சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வெளவால்  Khan11

வெளவால்

2 posters

Go down

வெளவால்  Empty வெளவால்

Post by Atchaya Fri 19 Aug 2011 - 6:52


வெளவால்  070805194059-largeவெளவால்  ImagesCA6WU6BJ
வெளவால் உண்மையிலேயே பல்வேறு அதிசயிக்கத்தக்க இயல்குகளைக்கொண்டுள்ள ஒரு உயிரினம். பகல் பொழுதுகளில் அதிகமாக ஓய்வெடுத்துவிட்டு இரவு முழுவதும் பறந்து திரிவதனாலேயே அதனை இராப்பட்சி என்பார்கள். இவை மாலை நேரங்களில் கூட்டங் கூட்டமாக ஒவ்வொரு திசையிலும் வானில் பறப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த வெளவாலினங்கள் பாதி பறவை இனத்தைப்போன்றும் பாதி மிருக இனத்தைப் போன்றும் தோற்றம் கொண்டிருக்கின்றன. இவ்வினங்கள் இராப்பொழுதுகளிலேயே அதிகமாகப் பறந்து திரிகின்றன.


வெளவாலை பறவை என்று கூறுவதை விட பறக்கக் கூடிய ஒரு பிராணி என்று கூறலாம். காரணம் இப்பிராணி ஏனைய விலங்குகளைப் போன்று குட்டி போட்டு பாலூட்டும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றது. இதன் முகம் கூட பறவைகளிலிருந்து மிகவும் வேறுபட்டுக் காணப்படும். காதுகள் நீண்டதாகவும், கூர்மையான பற்களைக் கொண்டதாகவும் இருக்கும். ஆனால் பறவையினங்கள் பாலூட்டும் தன்மைகொண்டனவோ, பற்களைக்கொண்டனவோ அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். உயிரினங்களின் புதை படிவங்களை (fossils) ஆராய்ந்த விஞ்ஞானிகளின் கூற்றுப்படி பூமியில் 6 கோடி வருடங்களுக்கு முன்னிருந்தே வெளவால்கள் வாழ்ந்து வருகின்றன என்று கூறுகின்றனர்.


வெளவால்கள் (இரவில்) பறக்கும்போது ஒரு வகைக் கீச்சுக்குரலை எழுப்பும். இதன் மூலம் அவை தமக்கு முன்னால் ஏதும் தடைகள் இருக்கின்றனவா என்பதை உணர்ந்து தமது பாதையை இனங்கண்டு அறிந்துகொண்டு பறக்கின்றன. இந்நிகழ்வுகள் யாவும் நொடிப் பொழுதினில் நடந்து முடிவதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். இக்கீச்சுக் குரலின் உயர் அதிர்வெண்னான (high frequency) இவ் ஒலியலைகள் செவிப்புலன் கடந்த ஒலியலைகள் அல்லது கழி ஒலியலைகள் (ultrasonic waves) என விஞ்ஞானத்தில் அழைக்கப்படுகின்றது.இவை கீச்சிடும்போது முன்னால் ஏதும் தடைகள் இருந்தால் ஒலி அதில் பட்டு மீண்டும் எதிரொலிக்கும். இவ்வெதிரொலிப்பின் மூலம் அவை முன்னால் தடங்கள் உள்ளதை உணர்ந்து கொள்ளும். இவ் ஒலி அலை அதிர்வுகள் ஒரு இலட்சம் Hz வரை இருக்கும். ஒலியைப்பிரித்து அறியக்கூடிய கூருணர்வு கொண்ட காதுகளை அல்லாஹ் இவற்றிற்கு வழங்கியுள்ளான். மனிதனின் செவியால் 20 முதல் 20,000 Hz வரையிலான ஒலி அதிர்வுகளையே கேட்டுணர முடியும். ஆனால் அல்லாஹ்வின் இப்படைப்பினால் 20,000 Hz இற்கும் கூடிய அதிர்வெண்ணை வெளியிட்டு அதனை கேட்டுணரவும் முடியும். இதனால்தான் எமது செவிப்புலனால் அதனைக் கேட்க முடியாதுள்ளது. உண்மையில் அல்லாஹ்வின் இப்படைப்பு மிகவும் நுணுக்கமானது.


இவ் வெளவால்களின் பார்வைத் திறன் குறித்து விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஓர் ஆராய்ச்சியை இவ்விடத்தில் குறிப்பிடுவது சிறந்தது. விஞ்ஞானிகள் சிலர் ஓர் அறையில் ஒருசில வெளவால்களை அடைத்து அதில் பல தடங்களை ஏற்படுத்தி அவற்றின் கண்களைக் கட்டி பறக்க விட்டனர். என்ன ஆச்சரியம்! அவை ஒலி எழுப்பிக் கொண்டு அத்தடைகளையும் மீறி சுற்றிச் சுழன்று பறந்தன. அதன் பின் மீண்டும் அவற்றின் கண்களைத் திறந்து விட்டு காதுகளையும் வாயையும் மாத்திரம் கட்டிவிட்டுப் பறக்க விட்ட போது அவை சற்று சிரமத்தோடு, அமைக்கப்பட்ட தடைகளிலே மோதி மோதிப் பறந்தன. இதன் மூலம் விஞ்ஞானிகள் ஒரு முடிவுக்கு வந்தனர். இவ் வெளவால் இனத்திற்கு பறப்பதற்கு கண் முக்கியமில்லை. கீச்சிடுவதற்கு வாயும் அதன் மூலம் ஏற்படும் எதிரொலியைக் கேட்பதற்குக் காதும் இருந்தால் மட்டுமே போதும் அவற்றால் இலகுவாகப் பறக்க முடியும்.


பெரும்பாலும் வெளவால்கள் துருவப்பிரதேசம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களிலேயே வாழ்கின்றன. சிறியதொரு வெளவாலின் அகலம் சுமார் 15cm ஆகும். இன்னும் சில வெளவால்கள் சுமார் 2m அகலமுடையனவாகவும் காணப்படுகின்றன. இவற்றின் மற்றுமொரு விஷேட அம்சம்தான் இவை உண்ணுவதும், கழிப்பதும் தமது ஒரே வாயினாலேயே ஆகும்.


அதிகமான வெளவால்கள் பூக்கள், பழங்கள், புழுக்கள், பூச்சிகளையே உண்டு வாழ்கின்றன. புழு, பூச்சிகளையும் ஏனைய உணவுகளையும் பார்க்கவே சொற்பமானளவு கண்களைப் பயன்படுத்துகின்றன. ஆனால் இவற்றைத்தவிர இரத்தம் குடித்து வாழும் வெளவால்களும் உண்டு. இவை vampire bats என அழைக்கப் படுகின்றன. இவற்றின் பற்கள் ஊசி போன்று கூர்மையானவை. வெளவால்கள் பறக்கும் போது முறையாகப் பறந்தாலும் ஓய்வின்போது தலைகீழாகத் தொங்கிக் கொண்டு தமது சிறகுகளினால் முகத்தை மூடியபடி இருக்கும்.


அல்லாஹ் இப்பிராணியில் எக்கச்சக்கமான அற்புதங்களை வைத்திருக்கின்றான். அவற்றில் சிலதைத் தாம் இங்கு நாம் பார்த்தோம். எவ்வளவு அற்புதமாகப் படைத்துள்ளான்! அவனின் ஒவ்வொரு படைப்பிலும் ஒவ்வொரு அற்புதங்கள் மறைந்து கிடக்கின்றன. அதற்காக நிச்சயமாக நாம் அவனுக்கு நன்றி செலுத்த வேண்டியவர்களாயுள்ளோம்.


அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் அவனது படைப்பினங்களைப் பற்றி ஆராய்ந்து, சிந்தித்துப் பார்க்குமாறு எம்மை வலியுருத்துகின்றான். (88:17-20), (03:190-194), (55:01-35) இன்னும்… ஆனால் நாம் அவைபற்றி எந்த உணர்வுமற்றவர்களாக இருக்கின்றோனம். இன்று இதுபோன்ற ஆய்வாராய்ச்சிகளில் அதிகமமதிகம் ஈடுபடுபவர்களாக முஸ்லிம் அல்லாதவர்களே இருக்கின்றார்கள். எனவே நாம் விழிப்படைய வேண்டும். அல்லாஹ்வின் படைப்புகளை ஆராய்ந்து அவனது வல்லமைகளை மக்கள் முன் எடுத்துக்காட்டுவதில் நாம்தான் முன்னனி வகிப்பவர்களாக இருக்கவேண்டும். இதனை நாமனைவரும் ஆழமாக மனதில் பதித்து செயல்படுவோம்.

நன்றி:ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

வெளவால்  Empty Re: வெளவால்

Post by யாதுமானவள் Fri 19 Aug 2011 - 7:06

வெளவால் இனத்திற்கு பறப்பதற்கு கண் முக்கியமில்லை. கீச்சிடுவதற்கு வாயும் அதன் மூலம் ஏற்படும் எதிரொலியைக் கேட்பதற்குக் காதும் இருந்தால் மட்டுமே போதும் அவற்றால் இலகுவாகப் பறக்க முடியும்.

மற்றுமொரு விஷேட அம்சம்தான் இவை உண்ணுவதும், கழிப்பதும் தமது ஒரே வாயினாலேயே ஆகும்

வவ்வால் குறித்த நல்ல தகவல்கள்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

வெளவால்  Empty Re: வெளவால்

Post by Atchaya Fri 19 Aug 2011 - 7:51

:”@: :”@:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

வெளவால்  Empty Re: வெளவால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum