Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்தார் ஹொஸ்னி முபாரக்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்தார் ஹொஸ்னி முபாரக்
எகிப்து முன்னாள் ஜனாதிபதி மீதான விசாரணை
குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்தார் ஹொஸ்னி முபாரக்
வழக்கு 15ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
எகிப்து முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் முற்றாக மறுத்தார். எகிப்து தலைநகர் கெய்ரோவின் பொலிஸ் அகடமி கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையில் ஹொஸ்னி முபாரக், அவரது மகன்களான அலா, கமால், ஆஜராகினர். இது தவிர, எகிப்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபீப் அல் அட்லியும் இந்த விசாரணையில் பங்கேற்றார்.
இதில் ஹொஸ்னி முபாரக் மீது ஊழல், அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் காரர்களைக் கொலை செய்ய உத்தரவிட்டது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டது. ஹொஸ்னி முபாரக் உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கைதுகளுக்கான வெள்ளையுடையுடன் மேற்படி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேட சிறையில் இருந்தே விசாரணையில் பங்கேற்றனர்.
எனினும் ஹொஸ்னி முபாரக் சுகவீனம் காரணமாக படுத்த படுக்கையாக ‘ஸ்ட்ரெச்சரில்’ இருந்தே விசாரணையில் பங்கேற்றார். ஷாம் அல் ஷெய்க் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முபாரக் நீதிமன்ற விசாரணைக்கு ஹெலிகொப்டர் மூலம் அழைத்து வரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விசாரணையின் போது 3000 இராணுவத்தினர் பொலிஸ் அகடமி வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே, முபாரக்கின் ஆதரவாளர்களும், எதிர்பாளர்களும் நூற்றுக் கணக்கில் கூடியிருந்தனர்.
“முபாரக்கிற்கு தண்டனை விதித்தால் நீதிமன்றத்தையும் சிறைச்சாலையையும் கொளுத்துவோம்” என ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் வெடித்தது. விசாரணையை தேசிய தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது. நாடு முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் இந்த விசாரணையை ஆர்வத்துடனும், நம்ப முடியாமலும் பார்த்தனர். நீதிமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சேர்த்து 600 பேர் விசாரணையைப் பார்த்தனர்.
இந்நிலையில் நீதிபதி அஹமத் ரிபாத் பொலிஸாரை ஏவி மக்களை கொன்றதாக முபாரக் மீதான குற்றச்சாட்டை வாசித்தார். இதற்கு முன்னதாக நீதிபதி அஹமட் ரபாத், நாட்டு மக்களுக்கு அமைதியாக இருக்கும் படியும் நீதிமன்றத்தின் மூலம் நீதி நிலைநாட்டப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஹொஸ்னி முபாரக் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளாரா என்பதை உறுதிப்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து தாம் இங்கிருப்பதாக முபாரக் தனது கையை உயர்த்தி குறிப்பிட்டார்.
இந்நிலையில் “என் மீதான குற்றச் சாட்டுகள் அனைத்தையும் முற்றாக மறுக்கிறேன்” என்று முபாரக் தெரிவித்தார். தொடர்ந்து அவரது மகன்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர். இதையடுத்து நீதிபதி இம்மாதம் 15ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். பொலிஸ் அகடமியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் முபாரக் காவலில் வைக்கப்பட்டார்.
முபாரக் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானால், அவருக்கு 30 ஆண்டுகள் சிறை அல்லது மரண தண்டனை கிடைக்கும்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்தார் ஹொஸ்னி முபாரக்
இது தான் நிலை . :,”,:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum