சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இலங்கைக்கு எதிரான போலி குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி Khan11

இலங்கைக்கு எதிரான போலி குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி

Go down

இலங்கைக்கு எதிரான போலி குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி Empty இலங்கைக்கு எதிரான போலி குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி

Post by நண்பன் Tue 2 Aug 2011 - 4:06

இலங்கைக்கு எதிரான போலி குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி Gotabaya
மனிதாபிமான நடவடிக்கையின் பகுப்பாய்வு அறிக்கை:
இலங்கைக்கு எதிரான போலி குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி
தொலைபேசியில் ஒற்றுக்கேட்கும் பிரிட்டிஷ் ஊடகவியலாளருக்கு எங்களை விமர்சிக்க அருகதையில்லை - பாதுகாப்பு செயலாளர்

ஸாதிக் ஷிஹான், எம்.ஐ. நிஸாம்தீன்
இலங்கை அரசாங்கம் வெளியிட்டிருக்கும் உண்மையான நிகழ்வுகள் பற்றிய பகுப்பாய்வு அறிக்கை, போலிக் குற்றச்சாட்டு களுக்கு முற்றுப்புள்ளிவைக்கு மென்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்.ரி.ரி.ஈ. சர்வதேச வலையமைப்புடன் இணைந்து போலியான குற்றச்சாட்டுகளை அரசாங்கத்தின் மீது சுமத்திவரும் திருகுதாளத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அரசாங்கம் இன்று வெளியிடும் உண்மை நிகழ்வுகள் பற்றிய பகுப்பாய்வு அறிக்கை அமையும் என்று பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார். “2006 ஜுலை மாதம் முதல் 2009 மே மாதம் வரையில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின் உண்மை நிகழ்வுகள் பற்றிய அறிக்கை” என்ற தலைப்பில் வெளியிடப்படும் அறிக்கையை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற போது பாதுகாப்புச் செயலாளர் இந்தத் தகவல்களை வெளியிட்டார். “எல்.ரி.ரி.ஈ இயக்கத்தின் தலைவர்களின் குடும்பத்தினரை நேரடியாக பாதுகாத்து நல்ல முறையில் பராமரித்து வந்த அர சாங்கம் இராணுவத்திடம் சரணடைந்த எல்.ரி.ரி.ஈ இயக்கத்தின் போராளிகளை ஏன் கொல்ல வேண்டும்?” என்று இந்த நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் பகி ரங்கமாக கேள்வியொன்றை எழுப்பினார்.

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் அறிக்கையைக் கையளிக்கிறார். (படம் நிசங்க விஜயரட்ன)

“இவ்விதம் போலியான குற்றச்சாட்டுக் களை சுமத்தி இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி அதன் மூலம் நாட்டில் இன்று நிலைத்திருக்கும் சமாதானத்தை சீர்குலைப்பதே இதற்கான முக்கிய நோக்கமாகும்” என்று சனல் 4 போலி வீடியோ அறிக்கைகள் பற்றி பிரஸ்தாபிக் கையில் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

“11ஆயிரம் முன்னாள் எல்.ரி.ரி.ஈ போராளிகள் இப்போது முழுமையான புனர்வாழ்வைப் பெற்று சமூக நீரோட்டத்தில் இதுவரை சங்கமித்திருக்கிறார்கள். யுத்தம் முடிவுற்ற 2009 மே 18ம் திகதி வரையில் வடபகுதிக்கு மனிதாபிமான நோக்குடன் வைத்திய சேவைகளும் மருந்துகளும் அனுப்பி வைக்கப்பட்டன” என்றும் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் எல்.ரி.ரி.ஈயினர் தங்கள் ஆயுத படைப் பலத்தை பெருக்கிக் கொண்டு தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தில் ஜனநாயக சுதந்திரத்தை அடக்கி தங்களுக்கு எதிராக குரல் கொடுத்த அனைவரையும் குறிப்பாக மிதவாத கொள் கையை கடைப்பிடித்த தமிழ் அரசியல் வாதிகளையும், கல்விமான்களையும் படுகொலை செய்தனர். இத்துடன் நின்று விடாமல் இந்த எல்.ரி.ரி.ஈ பயங் கரவாதிகள் நாடெங்கிலும் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்டு ஆயிரக்கணக் கான அப்பாவி பொதுமக்களை படு கொலையும் செய்தனர் என்ற பீடிகையுடன் தமது உரையை பாதுகாப்பு செயலாளர் ஆரம்பித்தார்.

சர்வதேச குற்றவியல் வலையமைப்பின் மூலம் நிதியைத் திரட்டி வந்த எல்.ரி.ரி.ஈ சம்பிரதாயத்திற்கு புரம்பான யுத்தத்தை தரையிலும், கடலிலும், ஆகாயத்திலும் மேற்கொள்ளும் அளவிற்கு வலுப்பெற்று விளங்கியதென்றும் எல்.ரி.ரி.ஈயின் இராணுவ படைபலம் சம்பிரதாயபூர்வமான படைகளின் பலத்துடன் ஒப்பிடக்கூடியதாக இருந்தது என்றும், எல்.ரி.ரி.ஈயை இராணுவ ரீதியில் தோல்வியடைய செய்ய வேண்டுமெனில் நாம் அதனைவிட கூடுதலான முறையில் பிரயோகிக்க வேண்டியிருந்தது என்று அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ அங்கு ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்களை கீழே தருகின்றோம். ஃ பல்லாண்டு காலம் அதிகாரத்தில் வீற்றி ருந்த அரசாங்கங்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பல தடவைகள் முயற்சி களை மேற்கொண்டன. இராணுவ ரீதியில் தோற்கடிப்பதற்கு மாத்திரமின்றி சமாதான முயற்சிகளின் தீர்வை ஏற்படுத்த வும் அரசாங்கம் முயற்சிகள் மேற்கொண்டன. இவை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எல்.ரி.ரி.ஈ சீர்குலைத்து தோல்வியடையச் செய்தது. ஃ இராணுவ ரீதியில் பலவீனமடை யும் போது எல்.ரி.ரி.ஈ யுத்த நிறுத்தத்தின் மூலம் தனது தோல்வியை தவிர்த்துக் கொண்டது. எல்.ரி.ரி.ஈக்கு என்றுமே சமாதானத்தின் மீது நம்பிக்கை இருக்க வில்லை. யுத்த நிறுத்தம் இடம்பெற்ற காலகட்டத்தில் குறிப்பாக கடைசியாக அமுலில் இருந்த 2002முதல் 2006 வரை யிலான யுத்த நிறுத்த காலத்தில் வேண்டு மென்றே யுத்த நிறுத்தத்தை அவமதித்து வன்முறையில் இறங்கியது. ஃ மாவில்லாறு அணைக்கதவுகள் எல்.ரி.ரி.ஈயினால் மூடப்பட்டதை அடுத்து 2006ல் மீண்டும் வன்முறைகள் ஆரம்பித்தன. இதனால் கிழக்கு மாகாணத்தில் உள்ள பல்லாயிரக் கணக்கான தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளானார்கள். ஃ 30 ஆண்டு பயங்கரவாத யுத்தம் இறுதியில் அரசாங்கம் மேற்கொண்ட மனிதாபிமான இராணுவ நடவடிக்கைகளின் மூலம் முடிவு பெற்று இன்று நாட்டில் ஜனநாய கம் தலைத்தோங்குவதற்கு அடித்தளமாக அமைதியும் சமாதானமும் நிலைகொண்டி ருக்கிறது. வடபகுதியில் அனேகமாக எல்லா இடங்களிலும் கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. உள் ளூரில் இடம்பெயர்ந்த மக்களின் அனை வரும் தங்கள் பாரம்பரிய பிரதேசங்களிலும், இருப்பிடங்களிலும் மீள் குடியேற்றப் பட்டுள்ளனர். ஃ இன்று நாடெங்கிலும் மக்களின் சகஜ வாழ்க்கை திரும்பிக் கொண்டிருப்பதுடன் பொருளாதாரமும் மறுமலர்ச்சி அடைந்து முன்னேற்றப்பாதை யில் சென்றுக் கொண்டிருக்கிறது. 30 ஆண்டு காலத்தில் நாம் இழந்த முன்னேற்றத்தை அரசாங்கம் இன்று மக்களின் ஒத்துழைப் புடன் துரித கதியில் மேற்கொண்டு வருகிறது. ஃ எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகள் ஆயிரக்கணக்கான பொதுமக்களை படு கொலை செய்த போதிலும் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்த 11ஆயிரம் எல்.ரி.ரி.ஈயினர் துன்புறுத்தப்படாமல் அன்போடு நடத்தப்பட்டனர். இராணு வத்திடம் சரணடைந்த 595 சிறுவர் போராளிகள் இப்போது அவர்களின் குடும்பத்துடன் ஓராண்டுக்குள் வாழ்வதற்கு நாம் இடமளித்துள்ளோம். 2011 ஜூன் மாதத்தில் 6,100 எல்.ரி.ரி.ஈ போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப் பட்டுள்ளனர். ஃ தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்படுகிறது. அவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். அரசாங்கத்தின் மனிதாபிமான நடவடிக்கைகள் முடிவுபெறும் காலகட்டத்தில் எல்.ரி.ரி.ஈ தலைவர் பிரபாகரனின் பெற்றோரும் அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு நாம் பூரண பாது காப்பையும், பராமரிப்பையும் அளித்தோம். அது போன்று பிரபாகரனின் தந்தை 2010 ஜனவரி மாதத்திலும் >!v 2011 பெப்ரவரி மாதத்தில் இயற்கை மரண மெய்தினர். ஃ இதே அடிப்படையில் பல்லாயிரக்கணக்கான கடற்படை வீரர்களை பழிவாங்கிய எல்.ரி.ரி.ஈயின் கடற்புலிகள் படையின் தலைவர் சூசை உட்பட எல்.ரி.ரி.ஈ சிரேஷ்ட தலைவர் ரூபன் மற்றும் தமிழ்ச் செல்வத்தின் மனைவி பிள்ளைகள் அனைவரையும் ஆயுதப் படையினர் துன்புறுத்தாமல் பாதுகாத்தனர். ஃ எல்.ரி.ரி.ஈயின் முக்கிய தலைவர்களான ஜோர்ஜ் மாஸ்டர், தயா மாஸ்டர் ஆகியோரும் யுத்தம் முடிவுபெறும் கட்டத்தில அரச படையின ரிடம் சரணடைந்தனர். அவர்களையும் நாம் பாதுகாத்து வருகின்றோம். ஃ யுத்தம் நடந்து கொண்டிருந்த போது 40ஆயிரம் பொதுமக்கள் காயமடைந்தார்கள் என்ற போலிக் குற்றச்சாட்டில் எவ்வித உண்மையுமில்லை. யுத்தம் முடிவடைந்த போது 2லட்சத்து 94ஆயிரம் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களே அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தனர். ஃ யுத்த காலத்தில் சட்டபூர்வமாக சென்றதை விட சுமார் 10ஆயிரம் இலங்கை மக்கள் இந்தியாவிற்கு சட்டவிரோதமாக சென்றனர். இன்று இலங்கைத் தமிழர் அகதிகளாக இந்தோனேசியா, கிறிஸ்மஸ் தீவுகள், அவுஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் இருக்கிறார்கள்.

ஃ பிரிட்டனின் சனல் 4 தொலைக் காட்சி சேவை இரண்டு இராணுவ அதிகாரிகள் யுத்தக் கொடுமைகள் பற்றி பேசுவதாக சித்தரிக்கின்ற போதிலும் அவை போலியானவையாகும். எல்.ரி.ரி.ஈ. தன்னுடைய பரந்த சர்வதேச வலையமை ப்பை பயன்படுத்தி பணத்தை செலவிட்டு இத்தகைய போலிப் பிரசாரங்களை செய்து அரசாங்கத்தையும் நாட்டையும் இழிவுபடுத்துகிறது. ஃ முக்கியஸ்தர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் பிரிட்டிஷ் ஊடகவியலாளர்களுக்கு எங்கள் நாட்டைப் பற்றி விமர்சிப்பதற்கு என்ன அருகதை இருக்கின்றது. ஃ யுத்தத்தின் இறுதி நாட்களில் நான், ஜெனரல் சவேந்திர சில்வா ஊடாக எவருக்கும் எந்த சட்டவிரோத உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. அது பற்றி இராணுவ அதிகாரிகள் எவரும் புகார் செய்யவும் இல்லை. ஆனால் சனல் 4 தொலைக்காட்சி அது பற்றி பொய்ப் பிரசாரத்தை மேற்கொள்கிறது. ஃ எல்.ரி.ரி.ஈ போராளியாக இருந்த செல்வி ஞானகுமார் ஒரு சிவிலியன் தொண்டராக பணியாற்றி உலகிற்கு போலித் தகவல்களை இங்கி ருந்து வெளிப்படுத்தினார். இங்கிருந்து சென்று பிரிட்டிஷ் பிரஜாவுரிமை பெற்ற இந்தப் பெண்ணின் குற்றச்சாட்டில் எந்தவித உண்மையுமில்லை. ஃ எல்.ரி.ரி.ஈயின் பிரசார செயற்பாடுகள் தொடர்ந்தும் சர்வதேச ரீதியில் பொய்த்தகவல்களை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றது.

இதனால் மேற்கு நாடுகள் இந்த போலிப் பிரசாரங் களை நம்பி ஏமாந்துவிடாமல் இலங்கை அரசாங்கத்தின் உண்மையான மனிதாபிமான நடவடிக்கை களை புரிந்து கொள்வது அவசியமாகுமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்பய ராஜபக்ஷ தமதுரை யில் தெரிவித்தார்.

இந்த நூலை உலக நாடுகளெங்கும் விநியோகித்து உண்மை நிலையை வெளி நாட்டவர்களுக்கு எடுத்துரைக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் வேண்டுகோள் விடுத்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum