Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு சில உணவு டிப்ஸ்…
3 posters
Page 1 of 1
குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு சில உணவு டிப்ஸ்…
ஒல்லியாக இருப்பது அழகுதான். ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. ஒடிந்து விழுகிற மாதிரியான ஒல்லியான தேகத்தை யாருமே விரும்பமாட்டார்கள்.
குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு இதோ சில டிப்ஸ்:
1. தினசரி நீங்கள் சாப்பிடும் உணவில் கலோரி அளவை அதிகரியுங்கள். உதாரணத்திற்கு 500 கலோரிகள் தினம் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.
2. உணவுக்குப் பிறகான இடைவேளைகளில் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுங்கள். ஒரே வாரத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.
3. கொழுப்பு நீக்கப்படாத பால், எண்ணெய் போன்றவற்றை அதிகம் மையலில் பயன்படுத்துங்கள்.
4. சாப்பிடுவதற்கு முன்பாகத் தண்ணீர் குடிப்பதைத் தவிருங்கள். அது உங்களை முழு வயிற்றுக்குசாப்பிட விடாமல் செய்து விடும். வயிறு நிரம்பிய உணர்வையும் ஏற்படுத்தி விடும்.
5. கலோரி குறைவான உணவுகளை உண்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். எந்தெந்த உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன என்று கேட்டுத் தெரிந்து வைத்துக் கொண்டு, அதிக கலோரியுள்ளவற்றை சாப்பிடவும்.
6. சாப்பிடும் போது கூடவே குளிர்பானங்கள் குடிப்பது, அடிக்கடி டீ, காபி குடிப்பது போன்றவற்றைத் தவிருங்கள்.
7. நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டால் இரண்டு மணி நேரம் கழித்து சாப்பாடு சாப்பிடுங்கள். அப்போது தான் பசி எடுக்கும். படுக்கச் செல்வதற்கு முன்பாக அவற்றை சாப்பிடுவது கட்டாயம் எடையைக் கூட்டும்.
8. நீங்கள் குறைவாகவே சாப்பிட்டுப் பழகியவரா? அப்படியானால் சாப்பிடும் இடைவெளிகளை மூன்று முறைகள் என்பதை மாற்றி ஆறு முறைகள் என்று பழக்கிக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் முழுச்சாப்பாடு சாப்பிடுவதற்குப் பதிலாக, அடிக்கடி குறைவாக சாப்பிடலாம்.
9. உடற்பயிற்சி செய்தால் உள்ள எடையும் போய் விடுமே என்று நினைத்துக் கொண்டு அதைத் தவிர்க்காதீர்கள். உடற்பயிற்சி தினமும் செய்ய வேண்டும். உடல் உறுதி பெற இது இன்றியமையாதது.
10. குண்டானவர்களுக்குத் தான் உடற்பயிற்சி என்றில்லை. ஒல்லியானவர்களும் செய்யலாம். அது அவர்களது உடல் சரியான ஷேப்பில் இருக்க உதவும்.
11. ஆனால் அளவுக் கதிகமாக, அதாவது உடல்களைப் படைகிற வரை உடற்பயிற்சி செய்ய வேண்டாம். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக வெதுவெதுப்பான பாலில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம்.
12. காலையிலும், மாலையிலும் ஐந்தைந்து பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, போரிச்சம் பழம், பிஸ்தா பருப்பு போன்றவற்றை சாப்பிடுவதை வழக்க மாக்கிக் கொள்ளுங்கள். முந்திரி, பாதாம் போன்ற பருப்புகள் சாப்பிட வேண்டும். அதே சமயம் வேண்டாத கொழுப்புகள் உடலில் தங்காமல் இருக்க உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.
13. பத்து மணி நேரம் தூங்கவும். பகலில் நேரம் கிடைக்கிறபோது தூங்குவது இன்னும் நல்லது.
14. தசைகள் நன்கு வளர்ச்சி அடைந்தால் தான் உறுதியான உடல் கட்டைப் பெற முடியும். இதற்கு காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்து ஆகியவை அடங்கிய உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்.
15. பிட்சா, உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆகியவை உடல் எடையை அதிகரிக்கும். ஆனால் பலத்தைக் கூட்டாது. எனவே அவற்றைச் சாப்பிட வேண்டாம்.
கார்போஹைடிரேட் மற்றும் புரோட்டீன் அடங்கிய உணவு வகைகள் அதிகம் உட்கொள்ள வேண்டும்.
16. சிறிது சிறிதாகச் சாப்பிட வேண்டும். நிறைய உணவை ஒரே நேரத்தில் சாப்பிடுவதை விட, சிறிது சிறிதாகச் சாப்பிட்டு “ஹெவிநெஸ்’ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்
17. சிக்கன், மீன், முட்டை, சோயா ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
18. பச்சை வாழைப்பழம், வேக வைத்த உருளைக்கிழங்கு, ஓட்ஸ் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
19. இரும்புச் சத்து அதிகம் உள்ள பழங்களையும் நிறைய சாப்பிட வேண்டும்.
20. மாதுளை, முழு நெல்லிக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
21. முளை கட்டிய ஏதாவது ஒரு பயறு வகையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
22. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
மேலே சொன்னபடி உணவு வகைகளை முழு திருப்தியுடன் சாப்பிட்டால் உடல் எடையும் கூடும். சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும்.
Re: குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு சில உணவு டிப்ஸ்…
நமது தளத்தில் யாருக்கு உதவும் ஜிப்ரியாவுக்குத்தான் இது முக்கியமாக உதவும் பாவம் மெலிந்து போயிட்டுது பிள்ள நன்றி தோழி சிறந்த தகவலுக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு சில உணவு டிப்ஸ்…
அவனவன் கொழுத்துப்போய் உடம்பை தூக்க முடியாமல் தூக்கிகொண்டு அழையும்போது இன்னும் குண்டாக ஆசை தேவையா தோழி ..என் வீட்டிக்காரர் காரில் ஏறக்கூட கஷ்டப் படுகிறார் அவர் ஒல்லியாக ஏதாவது டிப்ச் சொல்லுங்களேன் ...
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு சில உணவு டிப்ஸ்…
ஐயோ பாவம் ஜாஸ்மின் {)) {)) {)) :”: :”:jasmin wrote:அவனவன் கொழுத்துப்போய் உடம்பை தூக்க முடியாமல் தூக்கிகொண்டு அழையும்போது இன்னும் குண்டாக ஆசை தேவையா தோழி ..என் வீட்டிக்காரர் காரில் ஏறக்கூட கஷ்டப் படுகிறார் அவர் ஒல்லியாக ஏதாவது டிப்ச் சொல்லுங்களேன் ...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு சில உணவு டிப்ஸ்…
நண்பன் wrote:நமது தளத்தில் யாருக்கு உதவும் ஜிப்ரியாவுக்குத்தான் இது முக்கியமாக உதவும் பாவம் மெலிந்து போயிட்டுது பிள்ள நன்றி தோழி சிறந்த தகவலுக்கு
என்ன நண்பன் பார்த்த மாதிரி சொல்றீங்க?எனிவே நன்றி..
Re: குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு சில உணவு டிப்ஸ்…
என்ன் செய்வது நண்பரே தலையில் விழுந்து விட்டது தாங்கித்தானே ஆக வேண்டும் ..இன்றைக்கு எனக்கு மதிப்பீடு ஒன்றும் கூட்ட வில்லையா ...சொட்டை நண்பன் என்று சொல்லிக்கொள்ளவே வெட்கமா இருக்கு ..
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு சில உணவு டிப்ஸ்…
jasmin wrote:அவனவன் கொழுத்துப்போய் உடம்பை தூக்க முடியாமல் தூக்கிகொண்டு அழையும்போது இன்னும் குண்டாக ஆசை தேவையா தோழி ..என் வீட்டிக்காரர் காரில் ஏறக்கூட கஷ்டப் படுகிறார் அவர் ஒல்லியாக ஏதாவது டிப்ச் சொல்லுங்களேன் ...
மன்னிக்கவும் தோழி..உங்க நிலைமை புரியாமல் இந்த பதிவை இட்டு விட்டேன் போல..
Re: குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு சில உணவு டிப்ஸ்…
கூடி இருக்கே போதாதா என்னை சொட்டை என்று சொன்னால் :#.:jasmin wrote:என்ன் செய்வது நண்பரே தலையில் விழுந்து விட்டது தாங்கித்தானே ஆக வேண்டும் ..இன்றைக்கு எனக்கு மதிப்பீடு ஒன்றும் கூட்ட வில்லையா ...சொட்டை நண்பன் என்று சொல்லிக்கொள்ளவே வெட்கமா இருக்கு ..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு சில உணவு டிப்ஸ்…
எல்லாம் ஞானக்கண்தான் அப்போ நீங்கள் குண்டா தோழி :+:-:ஜிப்ரியா wrote:நண்பன் wrote:நமது தளத்தில் யாருக்கு உதவும் ஜிப்ரியாவுக்குத்தான் இது முக்கியமாக உதவும் பாவம் மெலிந்து போயிட்டுது பிள்ள நன்றி தோழி சிறந்த தகவலுக்கு
என்ன நண்பன் பார்த்த மாதிரி சொல்றீங்க?எனிவே நன்றி..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum