சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வடக்கு மக்களுக்கு தம்மைத் தாமே ஆளும் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும்!- வாசுதேவ வலியுறுத்து.  Khan11

வடக்கு மக்களுக்கு தம்மைத் தாமே ஆளும் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும்!- வாசுதேவ வலியுறுத்து.

2 posters

Go down

வடக்கு மக்களுக்கு தம்மைத் தாமே ஆளும் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும்!- வாசுதேவ வலியுறுத்து.  Empty வடக்கு மக்களுக்கு தம்மைத் தாமே ஆளும் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும்!- வாசுதேவ வலியுறுத்து.

Post by ஜிப்ரியா Wed 3 Aug 2011 - 7:55

வடக்கு மக்களுக்கு தம்மைத் தாமே ஆளும் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும்!- வாசுதேவ வலியுறுத்து.  Vasudeva

வடபகுதி மக்களின் அபிலாஷைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வினை அரசாங்கம் வழங்கவேண்டும் என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அரசியல் கட்சிகள் எதிர்த்தாலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இதனை வழங்க முடியுமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சென்னையில் இடம்பெற்ற இந்திய மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் இலங்கையில் வடபகுதி மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டுமென நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் நிலைப்பாட்டை கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக தேசிய மொழிகள் மற்றும், இனங்களிடையேயான நல்லிணக்கம் தொடர்பிலான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில், வடபகுதி மக்களுக்கு தம்மைத் தாமே ஆளும் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டுமென்பது எமது நிலைப்பாடாகும். இது தொடர்பில் அம் மக்களின் விருப்பத்தை அறிந்து கொண்டு அதற்கமைய இதனை வழங்க வேண்டும்.
அத்தோடு தற்போதைய சூழ்நிலையில் 13 ஆவது திருத்தத்திற்கமைவான தீர்வு பொருந்தாது. அதேவேளை இத் திருத்தத்திலுள்ள மத்திய அரசுக்கும், மாகாண சபைகளுக்கும் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதேவேளை இந்தத் திருத்தத்தை ஒதுக்கி வைத்து விட்டு பேச்சுவார்த்தைகளை நடத்தி அதிகாரப் பகிர்வுடனான தீர்வுகளை வழங்க வேண்டும். அத்தோடு பொலிஸ் அதிகாரங்களையும் வழங்கலாம்.
எவ்வாறெனில் இவ் அதிகாரங்களிலுள்ள முக்கியமானவற்றை அதாவது தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட விடயங்களை மத்திய அரசாங்கம் வைத்துக் கொண்டு சிறு குற்றங்களை விசாரிக்கும் பொலிஸ் அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங்க முடியும்.
இந்த நாட்டில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளே அதிகம் உள்ளது. எனவே காணி அதிகாரங்களை மத்திய அரசாங்கமும் மாகாண சபைகளும் இணைந்த குழுவை அமைத்து வழங்க முடியும். அதனை நாம் ஆதரிக்கின்றோம்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில பேரினவாதக் கொள்கைகள் கொண்ட அரசியல் கட்சிகள் எதிர்த்தாலும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இதனை வழங்க முடியும்.
18 ஆவது திருத்தம் ஜனநாயகத்திற்கு விரோதமானது இதற்கு எதிராக பாராளுமன்றத்தில் நான் உரையாற்றினேன். ஆனால் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியென்ற காரணத்தினால் ஆதரவாக வாக்களிக்கும் தார்மீகக் கடமை உருவானது.
வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது ஜனநாயக ரீதியாக தீர்க்கப்பட வேண்டிய விடயமாகும். இவ் இணைப்பு தொடர்பாக கிழக்கு மாகாண மக்களின் விருப்பத்தை அறிய வேண்டும்.
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிறைவேற்றியுள்ள தீர்மானமானது ஜனநாயக ரீதியில் தீர்க்கப்பட வேண்டிய விடயமாகும் என்றார்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

வடக்கு மக்களுக்கு தம்மைத் தாமே ஆளும் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும்!- வாசுதேவ வலியுறுத்து.  Empty Re: வடக்கு மக்களுக்கு தம்மைத் தாமே ஆளும் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும்!- வாசுதேவ வலியுறுத்து.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 3 Aug 2011 - 8:02

அறிக்கையாய் மாத்திரம் கோருகிறார்கள்


வடக்கு மக்களுக்கு தம்மைத் தாமே ஆளும் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும்!- வாசுதேவ வலியுறுத்து.  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum