Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சட்டசபை கூட்டத்தொடரை தி.மு.க. தொடர்ந்து புறக்கணிக்குமா? கருணாநிதி பதில்
Page 1 of 1

சென்னை, ஆக.10-
சட்டசபை
கூட்டத்தொடரை தி.மு.க. தொடர்ந்து புறக்கணிக்குமா? என்ற கேள்விக்கு
கருணாநிதி பதில் அளித்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னையில்
நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி:-
உச்சநீதிமன்ற தீர்ப்பு எப்படியிருந்தாலும், அதை அப்படியே நிறைவேற்றுவேன்
என்று முதல்-அமைச்சர் பேரவையிலே அறிவித்திருக்கிறார். அதை நிறைவேற்றுவாரா?
பதில்:-
தொடர்ந்து கவனிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. கேள்வி:- சமச்சீர் கல்வி
வழக்கில் தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இது
தொடர்பாக அரசுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆலோசனை கூற
முடியுமா?
பதில்:- கல்வியாளர்களையும்- குறிப்பாக
பள்ளிகளின் ஆசிரியப் பெருமக்களின் பிரதிநிதிகளையும் கலந்து கொண்டு
இடைக்காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை எவ்வாறு சரி செய்வது
என்று முடிவெடுக்க அரசு உடனடியாக முன்வர வேண்டும்.
கேள்வி:- சமச்சீர் கல்வி தீர்ப்பு தி.மு.க.விற்கு கிடைத்த முதல் வெற்றி என்று நினைக்கிறீர்களா?
பதில்:-
எத்தனையோ வெற்றிகளில், குறிப்பாக சமூக நீதிக்காக தி.மு.கழகம் பெற்ற
வெற்றிகளில் இதுவும் ஒன்று. சாதாரண சாமான்ய மக்களுக்கு கிடைத்த வெற்றி-
மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி- தமிழர்களுக்கு பொதுவாக கிடைத்த வெற்றி.
கேள்வி:-
தி.மு.க. முதன் முதலாக சட்டப்பேரவைக்குள் நுழைந்த போதே, நமக்கென்று ஒரு
சட்டசபை, நமக்கென்று ஒரு தலைமைச் செயலகம் வேண்டும் என்பது தான். அந்த
கோரிக்கையை நீங்கள் இவ்வளவு நாட்கள் கழித்து நிறைவேற்றிட காரணம் என்ன?
பதில்:-
ஒவ்வொரு முறையும் ஒரு ஆட்சியாளர் கட்ட முனைந்து இடையில் வேறு யாரோ கட்ட
முயற்சித்து பிறகு அவர்களே கட்டி விட்டுப்போகட்டுமே என்று விட்டு விட்ட
காரணத்தால் ஏற்பட்ட நிலை இது. நாங்கள் தொடர்ந்து இப்போது மேலும் இரண்டு
மூன்று ஆண்டு காலம் பொறுப்பிலே இருந்த காரணத்தால் இந்த கட்டிடத்தைக் கட்டி
முடித்தோம்.
கேள்வி:- தலைமைச் செயலகம் உள்பட
மிகப்பெரிய கட்டிடம் அழகாக கட்டப்பட்டாலும், அதனை ஏற்காமல் விசாரணை கமிஷனை
இந்த அரசு அமைத்துள்ளது. இதைப்பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?
பதில்:-தலைமைச் செயலகக் கட்டிடத்தைப் பொறுத்து நேற்று "இந்து''
பத்திரிகையிலே ஒரு பெரிய விளம்பரம் வந்துள்ளது. புதிய தலைமைச் செயலகக்
கட்டிடத்தைப் பற்றி மக்கள் கருத்துக்களை வழங்க வேண்டுமென்று அதிலே
கேட்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தமிழக அரசு
அலுவலகத்திலே தான் கவர்னர் உரை படிக்கப்பட்டு, அந்த உரையின் மீது விவாதம்
நடைபெற்றிருக்கிறது. பட்ஜெட் உரையும், அதன் மீதான விவாதமும் இதே
கட்டிடத்தில் தான் நடைபெற்றிருக்கிறது. ஆகவே கட்டப்பட்டுள்ள அழகான
மண்டபங்களில் ஒன்றான அமைச்சரவை கூட்ட மண்டபத்தில் அமைச்சர்கள் தாராளமாக
உட்கார்ந்து பத்து கூட்டங்களுக்கு மேல் நடத்தியிருக்கிறார்கள்.
அத்தகைய
இடம் அரசு அலுவலர்களுக்கும், அமைச்சர்களுக்கும், பேரவை
உறுப்பினர்களுக்கும் போதுமானதல்ல, வசதியானதல்ல என்று ஒரு பொய்யைக் கூறி
அதைப் புறக்கணிப்பது ஜெயலலிதா அரசைப் பொறுத்தவரையில் சமச்சீர் கல்வியைப்
புறக்கணித்தது போலத்தான்!
கேள்வி:-பிரதமரை
முதல்-அமைச்சர் ஜெயலலிதா சந்தித்த போது மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு உதவி
கேட்காமல், மோனோ ரெயில் திட்டத்திற்கு தானே நிதி உதவி கோரியிருக்கிறார்?
பதில்:-மத்திய அரசு கவனித்து முடிவெடுக்க வேண்டிய விஷயம் அது.
கேள்வி:-
இலங்கை அமைச்சர் கோத்தபய ராஜபக்சே அளித்த பேட்டியில் தமிழகத்திலே இலங்கை
தமிழர்களுக்காக பேசுபவர்கள் எல்லாம் அரசியல் ஆதாயத்திற்காகத்தான்
பேசுகிறார்கள் என்று சொல்லியிருக்கிறாரே?
பதில்:-
தமிழ் இன உணர்வோடு நீண்ட காலமாக வாதாடி, போராடி வருகின்ற தி.மு.க., அரசியல்
ஆதாயத்திற்காக இலங்கை பிரச்சினையில் அக்கறை காட்டுகின்ற கட்சி என்று அவர்
சொல்வாரேயானால், அது தவறு. இது ஈழத்திலே உள்ள தமிழ் இன விடுதலைக்காக
எழுப்பப்படுகின்ற குரல் என்பதை அவர் உணர்வார்.
கேள்வி:-
மேலும் அவர் தனது பேட்டியில் இலங்கை தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக
செய்யப்பட வேண்டியதையெல்லாம் செய்து முடித்து விட்டதாகச்
சொல்லியிருக்கிறாரே, அதை நீங்கள் ஏற்கிறீர்களா?
பதில்:- போராடிப் பெற முனைபவர்கள் எல்லாம், அதை மறுப்பவர்களின் வாதத்தை ஏற்றுக்கொள்ள இயலாது.
கேள்வி:-
இலங்கையில் நடந்த அந்த இனப்படுகொலையை ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து உலக
நாடுகள் எல்லாம் கண்டித்திருக்கின்றன. அங்கே நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில்
அனைத்து இடங்களிலும் தமிழர்கள் தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த
நிலையில் இந்திய பாராளுமன்றத்தில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு
வரவேற்பு தந்தது முறை தானா?
பதில்:- தி.மு.க. என்றைக்கும் இலங்கையில் தமிழ் இனப்படுகொலையை ஆதரித்தது கிடையாது.
கேள்வி:- சட்டப்பேரவையை தி.மு.க. தற்போது தொடர்ந்து புறக்கணித்து வருகிறதே, இது தொடருமா?
பதில்:- பேரவையில் தி.மு.க. உறுப்பினர்களுக்கு ஒரே பகுதியில் தொடர்ந்து இடம் தராவிட்டால் இப்படித்தான் நடக்கும்.
கேள்வி:-
வாரப்பத்திரிகை ஒன்றில் பெரிய அளவில் சுவிஸ் வங்கியில் நீங்கள்
(கருணாநிதி) 35 ஆயிரம் கோடி ரூபாய் வைத்திருப்பதாக செய்தி வந்துள்ளதே?
பதில்:-
சுவிட்சர்லாந்து வங்கியில் 35 ஆயிரம் கோடி ரூபாய் என் பணம் இருப்பதாக ஒரு
வார பத்திரிகை வெளியிடப்பட்டு இருக்கிறது. இதை அவர்கள் நிரூபிக்க தவறினால்
இத்தகைய மோசடிக்காரர்களை நாடு அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இதற்கிடையே
இதற்கு சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து மூத்த
வழக்கறிஞர்களோடு கலந்து பேசி வருகிறேன்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
மாலை மலர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum