சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» படித்ததில் ரசித்தது-
by rammalar Today at 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Today at 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48

» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42

பழக்க அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை Khan11

பழக்க அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை

Go down

பழக்க அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை Empty பழக்க அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை

Post by நண்பன் Sat 1 Jan 2011 - 1:44

பழக்க அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை
Dr. V. ஆவுடேஸ்வரி
மனிதனின் அகமனம் ஆற்றல்மிக்கது. அகமன ஆற்றல் பெற்றவர்களே, அகமன ஆற்றலைப் பயன்படுத்துவோரே சாதனையாளர்கள். உள்மன ஆற்றல் கட்டுப்பாடின்றி திசைமாறிச் செல்லுமானால் சுய அழிவே. சீனாவின் துயரம் என்றழைக்கப்பட்ட மஞ்சள்நதி ஒவ்வோராண்டும் பேரழிவை ஏற்படுத்தியது என்பது பழைய சரித்திரம். அதனை ஒழுங்குபடுத்திப் பாயச் செய்வதால் சீனவளத்திற்கு பேருதவியாக மாறியிருப்பது இன்றைய புதிய சரித்திரம். மனிதர்களின் மன ஆற்றல் பயன்பாடுகளின் வரலாறு மஞ்சள் நதி வரலாறு போன்றதே.

உலக அதிசயங்களை எல்லாம் உருவாக்கும் திறன் கொண்ட கரங்களில், உரிமைகளுக்காக உயரக்கூடிய கரங்களில் உள்ளத்தைப் பண்படுத்தும் ஏடுகளை, எழுதுகோலை ஏந்தவேண்டிய கரங்களில் மதுக்கோப்பைகளும், புகை போதைகளும் குடியிருந்தால் மாபெரும் மனித வீழ்ச்சியல்லவா?

“ஆணும் பெண்ணும் சமமெனக் கொள்வதால், அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்” என்றான் பாரதி. சமூகப் பொருளாதார அடிமைத்தனங்களிலிருந்து பெண்ணினம் விடுதலை பெற வேண்டும் என்பதே பாரதியின் கனவு. இன்றைய கல்வியும், சூழலும் மனித விடுதலைக்குப் பாதை காட்டாமல், போட்டி, பொறாமை, தீய பழக்க வழக்கங்கள் எனும் பள்ளத்தாக்கிலே பலரையும் தள்ளி விடுகின்றன. புகைபிடிக்கும் பெண்களும், மது அருந்தும் மங்கையரும், பான்பராக் சுவைக்கும் பாவையரும் ஆண்களுக்குச் சமமானவர்களா? இல்லை பரிதாபத்திற்குரியவர்கள். ஆணின் கேடான குணங்களை நவீனப் பெண் பின்பற்றுவதா சமத்துவம்?

ஆண்களிடம் பெருகியுள்ள பழக்க அடிமைத்தனங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல; ஓராயிரம்! உணவுகளை ஓரங்கட்டிவிட்டு உடலைக் கெடுக்கும் தின்பண்டங்களிலேயே நாட்களை ஓட்டும் சிலர், எங்கு சென்றாலும் எதைச் செய்தாலும் புகைபிடிக்காமலிருக்க முடியாது என்று செயின் ஸ்மோக்கர்ஸ் ஆகிவிட்ட சிலர், ‘கோப்பையிலே என் குடியிருப்பு’ என மதுப் பைத்தியங்களாய் மாறிப்போன சிலர், பெண் மோகம் தணியாமல், ஒழுக்கம், வரம்பு பற்றி உணராமல் காமசுகத்திலேயே திளைக்கும் சிலர், உண்பது ஒன்றே உயர்ந்த கடமை என்று நேரம் காலம் பார்க்காமல் சாப்பாட்டு ராமன்களாய் மாறிவிட்ட சிலர், இணையதளம் எனும் சமுத்திரத்திற்குள் இறங்கி முத்துக்குளிப்பதற்கு பதில் குப்பைகளையும் கூழாங்கற்களையும் பார்த்து மோகித்து பார்வை கெட்டு பாறைகளில் மோதி ‘E-addiction’ எனும் வலையில் சிக்கித் திணறும் சிலர், இப்படி விதவிதமாய் வாழ்க்கையைத் தொலைப் போர் பட்டியல் வளர்ந்து கொண்டே போகிறது.

பழக்க அடிமைத்தனங்களில் வாழ்வோர் குடும்பத்திலும் சமூகத்திலும் இரண்டற கலந்து வாழ முடியாத தனிமைத் தீவுகளாகின்றனர். பெருகிவரும் புகை, மாது, போதைப் பழக்கங்களை இந்தியா போன்ற பாரம்பரிய பண்பாடுகள் நிறைந்த நாட்டில் முக்கிய சவாலாக உருவெடுத்துள்ளது. நமது உணவுப் பண்பாடுகளும் மேற்கத்திய மோகத்தால் சீரழிந்து விட்டன. கேடான பழக்கங்களில் வீழ்ந்து அடிமையாகும் வாய்ப்புள்ள உடல், மன இயல்புகள் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் உருவாகிக் கொண்டிருக்கிறது. பழக்க அடிமைத்தனம் என்பது தனிமனித வாழ்க்கையை கடுமையான, துயரமான பயணமாக மாற்றிவிடும்.

ஒருவர் தன்னிடம் பழக்க அடிமைத்தனம் உள்ளதா? என்று எளிதில் அறியலாம். தவறான பழக்கம் என்று தெரிந்தும் அதே சிந்தனை நீடிக்கிறதா? சின்னச்சின்ன அன்றாடப் பிரச்சனைகள், கஷ்டங்கள் வந்தால்கூட தற்காலிகமான விடுபட விரும்பி தவறான பழக்கத்திற்குச் செல்கிறீர்களா? சமூகத்தை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி நடுங்கி செயற்கை உத்வேகம் கிடைப்பதாகக் கருதி தவறான பழக்கத்தையே பெரிதும் சார்ந்துள்ளீர்களா? செய்வது தவறு என்று நன்கு உணர்ந்திருந்த போதிலும் மீண்டும் மீண்டும் செய்கிறீர்களா? முயற்சித்தாலும் மீள முடியவில்லையா? இக்கேள்விகளில் ஒன்றிரண்டு கேள்விகளுக்கு ‘ஆம்’ எனப் பதிலளித்தால் நீங்கள் ஏதோ ஒரு பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளீர்கள் என்றே பொருள்.

பழக்க அடிமைத்தனங்களிலிருந்து மீள டாக்டர் எட்வர்டு கண்டறிந்த இயற்கை முறை மனநலச் சிகிச்சையான மலர் மருத்துவம் பேருதவி புரிகிறது. மண் தின்னும் குழந்தை முதல் மது அடிமைத்தனங்களிலிருந்தும் மலர் மருந்துகள் மூலம் மீள முடியும். மலர் மருத்துவம் மனித குலத்திற்கு மருத்துவ உலகிற்குக் கிடைத்த மாபெரும் அற்புதக் கொடை. பொதுமக்கள் தாமாகவே மலர் மருந்துகளைப் பயன்படுத்தும் காலம் மலர்ந்தால் எண்ணற்ற வீழ்ச்சிகளிலிருந்து குடும்பங்கள் மீளும். தனிமனித முன்னேற்றத்திற்குத் தடைக் கற்களாய் நிற்பவை நொறுங்கும்.

பழக்க அடிமைத்தனங்களிலிருந்து மீள்வதற்காக என்னிடம் துயரத்தோடு வந்து சிகிச்சைக்குப் பின் புதுவாழ்க்கை வாழக்கூடிய ஆண்களும், பெண்களும் மலர் மருந்துகளின் சீரிய ஆற்றலுக்கு சிறந்த உதாரணங்கள். பழக்க அடிமைத்தனங்களிலிருந்து குழந்தைகளை, பருவ வயதினரை, இளையோரை, தம்பதியரை, முதியோரை மலர் மருந்துச் சிகிச்சை மூலம் மாற்றுவதற்கு அவர்களின் குணநலன் பற்றிய ஆய்வும், அடிமைப்பட்டுள்ள பழக்கத்தின் தன்மைகளும், இதர பின்னணிச் சூழல்களும் அறியப்பட வேண்டும். ஒருவருக்கு ஒரு மருந்தோ ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகளின் கலவையோ, சில கலவைகளே, மருந்தோடு ஆற்றுப்படுத்தலோ மலர் மருந்தோடு பக்க விளைவு இல்லாத ஹோமியோபதி மருந்தோ, அகுபங்சர் சிகிச்சையோ, இயற்கை மூலிகை மருந்தோ தேவைப்படலாம். அனுபவமும் திறமையும் நிறைந்த மலர் மருத்துவர் இதனை வரையறுக்க முடியும். இத்தகைய சிகிச்சைகளுக்குப் பயன்படும் முக்கியமான சில மலர் மருந்துகளையும் ஹோமியோபதி மருந்துகளையும் வாசகர்கள் அறிந்துகொள்ள வழங்குகிறேன்.

வால்நட் (Walnut)

- பீடி, சிகரெட் பழக்கம், மதுபழக்கம், சூதாட்டம் மற்றும் பல தீய பழக்கங்களிலிருந்தும் விடுதலை பெற உதவும். விரல் சப்புதல், படுக்கையில் சிறுநீர் கழித்தல் மணமாகியும் கண்ட பெண்கள் பின்னால் சுற்றுதல் எல்லாவற்றுக்கும் பலனளிக்கும்.

ஸ்கிளராந்தஸ் (Scleranthus)

- தவறான பழக்கத்தைக் கைவிடுவதற்கு ஒரு நாளைக் குறிப்பிடுவார்கள். ஆனால் அந்த நாளிலும் கைவிட மாட்டார்கள். உடனடியாக தீய பழக்கத்தை உதறித் தள்ளும் உறுதியான மனநிலை இல்லாதவர்க்கு இது நல்ல நிவாரணி.

சிக்கரி (Chicory)

- திருடும் சுபாவத்திலிருந்து குழந்தைகளைத் திருத்த உதவும்.

செர்ரிப்பளம் (Cherry plum)

- எவ்வளவு முயற்சித்தாலும் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடுவோருக்கு இம்மருந்து நன்கு பயன்படும். யாராவது குடிப்பதைப் பார்த்தால், அழைத்தால் உடனே குடிக்க வேண்டும் என்ற நிலைக்கு இது நல்ல மருந்து. எதற்கெடுத்தாலும், கோபமும் வெறியுமாய் செயல்படுவோருக்கு, பொருட்களை உடைப்போருக்கு சிறப்பாக உதவும் இம்மருந்து.

கிளமேடிஸ் (Clematis)

- எப்போதும் வீடியோ விளையாட்டு, சினிமா, டி.வி., கிரிக்கெட் என கற்பனை உலகிலேயே காலம் கழிப்பவர்களை மீட்க உதவும் மருந்து.

சிக்கரி & வால்நட்

- நன்கு வளர்ச்சியுற்ற பின்னர் கூட உணவுகளை விரும்பாமல் தாய்ப்பால் மட்டுமே குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைகளை மாற்றுவதற்கு இம்மருந்து உறுதியாக உதவும்.

கிராப் ஆப்பிள் (Crab apple)

- அடிக்கடி, தேவையின்றி முகம், கை கால்களை கழுவும் பழக்கத்திலிருந்து மீட்க உதவும் மருந்து.

ஹீதர் (Heather)

- மற்றவர் யாரையும் பேசவிடாமல் தான் மட்டுமே வளவளவென்று பேசும் குணம் உள்ளவர்க்கு இது பலனளிக்கும்.

சிக்கரி, செர்ரிப்ளம், வால்நட்

- சுய இன்பப் பழக்க அடிமைத்தனம், சுய காதல், ஓரினக் காதல் - இதற்கு சிறப்பாக பயன்தரும்.

ஹால்லி (Holly)

- எப்போதும் ஆரோக்கியமற்ற போட்டி பொறாமை மனநிலை இருக்குமானால் அன்பை மலரச்செய்யும் அரிய மலர் மருந்து. கெட்ட வார்த்தைகளை சரளமாகப் பேசித் திட்டும் பழக்கத்திற்கு இது சரியான மருந்து.

செராட்ரோ (Cerato)

- எதற்கும் எல்லாவற்றுக்கும் மற்றவர்களின் ஆலோசனைகளை மட்டுமே நம்பியிருக்கும் பழக்கத்தை மாற்ற இது உதவும்.

வால்நட், செர்ரிப்ளம், வொய்ட் செஸ்ட் நட்

- நீலப்படங்கள், இணைய தளங்களில் பாலியல் வக்கிர காட்சிகள், ஆபாச புத்தகங்கள் போன்றவைகளில் மூழ்கிக் கிடப்போரை மீட்க உதவும் அதிசய மருந்துகள். மதுப் பழக்கத்தை மீட்க இம்மருந்துகளும், நக்ஸ்வாமிகா, சல்பியூரிக் ஆசிட் போன்ற ஹோமியோ மருந்துகளும் சிறப்பான பயனளிக்கும்.

தீய பழக்கங்களில் அடிமைப்பட்டு ஆயுட்கைதிகளாய் கிடப்பவர்களை ‘மனிதர்களாக’ மாற்ற மலர் மருந்துகள் காட்டும் பாதை எளியது! இனியது! நம்பகமானது!




நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum