சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

காந்தி இன்றும் தேவைப்படுகிறார். Khan11

காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.

2 posters

Go down

காந்தி இன்றும் தேவைப்படுகிறார். Empty காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.

Post by *சம்ஸ் Wed 29 Dec 2010 - 23:43

காந்தி இன்றும் தேவைப்படுகிறார். Gandhi-04

ராமச்சந்திர குஹா
தமிழில்: யதுநந்தன்
இந்திய விடுதலைக்கும் பிரிவினைக்கும் பிறகு, இந்திய மக்களைப் பெருமளவில் பிளவுபடுத்திய ஒரு விவகாரம் டிசம்பர் 1992இல் அயோத்தியிலிருந்த மசூதி இடிக்கப்பட்ட சம்பவந்தான். ஒரு கோவில் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் மசூதி (பாபர் மசூதி என அது அழைக்கப்பட்டது) கட்டப்பட்டதாகவும் அந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்றும் இந்துத் தீவிரவாதிகள் சொன்னார்கள். 80களின் இறுதியிலும் 90களின் ஆரம்பத்திலும் ஏகப்பட்ட தொண்டர்கள் மசூதியைக் கைப்பற்ற முயன்றார்கள். இந்த முயற்சிகள் வட இந்தியாவில் பல மதக்கலவரங்களுக்குக் காரணமாக அமைந்தன.

பாபர் மசூதி இடிக்கப்படுவதற்குச் சில நாள்களுக்கு முன்னால் காந்தியவாதிகளின் குழு ஒன்று அயோத்திக்கு விஜயம் செய்தது. காந்தியுடன் நெருங்கிப் பணிபுரிந்த மருத்துவரான சுசீலா நய்யார் என்னும் 80 வயதுப் பெண்மணியின் தலைமையில் அந்தக் குழு சென்றது. ஒரு பிரார்த்தனைக் கூட்டமும் நடந்தது. காந்திக்கு மிகவும் பிடித்த "ரகுபதி ராகவ ராஜாராம்" பாடலுடன் அந்தக் கூட்டம் முடிவடைவதாக இருந்தது. அந்தப் பாடலில் "ஈஸ்வர் அல்லா தேரே நாம்" (ஈஸ்வரன், அல்லா இரண்டுமே கடவுளின் பெயர்கள்தான்) என்னும் வரியைப் பாடிக்கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து கூச்சலும் குழப்பமும் எழுந்தன. கூட்டத்தின் ஒரு பகுதியினர் மேடையை நோக்கி வந்தார்கள். டாக்டர் சுசீலா இறங்கிவந்து எதிர்ப்பாளர்களைச் சமாதானப்படுத்த முயன்றார். தாங்கள் "காந்தியின் சார்பில்" (ஹம் காந்திஜி கி தரஃப் ஸே ஆயே ஹை) வந்திருப்பதாகச் சொன்னார் சுசீலா. நாங்கள் "கோட்ஸேவின் சார்பில் வந்திருக்கிறோம்" (ஔர் ஹம் கோட்ஸே கி தரஃப் ஸே) என எதிர்ப்பாளர்கள் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. "நாங்கள் காந்தியைக் கொலைசெய்த நாதுராம் கோட்ஸேயின் சார்பில் வந்திருக்கிறோம். காந்தியைப் போலவே நீங்களும் முஸ்லிம்களிடம் பக்கச் சார்புடன் நடந்து கொள்கிறீர்கள் என்று நினைக்கிறோம்" என்றார்கள் அவர்கள்.

இந்தியாவில் தற்போது காந்தியை இந்து வலதுசாரிகள் மட்டும் வெறுக்கவில்லை; இடதுசாரி மாவோயிஸ்டுகளும் எதிர்க்கிறார்கள். தற்போது "தேசம் சந்திக்கும் மிகப்பெரிய உள்நாட்டுப் பாதுகாப்பு அபாயம்" எனப் பிரதமரால் குறிப்பிடப்பட்ட அதே மாவோயிஸ்டுகள். மாவோயிஸ்ட் இயக்கம் 1967இல் மேற்கு வங்கத்தின் வடபகுதியில் உள்ள நக்ஸல் என்னும் கிராமத்தில் உதித்ததால் இந்திய மாவோயிஸ்டுகள் நக்ஸலைட்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காந்தியின் நூற்றாண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வருடம் முழுக்க அதாவது, 1969இல் நாடு முழுக்க நகரங்களிலும் கிராமங்களிலும் இருந்த மகாத்மா காந்தியின் சிலைகளை உடைத்துத் தள்ளினார்கள் நக்ஸலைட்டுகள். அவ்வப்போது அரசு அலுவலகங்களுக்குள்ளும் புகுந்து அவரது உருவப்படத்தை உடைத்தெறிந்தார்கள்.

1970களில் மேற்கு வங்கக் காவல் துறை மாவோயிஸ்டுகளைக் கடுமையாக ஒடுக்கியது. ஆனால், அவர்கள் மீண்டும் ஒன்று திரண்டனர். இந்த முறை இந்தியாவின் மத்திய, கிழக்குப் பகுதிகளில் மிகச் சக்திவாய்ந்தவர்களாக உருவெடுத்தார்கள். மாவோயிஸ இயக்கம் இப்படிப் பலம் பொருந்தியதாக உருவெடுத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் பள்ளி ஆசிரியரான கொண்டபள்ளி சீத்தாராமைய்யா. இவர் உருவாக்கிய மக்கள் யுத்தக் குழு காவல் நிலையங்களையும் ரயில் நிலையங்களையும் பலமுறை துணிகரமாகத் தாக்கியது. காவல் துறை இறுதியில் "கேஎஸ்"ஐ (அவரை அப்படித்தான் அழைப்பார்கள்) கைதுசெய்தது. பிறகு அவர் உடல்நலம் சரியில்லாதவர்போல நடித்ததால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து தப்பிச்சென்றார் சீத்தாராமைய்யா.

அதற்குப் பிறகு மீண்டும் அவரைக் கைதுசெய்யக் காவல் துறைக்கு இரண்டு ஆண்டுகள் பிடித்தன. தப்பி ஓடியபோது என்ன செய்தீர்கள் என ஒரு பத்திரிகையாளர் அவரிடம் கேட்டார். ஹைதராபாதிலிருந்த மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்று அங்கிருந்து 600 மைல் தொலைவிலிருந்த குஜராத்தில் காந்தியின் பிறந்த இடத்திற்குச் சென்றுவிட்டதாகச் சொன்னார். குஜராத்தில் ரயிலிலிருந்து இறங்கியவுடன் ஒரு ரிக்ஷாவைப் பிடித்துக் காந்தி பிறந்த வீட்டிற்குச் சென்றாராம் கேஎஸ். தற்போது அந்த இடம் காந்தி நினைவு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டிருக்கிறது. "நான் அங்கே சென்று மக்குவின் மீது காறித் துப்பினேன்." என்று அந்த நிருபரிடம் சொன்னார் கேஎஸ். மக்கு என்பது கோவில்களில் சன்னதிக்கு வெளியில் உள்ள அலங்கார ஓவியங்கள். இந்திய நாட்டின் தந்தை என்று அறியப்படும் ஒரு மனிதர்மீது தனக்குள்ள கண்டனத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்த இப்படிச் செய்தார் அந்த மாவோயிஸ்ட்.

தீவிர இடதுசாரிகளும் வலதுசாரிகளும் காந்தி மீது வெறுப்புடன் இருக்கிறார்கள், சரி. இந்த இரண்டு பாதைக்கும் நடுவில் செல்லும் கட்சியின் நிலைபாடு என்ன? இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு நீண்ட காலம் மத்தியில் ஆட்சியிலிருப்பது காங்கிரஸ் கட்சிதான். காந்தியே அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்தான். இந்தியா சுதந்திரம் பெற்ற தினத்தன்று, மகாத்மா காந்தி கல்கத்தாவில் வகுப்புக் கலவரங்களை அடக்க முயன்றுகொண்டிருந்தார். மேற்கு வங்க அரசின் புதிய அமைச்சர்கள் மகாத்மா காந்தியின் ஆசியைப் பெறுவதற்காகச் சென்றார்கள். "ஆங்கிலேயர் ஆட்சியின்போது உங்களுக்குப் பல சோதனைகள் வந்தன. ஒரு வகையில் பார்த்தால் அவையெல்லாம் சோதனைகளே அல்ல. இப்போது உங்களுக்கு முடிவில்லாத சோதனை காத்திருக்கிறது. செல்வத்தின் கவர்ச்சிக்கு மயங்கிவிடாதீர்கள். கடவுள் உங்களுக்கு உதவுவாராக. கிராமங்களுக்கும் ஏழைகளுக்கும் உதவுவதற்காகத்தான் நீங்கள் இருக்கிறீர்கள்" என்று சொன்னார் காந்தி.

காந்தியின் அறிவுரையை இந்திய அரசியல்வாதிகள் புறக்கணித்துவிட்டார்கள் என்று சொல்வது மிகமிக மென்மையான விமர்சனம். கிராமங்களையும் ஏழைகளையும் கைவிட்டது அவர்கள் செய்த முதல் துரோகம். 1950களிலும் 60களிலும் இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை நகர்ப்புறங்களையும் தொழில்துறையையுமே சார்ந்திருந்தது. விவசாயமும் கலைகளும் புறக்கணிக்கப்பட்டன. ஆரம்பக் கல்வி மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டது.

இருந்தும் அந்தச் சமயத்தில் அதிகாரத்தில் இருந்தவர்கள் காந்திய வழியில் நடந்தார்கள் என்று சொல்லலாம். அவர்கள் தனிப்பட்ட முறையில் ஊழல்வாதிகளாக இருக்கவில்லை. ஆனால், 1970களிலிருந்து அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளைப் பயன்படுத்தித் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் சொத்துச் சேர்த்தார்கள். 2004இல் காலப் என்னும் சர்வதேச நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின்படி பார்த்தால் அரசியல்வாதிகளின் மீது மக்கள் நம்பிக்கையிழந்திருப்பது இந்தியாவில்தான் அதிகம். அதில் பங்கேற்றவர்களில் 91 சதவீதம் பேர் தங்கள் பிரதிநிதிகளின் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று பதிலளித்தார்கள்.

இன்றைய இந்தியாவில் காந்தி, காந்தியிஸம் என்று ஏதாவது எஞ்சியிருக்கிறதா? இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதற்கு முன் ஒரு விஷயத்தைச் சொல்லிவிடுகிறேன். புத்தரைப் போலவே காந்தி இந்தியாவில் பிறந்தாலும் இந்தியாவுக்கு மட்டும் சொந்தமானவரல்ல. புத்தரைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவுக்கு வெளியில் இருந்தது போல, காந்தியையும் இந்தியாவிற்கு வெளியில் இருப்பவர்கள் போற்றுகிறார்கள். டாக்டர் மார்ட்டின் லூதர் கிங், ஆர்ச் பிஷப் டெஸ்மாண்ட் டுடூ, தலாய் லாமா, ஆங் ஸான் ஸூ க்யி போன்றவர்கள் இதற்கு உதாரணங்கள். காந்திக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்பது மிகவும் வெட்கக்கேடான விஷயம். ஆஸ்லோவில் இந்தப் பரிசை முடிவு செய்பவர்கள் இந்த அவமானத்தை உணர்ந்திருக்கிறார்கள். மேலே குறிப்பிட்ட நான்கு காந்தியவாதிகளுக்கு இந்த விருதைக் கொடுத்ததன் மூலம் அதைச் சரிசெய்யவும் முயன்றிருக்கிறார்கள்.



உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காந்தி இன்றும் தேவைப்படுகிறார். Empty Re: காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.

Post by *சம்ஸ் Wed 29 Dec 2010 - 23:46

இந்தியாவைப் பொறுத்தவரையில் அரசியலுக்கு வெளியில் காந்திய மரபு இருக்கத்தான் செய்கிறது. தொழில் துறை வளர்ச்சியால் ஏற்படும் அத்துமீறல்களை எதிர்த்துக் குரல் கொடுக்கும் தீவிரமான சுற்றுச் சூழல் அமைப்பு உருவாகியிருக்கிறது. மரபுசாரா எரிசக்தியையும் சிறிய அளவிலான பாசனத் திட்டங்களையும் இந்த இயக்கங்கள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்கின்றன. இந்தச் சுற்றுச் சூழலியலாளர்கள் தங்கள் திட்டங்களையும் நடவடிக்கைகளையும் காந்தியின் பிறந்தநாளான அக்டோ பர் இரண்டாம் தேதியன்று தொடங்குகின்றனர் அல்லது முடிக்கின்றனர். பெண்ணிய, மனித உரிமை வட்டாரங்களிலும் காந்தியின் தாக்கம் இருக்கிறது. இடதுசாரி அரசியல் சிந்தனைகளிலிருந்து பெற்ற உத்வேகத்துடன் காந்தியின் தாக்கமும் இவர்களுக்கு இருக்கிறது. மருத்துவர்களும் ஆசிரியர்களும் தங்கள் நகர்ப்புற வீடுகளை விட்டுவிட்டுக் கிராமப்புறங்களுக்குச் சென்று பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் நடத்துகிறார்கள். இந்தியாவின் கோடீஸ்வரர்களில் ஒரு சிலராவது காந்தியின் சிந்தனைத் தாக்கம் பெற்றவர்கள். கோடீஸ்வரர்களில் பெரும்பாலானவர்கள் செல்வத்தைக் குவித்து வைக்கிறார்கள் அல்லது நகைகளிலும் வெளி நாட்டுப் பயணங்களிலும் செலவழிக்கிறார்கள். ஆனால், சில பெரும் பணக்காரர்கள் பணத்தை அடிப்படைக் கல்வியிலும் ஆட்சியில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவும் செலவழிக்கிறார்கள்.

இன்றைய உலகில் காந்தியிடமிருந்தும் காந்தியின் கொள்கைகளிலிருந்தும் நாம் எவற்றையெல்லாம் பின்பற்ற முடியும்? அவர் இறந்து அறுபதாண்டுகளாகிவிட்டன. அவரது பல போதனைகள் தற்காலத்திற்குப் பொருந்தாதவை. உதாரணமாக, உணவைப் பற்றிய அவரது சிந்தனைகளுக்கும் (அவர் பெரும்பாலும் பழங்களையும் வேகவைக்கப்பட்ட காய்கறிகளையும் கொட்டைகளையுமே சாப்பிட்டார்) பாலுறவு பற்றிய அவரது சிந்தனைகளுக்கு (தன் தொண்டர்கள் பிரம்மச்சரியத்தைத் தீவிரமாகக் கடைபிடிக்க வேண்டும் என்று சொன்னார் காந்தி) இன்றைய உலகில் ஆதரவு இருக்காது. ஆனால், நான்கு விஷயங்களில் காந்தியின் சிந்தனைக்கு இன்னும் முக்கியத்துவம் இருக்கிறது.

முதலாவதாக, சுற்றுச்சூழல். சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் எழுச்சி இதுவரை அடக்கிவைக்கப்பட்டிருந்த ஒரு (காந்திய) கேள்வியை நம்முன் நிறுத்துகிறது. அதாவது, ஒரு மனிதன் எவ்வளவு நுகரலாம்? நவீன வாழ்க்கைமுறையை மேலை நாடுகள் மட்டும் பின்பற்றிக்கொண்டிருந்த வரையில் இந்தக் கேள்வி எழவில்லை. பெரும்பாலான அமெரிக்கர்களையும் ஆங்கிலேயர்களையும்போல இந்தியர்களும் சீனர்களும் தங்களுக்கென ஒரு காரை வைத்துக்கொள்ள ஆரம்பித்தால் பூமி அந்தச் சுமையைத் தாங்காது. 1928லேயே மேலைநாட்டு முறையிலான உற்பத்தியையும் நுகர்வையும் உலக அளவில் தாங்க முடியாது என்பதைப் பற்றி எச்சரித்தார் காந்தி. "மேலை நாடுகளைப் போல இந்தியாவும் தொழில்மயமாகக் கூடாது" என்றார் அவர். "ஒரு சின்னத் தீவு நாட்டின் பொருளாதார ஏகாதிபத்தியம் இன்றைய உலகத்தையே அடக்கி ஆண்டு கொண்டிருக்கிறது. 30 கோடி மக்களையுடைய ஒரு தேசம் இதே போலப் பொருளாதாரச் சுரண்டலில் ஈடுபட்டால், வெட்டுக்கிளிகளால் தாக்கப்பட்டது போல உலகைச் சின்னாபின்னமாக்கிவிடும்" என்றார் காந்தி.

இரண்டாவதாக, கடவுள் நம்பிக்கை. கடவுளே இருக்கக் கூடாது என்று சொல்லும் மதச்சார்பற்றவர்களும் சரி, தங்களின் கடவுள்தான் ஒரே உண்மையான கடவுள் என்று நினைக்கும் மதவாதிகளும் சரி, காந்தியுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். இதுதான் உண்மை என்று எந்த மதத்தையும் சொல்ல முடியாது என்று நம்பினார் காந்தி. ஒருவர் தான் பிறந்த மதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் (எனவே, மதமாற்றத்தை அவர் ஏற்கவில்லை). ஆனால், அம்மதத்தை அவர் மிகவும் பரந்த மனத்துடனும் அஹிம்சை முறையிலும் அணுக வேண்டும் என்று வாதிட்டார் காந்தி. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் நண்பர்களாக இருப்பதை அவர் வெகுவாக ஊக்குவித்தார். அவருடைய மிகச் சிறந்த நண்பராக இருந்த சி.எஃப். ஆண்ட்ரூஸ்கூட ஒரு கிறிஸ்தவப் பாதிரியார்தான். அவரது ஆசிரமத்தில் தினமும் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டத்தில் வெவ்வேறு மதப் புத்தகங்களிலிருந்து வாசகங்கள் வாசிக்கப்படும் அல்லது பாடல்கள் பாடப்படும். அந்தக் காலகட்டத்தில் அவரது நடவடிக்கைகள் விநோதமாகப் பார்க்கப்பட்டன. இப்போது திரும்பிப் பார்க்கையில் அது முன் உணர்ந்த நடவடிக்கையாகவே தோன்றுகிறது. மதரீதியான மோதல்கள் உலகம் முழுவதும் இருக்கும் நிலையில், இம்மாதிரி நடவடிக்கைகள் பரஸ்பர அங்கீகாரத்தையும் மரியாதையையும் பெற உதவும். மூன்றாவது, சத்தியாகிரகம். அஹிம்சையின் மூலம் அடையப்பட்ட சமூக மாற்றம் நீண்ட காலம் நிலைத்திருக்கும் என்பதை எல்லோரும் தற்போது உணர்ந்திருக்கிறார்கள். ஃப்ரீடம் ஹவுஸைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜனநாயக ஆட்சி முறைக்கு மாறிய 60 நாடுகளைப் பற்றி ஆராய்ந்தார்கள். "பரந்த, அகிம்சை முறையிலான புறக்கணிப்பு, பெரும் எதிர்ப்புப் பேரணிகள், வேலை நிறுத்தங்கள், ஒத்துழையாமை போன்ற குடிமக்களின் எதிர்ப்புகள்தான் சர்வாதிகார ஆட்சியாளர்களின் ஆதரவுத் தளத்தையும் அவர்களது ராணுவத்தின் விசுவாசத்தையும் தகர்த்தன." என்று அவர்கள் கண்டறிந்தனர். இந்த வழிமுறைகள் எல்லாமே காந்தியால் முதலில் பயன்படுத்தப்பட்டவை.

நான்காவதாக, பொது வாழ்க்கை. "ஒரு அரசியல்வாதியாக மட்டுமே அவரை அணுகி மற்ற முன்னணி அரசியல்வாதிகளோடு ஒப்பிட்டால் அவர் எவ்வளவு சுகந்தமான வாசனையை விட்டுச்சென்றிருக்கிறார்" என்று தன்னுடைய ரிஃப்ளக்ஷன்ஸ் ஆன் காந்தி (Reflection on Gandhi) நூலில் குறிப்பிட்டார் ஜார்ஜ் ஆர்வெல். பயங்கரவாதம் தலைவிரித்தாடும் இந்தக் காலகட்டத்தில் அரசியல்வாதிகள் காந்தியைப் போல வெளிப்படையான ஒரு வாழ்வை வாழ முடியாது. அவரது ஆசிரமத்திற்கு வெளியில் பாதுகாவலர்கள் யாரும் கிடையாது. எந்த நாட்டையும் தொழிலையும் சேர்ந்தவர்களாக இருந்தாலும் என்ன நிலையில் இருந்தாலும் அவர்கள் விரும்பிய நேரத்தில் ஆசிரமத்திற்குள் செல்லலாம். இன்றைய அரசியல்வாதிகளும் (சமூகப் போராளிகளும்) காந்தியின் ஒளிவுமறைவு இன்மையைக் கடைபிடிக்க முயற்சியாவது செய்யலாம். ஒத்துழையாமைப் போராட்டம் என்றால் அது பற்றி முன்பே அறிவித்துவிடுவார். தன்னுடைய சமூகப் பரிசோதனைகளைப் பற்றித் தன்னுடைய நாளிதழில் விரிவாக விளக்குவார். அருகிலேயே அவரது விமர்சகர்களின் கருத்துகளும் இடம்பெற்றிருக்கும்.

காந்தி ஒரு இந்து. ஆனால், அவரது இந்து மதம் என்பது தற்போதைய அடைப்படைவாதிகளின் இந்துத்துவத்தைப் போல அவ்வளவு முரட்டுத்தனமானதல்ல. காந்தி அநீதிக்கு எதிராகப் போராடினார். ஆனால், எதிரியை மோசமானவனாகச் சித்தரிக்காமல், துப்பாக்கியை நாடாமல் அதைச் சாதித்தார். அவர் இறந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகும் தீவிர இடது சாரிகளும் வலதுசாரிகளும் அவரைப் பற்றித் தவறான தகவல்களைப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே அவருடைய சிந்தனைக்கு இருக்கும் செல்வாக்கைக் காட்டுகிறது. இன்னொரு வகையில் மைய நீரோட்டத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் காந்தியின் படத்திற்கு மாலை அணிவித்து, அவரைப் புகழ்வதற்கும் அவர்களது செயல்பாடுகளுக்கும் காந்திக்கும் பொருத்தமே இல்லை என்றபோதிலுங்கூட இதுவும் அவரது செல்வாக்கின் அடையாளந்தான்.



உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காந்தி இன்றும் தேவைப்படுகிறார். Empty Re: காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.

Post by *சம்ஸ் Wed 29 Dec 2010 - 23:47

காந்தி ஒரு துறவியைப் போன்றவர்தான். ஆனால், அவரிடம் நகைச்சுவை உணர்வுக்குப் பஞ்சமே இருந்ததில்லை. 1931இல் லண்டனுக்குச் சென்றபோது, பிரிட்டிஷ் அரசரை முதலும் கடைசியுமாகச் சந்தித்தார் காந்தி. ஆறாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்துவிட்டு அவர் பக்கிங்ஹாம் அரண்மனையைவிட்டு வெளியில் வந்தபோது, அவரைப் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டார்கள். ஒரு பத்திரிகையாளர், இவ்வளவு குறைவான ஆடையுடன் வந்திருக்கிறீர்களே குளிரவில்லையா என்று காந்தியைக் கேட்டார். "எங்கள் இருவருக்கும் சேர்த்துப் போதுமான அளவு ஆடைகளை மன்னரே அணிந்திருந்தார்" என்று பதிலளித்தார் காந்தி.


ராமச்சந்திர குஹா டெஹ்ராடூனில் பிறந்தவர். இவர் டெல்லியின் டூன் பள்ளியிலும் செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியிலும் பயின்றவர். டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸில் பொருளாதாரத்திற்கான முதுகலைப் பட்டத்தைப் பெற்றவர். கல்கத்தாவிலுள்ள ஐஐடியில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். 1985 முதல் 2000வரை உலகத்தின் பல பல்கலைக்கழகங்களில் பதவி வகித்துள்ளார். பின்னர் பெங்களூர் வந்து முழுநேர எழுத்தாளராகிவிட்டார். 2007இல் வெளியான காந்திக்குப் பின்னான இந்தியா என்னும் வரலாற்று நூலை எழுதியுள்ளார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காந்தி இன்றும் தேவைப்படுகிறார். Empty Re: காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.

Post by ஹம்னா Thu 30 Dec 2010 - 7:10

மகாத்மா காந்தியவர்களைப் பற்றி அறியத் தந்தமைக்கு ரொம்ப நன்றி ரசிகன். ://:-: :”@: :!+:


காந்தி இன்றும் தேவைப்படுகிறார். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

காந்தி இன்றும் தேவைப்படுகிறார். Empty Re: காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.

Post by *சம்ஸ் Thu 30 Dec 2010 - 13:58

சரண்யா wrote:மகாத்மா காந்தியவர்களைப் பற்றி அறியத் தந்தமைக்கு ரொம்ப நன்றி ரசிகன். ://:-: :”@: :!+:
:“: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காந்தி இன்றும் தேவைப்படுகிறார். Empty Re: காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum