Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்று சிங்கப்பூரின் தேசிய தினம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இன்று சிங்கப்பூரின் தேசிய தினம்
பொருளாதாரத்தில் சுபிட்சமடைந்து பல்லின மக்கள் வாழும் சிங்கப்பூர்
இன்று சிங்கப்பூரின் தேசிய தினம்
இன்று சிங்கப்பூரின் நாற்பத்தாறாவது தேசிய தினமாகும். இது ஆசிய கண்டத்தின் செல்வந்த நாடுகளில் (RICH COUN TRIES) ஒன்றாக மிளிர்வதையும் காண முடிகின்றது.
முதலில் இந்நாட்டிற்கு சிங்கப்பூர் என்ற பெயர் வரக் காரணத்தைச் சற்றுப் பார்ப்போம். சிங்கப்பூர் என்ற நாமம் 'சிங்கப்பூரா' என்ற மலாய் மொழியிலிருந்து மருவியதாக அந்நாட்டு மக்கள் கூறுகின்றனர். மலாய் சொற்களான 'சிங்கா சிங்கம் (LION) மற்றும் பூரா (ஊர்) ஒன்றிணைந்து சிங்கப்பூரா என்று அழைக்கப்படுகின்றது.
அதேவேளை பதினான்காம் நூற்றாண்டில் சுமாத்திரா மலாய் இளவரசரான சாங்நிலா உத்தமா மேற்கொண்ட கடல் பயணத்தின் போது அவரது படகு கடும் புயலில் (HURRI CANE) சிக்குண்டு ஒரு தீவில் ஒதுங்கியதாம். அவ்வேளையில் அவர் சிங்கம் போன்ற உருவத்தைக் கொண்ட விலங்கொன்று நிற்பதைப் பார்த்தார். இதனை சிங்கம் தான் என்று தவறுதலாக எண்ணி சிங்கப்பூர் என்று அழைத்தார் என்பதை மலாய் வரலாற்றிலிருந்து அறியலாம்.
ஏலவே முதலில் சிங்கப்பூரின் தந்தை என அனைவரினாலும் அழைக்கப்படுகின்ற லீகுவான் யூ வின் ஆரம்பகால வரலாற்றை சிறிது நோக்குவோம்.
லீ குவான் யூ 1923ம் ஆண்டு செப்டம்பர் 16 இல் பிறந்தார். இவர் சிங்கப்பூரின் முதல் பிரதமர் என்ற பெயரை தக்கவைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் மக்கள் செயல் கட்சியின் (P.A.P) நிறுவனர்களுள் ஒருவராவார் என்பது வெள்ளிடைமலை. பிரதமர் பதவியிலிருந்து விலகி பின்னரும் ஒரு முது நிலை அமைச்சராக பணியாற்றினார்.
2011 மே மாதத்தில் நடைபெற்ற தேர்தலின் பின்பு லீ குவான் யூவின் புதல்வரான லீசியாங் லூ தான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். லீகுவான் யூவின் மூதாதையர் 1846 ஆம் ஆண்டு சீனாவிலுள்ள குவாங் தொங் மாகாணத்திலிருந்து வெளியேறி சிங்கப்பூருக்கு நேரடிக் குடியேற்றம் மேற்கொண்டனராம் என்பது வரலாறு.
சிங்கப்பூர் குடியரசு நாடானது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு தீவாகும். சிங்கப்பூரானது வடக்கில் மலேசியாவையும், தெற்கில் இந்தோனேஷியாத் தீவுகளையும் இரு எல்லைகளாகக் கொண்டுள்ளமை கண்கூடு.
ஏலவே சிங்கப்பூரின் வரலாறு, மக்கள் தொகை, பரப்பளவு, நாணயம், இணையக்குறி, பண்பாடு, மதம், மொழி, அரசாங்கம், ஆட்சி மொழிகள் இரண்டாம் உலகப் போரின் தாக்கம் மற்றும் அண்மையில் நடைபெற்ற தேர்லின் பின் உருவாக்கப்பட்ட அரசியலில் தமிழர்களின் செல்வாக்கு என்பவை பற்றி விரிவாக ஆராய்வது இங்கு உசிதமாகும்.
இந்நாடு 1819 ஆம் ஆண்டு பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியால் ஆக்கிரமிக்கப்பட்டது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது சிங்கப்பூரை ஜப்பானியர் சிறிது காலம் ஆட்சி செலுத்தினர். என்றும் அறிய முடிகின்றது. சிங்கப்பூர் 1963 இல் மலேசியாவிலிருந்து ஒருதலைப் பட்சமாக பிரிந்து உத்தியோகபூர்வமாக சுதந்திர நாடாவதற்கு முனைப்புக்களை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து 1965 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 9ம் திகதி சிங்கப்பூர் குடியரசு நாடாக சுதந்திரத்தையும் பெற்றுக்கொண்டது.
மிகவும் சிறிய பரப்பளவைக் கொண்ட சிங்கப்பூர் தென்கிழக்கு ஆசியாவில் பரிணமித்துள்ளது. இதன் பரப்பு 699 சதுர கிலோ மீற்றர்களாகும். எனினும் அந்நியச் செலாவணியைப் பொறுத்தவரை சிங்கப்பூரிடம் அமெரிக்க வெள்ளி நூற்று எழுபத்தைந்து பில்லியன் உள்ளது.
சிங்கப்பூரின் பழைய வரலாற்றின்படி பதினான்காம் நூற்றாண்டிற்கு முன்னர் சிங்கப்பூரும் மலேசியாவும் ஒன்றிணைந்து காணப்பட்டதாம்.
சிங்கை நகர் 1819 ஆம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த தோமஸ் பர்ட் ராவின்ஸினால் பிரித்தானியாவின் குடியேற்ற நாடாக இணைந்துக் கொள்ளப்பட்டது.
1965 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து முழுசுதந்திரம் பெற்று குடியரசானதைத் தொடர்ந்து அது உலகிலேயே பொன் கொழிக்கும் நாடுகளிளொன்றாக மாற்றம் பெற்றது.
சர்வதேசமெங்கும் வர்த்தக செயற்பாட்டை இலகுவாக்கும் நோக்கில் சிங்கப்பூர் துறைமுகம் நவீனமயப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நாள் தோறும் பல கப்பல்கள் நங்கூரம் இட்டு ஏற்றுமதி, இறக்குமதி செயற்பாடுகள் துரிதகெதியில் மேற்கொள்ளப்படுகின்றன என்பது யதார்த்தமாகும். சிங்கப்பூர் விடுதலை யானதைத் தொடர்ந்து முதல் பிரதமராக விளங்கிய லீகுவான் யூவின் சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி சிங்கப்பூரை வளர்ச்சி மிக்க நாடாக மாற்றினார் என்று கூறினாலும் மிகையாகாது.
இனி சிங்கப்பூர் மக்கள் தொகையைப் பார்ப்போம். 2006 ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின் பிரகாரம் மக்கள் தொகை 4.48 மில்லியன்களாகும். இதில் 3.6 மில்லியன் மக்கள் சிங்கப்பூர் நாட்டின் பிரஜைகளாகும்.
சிங்கப்பூர் இலங்கைத் தீவைப் போன்று பல்லின மக்கள் வாழுகின்ற தேசமாகும். ஏலவே அவர்களின் மதங்களும் வேறுபடுகின்றன. ஐம்பத்தொரு சதவீத மக்கள் பெளத்த மதத்தைப் பின்பற்றுகின்றனர்.
மொழியைப் பொறுத்தவரை தேசிய மொழியாக மலாய் விளங்குகின்றது. சிங்கப்பூரின் தேசிய கீதம் மலாய் மொழியில் இயற்றப்பட்டுள்ளது. ஆங்கிலம், தமிழ் என்பன அந்தஸ்துள்ள மொழிகளாகும். சிங்கப்பூர் விடுதலை அடைந்த நாள் தொடக்கம் ஆங்கிலம் ஆட்சி மொழிகளிளொன்றாக ஆக்கப்பட்டுள்ளது.
காலனித்துவ காலப்பகுதியில் அதாவது ஆயிரத்து எண்ணூராம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்களால் தோட்ட வேலை செய்வதற்கென்று தமிழர் தமிழ் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டனர். அவர்களது வம்சாவளியினரே பெரும்பாலான சிங்கப்பூர் தமிழர்களாவர். அதேவேளை அக்காலகட்டத்தில் சிங்கப்பூர் அரச பதவிகளை நிரப்புவதற்கு இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்தும் அனேகம் கல்வியறிவு படைத்த தமிழர் குழந்தை குட்டிகளுடன் கப்பல் மூலம் சிங்கப்பூர் சென்றடைந்தனர். அவர்களில் பெரும்பான்மையினோர் சிங்கப்பூர் ரெயில்வே வாரியத்தில் புகையிரத நிலைய அதிபர்களாக நியமனம் பெற்றுக்கொண்டனர் என்றும் அறிய முடிகின்றது.
சிங்கப்பூர் சனத்தொகையில் தமிழர் குறிப்பிடத்தக்க சிறுபான்மையினராக காணப்படுகின்றனர். அங்கு தமிழ் மொழி ஒரு அரசாங்க அந்தஸ்து பெற்ற மொழியாக விளங்குகின்றது.
சிங்கப்பூரின் பொருளாதாரம் எவரும் எதிர்பாராத வகையில் முன்னேறி ஆசியாவில் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது.
இனி சிங்கப்பூர் அரசியலில் தமிழர்களின் பங்களிப்பை சற்று ஆராய்வோம். தற்போது சிங்கப்பூரின் அதிபராக செல்லப்பன் ராமநாதன் பதவி வகிக்கின்றார். துணைப் பிரதம மந்திரி பதவிக்கு தர்மன் சண்முகரெட்ணம் நியமனம் பெற்றுள்ளார். இவரின் மூதாதையர் இலங்கையின் வடபுலத்தைச் சேர்ந்தவர்கள். இவர் நிதி அமைச்சராகவும் மனிதவள அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார். சுற்றுப்புற நிர்வாக துறை அமைச்சராக பிலியன் பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
துணைப்பிரதமரான தர்மன் சண்முகரட்ணம் தற்போது சிங்கப்பூர் நாணய சபையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் அரசியலில் தமிழர்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளமையை மேல்படி நியமனங்கள் கோடிட்டிடுக் காட்டுகின்றன என்பது நிதர்சனமாகும்.
சிங்கப்பூர் நாணயத்தை சிங்கப்பூர் டொலர் என்று அழைக்கின்றனர்.
ஏலவே இந்நாட்டில் வாழுகின்ற பல்லின மக்களும் இன செளயன்னத்தை பேணி வேற்றுமையில் ஒற்றுமை காண்பதினால் பொருளாதார அபிவிருத்தி மேலோங்குகின்றது. இதனால் ஆசியாவிலே செல்வந்த நாடுகளிளொன்றாக சிங்கப்பூர் வீறு நடைபோடுகின்றமை வெள்ளிடை மலை.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum