்கண்ட நபிமொழிக்கு கட்டுப்பட்டு அல்லாஹ் என்னை கைவிடமாட்டான், மஹ்ஷரில் கைவிடக்கூடாது என்று உணர்வின் அடிப்படையில் பதிலளிக்கிறேன் ஏனெனில் நான் முஸ்லிமாக வாழ்ந்து முஸ்லிமாகவே மரணிக்க விரும்புகிறேன்! நீங்களும் இதுபோன்று வாழ விரும்பினால் வாருங்கள்!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒருமுஸ்லிமின்ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (புகாரி 2442)
பி.ஜே என்ன அல்லாஹ்வா? இதன் பதில் இறுதியில் இருக்கும் தயவு செய்து அறைகுறையாக படித்துவிட்டு என்னை திட்டாதீர்கள்! முழுவதுமாக படிக்கவும்!

இஸ்லாத்தில் சிறந்தது எது?
இஸ்லாம் என்பதே சிறந்ததுதான் அதிலும் சிறந்த செயல் என்ன என்று கேட்டால் ஸலாம் என்ற முகமன்தான். நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் இஸ்லாதை பற்றி வினவுகிறார் அந்த நேரத்தில் மாநபி (ஸல்) அவர்கள் என்ன பதில் அளித்தார்கள் தெரியுமா? இதோ ஆதாரம்
ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாத்தில் சிறந்தது எது’ எனக் கேட்டதற்கு, ‘(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்’ என்றார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். (புகாரி)
யாருக்கு ஸலாம் கூறவேண்டும்
நம்மில் பெரும்பாலானோர் யாருக்கு ஸலாம் கூறவேண்டும் என்ற கருத்துவேறுபாடுகளிலேயே காலத்தை கழிக்கிறார்கள் இவர்கள் கீழ்கண்ட அருள்மறைவசனத்தில் உள்ள அல்லாஹ்வின் வார்த்தையை உணர்ந்துவிட்டால் அவர்களின் விவாத நேரம் மிச்சமாகும்!
(எவராலும்) உங்களுக்கு முகமன் (ஸலாம்) கூறப்பட்டால் (அதற்குப் பிரதியாக) அதைவிட அழகான (வாக்கியத்)தைக் கொண்டு நீங்கள் முகமன் கூறுங்கள். அல்லது அதனையே திருப்பிக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் கணக்குப் பார்க்கிறவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:86)
இங்கு அல்லாஹ் பயன்படுத்தும் வார்த்தை எவராலும் என்று வருகிறது அதாவது ஒரு காஃபிர் கூட உங்களுக்கு ஸலாம் கூறினால் நீங்கள் அவருக்கு பதில் ஸலாம் கூறலாம் இதுதான் இங்கு நாம் அறியும் செய்தி எனவே ஒரு காஃபிர் உங்களுக்கு ஸலாம் கூறினால் அதற்கு பதில் அளித்தால் உங்களுக்கு என்ன கேடு வந்துவிடும்! சிந்தித்துப்பாருங்கள் நீங்களாக காஃபிர்களை தேடிச்சென்று ஸலாம் கூறவில்லையே மாறாக காஃபிர்கள் உங்களைத் தேடி வந்து அன்பாக ஸலாம் கூறுகிறார்கள் அவர்களை வாழ்த்தவது கூடாதா?யாருக்கு ஸலாம் கூறக்கூடாது
ஸலாம் என்ற முகமன் வாழ்த்தை யாருக்கு கூறக்கூடாது என்று நானறிந்தவரை எந்த வரைமுறையும் தென்படவில்லை தென்பட்டால் கூறவும்! ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடைமுறைப்படி பார்த்தால் சிலருக்கு வேண்டுமானால் ஸலாம் கூறுவதை தவிர்க்கலாம். யாராவது நமக்கு அஸ்ஸாமு அலைக்க (உமக்கு மரணம் நேரட்டும்) என்று பாலஸ்தீனத்தில் கலகம் விளைவிக்கும் யூத நாய்ககளின் ஸ்டைலில் முகமன் கூறினால் பதிலுக்கு மனிதருள் மாணிக்கமாக திகழ்ந்த நபியின் ஸ்டைலில் வ அலைக்க என்று கூறலாம்!
இதன் மூலம் நாம் அறிவது ஸலாம் என்ற வார்த்தையை மழித்துவிட்டு அஸ்ஸாமு அலைக்க என்று கூறுபவனுக்கு ஸலாம் கூறக்கூடாது என்பதே! ஆதாரம் இதோ
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஒரு யூதன் இறைத்தூதர்(ஸல்) அவர்களைக் கடந்து சென்றபோது, ‘அஸ்ஸாமு அலைக்க’ (உமக்கு மரணம் நேரட்டும்) எனக் கூறினான். அதற்கு (பதிலாக) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘வ அலைக்க’ (அவ்வாறே உனக்கு உண்டாகட்டும்) என்றார்கள். பின்னர் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்களை நோக்கி), ‘அவன் என்ன சொல்கிறான் என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டுவிட்டு, ‘அவன் ‘அஸ்ஸாமு அலைக்க’ (உங்களுக்கு மரணம் நேரட்டும்) என்று சொன்னான்’ என்றார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அவனை நாங்கள் கொல்ல வேண்டாமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘வேண்டாம். வேதக்காரர்கள் உங்களுக்கு சலாம் சொன்னால் (அதற்கு பதிலாக) நீங்கள் ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிடுங்கள்’ என்றார்கள். (புகாரி 6926)

யாருக்காவது ஸலாம் கூறுவதை புறக்கணித்தால் என்ன நிகழும்
வேண்டுமென்றே ஸலாத்தை புறக்கணித்தால் அவன் வேண்டுமென்றே நபிவழியை புறக்கணிக்கிறான் அவ்வாறு புறக்கணிப்பவன் அல்லாஹ்வை இகழ்கிறான் ஏனெனில் அல்லாஹ்தான் ஸலாம் என்ற முகமனை கற்றுத்தந்தவன்!
ஒருவேளை சகோதரர் பி.ஜே அல்லது ஜமாலி ஆகிய இருவரோ? அல்லது இருவரில் ஒருவரோ ஒரு சபையில் அமர்ந்திருந்தால் இந்த இருவருக்குமோ? அல்லது இருவரில் ஒருவருக்கோ எந்த மடையனாவது திட்டம்போட்டு ஸலாம் கூறவில்லை அல்லது ஸலாமுக்கு பதில் கூறவில்லை என்று வைத்துக்கொள்வோம் அப்படிப்பட்ட நிலையில் அந்த மடையர்கள் கீழ்கண்ட நபிவழியை வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள்
நபி(ஸல்) அவர்கள் (சபையோருக்கு அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) சலாம் கூறினால் மூன்று முறை சலாம் கூறுவார்கள். ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் (மக்கள் நன்கு விளங்கிக் கொள்வதற்காக) அதனை மூன்று முறை திரும்பச் சொல்வார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6244
ஒருவேளை சகோதரர் பி.ஜே அல்லது ஜமாலி ஆகிய இருவருமோ? அல்லது இருவரில் ஒருவரோ ஒரு சாலையோரம் நடந்து சென்றாலோ? அல்லது சாலையோரம் உள்ள மரத்தடி நிழலில் அமர்ந்திருந்தாலோ இந்த இருவருக்குமோ? அல்லது இருவரில் ஒருவருக்கோ எந்த மடையனாவது திட்டம்போட்டு ஸலாம் கூறவில்லை அல்லது ஸலாமுக்கு பதில் கூறவில்லை என்று வைத்துக்கொள்வோம் அப்படிப்பட்ட நிலையில் அந்த மடையர்கள் கீழ்கண்ட நபிவழியை வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள்
சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் (முகமன்) சொல்லட்டும். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6231
ஒருவேளை ஸலாம் கூற மறுக்கும் மடையர்கள் தங்கள் வாதத்தில் நிலைத்திருந்தால் அவர்கள் கீழ்கண்ட நபிமொழியை மறுப்பது மட்டுமல்லாமல் இஸ்லாத்தில் சிறந்ததை வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள்!
‘ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாத்தில் சிறந்தது எது’ எனக் கேட்டதற்கு, ‘(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்’ என்றார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். (புகாரி)
சகோதரர் பி.ஜே அவர்களை அல்லாஹ் ஆக்க சதித்திட்டமா?
அன்புச்சகோதர, சகோதரிகளே நாம் ஒருவருக்கு ஸலாம் கூறக்கூடாது என்று தீர்மானம் எடுத்தால் அந்த ஒருவரை நாம் அல்லாஹ்வாக கருதுகிறோம் என்றுதான் பொருள்படுகிறது. குழப்பமாக உள்ளதா? இதோ கீழ்கண்ட நபிமொழியை பாருங்கள்!
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருக்கும்போது ‘அடியார்கள் சார்பாக அல்லாஹ்வுக்கு ஸலாம் உண்டாகட்டும். இன்னின்னாருக்கு ஸலாம் உண்டாகட்டுமாக’ என்று கூறிக் கொண்டிருந்தோம். (இதனை அறிந்த நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வின் மீது ஸலாம் உண்டாகட்டுமாக என்று கூறாதீர்கள். ஏனெனில் அல்லாஹ்வே ஸலாமாக இருக்கிறான். எனினும் ‘காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்களின் மீது ஸலாமும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் ஸலாம் உண்டாகட்டும்’ என்று கூறட்டும். இதை நீங்கள் கூறினால் வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் ஸலாம் கூறினார்கள் என அமையும். ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன். மேலும் முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்று கூறுங்கள். இவ்வாறு கூறும்போது வானம் பூமியிலுள்ள எல்லா அடியாருக்கும் நீங்கள் ஸலாம் கூறியவர்களாவீர்கள். இதன் பிறகு உங்களுக்கு விருப்பமாக துஆவைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் பிரார்த்தியுங்கள்‘ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 835)

இங்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு ஸலாம் கூறக்கூடாது என்று கூறுகிறார்கள். இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத சில உலமாக்கள் பிஜேவுக்கு ஸலாம் கூறலாமா? கூறக்கூடாதா என்று பாட்டிமன்றம் நடத்துகிறார்களாமே அவர்கள் சகோதரர் பி.ஜே அவர்களை அல்லாஹ்வாக ஆக்கிவிட சதித்திட்டம் போடுகிறார்களா? மூட முல்லாக்களே இதுதான் உங்கள் தேடுதலா? இப்படிப்படட விவாதங்களின் மூலம் உங்களுக்கு சொர்க்கம் கிடைக்குமா? ஒரு தஃவா சகோதரரை குறிப்பிட்டு ஸலாம் கூறலாமா? கூறக்கூடாதா? என்று விவாதம் நடத்தும் நீங்கள் எல்லாம் உலமாக்கள் ஆலிம்கள் அல்ல மாறாக அறிவிழிகள்!
ஆலிம்கள் என்பவர்கள் நபியின் வாரிசுகள் என்று கேள்விப்பட்ட துண்டு எந்த நபியாவது இந்த கேடுகெட்ட செயலை செய்தாரா? அப்படியெனில் இந்த மூட ஆலிம்கள் தங்களை நபியின் வாரிசுகள் என்று கூறிக்கொண்டு நபிமார்களை கேவலப்படுத்து கிறார்களா? இப்படித்தான் நாமும் கேள்வி எழுப்புவோம்! எனவே இந்த சம்பவத்தின் மூலம் எந்த ஆலிம், உலமாக்கள் சகோதரர் பி.ஜேவுக்கு ஸலாம் கூறக்கூடாது என்று கூறுகிறானோ அந்த ஆலிம் ஆலிமே அல்ல அந்த தகுதியை அவன் இழந்துவிட்டான் அவன் அல்லாஹ்வின் பார்வையில் பொதிசுமக்கும் கழுதைதான் ஆதாரம் இதோ
எவர்கள் தவ்ராத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது:ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்; எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் – அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (அல்குர்அன் 62:5)
இந்த வசனம் தவ்ராத்திற்கு மட்டுமல்ல குர்ஆனுக்கும் தான் ஏனெனில் தவ்ராத்தும் குர்ஆனும் அல்லாஹ்வுடைய வேதம் தானே! இந்த குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் தவ்ஹீத் மார்க்க அறிஞர்கள் இந்த மூட முல்லாக்களை பொதி சுமக்கும் கழுதைகள் என்று ஃபத்வா கொடுக்க முன்வரவேண்டும்!
சகோதர, சகோதரிகளே இறுதி வேண்டுகோள்
எந்த தனிமனிதனுக்காவது, மார்க்க அறிஞருக்காவது, முஸ்லிமாக பிறந்து, முஸ்லிமாக வாழ்ந்து வரும் மனிதனுக்காவது ஸலாம் கூறமாட்டேன் என்று எவராவது உறுதிமொழி எடுத்திருந்தால் உடனே அந்த உறுதிமொழியை கழிவுகள் நிறைந்த குப்பையில் தூக்கி போட்டுவிட்டு கீழ்கண்ட நபிமொழி்க்கு தலைசாய்க்கவும்!
நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது, ஒருவரை ஒருவர் நேசிக்காமல் நம்பிக்கை கொண்டவர்களாக முடியாது. ஒரு செயலைச் செய்தால் நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பீர்கள். அச்செயலை நான் உங்களுக்குக் கூறட்டுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டுவிட்டு ”உங்களிடையே ஸலாமை பரப்புங்கள் என்றார்கள். (நூல் முஸ்லிம் 81)
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் என்ற அடிப்படையில் பி.ஜே என்ற இந்த முஸ்லிம் சகோதரருக்கு நேர்ந்த துன்பத்தை, இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிர்த்து குரள் எழுப்பக்கூடிய முஸ்லிம் சகோதரன் உங்களில் யார்? நீங்கள் மஹ்ஷரில் நீதிமான்களுக்கு அர்ஷின் நிழல் கிடைக்கும் அப்படிப்பட்ட அந்த அர்ஷின் நிழலில் நீங்கள் நிற்க தகுதியானவராக மாற விரும்பினால் வேற்றுமைகளை மறந்து நீதி செலுத்துங்கள்!
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சகோதரர் பி.ஜே அவர்களை அல்லாஹ் ஆக்க சதித்திட்டமா?
இந்தியாவில் நடக்கும் இவ்விடயம் இன்று இலங்கையிலும் உருவெடுத்துள்ளது பி.ஜே முன்னாளில் நன்றாகவே தனது சிறந்த வாதங்களை எடுத்துவைத்து மார்க்க உபதேசம் பண்ணினார் ஆனால் இன்று இக்காலத்தில் சில விடயங்களைப்பார்க்கும் போது ஆத்திரம் வரும் அளவுக்கு இருக்கிறது உதாரனம் அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கு என்னும் விவாதம் இது நமக்கும் அந்நிய மதத்தவருக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிவிடும் எனவே குழப்பக்கார உலமாக்கள் சிலரின் பிடியிலிருந்து அப்பாவி முஸ்லீம் மக்களை இறைவந்தான் காப்பாற்ற வேண்டும்.
Re: சகோதரர் பி.ஜே அவர்களை அல்லாஹ் ஆக்க சதித்திட்டமா?
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒருமுஸ்லிமின்ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (புகாரி 2442)
இந்த ஹதிஸ் அனைவருக்கும் பொருந்தும் .
வார்த்தை என்னும் ஆயுதம் ,இருப்பக்கமும் ,வன்முறையை தூண்டும்!
வார்த்தைப் போராட்டமே இன்றைய தமிழகத்தில்!
மேல தரப்பட்ட ஹதிஷை ,அனைவரும் படிப்பதும் ,பின் பற்றுவதும் நன்று .

kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சகோதரர் பி.ஜே அவர்களை அல்லாஹ் ஆக்க சதித்திட்டமா?
ஜஸாக்கல்லாஹ் ஹைரன் அன்பு சகோ. பாயிஸ்
" நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அலைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றிப் பெற்றோர்" -{3:104}
" நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அலைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றிப் பெற்றோர்" -{3:104}
Re: சகோதரர் பி.ஜே அவர்களை அல்லாஹ் ஆக்க சதித்திட்டமா?
நன்றி தோழர்களே
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சகோதரர் பி.ஜே அவர்களை அல்லாஹ் ஆக்க சதித்திட்டமா?
ஜஸாக்கல்லாஹ் ஹைரன் அன்பு சகோ. பாயிஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சகோதரர் பி.ஜே அவர்களை அல்லாஹ் ஆக்க சதித்திட்டமா?
இறைவனின் அருள் கண்டிப்பாக உங்களுக்கிருக்கிறது நல்ல முயற்சி உங்களின் உள்ளத்தை வெளிக்காட்டுகிறது நன்றி
Re: சகோதரர் பி.ஜே அவர்களை அல்லாஹ் ஆக்க சதித்திட்டமா?
இப்படிப் பட்ட முட்டால்களால்தான் நேர்வழியில் செல்லும் அப்பாவி முஸ்லிம்கள் கூட வழி தவறுகிறார்கள்.
இதைப் பார்க்கும் போது இறுதி நாளின் அடையாளம் ஒன்று ஞாபகத்திற்க்கு வருகிறது.
முஸ்லீம்கள் பெருகுவார்கள் ஆனால் கடல் நுரைபோல் இருப்பார்கள்.
இவ்வாறுதால் உள்ளது இந்த முட்டால்களின் நிலை.
இதைப் பார்க்கும் போது இறுதி நாளின் அடையாளம் ஒன்று ஞாபகத்திற்க்கு வருகிறது.
முஸ்லீம்கள் பெருகுவார்கள் ஆனால் கடல் நுரைபோல் இருப்பார்கள்.
இவ்வாறுதால் உள்ளது இந்த முட்டால்களின் நிலை.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சகோதரர் பி.ஜே அவர்களை அல்லாஹ் ஆக்க சதித்திட்டமா?
இவ்விஷயத்திற்கு இவ்வளவு பெரிய கட்டுரை தேவை இல்லை என்றே நினைக்கிறேன் .ஃப்யாஸ்.ஒன்றை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள் தவ்ஹீத் இயக்கம் தமிழகத்தில் ஆரம்பித்த நாட்களில் மிகவும் சிறப்பாக ஒற்றுமையாக செயல்பட்ட செயல்வீரர்கள் இன்று 72 கூட்டத்தைவிட அதிகம் சிதறி விட்டனர் .இதற்கு காரணம் சிலரது சுய நலமே என்பதில் சிறிதளவும் ஐயமில்லை .
ஆரம்பத்தில் ஆரம்பிக்கப் பட்ட தவ்ஹீத் இயக்கம் இன்று அபு அப்துல்லா என்ற ஒற்றை மனிதரில் இருக்கிறது .அவரே உலக முஸ்லிம்களின் தலைவர் என்று பறைசாற்றிக் கொண்டு இருக்கிறார் .அதன் பிறகு ஆரம்பிக்கப் பட்ட இயக்கம் தமுமுக என்ற பெயரில் இன்று அரசியல் இயக்கமாக ஆகி தமிழகத்தில் முஸ்லிம்களின் எதிரி தரம்கெட்ட ஜெயாவின் காலடியில் கிடக்கிறது .
அதன்பின் இன்னும் பல இயக்கங்களாக பிரிந்து போய் தங்களின் தனித்தன்மையைக் காக்க இஸ்டத்திற்கு இஸ்லாத்தை கூறு போட்டு நிற்கிறார்கள் .இதனால் இஸ்லாத்திற்கு ஒரு நண்மையும் இல்லை.ஆரம்ப காலஙகளில் பாமர மக்களின் விழுப்புணர்வுக்கு முக்கிய காரணம் பி ஜெ என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை .ஆனால் இன்றைய உலமாக்கள் நம் சமுதாயத்தின் சீரழிவுகள் .தங்களின் பிழைப்பை காப்பாற்ற எந்த அளவுக்கும் துணிய தயங்க மாட்டார்கள்.அல்லாஹ் இவரகள் செய்யும் பாவங்களை மன்னித்து நேர்வழி படுத்தட்டும் .அவர்கள் அறியாமல் செய்கிறார்கள் .பாவம்

jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» அல்லாஹ் அவர்களை மன்னித்துவிட்டான்".
» கண் தெரியாத சகோதரர் அல்-குர்ஆன் ஓதும் காட்சி !
» நகரசபைத் தலைவரின் சகோதரர் வெள்ளை வானில் கடத்தல் _
» யாரை அல்லாஹ் பொருந்திக்கொண்டான்?
» அல்லாஹ் என்றால் யாருங்க?
» கண் தெரியாத சகோதரர் அல்-குர்ஆன் ஓதும் காட்சி !
» நகரசபைத் தலைவரின் சகோதரர் வெள்ளை வானில் கடத்தல் _
» யாரை அல்லாஹ் பொருந்திக்கொண்டான்?
» அல்லாஹ் என்றால் யாருங்க?
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum