Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தீயசக்திகளின் பொறிக்குள் பொதுமக்கள் சிக்கக்கூடாது பாதுகாப்பு செயலாளர்
Page 1 of 1
தீயசக்திகளின் பொறிக்குள் பொதுமக்கள் சிக்கக்கூடாது பாதுகாப்பு செயலாளர்
தீயசக்திகளின் பொறிக்குள் பொதுமக்கள் சிக்கக்கூடாது
பாதுகாப்பு செயலாளர்
ஸாதிக் ஷிஹான்
நாட்டில் தற்பொழுது நிலவும் சமாதானத்தை சீர்குலைப்பதற்காக சில தீய சக்திகளால் விரிக்கப்படும் பொறிக்குள் அப்பாவி பொதுமக்கள் சிக்க வேண்டாம் என்று பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தார்.
நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்திய அரசாங்கத்திற்கோ, பாதுகாப்புப் படையினருக்கோ அதனை மீண்டும் சீர்குலைக்க வேண்டிய எந்தவித தேவைகளும் இல்லை என்று தெரிவித்த அவர் அவ்வாறு கூறப்படும் செய்திகளில் எந்தவித உண்மைகளும் இல்லை என்றும் தெரிவித்தார்.
அரசாங்கமும், பாதுகாப்புப் படையினரும் சகல சந்தர்ப்பங்களிலும் மக்களின் நலனையும், பாதுகாப்பையும் கருத்திற்கொண்டே செயற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ‘பூதம்’ என்ற பெயரில் பரப்பப்பட்டும் பொய்யான வதந்திகள் காரணமாக படையினர் மீது தாக்குதல் நடத்துவதனாலேயோ, படை முகாம்களை சுற்றிவளைப்பதனாலேயோ எதனையும் சாதிக்க முடியாது என்று தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், இது மிகவும் பாரதூரமான விளைவை ஏற்படுத்தும் செயலாகும். எனவே படையினரின் பொறுமையை சோதிக்கும் வகையில் செயற்பட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறுவதாக கூறப்படும் மர்ம மனிதன் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து அமைதியான சூழலை ஏற்படுத்தும் நோக்கில் ஜம்இய்யத்துல் உலமா, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் மற்றும் பள்ளிவாசல் சம்மேளன பிரதிநிதிகளின் ஆலோசனைகளை பெறும் விசேட சந்திப்பு ஒன்று பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் முபாரக், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என். எம். அமீன் ஆகியோர் தலைமையில் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், குருநாகல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஜம் இய்யத்துல் உலமா பள்ளிவாசல் சம்மேளன பிரதிநிதிகள் சுமார் 110 பேர் கலந்து கொண்டனர்.
அரச தரப்பில் பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் மேல் மாகாண ஆளுநர் அஸ்ஸெய்யத் அலவி மெளலானா, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, இராணுவத் தளபதி லென்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவர்தன, பொலிஸ் மா அதிபர் என். கே. இலங்ககோன், தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையப் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹ¤லுகல்லே, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, உட்பட பிராந்திய இராணுவ, கடற்படை கட்டளைத் தளபதிகள் கலந்துகொண்டனர்.
தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு சில தீய சக்திகள் இது போன்ற சம்பவங்களின் பின்னணியில் நின்று செயற்பட்டு அப்பாவி பொதுமக்களை தூண்டி விடுகின்றனர். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதியின்மைக்கு பொய் வதந்திகளே காரணமாகும். எனவே மக்கள் தெளிவுடனும், பொறுமையுடனும் இருக்க வேண்டும். இந்த சதிவலைக்குள் சிக்காமல் இருக்க முயற்சியுங்கள் என்றார்.
சிலரது இவ்வாறான செயற்பாடுகள் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்க்குலைப்பதாக அமைகின்றது.
பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டதன் காரணமாக இந்த சம்பவத்தில் இதுவரை மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2 முகாம்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரும், இரு அப்பாவி சிவிலியன்களும் அடங்குவர்.
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் இன்னமும் இருக்கின்றனர். இந்நிலையில் இரவு நேரத்தில் படை முகாமைச் சுற்றிவளைத்தமையானது அதன் மீது தாக்குதல் நடத்துவதற்கு சமமானதாகும். இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டமையானது மிகவும் பாரதூரமானதும், பயங்கரவாத நடவடிக்கையாகும். உலகிலேயே பலம்வாய்ந்த அமைப்பாக கருதப்பட்ட புலிகள் இயக்கத்தை தோற்கடித்த எமது பாதுகாப்புப் படையினர் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் எமது படையினர் இவ்வாறான சம்பவங்களின்போது மிகவும் பொறுமையுடனே செயற்பட்டுள்ளனர் என்றார்.
படையினர் அமைதி காக்கின்றார்கள் என்பதற்காக சட்டத்தை கைகளில் எடுத்துக் கொள்வதானது மிகவும் மோசமான ஒரு செயலாகும். இதன் விளைவுகள் மிகவும் பாரதூரமாக அமையும்.
அவசர காலச் சட்டத்தை மேலும் நீடிப்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறானதொரு நடவடிக்கையில் ஈடுபடுவதாக சிலர் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதொன்றாகும். அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கும் இரத்துச் செய்வதற்கும் ஜனாதிபதிக்கு பூரண அதிகாரமும் தற்துணிவும் உள்ளது. பலமுள்ள ஜனாதிபதி அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் சொல்கின்றது என்பதற்காக அவசரகால சட்டத்தை இரத்துச் செய்யவும் இல்லை. நாம் எவரது அழுத்தத்திற்கும் அடிபணிய வேண்டிய தேவையில்லை. யுத்தத்தையே வெற்றிகரமாக முடித்த எமக்கு அவசரகால சட்டத்தை நீடிக்க பூதம் என்ற ஒன்று தேவையில்லை.
பன்றி இறைச்சி சாப்பிடாத பெண்ணின் இரத்தத்தை எடுத்து ஜனாதிபதிக்கு பூஜை செய்யப் போவதாக கூறுகின்றனர். ஜனாதிபதி மிகவும் ஆரோக்கியமாகவுள்ள ஜனரஞ்சக தலைவர். இந்நிலையில் பூஜையும் தேவையில்லை இரத்தமும் தேவையில்லை என்றார். அவ்வாறு இரத்தம் தேவையாயின் நான் எனது இரத்தத்தை பயிண்ட் கணக்கில் கொடுக்க தயாராக உள்ளேன். ஏனெனில் நானும் மாமிசங்கள் சாப்பிடுவதில்லை என்றார்.
அதேபோன்று மூதூரில் துட்டகைமுனு மன்னனின் கிரீடமும் வாளும் புதைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை தேடுவதாகவும் கூறுகின்றனர். துட்டகைமுனு மன்னன் மூதூருக்கோ, பொத்துவிலுக்கோ போனதாக வரலாறு கிடையாது என்றார்.
சட்டத்தை மதிக்காத அதனை கைகளில் எடுப்போருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். புத்தளத்தில் பொலிஸ் உத்தியோகத்தரை கொலை செய்தமை மிகவும் பரிதாபகரமான செயலாகும் என்றார்.
ம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் தமது பிரதேசங்களின் நிலைமைகள் தொடர்பில் விபரித்தனர்.
இரவு நேர வணக்கங்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்புச் செயலாளர் உத்தரவிட்டார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum