Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ரமலான் மாத நிகழ்வுகள் - ஒரு பார்வை!
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
ரமலான் மாத நிகழ்வுகள் - ஒரு பார்வை!
இது ஹிஜ்ரா காலண்டரின் 9வது மாதம்
ஸல்மான்
(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்: ஷஅபானின் இறுதி நாளில் இறைத்தூதர்
முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மக்களே, இதோ இப்பொழுது உங்கள் முன்
ஒரு மாபெரும் மாதம் வருகிறது. இது அதிகமதிகம் அருள் சொரியப்பட்ட மாதம்.
இதில்தான் 1000 மாதங்களை விடச் சிறந்த
ஓர் இரவு அடங்கியிருக்கிறது. இந்த மாதத்தில் பகல் வேளை முழுவதும் நோன்பு
நோற்க வேண்டும். இது அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்டுள்ளது.”
ஆம்! இது நோன்பின் மாதம்
இரவு வணக்கத்தின் மாதம்
தவ்பாவின் மாதம்
தர்மத்தின் மாதம்
பொறுமையின் மாதம்
இரத்த உறவின் மாதம்
சகோதரத்துவத்தின் மாதம்
மறைஞானம் மண்ணுக்கு அருளப்பட்ட மாதம்
வெற்றியின் மாதம்
முஹம்மத் (ஸல்) அவர்கள் உருவாக்கிய குர்ஆனிய சமூகம் வரலாறு காணாத வெற்றிகளை அள்ளிக் குவித்த மாதம்.
இஸ்லாம் எழுச்சி பெற்று ஜாஹிலிய்யா சரிந்து வீழ்ந்த மாதம்.
சத்தியத்திற்கு உயிர் கொடுத்த மாதம்.
உலகை அடக்கியாண்ட அக்கிரம சக்திகளை துவம்சம் செய்து மானிட சமூகத்திற்கு விடுதலை வழங்கிய மாதம்.
வெற்றிகள்:
1. கி.பி. 610ல் விண்ணுலகில் வீற்றிருந்த குர்ஆன் மண்ணுலகம் இறக்கப்பட்டது.
2. ஹிஜ்ரி 2: பிறை
12ல் குர்ஆனை எதிர்த்து நின்று குலப் பெருமை பேசிய குறைஷிப் படையை
தலைகுனியச் செய்து பத்ருப் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள்.
3. ஹிஜ்ரி 5: அரபுத் தேசமே அணி திரண்டு இஸ்லாத்தைப் பூண்டோடு அழிக்க முற்பட்ட
அகழ் யுத்தத்தில் எதிரிகளுக்கு மரண பயம் உண்டாக்கி, கத கலங்க வைத்து முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள்.
4. ஹிஜ்ரி 8: பிறை
18ல் மக்கா வெற்றி அடைந்தது. அஞ்ஞான அரசோச்சி அரபு தேசம் ஆண்ட மக்கா மறை
ஞானத்தின் மத்திய தலமாக மாறியது. அதே ஆண்டு யமன், ஈமானிய தேசமாக மாறியது.
அதே ஆண்டு உஸ்ஸா என்ற சிலை உடைக்கப்பட்டது.
ஹிஜ்ரி 9: லாத் சிலை உடைக்கப்பட்டது. தாயிப் மக்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள். அதே ஆண்டு தபூக் சென்று ரோம சாம்ராஜ்யத்தின் கதவுகள் தட்டப்பட்டன.
ஹிஜ்ரி 15: பாரசீகர்களைத் தோற்கடித்து காதிஸிய்யாவில்
முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள்.
ஹிஜ்ரி
21: அரேபியாவைக் கடந்து இருண்ட கண்டமாக இருந்த ஐரோப்பாவில்
இஸ்லாம் கால் பதித்தது. அன்று ஸ்பெயின் உட்பட ஐரோப்பாவே சுதந்திரக்
காற்றைச் சுவாசித்தது.
ஹிஜ்ரி 92: தாரிக் பின் ஸியாத் ரொட்ரிக் மன்னனை வெற்றி கொண்டு கிழக்கு இஸ்லாமிய சூரியன் உதித்தது.
ஹிஜ்ரி 584: ஸப்த்
கோட்டையைக் கைப்பற்றி சிலுவை வீரர்களிடமிருந்து ஃபலஸ்தீனைப் பாதுகாக்கும்
முயற்சியில் ஸலாஹுத்தீன் அய்யூபி வெற்றி வாகை சூடினார்கள்.
ஹிஜ்ரி 658: இஸ்லாமிய தேசமெங்கும் நாசம் விளைவித்து பாலைவனங்களை செம்மண்ணாக மாற்றிய
தார்த்தாரியர்களைத் தடுத்து நிறுத்தி அவர்களின் இருப்பையே இல்லாமல் செய்த எகிப்து சுல்தான் வெற்றி வாகை சூடினார்கள்.
ஏனைய நிகழ்வுகள்:
1. ஹிஜ்ரி 3ல் பிறை 15ல் அண்ணல் நபிகளாரின் அருமைப் பேரர் ஹஸன் (ரலி) அவர்கள் பிறந்தார்கள்.
2. லைலத்துல் கத்ர் என்னும் புனித இரவில் லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும் பேழையிலிருந்து திருக்குர்ஆன் இறங்கியது.
திருமணங்கள்:
1. ஹிஜ்ரி 3ல் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்னை ஸைனப் பின்த் குஸைமா (ரலி) அவர்களை மணமுடித்தார்கள்.
2. ஹிஜ்ரி 10ல் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்னை ஸவ்தா (ரலி) அவர்களை மணமுடித்தார்கள்.
மரணங்கள்:
1. அண்ணலாரின் அருமை மனைவி கதீஜா (ரலி) அவர்கள் அண்ணலாரின் 50வது வயதில் பிறை 11ல் மரணமடைந்தார்கள்.
2.
ஹிஜ்ரி 2ல் பத்ருப் போர் நடந்துகொண்டிருந்த சமயத்தில் அண்ணல் நபிகளாரின்
அருமைப் புதல்வி ருகையா (ரலி) அவர்கள் தங்கள் 23வது வயதில்
மரணமடைந்தார்கள்.
3. ஹிஜ்ரி 11ல் அண்ணலாரின் அருமைப் புதல்வி ஃபாத்திமா (ரலி)
அவர்கள் பிறை 3ல் (அண்ணலாரின் மறைவுக்கு 6 மாதங்களுக்குப் பிறகு) தங்கள் 29வது வயதில் மரணமடைந்தார்கள்.
4. ஹிஜ்ரி 32ல் பிறை 12ல் அண்ணலாரின் மாமா அப்பாஸ் (ரலி) அவர்கள் தங்கள் 88வது வயதில் மரணமடைந்தார்கள்.
5. ஹிஜ்ரி 40ல் பிறை 27ல் நான்காவது கலீஃபா அலீ (ரலி) அவர்கள் தங்கள் 57வது வயதில் மரணமடைந்தார்கள்.
6. ஹிஜ்ரி 50ல் அண்ணலாரின் அருமை மனைவி ஸஃபிய்யா (ரலி) அவர்கள் தங்கள் 50வது வயதில் மரணமடைந்தார்கள்.
7. ஹிஜ்ரி 58ல் அண்ணலாரின் அருமை மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் தங்கள்
65வது வயதில் மரணமடைந்தார்கள்.
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.

Re: ரமலான் மாத நிகழ்வுகள் - ஒரு பார்வை!
மிகவும் சிறந்த வரலாற்று சாண்றுகள் கொண்டு வந்த அருமையான பதிவுக்கு நன்றி உறவே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ரமலான் சிந்தனைகள்:
» ஒரு வீதி நிகழ்வுகள்
» மூன்றாவது பத்தில், ரமலான்!
» ரமலான் மாதத்தின் சிறப்புகள்
» ரமலான் உணவுகள்
» ஒரு வீதி நிகழ்வுகள்
» மூன்றாவது பத்தில், ரமலான்!
» ரமலான் மாதத்தின் சிறப்புகள்
» ரமலான் உணவுகள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum