சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

பொய் வழக்குகள் மூலம் தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது;  கருணாநிதி பேச்சு Khan11

பொய் வழக்குகள் மூலம் தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது; கருணாநிதி பேச்சு

2 posters

Go down

பொய் வழக்குகள் மூலம் தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது;  கருணாநிதி பேச்சு Empty பொய் வழக்குகள் மூலம் தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது; கருணாநிதி பேச்சு

Post by நண்பன் Sun 7 Aug 2011 - 4:15

பொய் வழக்குகள் மூலம் தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது;  கருணாநிதி பேச்சு A635b0b9-212e-4942-aff8-7b660e26ada8_S_secvpf
திருவாரூர், ஆக.7-

திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கே.கலைவாணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருவாரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் திருவாரூர் தெற்கு வீதியில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார்.

திருவாரூர் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார் கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்த கூட்டம் திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் மீது தொடர்ந்துள்ள பொய் வழக்குகளை கண்டித்து நடைபெறுகிற கூட்டம் ஆகும். இங்கு பேசியவர்கள் பொய் வழக்கை கண்டிக்கிறோம் என்று சொன்னார்கள். இது பொய் வழக்கு மட்டும் அல்ல.

இந்த வழக்குகள் அராஜக வழக்குகளாகவும் தொடரப்பட்டுள்ளன. பூண்டி கலைவாணன் மீது சுமத்தப்பட்ட வழக்குகள் 3 ஆகும். ஸ்டாலினோடு அவர் சென்ற காரணத்திற்காக தொடரப்பட்ட வழக்கு. 2-வது வழக்கு சமச்சீர் கல்வியை ஆதரிக்கும் போராட்டத்தில் தன்னை ஒப்படைத்துக்கொண்ட கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவரின் மகன், போராட்டத்தில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய போது விபத்து ஏற்பட்டு அந்த இடத்திலேயே அந்த மாணவன் சிக்கி இறந்து போக, அந்த மாணவன் சடலத்தை எடுத்துக்கொண்டு, அவன் இறந்ததற்கு காரணம் விபத்து இல்லை.

தி.மு.க. மாவட்ட செயலாளர் கலைவாணன் தூண்டுதல் தான் காரணம் என்று கூறி அதற்கு ஒரு வழக்கு. இந்த வழக்குகளில் ஜாமீன் பெற்று விடுவார் என்று அழுத்தம், திருத்தமாக 3-வதாக குண்டர் சட்டத்தை கலைவாணன் மீது ஏவி விட்டுள்ளனர். குண்டர் சட்டம் என்பது உச்சகட்டமாக போடப்படுகிற ஒரு நடவடிக்கை. உன்னை குண்டர் சட்டத்தில் கைது செய்து விடுவேன் என்றால் ஏறத்தாழ தூக்கு தண்டனைக்கு ஒப்பாக, மரண தண்டனைக்கு ஒப்பாக சொல்லப்படுகிற ஒரு வழக்கு. தி.மு.க.வை ஒடுக்க வேண்டும். அதன் காரணமாக தி.மு.க. பலவீனப்பட வேண்டும் என்று இந்த சட்டத்தை பயன்படுத்தி உள்ளனர்.

தி.மு.க. ஆட்சியில் 1 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்து விட்டார்கள் என்று மேடைக்கு, மேடை சொன்னார்கள். தனது செலவுகளுக்காக, திட்டங்களுக்காக, மக்கள் பிரச்சினைகளை அணுகுவதற்காக கடன் வாங்குவது என்பது ஒரு அரசின் கடமைகளில் ஒன்று. அந்த கடமைகளை ஆற்றும் போது தி.மு.க. ஆட்சியில் 1 லட்சம் கோடி கடன் ஏற்படுத்தி விட்டார்கள் என்று திரும்ப, திரும்ப கூறினார்கள்.

ஆனால் 31-3-2006 அன்றைய தினம் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்று முடியும் போது தமிழக அரசின் கடன் சுமை ரூ.54 ஆயிரத்து 457 கோடியாக இருந்தது. இதை நாங்கள் சுட்டிக்காட்டினோம். நாங்கள் 1 லட்சம் கோடி அளவுக்கு கடன் சுமையை ஏற்ற வில்லை. நீங்கள் ஏற்றியதை சேர்த்து தான் என்று கூறினோம். ஆனால் அவர்கள் அதை கேட்பதாக இல்லை. 2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சிகாலத்தில் பெற்ற கடன் 43 ஆயிரத்து 892 கோடி ரூபாய் தான்.

இதை இரண்டையும் சேர்த்து தான் 1 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை என்பது ஒத்துக்கொள்ளக்கூடிய மதிப்பு. ஆனால் 1 லட்சம் கோடி கடன் ஏற்றி விட்டார்கள் என்று நம்மை பற்றி பேசினார்கள். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தியாகராஜபாகவதர் மீது பொய் வழக்கு போடப்பட்ட போது அதை வாபஸ் வாங்க வேண்டும் என்று பெரியார், அண்ணா எங்களை போன்றவர்கள் கூட்டம் போட்டு அதன் முடிவாக அன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் சிறந்த வழக்கறிஞரை வைத்து வாதாடி தியாகராஜபாகவதர், கலைவாணரை மீட்டுக் கொடுத்தார்கள்.

திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் கலைவாணனை போன்று தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் அன்பழகனை யாரோ ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் நள்ளிரவில் கைது செய்து 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்து போட சென்ற போது யாரோ ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்துள்ளனர். முதலில் கைது, பின்னர் சிறை. அதன் பின்னர் ஜாமீனில் வந்தவர் மீண்டும் கைது. இது நாடா? காடா என்று சந்தேகப்படும் அளவிற்கு இரவு படுத்தால் காலையில் யார் முகத்தில் விழிக்கப்போகிறோம் போலீஸ் முகத்திலா, அல்லது டி.ஐ.ஜி, அல்லது போலீஸ் அதிகாரிகள் முகத்திலா? என்ற சந்தேகத்தோடு நாட்டில் உள்ள மக்கள் ஐயப்பாட்டோடு படுத்துறங்கும் நிலை தான் உள்ளது.

தி.மு.க.வினர் மீது குற்றம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்களை பற்றி வழக்கு போடும் போது ஒன்றுக்கு இரண்டாக கதை கட்டுகிறார்கள். இதன் மூலம் தி.மு.க.வை அடியோடு அழித்து விடலாம் என நினைக்கிறார்கள். ஏன் அழிக்க வேண்டும் என்றால் அது ஏழை, எளிய மக்களுக்காக பாடுபட்டு வரும் கட்சி என்பதாலா? அல்லது தொழிலாளர்களுக்காக போராடுகிற கட்சி என்பதாலா?, குடிசையில் வாழ்கிற மக்களை கோபுரத்தில் உட்கார வைக்கிற வேண்டும் என்று பாடுபடுகிற கட்சி என்பதாலா? இல்லை. திராவிட உணர்வு என்பதை தமிழகத்தில் எழுப்புகிற ஒரே கட்சி தி.மு.க. என்பதால் தான். பெரியாரால் உருவாக்கப்பட்ட, அண்ணாவால் வளர்க்கப்பட்ட தி.மு.க. தான் திராவிட உணர்வை எழுப்புகிறது.

வேறு எந்த கட்சியிலும் திராவிட உணர்வு கிடையாது. திராவிட இனத்தை நம்மை தவிர யாரும் பயன்படுத்துகிறார்களா? என்றால் இல்லை. திராவிட இனத்திற்கு மறுவாழ்வு அளிக்கிற சக்தியாக இருப்பது தி.மு.க. அதை வீழ்த்தி விட்டால் இனிமேல் நாம் தாராளமாக நடைபோடலாம். தாராளமாக வாழலாம். தாராளமாக ஆட்சி நடத்தலாம். எவருக்கும் சமச்சீர் கல்வி இல்லை என்று கூறலாம் என்று நினைக்கிறார்கள். தி.மு.க.வை அடியோடு அழிக்க ஒரு கூட்டம் தமிழகத்தில் இன்றும் முயல்கிறது. அவர்களுக்கு நான் சொல்கிறேன். தி.மு.க.வை எவராலும் அழிக்க முடியாது. எவனாலும் அழிக்க முடியாது.

இதை யாராலும் பட்டு போக செய்ய முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மத்திய மந்திரி பழனிமாணிக்கம், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஏ.கே.எஸ்.விஜயன், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கோ.சி.மணி, எ.வ.வேலு, நேரு, பன்னீர்செல்வம், அழகுதிருநாவுக்கரசு, மதிவாணன், தி.மு.க. வெளியீட்டு செயலாளர் செல்வேந்திரன், நடிகர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக, இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று காலை ரெயில் மூலம் திருவாரூர் வந்தார். அங்கிருந்து, சன்னதிதெருவில் சகோதரி வீட்டில் தங்கி ஓய்வு எடுத்தார். பின்னர், மாலை 5 மணியளவில், தனது தோழரும், திருவாரூர் நகரசபைத்தலைவருமான கு.தென்னன் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால், அவரது வீட்டிற்கு நேரில் சென்று கருணாநிதி நலம் விசாரித்தார். பின்னர், காட்டூரில் உள்ள தனது தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், திருவாரூர் மேலவீதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வந்தார். அங்கு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொய் வழக்குகள் மூலம் தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது;  கருணாநிதி பேச்சு Empty Re: பொய் வழக்குகள் மூலம் தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது; கருணாநிதி பேச்சு

Post by kalainilaa Sun 7 Aug 2011 - 5:03

:cheers:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» எத்தனை வழக்குகள் போட்டாலும் தி.மு.க.வை வீழ்த்த முடியாது: கருணாநிதி பேச்சு
» போலீசாருக்கு ஜிபிஎஸ் கருவி-வீட்டில் இருந்து கொண்டு இனி பொய் சொல்ல முடியாது
» 2019 -ல் எங்களின் தயவின்றி யாராலும் பிரதமர் ஆக முடியாது என்பதை…
» ஜெயலலிதா- விஜயகாந்த் கூட்டணியை யாராலும் பிரிக்கவே முடியாது: ஏ.கே.டி.ராஜா எம்.எல்.ஏ.
» நில அபகரிப்பு தொடர்பாக பொய் வழக்கு தொடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்; கருணாநிதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum