Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
புலிகளை போன்றே தமிழ் தேசிய கூட்டமைப்பும் செயற்படுகின்றது: அரசாங்கம் _
Page 1 of 1
புலிகளை போன்றே தமிழ் தேசிய கூட்டமைப்பும் செயற்படுகின்றது: அரசாங்கம் _
இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விதித்துள்ள கால அவகாசமானது தேசிய பிரச்சினைக்கு தீர்வினை எட்டுவதற்கு உதவிகரமாகவோ சாதகமான பெறுபேறுகளை அடைவதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடாகவோ அமையும் என நாம் எண்ணவில்லை. புலிகளினால் வெளிப்படுத்தப்பட்ட செயற்பாடுகளுக்கு ஒத்ததாகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளும் அமைந்துள்ளன என்று அரச தரப்பு பேச்சுவார்த்தைக் குழுவின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வு விடயம் தொடர்பிலான மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை 10 நாட்களுக்குள் தமக்கு அறிவிக்கவேண்டும் என்று தமிழ்க் கூட்டமைப்பு விதித்துள்ள காலஅவகாசம் தொடர்பிலேயே, சஜின் வாஸ் குணவர்த்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதாக அரசாங்க இணையத்தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அவர் இவ்விடயம் குறித்து மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டின் ஆட்சி முறைக்கட்டமைப்பு, மத்திய அரசுக்கும் மாகாண சபைகளுக்கும் ஒதுக்கப்படும் அதிகாரங்கள், வரி மற்றும் நிதியியல் பரவலாக்கம் என்பன தொடர்பில் 10 நாட்களுக்குள் அரசாங்க தூதுக்குழுவினர் எழுத்துமூலம் தமிழ்க் கூட்டமைப்புக்கு அறிவிக்கவேண்டும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. அத்துடன் அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு நிர்ணயிக்கப்பட்ட திகதிகளையும் அந்தக் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை .
கூட்டமைப்பின் அவசர கோரிக்கைகள் தொடர்பில் தற்போது பரிசீலிப்பது சாத்தியமற்ற விடயமாகவே உள்ளது. அக்கோரிக்கைகள் தேசிய மட்ட அபிலாஷைகளுக்கு பொருத்தமானவையாக இல்லை.
புலிகள் எதிர்பார்த்ததைப் போன்ற தீர்வு ஒன்றை பெற முடியாது. அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை உருவாக்குவதற்காக மக்களின் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் இவ்வாறான கோரிக்கைகள் தடைகளை ஏற்படுத்தும். இத்தகைய நிபந்தனைகளை கூட்டமைப்பு விதிக்கும் என்று நாம் எதிர்பார்த்திருக்கவில்லை. இது புலிகளின் செயற்பாடுகளை ஒத்ததாகவுள்ளது.
நாட்டில் எந்தவொரு சமூகத்தையும் சுதந்திரக் கட்சி மட்டும் முழுவதுமாக பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அதேபோன்று தமிழ்க் கூட்டமைப்பும் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல. இந்நிலையில் கூட்டமைப்புடனான பேச்சுக்களில் முறிவு ஏற்பட்டால், பாராளுமன்ற தெரிவுக்குழு ஊடாக பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுக்கும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் இதில் பங்குகொள்ளும் என்றும் நம்புகின்றோம்.
அனைத்து மக்களின் பிரதிநிதிகளும் அரசியலமைப்ப மறுசீரமைப்பு குறித்து தமது கருத்துக்களை விவாதிக்கக்கூடிய ஒரு களமாக பாராளுமன்ற தெரிவுக் குழுவே அமையும்.
இதேவேளை நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்கு இரண்டு வாரகால அவகாசத்தை விதித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வு உள்ளிட்ட மூன்று விடயங்கள் குறித்த கோரிக்கைகளுக்கு இக் காலப்பகுதிக்குள் உரிய பதிலை அரசாங்கம் தரவேண்டுமென திட்டவட்டமாக அறிவித்திருந்தது.
பத்து சுற்றுப்பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அரசாங்கம் உண்மையான “அக்கறையுடன் நோக்கியிருப்பதாக தெரியவில்லை என்று விசனம் தெரிவித்திருந்த கூட்டமைப்பு, இதுவரையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் பிரயோசனமற்றதாகவே அமைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. __
Similar topics
» 3 வது தடவையாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி!- தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்றி தெரிவிப்பு
» தேசிய, சர்வதேச மட்டத்தில் அரசாங்கம் பேச்சுவார்த்தை
» தேசிய ரீதியில் கல்விக்கு இருந்த கௌரவத்தை அரசாங்கம் சீரழித்துள்ளது - மாணவர் ஒன்றியம் _
» தமிழ் முஸ்லிம் மக்களை வெளியேற்றி காணிகளை அரசாங்கம் விற்கின்றது.
» தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எழுத்துமூலமான முன்மொழிவுக் கோரிக்கை நியாயமற்றது! அரசாங்கம்.
» தேசிய, சர்வதேச மட்டத்தில் அரசாங்கம் பேச்சுவார்த்தை
» தேசிய ரீதியில் கல்விக்கு இருந்த கௌரவத்தை அரசாங்கம் சீரழித்துள்ளது - மாணவர் ஒன்றியம் _
» தமிழ் முஸ்லிம் மக்களை வெளியேற்றி காணிகளை அரசாங்கம் விற்கின்றது.
» தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எழுத்துமூலமான முன்மொழிவுக் கோரிக்கை நியாயமற்றது! அரசாங்கம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum