Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
57 வேடுவ கிராமங்கள் இணைந்து வாகரையில் ஆதிவாசிகள் விழா
Page 1 of 1

பனிச்சங்கேணி சல்லித்தீவில் விமர்சையான கொண்டாட்டம்
ஜனாதிபதி பிரதம அதிதி; அமைச்சர்களும் பங்கேற்பு
வாகரையிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம்
உலக ஆதிவாசிகள் தினத்தையொட்டி 57 வேடுவக் கிராமங்கள் இணைந்து நடாத்தும் தேசிய ஆதிவாசிகள் தின நிகழ்வுகள் நேற்று வாகரை பனிச்சங்கேணி சல்லித்தீவில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டன.
ஆதிவாசிகளின் தலைவர் ஊறுவரிகே வன்னிலா எத்தோ தலைமையில் நடைபெற்ற இத்தேசிய நிகழ்விற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
அமைச்சர்கள், அரச அதிகாரிகள், வேடுவ சமூகத் தலைவர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டதுடன் அவுஸ்திரேலிய ஆதிவாசிகள் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிறப்பதிதியொருவரும் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தேசிய ஆதிவாசிகள் தின விழா கிழக்கு மாகாணத்தில் நடைபெறுகின்றமை இதுவே முதற் தடவையாகும். அத்துடன் கிழக்கில் நடைபெறும் ஆதிவாசிகள் தேசிய விழாவிற்கு நாட்டின் தலைவரான ஜனாதிபதி கலந்து கொள்ளும் முதற் சந்தர்ப்பமும் இதுதான் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
ஆதிவாசிகளின் தேசிய தினத்தையொட்டி பனிச்சங்கேணி சல்லித்தீவு பிரதேசம் பலத்த பாதுகாப்புக்கு உட்படுத்தப்ப ட்டிருந்ததுடன் பிரதேசமெங்கும் தேசியக் கொடிகள் மற்றும் ஆதிவாசிகள் சமூகத்தின் கொடியும் பறக்கவிடப்பட்டிருந்தன.
சல்லித்தீவைச் சுற்றிலும் ஆதிவாசிகள் தொடர்பான பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்தும் கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மஹியங்கனை யிலிருந்து பெருந்தொகையாக வருகை தந்திருந்த ஆதிவாசிகள் அவர்களது வேட்டையாடும் முறைகள், பாரம்பரிய தொழில்கள் தொடர்பான செயற்பாடுகளை காட்சிப்படுத்தினர்.
நாடளாவிய 54 கிராமங்களிலிருந்து கிராமத்திற்கு 50 பேர் என்ற ரீதியில் ஆதி வாசிகள் வருகைதந்திருந்தனர். சிறப்பாக நடைபெற்ற தேசிய ஆதிவாசிகள் தினத்தை கலை, கலாசார மரபுரிமைகள் அமைச்சுடன் இணைந்து சில அமைச்சர்களும் மட் டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜனாதி பதி செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. அதற்கான இணைப்பு நடவடிக்கைகளை ஆதிவாசி சமூக உரிமைகள் நிர்வாக கேந்திர நிலையத்தின் அதிகாரி நளின் முனசிங்க மேற்கொண்டி ருந்தார். வெருகல், கல்குடா, பனிச்சங்கேணி, மாங்கேணி, புளிச்சங்கேணி, இலந்துறை போன்ற பிரதேசங்களிலிருந்து 650 பேரும் மஹியங்கனை தம்பான, ரதுகல, பொல்லேபெத்த, ஹேனானிகல, தலுகான போன்ற பகுதிகளிலிருந்து 280 ஆதிவாசிகள் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டு பல்வேறு அம்சங்களை நிகழ்த்தினர்.
ஆதிவாசிகள் தினத்தையொட்டி நேற்றும் நேற்று முன்தினம் இரு நாள் விசேட நிகழ்வுகள் வாகரைப் பிரதேசத்தில் நடைபெற்றன. ஆதிவாசிகள் தலைவர் ஊறுவரிகே வன்னிலா எத்தோவின் தலை மையில் அவர்கள் சமூகத் தலைவர்கள் இணைந்த கருத்தரங்கொன்று நேற்று முன்தினம் நடத்தப்பட்டுள்ளது.
அதில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அவர்களது தேவைகள், உரிமைகள் தொடர்பாக கூட்டு மகஜர் ஒன்று நேற்றைய தினம் ஆதிவாசிகள் தேசிய தின விழா மேடையில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
வேடுவத் தலைவர் ஊறுவரிகே வன்னிலா எத்தோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் அம்மகஜரை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
ஆதிவாசிகளுக்கான நடமாடும் சேவை யொன்று நடத்தப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும் வாகரை பிரதேச செயலகமும் இணைந்து இதனை ஒழுங்கு செய்திருந்தன. ஆதிவாசிகளின் காணி, விவசாயம், வீதிப்புணரமைப்பு போன்ற விடயங்களுக்கு இதில் தீர்வு காணப்பட்டன. அவர்களின் தேசிய அடையாள அட்டையில் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.
நேற்றைய இந்த தேசிய விழாவிற்குப் பிரதம அதிதியாக வருகைதந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதி வாசிகளின் தலைவர் ஊறுவரிகே வன் னிலா எத்தோ அச்சமூகத்தின் சம்பிரதாயப்படி வரவேற்றார். இதன் போது ஆதிவாசிகளின் பேரணி புடைசூழ விழா மேடைக்கு ஜனாதிபதி அழைத்துவரப்பட்டார்.
அதனையடுத்து ஆதிவாசிகளின் கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார். இலங்கையின் தேசிய கீதம் மற்றும் ஆதிவாசிகளின் தேசிய கீதம் ஆகியன இசைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் அருமைநாயகத்தின் வரவேற்புரையையடுத்து ஆதிவாசிகளின் செய்தி மேடையில் வெளியிடப்பட்டது. அதனையடுத்து கலாசார கலை செயற்பாடுகள் அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க உரையாற்றினார். அத்துடன் ஆதிவாசிகளின் சமூக பொரு ளாதார ஆய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. கொழும்பு பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஷானிகா கிரிமுரேலினால் 500 வாழைக்கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. ஜனாதிபதியின் உரையினையடுத்து வேடுவ சமூக கலாசார நடனத்துடன் தேசிய ஆதிவாசிகள் விழா இனிதே நிறைவுபெற்றது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum