சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களில் ஒரே இரவில் மர்ம மனிதர்கள் ஊடுருவல் _ Khan11

அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களில் ஒரே இரவில் மர்ம மனிதர்கள் ஊடுருவல் _

Go down

அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களில் ஒரே இரவில் மர்ம மனிதர்கள் ஊடுருவல் _ Empty அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களில் ஒரே இரவில் மர்ம மனிதர்கள் ஊடுருவல் _

Post by முனாஸ் சுலைமான் Sat 13 Aug 2011 - 21:22

அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களில் ஒரே இரவில் மர்ம மனிதர்கள் ஊடுருவல் _ Mysterious-man-300_6
அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் ஆறுக்கு மேற்பட்ட இடங்களில் ஒரே இரவில் பல்வேறு கோணங்களில் கிறீஸ் மனிதர்கள் (மர்ம மனிதர்கள்) ஊடுருவியமையினால் மக்கள் மத்தியில் பீதியும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 7 மணி முதல் 11 மணிக்கு இடைப்பட்ட நேரத்திற்குள் சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, மருதமுனை, பெரிய நீலாவணை, பொத்துவில் உள்ளிட்ட இடங்களில் கிறீஸ் மனிதன் ஊடுருவியதாக செய்தி பரவியமையை அடுத்தே மேற்படி நிலைமை தோன்றியுள்ளது.

காரைதீவு விஷேட அதிரடிப்படை முகாம் இருந்த வளவுக்குப் பின்னால் உள்ள வயல் பிரதேசத்தில் மர்ம மனிதன் ஒருவன் பதுங்கி இருந்தமையினைக் கண்டு ஊரவர்கள் கூச்சலிட அவன் அவ்விடத்தை விட்டு ஓடியுள்ளான். இப்பகுதியில் மர்ம மனிதன் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஊரவர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு தேடுதல் நடத்தியதுடன் இவ்விடயம் அயல் கிராமங்களான நிந்தவூர், மாளிகைக்காடு ஆகிய முஸ்லிம் கிராமங்களுக்கும் பரவ அங்கிருந்தும் மக்கள் பலர் ஒதுங்கியமையினை அவதானிக்க முடிந்தது.

சம்மாந்துறை கோறக்கல் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவரைத் தாக்க முற்பட்ட மர்ம மனிதனை பெண்ணின் கூக்குரலைக் கேட்ட குழுவினர் விரட்டி வந்தபோது சம்மாந்துறை பொலிஸ் நிலைய வளவுக்குள் புகுந்ததாக தெரிவிக்கப்பட்ட செய்தியை அடுத்து சம்மாந்துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவத்தைக் கேள்வியுற்ற பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு பொலிஸ் நிலையத்தை முற்றுகை இட்டதுடன் ஏற்பட்ட நிலைமையினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலை மேற்கொண்டதால் இதற்கெதிராக டயர்களை எரித்து மக்கள் தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினர்.

கல்முனை அல்பஹ்றியா மகா வித்தியாலய எல்லைக்குள் இரண்டு மர்ம மனிதர்களைக் கண்டதாக வெளியான செய்தியை அடுத்து பாடசாலைச் சுற்றி மக்கள் பல்லாயிரக்கணக்கில் சூழ்ந்தும் மர்ம மனிதன் தப்பிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கல்முனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது பிரதேசங்களில் மக்கள் பதட்டமடைந்ததுடன் கூர்மையான ஆயுதங்களுடன் வீதிகளில் நடமாடியமையினையும் காண முடிந்தது.

மருதமுனை பெரிய நீலாவணை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள வீதியில் மோட்டார் சைக்கிளில் கறுப்பு நிற ரீசேட் அணிந்த இரு மர்ம மனிதனை மக்கள் விரட்டிய சம்பவத்தினால் பிரதேசம் முழுவதும் பீதியில் மூழ்கியதுடன் பொல்லுகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் இளைஞர் குழுவினர் தேடுதலில் ஈடுபட்ட போதிலும் எவரும் பிடிபடவில்லை.

அயல் கிராமங்களில் மர்ம மனிதனின் ஊடுருவல் அதிகரித்துள்ள செய்தியையடுத்து துறைநீலாவணையில் ஒலிபெருக்கிகள் மூலம் மக்களைக் கவனமாக இருக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டதுடன் இளைஞர்களின் ரோந்து நடவடிக்கையும் இடம்பெற்றது.

பொத்துவில் கிதாயா புரத்தில் இடம்பெற்ற மர்ம மனிதனின் தாக்குதலுக்குள்ளான ஒரு பிள்ளையின் தாயார் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை அடுத்து அங்கும் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்றன.

கிறீஸ் மனிதனின் ஊடுருவல் குறித்து கிராமங்கள் தோறும் செய்திகள் பரவியமையினால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் ரமழான் மாதமாக இது இருப்பதனால் இரவு நேரத் தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது.

கிறீஸ் மனிதன் என உச்சரிக்கப்படுகின்ற போதிலும் பெண்களாலும் ஏனையோராலும் அடையாளம் காணப்பட்ட மர்ம மனிதர்களில் பெருமளவிலானோர் கிறீஸ் இல்லாமலேயே காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ் விடயத்தைப் பயன்படுத்தி சில ஆசாமிகள் வதந்திகளைப் பரப்பி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி சம்பவங்கள் சிலவற்றில் உண்மைத்தன்மை குறைவாக உள்ளதாகவும் நம்பப்படுகின்றது.

அரசியல் இலாபத்தினை அடைந்து கொள்ளும் நோக்கிலான திட்டமிடப்பட்ட செயற்பாடே இதுவெனவும் மக்கள் சந்தேகிக்கின்றனர். எது எவ்வாறிருந்தும் இவ்விடயம் குறித்து இப்பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் குறித்தும் விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்றன. கிறீஸ் மனிதனின் பெயரால் வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது அவதானமாக இருக்குமாறு மத அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. _
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum