சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தூக்க மாத்திரை தின்று தற்கொலை தாய், தங்கை பிரேதங்களுடன் 4 நாளாக தவித்த இளம்பெண் Khan11

தூக்க மாத்திரை தின்று தற்கொலை தாய், தங்கை பிரேதங்களுடன் 4 நாளாக தவித்த இளம்பெண்

Go down

தூக்க மாத்திரை தின்று தற்கொலை தாய், தங்கை பிரேதங்களுடன் 4 நாளாக தவித்த இளம்பெண் Empty தூக்க மாத்திரை தின்று தற்கொலை தாய், தங்கை பிரேதங்களுடன் 4 நாளாக தவித்த இளம்பெண்

Post by நண்பன் Wed 10 Aug 2011 - 4:28

பவானிசாகர் : தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்ற மூவரில் இளம்பெண் தப்பினார். மயக்கம் தெளிந்த அவர் தாய், தங்கை சடலங்களுடன் செய்வதறியாமல் 4 நாளாக தவித்தார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா பு.புளியம்பட்டி ராஜவீதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் (66), தானிய வியாபாரி. இவரது மனைவி மோகனாம்பாள்(55), மகன் சக்திவேல்(35), மகள்கள் நித்யலட்சுமி(29), பூங்கோதை(26). குடும்பத் தகராறு காரணமாக ஏழு ஆண்டுகளுக்கு முன் மனைவி, மகள்களைப் பிரிந்து பாலசுப்ரமணியம் அதே பகுதியில் தனி வீட்டில் வசித்தார். திருமணம் ஆகாத சக்திவேல் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.

மகள்கள் நித்யலட்சுமி, பூங்கோதைக்கும் திருமணம் ஆகாமல் தாயுடன் வசித்து வந்தனர். இருவரும் பட்டதாரிகள். பூங்கோதை பேஷன் டெக்னாலஜி படித்து விட்டு சொந்தமாக தொழில் செய்து வந்துள்ளார். அதில் வருமானம் அதிகம் கிடைக்காததால் பாலசுப்பிரமணியத்திடம் பணம் கேட்டு வாங்கி வந்துள்ளனர். அவர் தோட்டத்தை விற்று ரூ.7 லட்சம் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தில் தாயும் மகள்களும் கார் வாங்கி ஆடம்பரமாக செலவு செய்துள்ளனர்.

கடந்த 6 மாதத்துக்கு முன்பு மேலும் பணம் தர மறுத்த பாலசுப்பிரமணியம் மீது போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் மனைவி, மகள்களுக்கு ரூ.1.10 லட்சத்தை பாலசுப்பிரமணியத்திடம் இருந்து வாங்கி கொடுத்தனர். அதை எடுத்துகொண்டு மூவரும் டெல்லி, டேராடூன் உள்ளிட்ட வட மாநில நகரங்களுக்கு சுற்றுலா சென்று வந்துள்ளனர்.
மோகனாம்பாளும் மகள்களும் பக்கத்தில் வசிப்பவர்களிடம் பேசுவதில்லை.

ஓட்டலிலேயே வாங்கிச் சாப்பிடுவார்கள். போதிய வருமானம் இல்லாததால் மூவரும் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். கடந்த 6 நாட்களுக்கு முன்பு மோகனாம்பாள், நித்யலட்சுமி, பூங்கோதை ஆகிய மூவரும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு வீட்டில் படுத்தனர். இதில் மோனாம்பாளும் பூங்கோதையும் உயிரிழந்துள்ளனர். மயக்கம் தெளிந்து 2 நாட்களுக்கு பிறகு எழுந்த நித்யலட்சுமி அம்மாவும் தங்கையும் இறந்து கிடந்ததைப் பார்த்து கதறி அழுதுள்ளார். கவலையில் பூட்டிய வீட்டுக்குள் சாப்பிடாமல் மிகுந்த சோர்வுடன் இருந்த அவர், மீண்டும் தற்கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை.

நான்கு நாட்கள் தாய், தங்கை பிரேதங்களுடன் வீட்டுக்குள்ளேயே நித்யலட்சுமி அடைந்து கிடந்துள்ளார். இதற்கிடையே துர்நாற்றம் வீசியதால் நித்யலட்சுமி, பக்கத்தில் இருந்தவர்களிடமும் தந்தை பாலசுப்பிரமணியத்துக்கும் அண்ணன் சக்திவேலுக்கும் தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து வந்த பு.புளியம்பட்டி போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். நித்யலட்சுமியை தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மோகனாம்பாள், பூங்கோதை ஆகியோரின் பிரேதங்களை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

உருக்கமான கடிதம் சிக்கியது

தற்கொலைக்கு முன் தாயும் மகள்களும் ஒரு கடிதம் எழுதி அதை சுவற்றில் ஒட்டி வைத்திருந்தனர். அதனை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் எழுதியிருப்பதாவது: நாங்கள் லட்சுமி நரசிம்ம சுவாமி பக்தர்கள். எங்களுக்கு இந்த உலகத்தில் யாரும் உதவி செய்யவில்லை. ஆனால் யாருக்கும் நாங்கள் கெடுதல் செய்யவில்லை. எங்கள் உடலை கோவை மின்மயானத்தில் எரிக்க வேண்டும். அஸ்தியை ஹரித்துவாரில் கங்கை நதியில் கரைக்க வேண்டும். இதுவே எங்கள் கடைசி விருப்பம். எங்களுக்கு துரோகம் செய்தவர்களை லட்சுமி நரசிம்மர் கண்டிப்பாக தண்டிப்பார் என எழுதி கையெழுத்திட்டு இருந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum