Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மீனவரின் சடலம் கடல்மார்க்கமாக இந்தியாவுக்கு அனுப்பிவைப்பு
Page 1 of 1
மீனவரின் சடலம் கடல்மார்க்கமாக இந்தியாவுக்கு அனுப்பிவைப்பு
மன்னார் கடலில் இம்மாத முற்பகுதியில் கரையொதுங்கிய சடலம் இந்திய மீனவர்களது என அவரின் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டு தலைமன்னார் கடல்மார்க்கமாக தமிழகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இது குறித்து தெரியவருவதாவது, கடந்த 2 ஆம் திகதி மன்னார் சவுத்பார் கடற்கரை பகுதியில் ஆணின் சடலம் ஒன்று கரையொதுங்கியது. இது விடயமாக அப்பகுதிக்குச் சென்ற மீனவர்கள் கடற்படையினர் ஊடாக மன்னார் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து மன்னார் நீதிவான் நீதிமன்ற நீதிபதி கே. ஜீவராணி ஸ்தலத்துக்குச் சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்துடன் இந்தியப் பணம் மற்றும் அவர் அணிந்திருந்த ஆடைகள் இந்திய நாட்டை ஒத்திருப்பதால் இது விடயமாக இந்திய தூதரகத்துக்கு அறிவித்து இலங்கை அரசின் அனுமதியுடன் சடலத்தை அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்கும் வரை சடலத்தை பிரேத பரிசோதனை மேற்கொண்டு மன்னார் பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்குமாறு மன்னார் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இவ் சடலம் தொடர்பான விபரம் இந்தியத் தூதரகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இறந்தவரின் இரு புதல்வர்களும் மருமகனும் தலைமன்னார் பகுதிக்கு படகு மூலம் வந்து சடலத்தை அடையாளம் காட்டினர்.
இது விடயமாக மகனிடம் பொலிஸார் விசாரணை செய்தபோது கடந்த 20 ஆம் திகதி எனது தகப்பன் சிறிய படகொன்றில் மீன்பிடிக்கச் சென்றார். ஆனால் சம்பவம் அன்று படகு கவிழ்ந்த நிலையில் கரையொதுங்கிய போதும் அப்பாவைக் காணவில்லை.
இது விடயமாக நாங்கள் சகல இடங்களிலும் முறையீடு செய்தோம், பின்னர் இலங்கை மன்னார் கடலில் சடலமொன்று ஒதுங்கியிருப்பதாகவும் அவரின் சடலத்தை அடையாளப்படுத்த புகைப்படத்தை கொண்டு வருமாறும் எங்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதன் பிரகாரம் இச் சடலம் எங்கள் அப்பாவினுடையது என உறுதிப்படுத்தியுள்ளோம் என்றார்.
சடலம் வியாழக்கிழமை இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் யாழ். பிராந்தியத்தின் அதிகாரி வினோத் சர்மா முன்னிலையில் கடல் மார்க்கமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. __
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum