Latest topics
» வாழ நினைப்பவனுக்கு வானம் கூட...by rammalar Tue 14 Jan 2025 - 14:08
» டிப்ஸ் ! டிப்ஸ் !! அறிந்து கொள்வோமே
by rammalar Sat 11 Jan 2025 - 19:44
» யமடோங்கா - திரைப்படம்
by rammalar Sat 11 Jan 2025 - 14:45
» கஜகேசரி -திரைப்படம்
by rammalar Sat 11 Jan 2025 - 14:44
» கரையும் நேரம்- கவிதை
by rammalar Thu 9 Jan 2025 - 7:48
» தென்கச்சி சுவாமிநாதன்- இன்று ஒரு தகவல் -பாகம் 6
by rammalar Wed 8 Jan 2025 - 17:08
» இள நெஞ்சே வா - படம் : வண்ன வண்ணப் பூக்கள்
by rammalar Wed 8 Jan 2025 - 17:06
» ஒரு தலை ராகம்- திரைப்பட பாடல்கள்
by rammalar Wed 8 Jan 2025 - 16:48
» நான் - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:41
» இலை - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:39
» 60 வயது மாநிறம் - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:38
» கோட நாடு -திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:36
» வள்ளிவரப்போறா - நகைச்சுவை திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:35
» En Peyar Sivaji - அட்டகாசமான நகைச்சுவை திரைப்படம்|
by rammalar Mon 6 Jan 2025 - 12:01
» நம்மை ஆட்டிப்படைப்பது நம் மனமே.
by rammalar Mon 6 Jan 2025 - 11:21
» இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் - விடுகதைகள்
by rammalar Mon 6 Jan 2025 - 3:10
» புத்தாண்டு சபதம்!
by rammalar Tue 31 Dec 2024 - 13:34
» 'சிரஞ்ஜீவி யார்?' அனுமனின் விளக்கம்..!
by rammalar Tue 31 Dec 2024 - 2:15
» சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே…
by rammalar Wed 25 Dec 2024 - 10:00
» கலகலப்பான Comedy Thriller திரைப்படம்! |
by rammalar Tue 24 Dec 2024 - 10:42
» குளத்தில் தாமரைகள்...
by rammalar Wed 18 Dec 2024 - 16:10
» கவிதைச்சோலை - கணக்கெடுப்பு
by rammalar Wed 18 Dec 2024 - 5:17
» மது விலக்கு
by rammalar Tue 17 Dec 2024 - 3:47
» கொஞ்சம் டைம் பாஸ் கடிகள் பாஸ் !
by rammalar Mon 16 Dec 2024 - 10:57
» விவேகானந்தர் சிந்தனைக் கருத்துகள்
by rammalar Sat 14 Dec 2024 - 17:29
» பெண் சிசுவுக்கு கள்ளிப்பால்...
by rammalar Fri 13 Dec 2024 - 8:06
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
by rammalar Tue 10 Dec 2024 - 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36
நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
Page 1 of 1
நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
--
ஐசிசி 9வது டி20 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான்
அணி இந்திய அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்றின் போட்டியில்
47 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்தத் தோல்வி குறித்து ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன்
ரஷீத் கான் காரணங்களைக் கூறியிருக்கிறார்.
இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின்
கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்ந்தெடுப்பார் என
எல்லோரும் நினைத்திருந்தார்கள். புள்ளி விபரங்களும் பந்துவீச்சை
தேர்ந்தெடுப்பதே சரி என இருந்தது.
ஆனாலும் இந்திய கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து இந்திய கேப்டன் முடிவு தவறு என்பது போல
ஆடுகளம் மெதுவாக இருந்தது. மேலும் ரோகித் சர்மா, விராட் கோலி,
ரிஷப் பண்ட், சிவம் துபே என தொடர்ந்து வெளியேறினார்கள்.
கேப்டன் ரஷித் கான் உள்ளே வந்து முக்கிய மூன்று விக்கெட்டுகளை
கைப்பற்றி பெரிய நெருக்கடியை உண்டாக்கினார்.
ஆனாலும் சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக
விளையாடி இந்திய அணி 181 ரன்கள் குவிப்பதற்கு காரணமாக
இருந்தார்கள்.
இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு அதிக
பட்சமாக அசமத்துல்லா ஓமர்சாய் மட்டுமே 26 ரன்கள் எடுத்தார். முடிவில்
ஆப்கானிஸ்தான் அணி 134 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆகி
47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
தோல்விக்கு பின் பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான்
"இந்த ஆடுகளத்தில் 170 முதல் 180 ரன்கள் எடுக்கக்கூடியதாக தெரிந்தது.
பெரிய அணிக்கு எதிராக இந்த டார்கெட்டை எங்களால் சேஸ் செய்ய
முடியும் என்று எங்களுக்கு தெரியும்.
நாங்கள் சிறப்பாக செயல்பட்டு இருந்தால் இந்த போட்டியை வென்று
இருக்க முடியும். இப்படியான போட்டிகளுக்கு முக்கிய தேவை சரியான
மனநிலைதான்.
நான் ஐபிஎல் தொடரில் பந்துவீச்சில் கொஞ்சம் கஷ்டப்பட்டேன்.
தற்பொழுது என்னுடைய பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது. நான் சரியான
ஏரியாக்களில் பந்தை வீசி வருகிறேன். ஆனாலும் இங்கு ஆட்டத்தின்
முடிவுதான் முக்கியமானது.
நாங்கள் விளையாடிய எல்லா இடங்களிலும் ரசித்து விளையாடினோம்.
கண்டிஷன் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து, அதை வைத்து
பேட்டிங் மற்றும் பந்துவீச்சை பயன்படுத்தி விளையாடுவோம்" என்று
கூறியிருக்கிறார்.
ஸ்வாக் ஸ்போர்ட்ஸ் தமிழ்-Dailyhunt
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25390
மதிப்பீடுகள் : 1186
Re: நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
சூர்யா, ஹர்திக் பேட்டிங்.. அந்த வீரரை ஸ்மார்டாக பயன்படுத்தியதே வெற்றிக்கு காரணம்.. ரோகித் சர்மா!
----
பார்படாஸ் :
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு பின் இந்திய
அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வெற்றிக்கு சூர்யகுமார் யாதவ் - ஹர்திக்
பாண்டியாவின் பார்ட்னர்ஷிப் முக்கிய காரணமாக இருந்தது என்றும்,
பும்ராவின் பவுலிங்கை ஸ்மார்டாக பயன்படுத்தியதன் விளைவே
இந்திய அணியின் அபார வெற்றிக்கு காரணம் என்றும் கூறியுள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி
47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த
போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில்
7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியின்
சூர்யகுமார் யாதவ் - ஹர்திக் பாண்டியா இருவரும் 5வது விக்கெட்டுக்கு
60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது சவாலான இலக்கை நிர்ணயிக்க
காரணமாக அமைந்தது.
இதன்பின் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில்
134 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில்
பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் காரணமாக இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு
பிரகாசமாகியுள்ளது. இந்த வெற்றிக்கு பின் ரோகித் சர்மா பேசுகையில்,
கடந்த 2 ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டி20 போட்டிகளை
விளையாடி இருக்கிறோம்.
அதனால் முன்கூட்டியே எங்களால் திட்டமிட முடிந்தது.
இந்த பிட்ச் மற்றும் சூழலுக்கு விரைவாக மாற்றிக் கொள்ள முடிந்தது.
181 ரன்ற சவாலான இலக்கை நிர்ணயித்த இந்திய அணியின் பேட்டிங்கை
பாராட்ட வேண்டும். ஏ
னென்றால் 181 ரன்கள் இருக்கும் போது அனுபவம் வாய்ந்த எங்களின்
பவுலிங் யூனிட்டால் என்ன செய்ய முடியும் என்று நன்றாக தெரியும்.
சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோரின் பார்ட்னர்ஷிப் சிறப்பாக
இருந்தது. ஒவ்வொரு வீரரும் அவர்களின் ரோலை சரியாக செய்து
வருகின்றனர். பும்ராவால் என்ன செய்ய முடியும் என்று அனைவருக்கும்
தெரியும். ஆனால் பும்ராவை ஸ்மார்ட்டாக பயன்படுத்த வேண்டும்.
இந்திய அணியில் பொறுப்பை எடுத்து கொண்டு செய்து முடிக்கும்
பழக்கம் கொண்டவர் அவர் தான். எந்த சூழலில் விளையாடினாலும்,
பும்ரா தான் வீரராக பொறுப்பை தன் மீது ஏற்றிக் கொள்வார்.
இன்றைய ஆட்டத்தில் 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 3 ஸ்பின்னர்களுடன்
களமிறங்கினோம். அது சூழலையும், பிட்சையும், எதிரணியை கணித்தே
செய்யப்பட்ட மாற்றங்கள். இந்த பிட்சில் ஸ்பின்னர்களால் சிறப்பாக
செயல்பட முடியும் என்று நினைத்தோம். அதனால் 3 ஸ்பின்னர்களுடன்
களமிறங்கினோம்.
அதேபோல் அடுத்தடுத்த போட்டிகளில் 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன்
களமிறங்கவும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Yogeshwaran Moorthi Mykhel
source:mykhel.com
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25390
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» யார் காரணம் என் இந்த நிலைக்கு..?
» இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு காரணம். -...
» தலைவர் இந்த அளவுக்கு உயரக் கல்விதான் காரணம் ..!
» நாங்களும் அடிப்போம் கவனம்
» அரட்டை அடிப்போம் வாருங்கள்!
» இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு காரணம். -...
» தலைவர் இந்த அளவுக்கு உயரக் கல்விதான் காரணம் ..!
» நாங்களும் அடிப்போம் கவனம்
» அரட்டை அடிப்போம் வாருங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum