சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

 மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Khan11

மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )

+4
jasmin
யாதுமானவள்
முனாஸ் சுலைமான்
kalainilaa
8 posters

Go down

 மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Empty மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )

Post by kalainilaa Sat 20 Aug 2011 - 18:03

சிவகங்கை,பனையூர்
வீரத்தின் முகவரியாய்,
முன்மொழிந்தது!

பலவகை,விளையாட்டுக்களில்,
தான்,தகுதிப் பெற்றாலும்
ஈர்த்தது போர் வீரனாய்,
கான்ஷாகிப்பை!

இந்த வீரத்துடனே
மருத நாயகம் என்ற
பெயரில் வெற்றி நாயகனாய்,
பவனிவந்தார்!

மராட்டிய மன்னனின்
ராணுவத்தில் தன்னை இணைத்து,
முதல் ராணுவ அனுபவத்தை கொண்டு
பின் .....

பிரெஞ்சுப் படையின்
போர் புலியாய்,அவதரித்து,
முக்கிய பதவிகளில்
அடைக்கலமானார்!

காலத்தின் சூறவெளி,
கருத்து வேறு பாடுகளால்,
இவரையும்,திசை மாற்ற,
ஆங்கிலேயே சூழ்ச்சிக்கு,
இரையானார்!

ஆங்கிலேயப் படையில்
இணைந்தவுடனே,
ராபர்ட் கிளை அனுமதியுடன்

மைசூர் சிங்கத்துடன்,
இந்த சிங்கத்தை,மோதவிட்டு
தனது ராஜதந்திரத்தை,
செய்வனே செய்தனர் ஆங்கிலேயர்கள்!

நாவப் கொண்ட துரோகத்தோடு
திட்டமிட்ட சதியில்,
திண்டுக்கலில் ,சிங்கம் ஒன்று,
தோற்றது!
மருத நாயகம் சிங்கம் வெல்ல,
ஆங்கில சூழ்ச்சிகள் சிரித்தன!

சூழ்ச்சிகள் தொடர,
புலித் தேவனுக்கு போர்தொடுக்க,
தோல்வி கொண்ட சிங்கத்தை,
சீண்டிப் பார்த்ததால்,
மீண்டும் போர்,
நெல்கட்டான் செவ்வல் அருகே போரிட்டு
பூலித்தேவனை வென்றார்.

தன்னை ஆதரித்த
பிரஞ்சு படையே தோற்க
செய்த வல்லமையைக் கண்டு,
கவர்னராக நியமித்தனர்.
ஆங்கிலயேர்!

பொறமை இங்கு எட்டிப்பார்த்து,
நாவப் மனதில்.
எனக்கு சமமாய்,
எனது படையில் இருதவனுக்கு
பதவியா என்ற நிலையில்.
பனிப்போர் நடக்க,

சமயம் பார்த்த ஆங்கிலேர்கள்,
தீமுட்ட ,இன்னும் பரவியது.
மருதநாயகம் ,தனது தவறை
இது காரணமாய் ,அறிய ,
காட்சி மாறியது ,களம் மாறியது!

நாவப்க்கும் ,ஆங்கிலேயர்களுக்கும்,
கப்பம் கட்ட மறுக்க,
விவேகம் பெற்றது வீரம்!


கோவத்தின் உதயம்
ஆங்கிலேய கொடி எரிக்கப்பட்டு
மஞ்சள் கொடி பறக்கப்பட்டது!

விவேகமும் அங்கு கைகொடுக்க
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற
கொள்கையை கையாள,
மஞ்சள் கொடியோடு
பிரெஞ்சுக்காரர்களின் கொடியையும்
பறக்க விட்டார் !

நவாப்பின் கோபம் சினம்கொள்ள
அடுத்து அடுத்து போர்,
எல்லாம் ஆங்கிலேயர் ,
புறமுதுகிட்டு ஓட
சிங்கம் ஒன்னு புறப்பட்டதே
வெற்றிக்கு என்ற கர்ஜனையோடு,
நடமாட்டம்!

வாள்கள்,பேசப்பட்டன,
மருத நாயகத்தின் கையில்.
முன்னால் நண்பன்,
ஆங்கிலேய தளபதி பிரஸ்ட்டன்
சுடப்பட்டு படுகாயமடைந்தார்.
பின்னர் உயிர் துறந்தார்.

ஆங்கிலேயர்களை
எதிர்த்து போரிடும் செய்தியும்,
அதன் வெற்றிகளும், மைசூர் சிங்கம்
ஹைதர் அலி அறியவே
பழைய பகையை மறந்தார்.

மண்ணுரிமை போரில்,
தனது நிலைக்கு மருதநாயகம்
வந்ததை வரவேற்று
சிங்கம் ஒன்று சிங்கத்துக்கு
வாழ்த்து செய்தி அனுப்பியது!

தந்திரமும்,வஞ்சகமும்
கைகுலுக்க,
சிவகங்கை சீமையின்
விஷமியான தாண்டவராயன்
விலாசத்துடன்,களமிறங்கியது!

இன்று நடக்கும் போரில்
பொருளாதார தடைகள்போல,
திட்டமிட்டு மதுரை போர்
ஆங்கிலேயர்களால்,
மருதநாயகத்தின் கோட்டை,
நகரிலிருந்து துண்டிக்கப்பட்டது,!

உணவு,ஆயுதங்கள், மருந்துகள்
கூட நுழைய விடாமல் தடுக்கப்பட்டது.

நானும், நீயும் வேறல்ல.
நமது படையும், நாடும் வேறல்ல”
என்று சகோதர உணர்வோடு
ஹைதர் அலி கடிதம் எழுதி
தனது ஆதரவை வழங்கினார்.

போரில் வெற்றி மறக்கப்பட்ட
நிலையில் வழக்கம்போல்
ஆங்கிலேயே எண்ணம்
தந்திரத்திலும்,அதன் மூலம்,
வஞ்சம் தீர்க்க திட்டமிட்டது!

தாண்டவராயன்,உதவியோடு,
கான்சாஹிபின் அமைச்சர்களில்
ஒருவரான சீனிவாசராவை
வலையில் வீழ்த்தினர்.

கட்சி மாற காட்சியும் மாறியது,
மெய்க்காவலர்களான பாபாசாஹிப்,
சேகுகான் உள்ளிட்டோரையும்,
பிரதான தளபதியும், பிரெஞ்சு
அதிகாரியுமான மார்ச்சந்த்தையும்
துரோக வலையில் இணைத்தனர்.

நண்பர்கள் ,துரோகியாய்,
மாறியது தெரியாமல்
ரமலான் மாதம்,தொழுத நிலையில்,
துரோகிகள் சிங்கத்தை சிறைப்பிடித்தனர்!

காரணம் அறிந்து சிங்கம்
வேண்டுகோள் அறிவித்தது,
எதிரிகளிடம் ஒப்படைக்காமல்
நண்பர்களே ,உங்களால்
இறப்பது எனக்கு சுகம்,
என்னை கொல்லுங்கள்,என்று,
வேண்டுகோள் கொடுத்தது!

கோழைகள் ஒன்று சேர்ந்து,
சிங்கத்தை ,படியவைக்க
கட்டப்பட்ட நிலையில்,
பட்டினி போட்டு
படிய சொன்னது,
மன்னிப்புக் கேட்க சொன்னது.

வீரம் மனம் மறுக்க
வழக்கம்போல ஆங்கிலேய
மனம் வஞ்சகம் தீட்ட ,
இவருக்கு தண்டனையில்லை
நவாப் முன்னிலையில் சொல்ல
நவாப்பை கோவம் கொள்ள...


தூக்கு தண்டனை என்று
சொல்ல செய்தது!
மதுரைக்கு மேற்கே
சம்மட்டிபுரத்தில் உள்ள
ஒரு மாமரத்தில் சிங்கம்
தூக்கிலிட கொண்டுவரப்பட்டார்,

அச்சமுள்ள மனதுக்கு அல்லவா
பயம் மறைந்திருக்கும்.
இந்த சிங்கம்
மருதநாயகம் முகத்தில்
பயமுமில்லை, அச்சமுமில்லை,

தூக்கிலிடப்பட்டதும்
அவர் மரணிக்கவில்லை.
கயிறும் ,மருதநாயகத்தின்,
இறப்பை ஏற்காமல்,
அறுந்து விழுந்தது!

புதிய கயிறு கட்டப்பட்டது
மீண்டும் தூக்கிலிடப்பட்டார்,
அப்போதும் உயிர் பிரியவில்லை.
நான் யோகாசனம் பயின்றவன்.
கழுத்தை உப்ப வைத்து,
பல மணிநேரம் மூச்சை அடக்கும்
ஆற்றல் கொண்டவன் என்று
அந்த நிமிடமும்
தூக்கு கயிற்றில் சீறினார் மருதநாயகம்.
எதிரிகள் குலை நடுங்கினர்.
வஞ்சகம் வெற்றி பெற
இறுதில் மருதநாயகம்
மரணம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மருதநாயகம் ,இறந்த பின்னும்
துரோகிககளின் தூக்கத்தில்
கனவிலில் கூட
மருநாயகம் போர்தொடுக்க,
எங்கே மீண்டும் உயிர் பெற்று
விடுவாரோ என்ற அச்சநிலை....

தலை, கால், கை என
பல பாகங்களாக வெட்டி யெடுக்கப்பட்ட
சிங்கத்தின் உடல் பல்வேறு
ஊர்களுக்கு தனித்தனியாக
அனுப்பப்பட்டு அடக்கப்பட்டது.

ஆம், செத்த பிறகும்
வீரன் மருதநாயகத்தின்
உடலை கண்டு ஆங்கிலேயர்களும்,
துரோகி ஆற்காடு நவாப்...
முகம்மது அலியும் நடுங்கியுள்ளனர்.

வீரனின் உடல்
தமிழக முழுதும்
வீரத்தின் வீரியம்
விதையாய் விதைத்து
மரமாய் வளர்ந்திருக்கு!

இவரை போன்ற
மாவீரனின் உடலால்,
உதிரத்தால் இன்னும் வீரம்
மறையவில்லை தான்
இந்த மண்ணில் இன்னும் ...!



 மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Marudhanayagam






kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Empty Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )

Post by முனாஸ் சுலைமான் Sat 20 Aug 2011 - 19:20

அச்சமுள்ள மனதுக்கு அல்லவா
பயம் மறைந்திருக்கும்.
இந்த சிங்கம்
மருதநாயகம் முகத்தில்
பயமுமில்லை, அச்சமுமில்லை,

வாவ் சூப்பரா மருத நாயகத்தின் கதை புதுக்கவிதையாய் தோழர் கலை நிலாவிடம் இருந்து வாழ்த்துக்கள் தோழரே :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: #heart #heart
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

 மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Empty Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )

Post by யாதுமானவள் Sat 20 Aug 2011 - 19:34

இவ்வளவு சீக்கிரத்தில் அருமையான கவிதையாக்கிவிட்ட்டீர்களே கலை நிலா...

வாழ்த்துக்கள்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

 மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Empty Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )

Post by jasmin Sat 20 Aug 2011 - 19:36

அழகிய வரலாற்றை அற்புதமான கவிதையில் படைத்து விட்டீர்கள் மருத நாயகத்தின் கதையை திரைப்படமாகக்க முற்பட்ட கமலுக்கு இன்றுவரை முட்டுக்கட்டை வாழ்த்துகள் கலை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

 மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Empty Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )

Post by *சம்ஸ் Sat 20 Aug 2011 - 22:44

வாவ் அருமை வரிகள் வரலாற்றை கவிபாடிய தோழருக்கு வாழ்த்துகள். தொடரட்டும் கவிப்பணம் :!@!:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Empty Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )

Post by kalainilaa Sat 20 Aug 2011 - 23:37

முனாஸ் சுலைமான் wrote:அச்சமுள்ள மனதுக்கு அல்லவா
பயம் மறைந்திருக்கும்.
இந்த சிங்கம்
மருதநாயகம் முகத்தில்
பயமுமில்லை, அச்சமுமில்லை,

வாவ் சூப்பரா மருத நாயகத்தின் கதை புதுக்கவிதையாய் தோழர் கலை நிலாவிடம் இருந்து வாழ்த்துக்கள் தோழரே :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: #heart #heart

தோழர் அப்துல்லாவின் கட்டுரை என்னை ஈர்த்தது .இதுக்கு புதுக்கவிதையில் தொகுத்தால் என்ற கேள்வி வரவே ,நான் பதித்த கட்டுரைக்கு ,அந்த கதைக்கு
இந்த கவிதை .,நன்றி தோழரே உங்களது ஊக்கமான மறுமொழிக்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Empty Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )

Post by kalainilaa Sat 20 Aug 2011 - 23:45

யாதுமானவள் wrote:இவ்வளவு சீக்கிரத்தில் அருமையான கவிதையாக்கிவிட்ட்டீர்களே கலை நிலா...

வாழ்த்துக்கள்

நன்றி .உங்களைபோன்ற நல உள்ளத்தின் ஊக்கமே ,எனது,ஆக்கமாய் ....!நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Empty Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )

Post by அப்துல்லாஹ் Sun 21 Aug 2011 - 1:44

கொஞ்சம் தாமதமாகத்தான் கவனிக்க நேர்ந்தது. மன்னியுங்கள். அருமையான ஆக்கம்.
வீரனின் உடல்
தமிழக முழுதும்
வீரத்தின் வீரியம்
விதையாய் விதைத்து
மரமாய் வளர்ந்திருக்கு!

இவரை போன்ற
மாவீரனின் உடலால்,
உதிரத்தால் இன்னும் வீரம்
மறையவில்லை தான்
இந்த மண்ணில் இன்னும் ...!
இங்கே தங்களின் எழுதுகோல் விதைத்த வீரிய வித்துக்கள் விளைந்திடும்போது விண்ணை முட்டட்டும் மனித நேயமும் மாண்புறு முகமதிய கலாச்சாரத்தின் மகோன்னதமும்...
சிங்கத்தின் வரலாற்றை சிந்தையைக் கவரும் வண்ணம் கவியாக்கிய கலைநிலா சிறகடிக்கிறார் நம் இதய வானில்....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

 மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Empty Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )

Post by நண்பன் Sun 21 Aug 2011 - 4:12

முகம்மது யூசுப்கான் சாஹிப்
மருதுநாயகம்,கான்சாஹிப்,
மருதநாயகம் முகம்மது கான் சாஹிப்
என பல பெயர்களில் மக்களால்
போற்றப்பட்ட புகழப்பட்ட ஒரு மா மனிதனின்
முழுமையான கட்டுரை படுத்தேன்
அதே கையோடு சிறப்பான தொரு கவிதையும் படித்தேன்
மிக மிக சிறப்பான வரலாற்று சாண்று மிக்க ஒரு வல்லவனின்
சிறப்பம்சங்கள் தாங்கிய இந்த கவிதை வரிகள் வரலாற்றில் ஓர் ஏடுதான் வாழ்த்துக்கள் மாஸ்டர் உங்கள் கவிதைகளில் இதுவும் என்னை மிகவும் கவர்ந்த கவிதை வாழ்த்துக்கள்

ரோமம் சிலிர்க்கும் வரிகள் இவைகள்
அச்சமுள்ள மனதுக்கு அல்லவா
பயம் மறைந்திருக்கும்.
இந்த சிங்கம்
மருதநாயகம் முகத்தில்
பயமுமில்லை, அச்சமுமில்லை,

தூக்கிலிடப்பட்டதும்
அவர் மரணிக்கவில்லை.
கயிறும் ,மருதநாயகத்தின்,
இறப்பை ஏற்காமல்,
அறுந்து விழுந்தது!

சுப்ஹானல்லாஹ்
நன்றி மாஸ்டர் வாழ்த்துக்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Empty Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )

Post by kalainilaa Sun 21 Aug 2011 - 5:07

jasmin wrote:அழகிய வரலாற்றை அற்புதமான கவிதையில் படைத்து விட்டீர்கள் மருத நாயகத்தின் கதையை திரைப்படமாகக்க முற்பட்ட கமலுக்கு இன்றுவரை முட்டுக்கட்டை வாழ்த்துகள் கலை

மல்லிகையின் மறுமொழி ,பூக்க்களின் மனமாய் ..... :”@: :”@: :!@!:
ஊக்கத்தின் மரமாய் ...... :”@: :”@: :”@:
என்னை வளர செய்யும் .நன்றி
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Empty Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )

Post by Atchaya Sun 21 Aug 2011 - 10:46

அருமை....பெருமையாக உள்ளது...தொடரட்டும் பொங்கட்டும் எழுச்சிமிகு கவிதை பூக்கள்..... :!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

 மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Empty Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )

Post by நண்பன் Sun 21 Aug 2011 - 11:02

அட்சயா wrote:அருமை....பெருமையாக உள்ளது...தொடரட்டும் பொங்கட்டும் எழுச்சிமிகு கவிதை பூக்கள்..... :!+: :!+:
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Empty Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )

Post by kalainilaa Sun 21 Aug 2011 - 15:13

*சம்ஸ் wrote:வாவ் அருமை வரிகள் வரலாற்றை கவிபாடிய தோழருக்கு வாழ்த்துகள். தொடரட்டும் கவிப்பணம் :!@!:
நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Empty Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )

Post by kalainilaa Tue 23 Aug 2011 - 0:14

அப்துல்லாஹ் wrote:கொஞ்சம் தாமதமாகத்தான் கவனிக்க நேர்ந்தது. மன்னியுங்கள். அருமையான ஆக்கம்.
வீரனின் உடல்
தமிழக முழுதும்
வீரத்தின் வீரியம்
விதையாய் விதைத்து
மரமாய் வளர்ந்திருக்கு!

இவரை போன்ற
மாவீரனின் உடலால்,
உதிரத்தால் இன்னும் வீரம்
மறையவில்லை தான்
இந்த மண்ணில் இன்னும் ...!
இங்கே தங்களின் எழுதுகோல் விதைத்த வீரிய வித்துக்கள் விளைந்திடும்போது விண்ணை முட்டட்டும் மனித நேயமும் மாண்புறு முகமதிய கலாச்சாரத்தின் மகோன்னதமும்...
சிங்கத்தின் வரலாற்றை சிந்தையைக் கவரும் வண்ணம் கவியாக்கிய கலைநிலா சிறகடிக்கிறார் நம் இதய வானில்....

உங்களுக்கு தான் முதலில் நன்றி சொல்லணும் ,அருமயான பதிப்பை அறிய தந்த
உங்களுக்கு நன்றி .உங்கள் மறுமொழி கண்டு மகிழ்ந்தேன் . :”@: :”@: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Empty Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )

Post by kalainilaa Wed 24 Aug 2011 - 5:21

நண்பன் wrote:முகம்மது யூசுப்கான் சாஹிப்
மருதுநாயகம்,கான்சாஹிப்,
மருதநாயகம் முகம்மது கான் சாஹிப்
என பல பெயர்களில் மக்களால்
போற்றப்பட்ட புகழப்பட்ட ஒரு மா மனிதனின்
முழுமையான கட்டுரை படுத்தேன்
அதே கையோடு சிறப்பான தொரு கவிதையும் படித்தேன்
மிக மிக சிறப்பான வரலாற்று சாண்று மிக்க ஒரு வல்லவனின்
சிறப்பம்சங்கள் தாங்கிய இந்த கவிதை வரிகள் வரலாற்றில் ஓர் ஏடுதான் வாழ்த்துக்கள் மாஸ்டர் உங்கள் கவிதைகளில் இதுவும் என்னை மிகவும் கவர்ந்த கவிதை வாழ்த்துக்கள்

ரோமம் சிலிர்க்கும் வரிகள் இவைகள்
அச்சமுள்ள மனதுக்கு அல்லவா
பயம் மறைந்திருக்கும்.
இந்த சிங்கம்
மருதநாயகம் முகத்தில்
பயமுமில்லை, அச்சமுமில்லை,

தூக்கிலிடப்பட்டதும்
அவர் மரணிக்கவில்லை.
கயிறும் ,மருதநாயகத்தின்,
இறப்பை ஏற்காமல்,
அறுந்து விழுந்தது!

சுப்ஹானல்லாஹ்
நன்றி மாஸ்டர் வாழ்த்துக்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்

உங்கள் மறுமொழிகள் என்னை உற்சாகப்படுத்தும்.
நன்றி தோழரே .நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Empty Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )

Post by நண்பன் Sat 15 Oct 2011 - 18:50

இன்று அன்னாரின் நினைவு நாள் 😢 😢


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Empty Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )

Post by kalainilaa Sat 15 Oct 2011 - 20:35

நண்பன் wrote:இன்று அன்னாரின் நினைவு நாள் 😢 😢

அறிய தந்தமைக்கு நன்றி உறவே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Empty Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )

Post by முனாஸ் சுலைமான் Sat 15 Oct 2011 - 20:37

வீரனின் உடல்
தமிழக முழுதும்
வீரத்தின் வீரியம்
விதையாய் விதைத்து
மரமாய் வளர்ந்திருக்கு!

இவரை போன்ற
மாவீரனின் உடலால்,
உதிரத்தால் இன்னும் வீரம்
மறையவில்லை தான்
இந்த மண்ணில் இன்னும் ...!

இன்று நினைவு நாள் கண்ணீர் அஞ்சலி :silent: :silent:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

 மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Empty Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மரணத்தை முத்தமிட்ட மருதநாயகம் - அப்துல்லாஹ்
» சிங்கத்தின் சீற்றம்
» இந்தியாவில் ஒரு சிங்கத்தின் கர்ஜனையும், இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளும் (வீடியோ)
» துறைமுகத்தில் தொழில்வாய்ப்புக் கேட்டு அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டம்: சிங்கத்தின் குகைக்குள் ஆரம்பித்துள்ளதா சலசலப்பு?
» மனிதன் என்ற போர்வையில்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum