Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நரியும் திராட்சைப் பழங்களும்
2 posters
Page 1 of 1
நரியும் திராட்சைப் பழங்களும்
ஊருக்குப் பக்கத்தில் இருந்தது அந்தக் காடு. மழை இல்லாததால் காட்டில் உள்ள மரம், செடி, கொடிகள் எல்லாம் காய்ந்து வாடி இருந்தன. நீர் நிலைகள் வறண்டு போயிருந்தன. அந்தக் காட்டில் வாழ்ந்து வந்த நரி உணவுக்காக அலைந்தது. அது தேடிச் செல்லாத இடம் இல்லை. ஆனால், களைப்பு ஏற்பட்டதுதான் மிச்சம். உண்பதற்கு எதுவும் கிடைக்கவில்லை.
பசி வாட்டியது. மயக்கம் வரும் போல் இருந்தது. அப்பொழுது அதன் பார்வை அந்தத் திராட்சைக் கொடியின் மீது பட்டது. நீர் இன்றி வாடிக் கொண்டிருந்த அந்தக் கொடியில் ஒரே ஒரு திராட்சைக் குலை தொங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட நரியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
""ஆஹா! நமது பசியையும் தாகத்தையும் போக்க இந்தப் பழங்கள் பரிசாகக் கிடைத்துள்ளன. இது நமக்கே நமக்குத்தான்" என்று கூறியவாறு, ஆவலோடு பழக்குலையைப் பறித்து உண்ணத் துவங்கியது. பழங்களோ அப்படிச் சுவையாக இருந்தன.
பாதிப் பழங்களைத் தின்ற பின்பு அதன் பசி அடங்கியது. மீதம் உள்ளதை என்ன செய்யலாம் என்று யோசித்தது. பசி ஏற்படும் பொழுது இதைச் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்தது. ஆனால் அதற்கு ஒரு கவலை.
அடுத்தவர் கைகளுக்குச் சென்றுவிட்டால்... அதனை அவைகள் தின்று விட்டால்... அந்தக் கவலையே அதன் உள்ளத்தில் கசப்பை ஏற்படுத்தியது. சுற்றுமுற்றும் பார்த்தது. ஒரு பாறையின் இடுக்கு அதன் கண்ணில் பட்டது. இதுவே சரியான இடம். யார் கண்ணிலும் படுவதற்கு வாய்ப்பே இல்லாத இடம். இங்கேயே வைத்துவிட வேண்டியதுதான் என்றவாறே அங்கே சென்று கையில் இருந்த பழங்களை மறைத்து வைத்தது. பின்னர் நிம்மதியாக மற்ற வேலைகளில் ஈடுபட்டது.
திராட்சைப் பழக்குலைக்கோ மிகுந்த வருத்தம். போயும் போயும் இதன் கையிலா நாம் மாட்டிக் கொள்ள வேண்டும். ஒரு முறை அதன் கைகளுக்கு நாம் எட்டவில்லை என்பதற்காக, "சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்" என்று நம்மைப் பார்த்து இழிவாகப் பேசியதுதானே... என்று எண்ணி எண்ணி வருத்தப்பட்டது. அந்த வருத்தத்தில் அதன் இன்சுவை மாறி கசப்புச் சுவை பெருகியது.
நரி ஏதோ காரணங்களால் தான் மறைத்து வைத்திருந்த திராட்சைப் பழங்களை மறந்து விட்டது. நாட்கள் ஓடின.
காட்டில் நல்ல மழை பெய்தது. எங்கும் பசுமை. பறவைகளும், விலங்குகளும் மகிழ்ச்சி ஒலி எழுப்பின. பாறை இடுக்கில் நரி ஒளித்து வைத்திருந்த திராட்சை வேரூன்றி முளைக்கத் துவங்கியது.
அப்பொழுது ஓர் நாள்...
அந்த நாட்டின் அரண்மனையில் ஒரு சோகம். இளவரசர் உடல்நலம் குன்றி படுத்தப் படுக்கையாக இருக்கிறாராம். அவர் நலம்பெற அரசர் எல்லா முயற்சிகளையும் செய்து விட்டாராம். எவ்வித பலனும் இல்லையாம். அரண்மனை மருத்துவர் உட்பட நாட்டில் உள்ள அனைத்து மருத்துவர்களும் சிகிச்சை அளித்து விட்டார்களாம். அரசருக்கு மிகுந்த கவலை. இறுதி முயற்சியாக காட்டில் குடிசை அமைத்து வாழும் ஒரு மருத்துவரை அழைத்து வர ஏற்பாடு செய்திருந்தார். அந்த மருத்துவரும் வந்தார்.
இளவரசரின் நாடியைப் பிடித்து சோதித்துப் பார்த்தார். கண்களை மூடி ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தார். இறுதியாக அரசரைப் பார்த்து பேச ஆரம்பித்தார். அவர் குரலில் ஓர் உறுதி இருந்தது.
""அரசே! இளவரசரின் நோய் குணமாக வேண்டுமென்றால் நீங்கள் ஒரு ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரு பழம். அது நன்கு கனிந்திருக்க வேண்டும். ஆனால் அதன் சுவையோ மிகவும் கசப்பானதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பழத்தினை கண்டுபிடித்துக் கொண்டு வாருங்கள். அதனை உண்ட மறுநொடியில் இளவரசர் நலம் பெறுவார்" என்று சொல்லி முடித்தார்.
அரசர் தன் ஏவலர்களை அழைத்து ஆணையிட்டார்.
ஏவலர்களும் நான்கு திசைகளுக்கும் சென்று அத்தகைய பழம் ஒன்றினைத் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. காட்டிற்குச் சென்று ஓர் இடம் கூட விடாமல் தேடினர். அங்கேயும் கிடைக்கவில்லை. கலைப்பு, பசி. சோர்ந்து போய் ஓர் இடத்தில் அமர்ந்தனர்.
அப்பொழுது அவர்கள் பார்வையில் ஒரு பாறையின் இடுக்கில் ஒரு திராட்சைக் கொடி தென்பட்டது. அதில் பழங்கள் கொத்துக் கொத்தாக நல்ல கனிந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்தன. பார்த்தாலே வாயில் நீர் ஊறி வரும். அவ்வளவு கனிந்த பழங்கள்.ஏவலர்களில் ஒருவன் ஆவலோடு அந்தப் பாறையின் அருகே சென்றான். பழக் குலைகளைப் பறித்து வந்தான். எல்லோருக்கும் கொடுத்தான்.
ஒரு ஏவலன் ஆவல் மிகுதியால் தன் கையிலிருந்த கொத்திலிருந்து ஒரு பழத்தை எடுத்து வாயில் வைத்தான். அடுத்த நொடியில் முகத்தைச் சுழித்தவனாக வாயில் வைத்திருந்த பழத்தைத் துப்பினான். அம்மாடியோவ்! கசப்பென்றால் அப்படிக் கசப்பு.அவ்வாறே எல்லோரும் பழங்களைச் சுவைக்க முயன்று துப்பினர்.அப்பொழுது ஒருவனுக்கு அந்த எண்ணம் மனதில் தோன்றியது. இதுதான் நம் இளவரசருக்குப் பொருத்தமான மருந்து. அவன் பதற்றத்தோடு இந்தக் கருத்தைக் கூறிய போது மற்றவர்கள் அதனை உடனே ஏற்றுக் கொண்டனர். அவர்களது பசியும், களைப்பும் பறந்தோடின. அரண்மனைக்கு விரைந்தனர்.
இளவரசர் அதனை ஆவலோடு உண்டார். என்ன விந்தை! திராட்சையின் கசப்புச் சாறு அவர் வயிற்றில் இறங்கிய மறுநொடியில் அவர் நலம் பெற்றார். இளவரசருக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. இந்தப் பழத்திற்கு எவ்வளவு மருத்துவ குணம் உள்ளது. நமது நாட்டு மக்களில் எத்தனையோ பேர் நலம் குன்றி இருப்பார்கள். அவர்களுக்கு இப்பழங்கள் எளிதில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று எண்ணினார்.இளவரசர் விருப்பம் என்றால் சொல்லவும் வேண்டுமோ.
நாடு முழுவதிலும் உள்ள பொதுப் பூங்காக்களில் அந்தப் பழச்செடியை நட்டு வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவை வளர்ந்து கொடிகளாய் படர்ந்தன.அந்தத் திராட்சைக் கொடிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. நாம் ஒரு நல்லவர் கைகளில் வந்து சேர்ந்ததால் பொதுமக்களுக்கு எவ்வளவு பயன்படுகிறோம். அந்த மகிழ்ச்சியில் திராட்சையில் கலந்திருந்த கசப்புச் சுவை நீங்கியது. பூக்கள், பிஞ்சுகள், காய்கள் வந்தன.பின்னர் அவை கனிகளாயின.நாட்டில் நோயினால் அவதியுற்ற பலர் அந்தப் பழங்களை ஆவலோடு தின்றனர். என்ன விந்தை! பழங்கள் அப்படிச் சுவை உள்ளதாக இருந்தன. அவற்றின் தேன் ஒழுகும் சாறு அவர்களின் வயிற்றுக்குள் சென்று உடன் அவர்கள் நலம் பெற்றனர்.
நாட்டு மக்கள் இளவரசரை வாயாற வாழ்த்தினர். அந்தப் பழங்களின் இன்சுவை இன்னும் அதிகமானது.

Admin- புதுமுகம்
- பதிவுகள்:- : 83
மதிப்பீடுகள் : 0
Re: நரியும் திராட்சைப் பழங்களும்
:!+: :!+: :!+:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» நரியும் பரியும் – தவித்திரு சுந்தர சுவாமிகள்
» இளமையை மீட்டுத்தரும் திராட்சைப் பழம்
» பெருங்குடல் புற்றுநோயை தடுக்கும் திராட்சைப் பழம்!
» பழங்களும் பயன்களும்
» பழங்களும் - குணங்களும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum