by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
'இப்தார்' சிறந்த செயல்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
'இப்தார்' சிறந்த செயல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உற்றார் உறவினர்களையும், அயலவர்களையும், ஏழை எளியவர்களையும், ஸஹாபாத் தோழர்களையும் தம் கூட அமர்த்தி "இப்தார்" நோன்பு துறக்கப்பண்ணுவார்கள். இதனை முன் மாதிரியாக வைத்து நபிகளாரின் உமத்துக்களும் அன்று முதல் இன்று வரை நோன்பு துறக்கச் செய்து வருகின்றார்கள். உண்மையில், இது ஓர் அருமையான நல்ல சிறந்த பழக்கமாகும்.
முன்னைய காலங்களில் இந் நிகழ்வு, முஸ்லிம்கள் மத்தியில் குறைந்தளவு இருந்து வந்த போதிலும், அண்மைக் காலம் முதல் பாமர மக்கள் மட்டுமின்றி, இயக்கங்கள், அமைப்புகள், ஜமா அத்துக்கள் என பல்வேறுபட்ட இடங்களில் 'இப்தார்' நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றன. இன்று பெண்கள் கூட ஒருவரையொருவர் அழைத்து, "இப்தார்" நிகழ்வுகளைச் செய்து இதனைக் கண்ணியப்படுத்தி வருகின்றனர். சமுதாயத்தின் கீழ் மட்டத்திலுள்ள வசதி குறைந்த ஏழை எளிய மக்களை மாத்திரம் அழைத்து, பிச்சைபோடுவது போல் செய்விப்பது அல்ல இப்தார். உறவினர்கள், அயலவர்கள் என சமுதாயத்தில் வசதி படைத்த செல்வந்தவர்களையும் "இப்தார்" வைபவங்களில் தாராளமாகக் கலந்து கொள்ளச் செய்யலாம். அப்போது தான், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், செல்வந்தர்களுக்கும் நெருக்கமான - இறுக்கமான உறவுகள் இதன் மூலம் ஏற்படும்.
துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் நேரம்
புனித ரமழான் காலத்தில் இரவு பகலாக தொழுகை, திக்ரு, ஸலவாத்து, பயான், அல்குர்ஆன் ஓதுதல், துஆ மற்றும் தெளபா (பாவமன்னிப்பு) கேட்டல் என்பன போன்ற சிறந்த அமல்களுடன் "தராவீஹ், தஸ்பீஹ், வித்ர், கியா முல்லைல்" போன்ற நல்லமல்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றபோதிலும், "இப்தார்" எனும் நோன்பு துறக்கும் வேளையில் ஒரு அடியான் அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமானவனாகச் செல்கின்றான். இந்த வேளையில், தனியாகவோ கூட்டாகவோ தியானத்தில் அல்லது பிராத்த்தனையில் ஈடுபடலாம். இப்தாருடைய நேரம் ஒரு அடியானுடைய துஆக்கள், அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படும் வேளை.
எனவே, எல்லா ஊர்களிலும், தனிப்பட்ட வீடுகளிலும் அவரவர் தகுதிக்கும் வசதிக்கும் ஏற்ப, "இப்தார்" நோன்பு துறக்கும் நிகழ்வுகளைத் தாராளமாக ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால், நமக்கு ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லை. மாறாக, அல்லாஹ் "இப்தார்" நோன்பு திறக்கச் செய்யும் நிகழ்வின் மூலமாக நமக்கு மேலான அருட் பாக்கியங்களை அள்ளி வழங்குவதற்காகக் காத்ருக்கின்றான். அத்துடன், நமது வாழ்விலும், உணவிலும், செலவிலும் என்றுமே குறைவில்லாத மேலான அபிவிருத்திகளைத் தருவதாகவும் அவன் வாக்களித்திருக்கின்றான்.
* "இப்தாரை" எளிய முறையில் செய்யலாம்
இப்தார் நோன்பு துறக்கச் செய்யும் நிகழ்வு, பெரிய விருந்துகளாக அல்லது மிதமிஞ்சிய செலவுகளில் அல்லது மேல் மட்டத்தில் அமைய வேண்டும் என்றில்லை. சாதாரணமாக, மிகமிகச் சிறியதாக, எந்தெந்த ஊருக்கு என்னென்ன உணவு வகைகள் பொருந்துமோ, அந்தந்த வகையில், இடத்துக்கு ஏற்றவாறு எளிய முறையிலும் சிறிய மட்டத்திலும் செய்யலாம். இதனை நாமும் அல்லாஹ்வுக்காக வேண்டி புனித நோன்பு காலத்தில், நமது கைச் செலவுக்கு தகுந்தபடி செய்யலாம். ஒரு பேரீச்சம்பழம், ஒருமிடக்கு தண்ணீர் போன்றவற்றை கொண்டு அடுத்தவருக்கு "இப்தார்" நோன்பு துறக்கச் செய்ய முடியும். இது, நம் மத்தியில் ஒரு சிறிய ஏற்பாடாகி இருந்தாலும் கூட, அல்லாஹ்விடத்தில் நாளை மறுமையுடைய நாளில் ஒரு பெரிய ஏற்பாடாக மதிப்பளிக்கப்பட்டு கணிக்கப்படும். அந்தளவுக்கு இப்தாருடைய மகிமையும், மாண்பும் அல்லாஹ்விடத்தில் கண்ணியப்படுத்தப்படும்.
இதேபோல், தவிர்க்க முடியாத சில காரணங்களைத் தவிர, "இப்தார்" நிகழ்ச்சிகளுக்காக யாராவது நம்மை அழைத்தால், நாம் அதனை தயங்காது நிச்சயமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இது நாம் அவர்களுக்குக் கொடுக்கக் கூடிய கண்ணியமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அழகான ஒரு சுன்னத்தான செயலை, "பித்னா" நிறைந்த இக் காலத்தில் நாம் உயிர்ப்பிக்க முனைய வேண்டும்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: 'இப்தார்' சிறந்த செயல்
» இஸ்லாத்தில் சிறந்த செயல் எது ?
» ரம்ஜான் இப்தார் விருந்து
» நன்றியுள்ள அடியாரின் செயல்
» சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.