சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நபிமொழிகள்........ - Page 2 Khan11

நபிமொழிகள்........

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நபிமொழிகள்........ - Page 2 Empty நபிமொழிகள்........

Post by நண்பன் Sun 9 Jan 2011 - 13:45

First topic message reminder :

அல்லாஹ்வின் தூதர் உங்களிடம் கொண்டு வந்திருப்பதை
எடுத்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 59:07)

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே. அவனே அகிலத்தின்
அதிபதி. ஆகாயம், பூமி இவைகளின் நிரந்தர பாதுகாவலன். படைக்கப்பட்டவர்களi பாதுகாப்பவன்.
பராமரிப்பவன். இறக்கச் செய்பவன். இறைவனின் வழிகாட்டுதலை வழங்குவதற்காகவும் இறைச் சட்டத்தை
தாங்கள் வழிகாட்ட வந்த மக்களுக்கு எடுத்துச் சொல்லிடவும், தெளிவான
அத்தாட்சிகளைத் தந்திடவும். இறை-தூதர்களை (அலலாஹ்வின் ஆசியும், அருளும், சாந்தியும்
சமாதானமும் இறைத்தூதர்கள் அனைவர் மீதும் உண்டாவதாகுக) அனுப்பியவன். அல்லாஹ் அருளிய
கிருபைகளுக்கு அவனையே புகழ்கிறேன். அவன் தனது அருட்கொடைகளை இன்னும் அதிகப்படுத்திட
அவனிடம் இறைஞ்சுகிறேன்.

அல்லாஹ்வைத் தவித வேறு இறைவன் இலi;ல
என்று நான் சாட்சியம் கூறுகிறேன். அவன் ஒருவனே, அவனுக்கு
இணையில்லை. அவனே படைத்தவன், பரிபாலிப்பவன், பாதுகாப்பவன், போஷிப்பவன், அவன்
அருளாளன், மன்னிப்பவன். நமது தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் அந்த ஏக இறைவனின் நல்லடியாராவார்கள், அவனது
தூதராவார்கள். முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அன்புக்கும் அருளுக்கும், பாத்திரமானவர்கள்.
படைப்பினங்களிலெ;லாம் உயர்ந்தவராவார்கள். அவர்கள், வாழும் அற்புதமாகிய திருக்குர்அனால்
பெருமைப்படுத்தப்பட்டவராவார்கள். நமது தலைவர் பெருமானார் (ஸல்) அவர்கள் சுருக்கமாகவும், விளக்கமாகவும்
பேசுபவர்களாக இருந்தார்கள். (இறைவனின் ஆசியும், அருளும், சாந்தியும், சமாதானமும்
இறைவனின் தூதர் அவர்கள்மீதும், இன்னும் ஏனைய இறைத்தூதர்கள்
மீதும், இறைவனின் நல்லடியார்கள் மீதும் உண்டாவதாக!)

அலி இப்னு அபீதாலிப் (ரலி), அப்துல்லா
இப்னு மஸ்ஊது (ரலி), முஆது இப்னு ஜபல் (ரலி), அபுதர்தா (ரலி), இப்னு
உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி),
அனஸ் இப்னு மாலிக் (ரலி), அபூஹ{ரைரா
(ரலி), அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) ஆகியோரின் ஆதாரங்களோடு பின்வரும் நபிமொழி நமக்குக் கிட்டியுள்ளது.
அதாவது, பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள் :

''என்னுடைய உம்மத்துக்களுக்காக மார்க்கம் சம்பந்தப்பட்ட நாற்பது ஹதீதுகளை எவர் மனனம்
செய்துப் பாதுகாத்து வைக்கின்றாரோ அவரை அல்லாஹ் இறுதித் தீர்ப்பு நாளில் மார்க்க அறிஞர்கள்
சட்ட வல்லுநர்கள் ஆகியோர்களின் கூட்டத்தில் எழச் செய்வான்"".


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


நபிமொழிகள்........ - Page 2 Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun 9 Jan 2011 - 14:01

நபிமொழி - 24


அபூதர் அல்-கிஃபாரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
மாட்சிமை பொருந்திய இறைவனிடமிருந்து அறியப் பெற்றதாக1 பெருமானார்
(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.


என்னுடைய அடியார்களே, மக்களுக்கு
அநீதி இழைப்பதை எனக்கு நானே தடை செய்திருக்கின்றேன். (அதுபோலவே) அதை உங்களுக்கும் தடை
செய்திருக்கின்றேன். எனவே நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதி இழைக்காதீர்கள்


என்னுடைய அடியார்களே, நான்
நேர்வழி காட்டியவர்களைத் தவிர, மற்றுமுள்ள நீங்கள் எல்லோரும்
வழி தவறியவர்களாகவே இருக்கின்றீர்கள். எனவே, என்னிடம் நேர்வழிகாட்டக் கோருங்கள், நான்
நேர்வழி காட்டுவேன். என்னுடைய அடியார்களே, என்னால் உணவளிக்கப்பட்டவர்களைத்
தவிர நீங்கள் எல்லோரும் பசியால் வாடியிருப்பீர்கள். ஆகவே என்னிடம் வேண்டுங்கள். நான்
உங்களுக்கு உணவளிக்கின்றேன். என்னுடைய அடியார்களே! என்னால் ஆடை அளிக்கப்பட்டவர்களைத்
தவிர நீங்கள் எல்லோரும் ஆடையற்றவர்களே. ஆகவே என்னிடம் கேளுங்கள், நான்
உங்களுக்கு ஆடை அளிக்கின்றேன். என்னுடைய அடியார்களே! நீங்கள் இரவும் பகலும் பாவம் செய்கின்றீர்கள்.
நானே பாவங்களை மிகவும் மன்னிப்பவன். ஆகவே என்னிடம் மன்னிப்புத் தேடுங்கள், நான்
உங்களை மன்னிக்கின்றேன்.


என்னுடைய அடியார்களே! நீங்கள் எத்துணை முயன்றாலும்
எனக்குத் தீங்கு செய்கின்ற நிலையை நீங்கள் எய்திட முடியாது. இன்னும் நீங்கள் எத்துணைதான்
முயன்றாலும் எனக்கு எந்த நன்மையையும் செய்து விட முடியாது.


என்னுடைய அடியார்களே! உங்களுக்கு மன சென்றவர்களும், உங்களுக்குப்
பின்னால் வருபவர்களும் உங்களுள் மனிதர்களும், ஜின்களும் ஆகிய நீங்கள அனைவரும்
என்னை வணங்குவதில் மிகவும் இறையச்சம் மிக்கவர்களாகவும், பக்திமிக்கவர்களாகவும்
இருந்து என்னை வணங்கினாலும், அது எந்த விதத்திலும் என்னுடைய
ஆட்சியின் எல்லையை விரிவடையச் செய்வதில்லை. என்னுடைய அடியார்களே! உங்களுக்குப் பின்னால்
சென்றவர்களும் உங்களுக்குப் பின்னால் வருபவர்களும், உங்களுள்
மனிதர்களும் ஜின்களும் ஆகிய அனைவரும் எத்தனை தான் கெட்டவர்களாக இருந்து குழப்பங்களை
விளைவித்தாலும், அது என்னுடைய ஆட்சியின் எல்லையை எள்ளளவும் குறைத்து விடாது.


என்னுடைய அடியார்களே! உங்களுக்கு முன் சென்றவர்களும், உங்களுக்கு
பின்னால் வருபவர்களும் மனிதர்களும், ஜின்களும் ஒரே இடத்தில் கூடி
நின்று என்னிடத்தில் வேண்டியதெல்லாம் கேட்டகவும், அவ்வாறு
நீங்கள் கேட்பதையெல்லாம் நான் தந்தாலும் அது என்னிடமிருப்பதை, ஒரு
ஊசி முனையைக் கடலில் முக்கி எடுப்பதால் ஏற்படும் அளவிற்குக்2 கூட
குறைத்து விடுவதில்லை.


என்னுடைய அடியார்களே! உங்களுடைய செயல்களைக் கொண்டே
நான் உங்களை கணிக்கின்றேன். அவைகளை வைத்துக் கொண்டு தான் நான் உங்களுக்கு பின்னர் கூலி
தருகின்றேன். ஆகவே உங்களில் நல்லதைக் காண்பவர்கள்3 அல்லாஹ்வைப்
புகழட்டும். நல்லது அலலாதவற்றைக் காண்பவர்கள் தங்களைத் தவிர வேறு எவரையும் குறைகூற
வேண்டாம். - முஸ்லிம்


இது 'ஹதீஸ் குத்ஸி" எனப்படும்.
அதாவது இறைவன் சொன்னதாக பெருமானார் (ஸல்) அவர்கள் அறிவித்தது. ஆனால் அவை அப்படியே இறைவனின்
வாக்குகள் ஆக மாட்டா. எனவே தான் ஹதீஸ் குத்ஸி என்பது திருக்குர்ஆனின் ஒரு பகுதியாகாது.


அதாவது, அலல்hஹ்
தன் அருள் கொடைகளிலிருந்து எவ்வளவு தான் அள்ளித் தந்தாலும் அதனால் அவனுக்கு எதுவும்
குறைந்து விடுவதில்லை.


இது மறுமைப் பயன்களைக் குறிக்கும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ - Page 2 Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun 9 Jan 2011 - 14:02

நபிமொழி - 25


அபூதர் (ரலி) அவர்கள் இதையும் அறிவிக்கின்றார்கள்.


இறைவனின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலர்1 பெருமானார்
(ஸல்) அவர்களிடம் சொன்னார்கள்.


''இறைவனின் தூதரவர்களே! செல்வச் செழிப்புள்ளவர்கள் இறைவனிடம் மிகுந்த நற்கூலியை சம்பாதித்துக்
கொண்டார்கள். அவர்கள் நாங்கள் தொழுவது போலவே தொழுகிறார்கள். அவர்கள் நாங்கள் நோன்பிருப்பது
போலவே நோன்பிருக்கின்றார்கள். அவர்கள் தங்களது தேவைக்குப் போக மிகுதியாயுள்ள செல்வத்திலிருந்து
தர்மம் செய்கிறார்கள்"".



பெருமானார் (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்
உங்களுக்கும், தானதர்மங்கள் செய்திட தேவையானவைகளைத் தரவில்லையா? எனக்
கேட்டார்கள். உண்மையிலேயே ஒவ்வொரு 'தஸ்பீஹ{ம்"
ஒரு தர்மமேயாகும். ஒவ்வொரு தக்பீரும்3 ஒரு தர்மமேயாகும். ஒவ்வொரு தஹ்மீதும்4 ஒரு
தர்மமேயாகும். ஒவ்வொரு தஹ்லீலும்5 ஒரு தர்மமேயாகும். ஒரு நல்ல செயலைச் செய்யத்
தூண்டுவது ஒரு சிறந்த தர்மமேயாகும். ஒரு தீய செயலைத் தடுப்பது ஒரு தர்மமேயாகும்.


நீங்கள் உங்கள் மனைவியரோடு வீடு கூடுவதும் ஓர்
அறச் செயலே ஆகும்.


தோழர்கள், ''பெருமானார்
(ஸல்) அவர்களே, எங்களில் ஒருவர் தன் மனைவியிடம் தன் இச்சையை நிறைவு செய்து கொள்ளும்போது அதற்காகவும்
அவருக்கு நற்கூலி உண்டா"" எனக் கேட்டார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்
: 'இதில் தடுக்கப்பட்டதை செய்பவர்கள் பாவம் செய்கிறார்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீகளா? அதுபோலவே
இதில் ஆகுமான முறையில் நடந்து கொள்பவர்களுக்கு நற்கூலி உண்டு"". - முஸ்லிம்


'சஹாபி" என்ற அரபிச் சொல்லுக்கு நாயகத் தோழர்கள் என்று பொருள். பெருமானார்
(ஸல்) அவர்களைச் சந்தித்து, நம்பி முஸ்லிம்களாகவே இறந்தவர்களுக்கு
தரப்படும் சிறப்புப் பெயராகும்.


சுபுஹானல்லாஹ். அல்லாஹ் குறைகளுக்கு அப்பாற்பட்டவன்
(தூய்மையானவன்) என்று சொல்வதாகும்.


அல்லாஹ{அக்பர், இறைவன்
மாபெரியோன் என்று சொல்வதாகும்


அல்ஹம்துலில்லாஹ், எல்லாப்
புகழும் இறைவனுக்கே என்று சொல்வதாகும்.


லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன்
இல்லை) என்று கூறுவதாகும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ - Page 2 Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun 9 Jan 2011 - 14:02

நபிமொழி - 26


அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் பெருமானார்
(ஸல்) அவர்கள் அருளியதாக அறிவிக்கின்றார்கள்.


மனிதர்களின் ஒவ்வொரு மூட்டும் ஒவ்வொரு நாளும்
ஏதாவது ஒரு தர்மத்தை செய்தாக வேண்டும்.


இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது
ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும்.
அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை
பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு
தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும்
ஒரு தர்மமாகும். - புகாரி,
முஸ்லிம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ - Page 2 Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun 9 Jan 2011 - 14:02

நபிமொழி - 27


அன் நவ்வாஸ் இப்னு சம்ஆன் (ரலி) அவர்கள் பெருமானார்
(ஸல்) அவர்கள் மொழிந்ததாக அறிவிக்கின்றார்கள் :


நேர்மை ஒரு சிறந்த ஒழுக்கமாகும். இன்ன செயலைச்
செய்யலாமா, கூடாதா என்று உங்களை அலைக்கழிப்பதும், எதனைச் செய்யும் போது மக்கள்
அதனைத் தெரிந்து கொள்ளக் கூடாது என்று நீங்கள் நினைப்பீர்களோ அதுவும் தவறான செயல்களாகும்.
(இதை அறிவித்தவர் : முஸ்லிம்). வாபிஸா இப்னு மஃபது (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்



நான் பெருமானார் (ஸல்) அவர்களின் சமூகம் சென்றேன்.
அவர்கள் என்னிடம், ''நேர்மை என்பது என்ன என்று கேட்க வந்திருக்கின்றீரா?"" என்றார்கள். நான் ஆம் என்றேன். பெருமானார் (ஸல்) அவர்கள், உம்முடைய
இதயத்தை கேட்டுப் பாரும் என்றார்கள். ''நேர்மையான செயல் என்பது அதனைப்
பற்றி நமது ஆன்மா அமைதி பெறுவதாகும். அதனைக் குறித்து நமது உள்ளம் திருப்தியானது தான்
என்று பிறர் தீர்ப்பளித்து விட்ட பிறகும் கூட உங்கள் ஆன்மாவை அலைக்கழிப்பதும் உள்ளத்தில்
ஊசலாடுவதுமான ஒன்றாகும்.1""
இந்த ஹதீஸ் சிறப்பான ஒன்று. இமாம் அஹ்மது இப்னு
ஹம்பல், இமாம் தாரிமீ ஆகியோரின் தொகுப்புகளிலிருந்து மிகச் சரியான ஆதாரங்களைக் கொண்டதெனக்
கண்டு எடுக்கப்பட்டதாகும் இது.


1.இந்த இரு நபிமொழிகளையும் ஒன்றாகத் தந்திருப்பதன் காரணம், இரண்டு
நபிமொழிகளின் கருத்துக்களும், வார்த்தை அமைப்புகளும் ஒன்றாக
இருப்பதால் என்று கருதலாம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ - Page 2 Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun 9 Jan 2011 - 14:03

நபிமொழி - 28


அபூ நஜீஹ் இர்பாள் இப்னு சாரியா (ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள் :


இறைவனின் தூதர் பெருமானார் (ஸல்) அவர்கள் பிரசங்கமொன்றை
நிகழ்த்தினார்கள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த எங்களது இதயங்கள் அச்சத்தினால் நிரம்பின.
எங்களது கண்களில் கண்ணீர் ததும்பியது. நாங்கள், ''இறைவனின்
தூதரவர்களே, இஃது நீங்கள் செய்யும் இறுதி பிரசங்கமாக அல்லவா தென்படுகின்றது. ஆகவே எங்களுக்கு
உபதேசம் செய்யுங்கள்"" என்று கூறினோம். பெருமனாhர்
(ஸல்) அவர்கள் பின்வருமாறு பகர்ந்தார்கள் :


நான் உங்களுக்கு கூறுகிறேன் : அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
ஒரு அடிமையே உங்களது தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவருக்கு முழுமையாகக் கட்டுப்படுங்கள்.
நிச்சயமாக உங்களில் அதிக நாட்கள் வாழ்பவர்கள் பெரும் வேறுபாடுகளைச் சந்திப்பீர்கள்.
ஆகவே நீங்கள் என்னுடைய நடைமுறைகளையே பின்பற்றுங்கள். அதுபோலவே நேர்வழிகாட்டப்பட்ட
(ராஷிதீன்)1 கலீபாக்களின் நடைமுறைகளையும் பின்பற்றுங்கள். உறுதியுடன் இவற்றில் நிலைத்திருங்கள்.


மார்க்கத்தில் புதிதாக புகுத்தப்படுபவைகள் குறித்து
கவனமாக இருங்கள். மார்க்கத்தில் புதிதாக புகுத்தப்பட்டவைகள் அனைத்தும் நூதன கிரியைகளாகும்.
ஒவ்வொரு நூதன கிரியையும் வழிகேட்டில் ஆழ்த்துவதாகும். வழிகேட்டில் விழுவது நரக நெருப்பில்
தள்ளும். - அபூதாவூத்,
அத்-திர்மிதி


1. ராஷிதீன் கலீபாக்கள் என்பது முதல் நான்கு கலீபாக்களை (இஸ்லாமிய ஆட்சியாளர்களையும்)
குறிக்கும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ - Page 2 Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun 9 Jan 2011 - 14:03

நபிமொழி - 29


முஆது இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்
:


அல்லாஹ்வின் தூதரவர்களே, என்னை
நரக நெருப்பலிருந்து காப்பாற்றி, சுவர்க்கத்தின் பால் இட்டுச்
செல்லும் ஒரு செயல்பற்றி சொல்லித் தாருங்கள் என நான் கேட்டேன். பெருமானார் (ஸல்) அவர்கள்
பின்வருமாறு பதில் தந்தார்கள். நீங்கள் மிகவும் பெரிய விஷயம் ஒன்று குறித்து வினவி
இருக்கின்றீர்கள். இருந்தாலும் அது அல்லாஹ் யாருக்கு எளிதாக ஆக்கி வைத்திருக்கின்றானோ
அவர்களுக்கு மிகவும் எளியதாகும். நீங்கள் அல்லாஹ்வுக்கே அடிமை செய்யுங்கள். அவனுக்கு
இணை எதுவும் வைக்கக் கூடாது. கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நீங்கள் நிலைநாட்ட வேண்டும்.
நீங்கள் 'ஜகாத்" கொடுக்க வேண்டும். ரமளான் மாதத்தில் நோன்பிருக்க வேண்டும். நீங்கள்
இறைஇல்லத்திற்கு புனித பயணம் மேற்கொள்ள வேண்டும். (ஹஜ் செய்ய வேண்டும்).


பின்னர் பெருமானார் (ஸல்) அவர்கள் நான் உங்களுக்கு
நன்மையின் வாசல்களை காண்பிக்க வேண்டாமா? என வினவி விட்டுச் சொன்னார்கள்.
நோன்பு ஒரு கேடயம், நீர் நெருப்பை அணைப்பது போல்; தர்மம் பாவங்களை அழித்தொழிக்கின்றது.
அதுபோலவே இரவின் ஆழத்தில் ஒருரின் தொழுகையும், பின்னர்
பெருமானார் (ஸல்) அவர்கள் பின்வரும் இறைவசனத்தை ஓதினார்கள்.


''அவர்கள் (இரவில்) படுக்கையிலிருந்து தங்கள் விலாக்களை உயர்த்தி, (எழுந்து
அப்புறப்பட்டு) தங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைத்தும், பயந்தும், (அவனைப்)
பிரார்த்தனை செய்வாhகள். நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்த அவர்கள் (தானமாகச) செலவு செய்வார்கள்"".
அவர்கள் செய்த (நற்)காரியங்களுக்குக் கூலியாக, அவர்களுக்காக
(ச் சித்தப்படுத்தி) மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிரக் கூடிய (சன்மானத்)தை
எவராலும் அறிந்து கொள்ள முடியாது"" (அவ்வளவு மேலான சன்மானங்கள் அவர்களுக்காகச்
சித்தப்படுத்தப்பட்டுள்ளன.) அல்குர்ஆன் (32:16-17)


பின் பெருமானார் (ஸல்) அவர்கள் நான் உங்களுக்கு
இந்த விஷயத்தின் உச்சம் பற்றியும், தூண் பற்றியும், தலையாயது
பற்றியும் சொல்ல வேண்டாமா?""
என்றார்கள். ''இறை
தூதரவர்களே, ஆம்! சொல்லுங்கள் என்றேன். பெருமானார் (ஸல்) அவர்கள், இந்த
விஷயத்தின் உச்சி இஸ்லாம்,
தூண் என்பது தொழுகை, அதன்
தலையாயது ஜிஹாத்1 ஆகும் என்றார்கள். பிறகு அவர்கள், இவைகள் எல்லாவற்றையம் கட்டுப்படுத்துவது
குறித்து நான் சொல்ல வேண்டாமா? என வினவினார்கள். நான் 'இறைவனின்
தூதரவர்களே, ஆமாம் சொல்லுங்கள்"" என்றேன். பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களது நாவை
கரத்தால் பற்றிக் கொண்டு,
''இதைக் கட்டுப்படுத்துங்கள்"" என்று
சொன்னார்கள்.


இறைவனின் தூதரவர்களே, நாம்
பேசுவது நமக்கு எதிராகத் திருப்பப்படுமா? என்று நான் கேட்டேன். அதற்கு
பெருமானார் (ஸல்) அவர்கள்,
''உம் தாய் உம்மை காணடித்தார்.2 மனிதர்கள்
தங்கள் நாவால் அறுவடை செய்தவைகளைத் தவிர அவர்களை நரக நெருப்பில் முகங்குப்புற தள்ளக்
கூடியது வெறெதுவும் உண்டா?""
என்று கேட்டார்கள். - திர்மிதி


1.ஜிஹாத் : ஜிஹாத் என்பதற்கு அறப்போர் அல்லது புனிதப்போர் எனப் பொதுவாக பொருள் கொள்ளப்படுகின்றது.
அதற்கு இன்னும் விரிவான பொருள்கள் உண்டு. இதில் இஸ்லாத்தை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும்
எல்லா முயற்சிகளும் அடங்கும். ஆகவே தான் 'ஜிஹாத்" என்ற அரபிச் சொல்
அப்படியே இங்கு கையாளப்பட்டிருக்கின்றது.


2. ஃதகிலத்க உம்முக. ''தவறான பயனற்ற பேச்சைப் பேச வேண்டாம்!"" என்று கூறுவதற்கு அரபி மொழியில்
இச் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ - Page 2 Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun 9 Jan 2011 - 14:04

நபிமொழி - 30


அபூதஃலபா அல் குஷனீ ஜுர்தூம் இ ப்னு நாஷிர் (ரலி)
அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் மொழிந்ததாக அறிவிக்கின்றார்கள்.


எல்லாம் வல்ல அல்லாஹ{த்தஆலா
மார்க்கக் கடமைகளை விதித்திருக்கின்றான். ஆகவே அவைகளை புறக்கணிக்காதீர்கள். அவன் நமக்கு
எல்லைகளை நிர்ணயித்திருக்கின்றான். ஆகவே அவைகளைக் கடந்து செல்லாதீர்கள். அவன் நமக்கு
சிலவற்றை தடை செய்திருக்கின்றான். ஆகவே அவற்றை மீறாதீர்கள். சில விஷயங்களில் அவன் மௌனமாக
இருக்கின்றான். இது அவன் மறந்து விட்டதனால் அல்ல, அவன்
நம் பால் கொண்ட அன்பினால். ஆகவே அவைகளைக் குறித்து தர்க்கத்தில் ஈடுபட வேண்டாம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ - Page 2 Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun 9 Jan 2011 - 14:05

நபிமொழி - 31


அபுல் அப்பாஸ் ஸஹ்லு இப்னு ஸஃதுஸ் ஸாஇதீ (ரலி)
அவர்கள் சொல்கிறார்கள்.


இறைவனின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் ஒருவர் வந்து
''இறைவனின் தூதரவர்களே,
நான் எதைச் செய்தால் அல்லாஹ்வும், மனிதர்களும்
என்னை நேசிப்பார்கள் என்பதை எனக்குப் போதியுங்கள்"" என்று கூறினார். பெருமானார்
(ஸல்) அவர்கள் பின்வருமாறு பதில் தந்தார்கள் : இந்த உலகத்தை (உலக ஆசைகளை) விட்டு விடுங்கள்.
அல்லாஹ் உங்களை நேசிப்பான். மக்கள் எதன்மீது சொந்தம் கொண்டாடுகின்றார்களோ அதனை விட்டு
விடுங்கள். மக்கள் உங்களை நேசிப்பார்கள்.


இப்னு மாஜா அவர்களாலும், இன்னும்
பல நபிமொழித் தொகுப்பாளர்களாலும் தொகுக்கப்பட்ட ஒரு சிறப்பான நபிமொழி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ - Page 2 Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun 9 Jan 2011 - 14:05

நபிமொழி – 32
பெருமானார்(ஸல்) அவர்கள் நவின்றதாக அபூஸஈத் ஸஃது
இப்னு மாலிக் சினான் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :


''தீங்கிழைக்கவும் கூடாது. தீங்கிற்குப் பழி வாங்கவும் கூடாது"".


இந்த நபிமொழி சிறப்பான நபிமொழிகளின் வரிசையிலே
இடம் பெறுகின்றது. இப்னு மாஜா, அத்-தாரகுத்னீ இன்னும் பலராலும்
தொகுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நபிமொழி 'முஸ்னத்"1 ஆன
நபிமொழிகளின் வரிசையில் இடம் பெறுகின்றது. இது மாலிக் அவர்களின் ''அல்முவத்தா""3வில்
''முர்ஸல்"" ஆன நபிமொழியாக இடம் பெற்றுள்ளது. பெருமானார் (ஸல்) அவர்கள்
சொன்னதாக, அம்ரு இப்னு யஹ்யா,
தம் தந்தையார் சொன்னதாக தொடரான ஆதாரங்களுடன் தரப்பட்டிருக்கிறது.
இங்கு அபூ ஸஈதின், பெயர் விடப்பட்டிருப்பினம், ஒருவருக்கொருவர் ஆதாரமாக உள்ள
வேறு பெயர்கள் தொடராக உள்ளன.


முஸ்னத் என்பது, கூறுபவரிலிருந்து
பெருமானார் வரை உள்ள பெயர்கள் தொடராக உள்ள நபிமொழியாகம்.


இமாம் மாலிக் இப்னு அனஸ் அவர்களின் பிரசித்தி
பெற்ற நபிமொழித் தொகுப்பாகும்.


''முர்ஸல்"" பெருமானாரின் தோழர்களுக்கு அடுத்த தலைமுறையினராக ''தாபியீன்""
களுடன் ஆதாரத் தொடர் முடிவது. வேறு தொடர் கொண்ட முஸ்னத் ஹதீது ஒன்றினால் உறுதிப்படுத்தப்பட்டால்
அது சரியானதென்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ - Page 2 Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun 9 Jan 2011 - 14:06

நபிமொழி - 33


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்)
அவர்கள் மொழிந்ததாகக் கூறினார்கள்.


மனிதர்கள், தம்முடையவை
என்று உரிமை கொண்டாடுவதையெல்லாம் கொடுப்பதாக இருந்தால் அவர்கள் அடுத்தவர்களின் செல்வத்தையும்
உயிரையும் (இரத்தத்தையும்) கோருவார்கள். உரிமையை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு உரிமை
கோருபவர் மீதாகும். அதனை மறுப்பவர் மீது சத்தியப் பிரமாணம் செய்வது கடமையாகும். - அல்
பைஹக்கீ, புகாரீ, முஸ்லிம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ - Page 2 Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun 9 Jan 2011 - 14:06

நபிமொழி - 34


அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் பெருமானார்
(ஸல்) அவர்கள் அருளியதாக அறிவிக்கின்றார்கள் :


உங்களில் எவர் ஒரு தீய செயலைக் காண்கிறாரோ அவர்
அததை; தனது கரங்களால் தடுக்கட்டும். அவரால் அது முடியவில்லையென்றால், அதை
அவர் தனது நாவால் தடுக்கட்டும். அதையும் அவரால் செய்ய முடியவில்லையென்றால் அதை அவர்
தனது மனதால் வெறுக்கட்டும். இது நம்பிக்கையின் (ஈமானின்) மிகவும் பலவீனமாக நிலையாகும்.
- முஸ்லிம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ - Page 2 Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun 9 Jan 2011 - 14:07

நபிமொழி - 35


பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹ{ரைரா
(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :


நீங்கள் ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்ள வேண்டாம்.
ஒருவருக்கொருவர் போட்டியாக விலைகளை உயர்த்திக் கேட்க வேண்டாம். ஒருவரையொருவர் வெறுக்க
வேண்டாம். ஒருவரின் தொழிலைக் கெடுப்பதற்காக விலைகளைக் குறைக்கவும் வேண்டாம். அல்லாஹ்வின்
அடியார்களே, நீங்கள் சகோதரர்களாகி விடுங்கள். ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரர் ஆவார்.
ஆகவே ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு அநீதி இழைக்க மாட்டார். ஒரு முஸ்லிம் மற்றொரு
முஸ்லிமைக் கைவிட மாட்டார். ஒருவர் மற்றவரிடம் பொய்யுரைக்க மாட்டார். ஒருவரை ஒருவர்
தாழ்வுபடுத்த மாட்டார். இறையச்சம் இங்கே உள்ளது என்று மூன்று முறை தங்கள் நெஞ்சைத்
தொட்டுக் காட்டினார்கள்.


ஒரு முஸ்லிம் தன்னுடைய சகோதர முஸ்லிமை இழிவாகக்
கருதி நடத்துவது தீய செயலாகும். ஒரு முஸ்லிமின் மீது சகோதர முஸ்லிமின் இரத்தமும், உடைமையும், கண்ணியமும்
ஹராம் ஆக்கப்பட்டுள்ளன. (அவற்றிற்கு ஊறுவிளைவிக்கக் கூடிய எச்செயலும் விலக்கப்பட்டதாகும்).
- முஸ்லிம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ - Page 2 Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun 9 Jan 2011 - 14:07

நபிமொழி - 36


அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் பெருமானார்
(ஸல்) அவர்கள் அருளியதாக அறிவிக்கின்றார்கள்.


இவ்வுலகில் உங்களில் ஒருவர் சகோதர நம்பிக்கையாளரின்
துன்பமொன்றை நீக்குவாரேயானால், அல்லாஹ் தீர்ப்பு நாளில் அவருடைய
துன்பமொன்றை நீக்குவான். உங்களில் ஒருவர் தேவையுள்ள ஒருவரின் தேவைகளை நிறைவு செய்வாரேயானால்
அல்லாஹ் அவருடைய துன்பங்களை இம்மையிலும் மறுமையிலும் நிவர்த்தி செய்வான். ஒரு முஸ்லிமை
பாதுகாப்பவரை அல்லாஹ் இம்மையிலும், மறுமையிலும் பாதுகாக்கின்றான்.
அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவர் தன் சகோதரனான அல்லாஹ்வின் அடியாருக்கு உதவி செய்து
கொண்டிருக்கும் வரை அல்லாஹ் அந்த அடியாருக்கும் உதவி செய்து கொண்டே இருப்பான். இவ்வுலகில்
அறிவைத் தேடும் வழிகளில் ஈடுபட்டிருக்கும் ஒருவருக்கு இறைவன் சுவர்க்கத்திற்கான வழியை
எளிதாக்கி வைப்பான். இறை இல்லத்தில் மக்கள் ஒன்று கூடி இறைமறையை ஓதவும் ஒருவருக்கொருவர்
கற்றுக் கொடுக்கவும் செய்தால், அவர்கள் மீது அமைதி இறங்கும், இறையருள்
சூழும், வானவர்கள் நெருங்குவார்கள். அவர்களைக் குறித்து அல்லாஹ் அவனருகில் இருப்போரிடம்
குறிப்பிட்டுக் கூறுவான். நற்செயல்கள் புரிவதில் பின்னடைபவர் அவர் மூதாதையரின் சிறப்பு
பெருமை காரணமாக விரைந்து முன்னேறி விட மாட்டார். - முஸ்லிம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ - Page 2 Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun 9 Jan 2011 - 14:07

நபிமொழி - 37


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்)
அவர்கள் இறைவனிடமிருந்து பெற்ற அறிவிப்புக்களில் ஒன்று என (பெருமானார் (ஸல்) அவர்கள்
நவின்றதாக), அறிவிக்கின்றார்கள்.


அல்லாஹ் (ஒருவர் செய்யும்) நல்ல செயல்களையும், தீய
செயல்களையும் எழுதிக் கொள்கிறான். அதற்கு மேல் அவன் அதனை விளக்கியும் இருக்கிறான்.


ஒருவர் நல்ல செயலை செய்ய நினைத்தார், ஆனால்
அவர் அதை செய்து முடிக்கவில்லை. இருந்தாலும் இறைவன் அதை ஒரு முழுமையான நல்ல செயலாக
எழுதிக் கொள்கின்றான். ஒருவர் ஒருவர் ஒரு நல்ல செயலைச் செய்ய நினைத் அதைச் செய்தும்
முடிப்பாரேயானால் அல்லாஹ் அதை பத்து முதல் எழுநூறு தடவை அல்லது அதற்கும் பன்மடங்கு
அதிகமானதாக குறித்துக் கொள்கிறான்.



ஒருவர் ஒருதீய செயலைச் செய்ய நினைத்தார். ஆனால்
அதை அவர் செய்யவில்லையென்றால் அரல்லாஹ் அதை ஒரு நல்ல செயலாகவே எழுதிக் கொள்கின்றான்.


ஒருவர் ஒரு தீய செயலைச் செய்ய நினைத்த அதை செய்தும்
முடித்தால் அல்லாஹ் அதை ஒரு திய செயலாக மட்டுமே எழுதிக் கொள்கின்றான். - புகாரி, முஸ்லிம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ - Page 2 Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun 9 Jan 2011 - 14:08

நபிமொழி - 38
அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் பெருமானார்
(ஸல்) அவர்கள் அருளியதாக அறிவிக்கின்றார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் சொல்கின்றான். என்னுடைய
தோழன் ஒருவனோடு எவனொருவன் பகைமை பாராட்டுகின்றானோ அவனோடு நான் பகைமையாகவே இருப்பேன்.
என்னுடைய அடியான் நான் அவன் மீது கடமையாக்கி இருக்கின்ற கடமைகளை நிறைவேற்றுவதன் மூலமாகவே
அல்லாமல் வேறெதையும் கொண்டு என்னை நெருங்க முடியாது. இன்னும் கட்டாயமில்லாத அதிகப்படியான
(நஃப்லு) செயல்களைச் செய்வதன் மூலம் நான் அவனை உவக்கும் வரை அவன் என்னை நெருங்கிக்கொண்டே இருப்பான்.
அவன் மீது நான் அன்பு கொண்டு விட்டால், நான்
அவன் எதைக் கொண்டு கேட்கிறானோ அதுவாக ஆகிவிடுகின்றேன். அவன் எதைக் கொண்டு பார்க்கின்றானோ
அதுவான நான் ஆகிவிடுகின்றேன். அவன் எதைக் கொண்டு தட்டுகின்றானோ அந்தக் கையாக நான் ஆகிவிடுகின்றேன்.
அவன் அதைக் கொண்டு நடக்கின்றானோ அந்தக் கால்களாக நான் ஆகிவிடுகின்றேன். அவன் என்னிடம்
எதையாவது கேட்பானோயானால் அதனை அவனுக்க நிச்சயமாகக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் அடைக்கலம்
தேடினால் அதை நான் அவனுக்கு நிச்சயமாகக் கொடுக்கின்றேன். - அல் புகாரி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ - Page 2 Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun 9 Jan 2011 - 14:09

நபிமொழி - 39


பெருமானார் (ஸல்) அவர்கள் அருளியதாக இப்னு அப்பாஸ்
(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :


என்னைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு அல்லாஹ் அவர்களது
தவறுகளையும், மறதியினால், கட்டாய்தினாலும் அவர்கள் செய்பவற்றையும் எனக்காக மன்னித்து விட்டான். - இப்னு மாஜா, அல்
பைஹக்கீ, இன்னும் பலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ - Page 2 Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun 9 Jan 2011 - 14:10

நபிமொழி - 40
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்
இறைவனின் தூதர் பெருமானார் (ஸல்) அவர்கள் என்
தோளைப் பற்றிக் கொண்டவர்களாக சொன்னார்கள் :
இந்த உலகில் ஒரு அன்னியனைப் போல அல்லது ஒரு வழிப்போக்கனைப்
போல இருப்பீராக!


இப்னு உமர் (ரலி) அவர்கள் பின்வருமாறு அடிக்கடி
சொல்வார்கள் :
மாலை நேரமாகும் போது அடுத்த நாள் காலை வரை இறவாமல்
இருப்போம் என எதிர்பார்க்க வேண்டாம். காலையில், மாலை
வரையில் உயிருடன் இருப்போம் என எதிர்பார்க்க வேண்டாம். நீங்கள் நோயுற்று இருக்கும்
போ இழப்பதை (மார்க்கக் கடமைகளில் நிறைவேற்ற முடியாமல் போகின்றவைகளை) நீங்கள் ஆரோக்கியத்துடன்
இருக்கும் போதும் உங்களின் இறப்புக்குப் பின் செய்ய முடியாமல் போகக் கூடியவைகளை நீங்கள்
உயிருரோடு இருக்கும் போது ஈடு செய்து கொள்ளுங்கள். - அல் புகாரீ


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ - Page 2 Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun 9 Jan 2011 - 14:10

நபிமொழி - 41
அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்களின் மகனார் அபூ
முஹம்மது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் அருளியதாக அறிவிக்கின்றார்கள்
நான் கொண்டு வந்ததை (இறை செய்தியை முழுமையாக)ப்
பின்பற்ற வேண்டும் என்ற பேராவல் உங்களில் ஒவ்வொருவருக்கும் ஏற்படாத வரை அவர் உண்மையான
நம்பிக்கையாளராக மாட்டார்.
இந்த நபிமொழி கிதாபுல்-ஹஜ்ஜா1 என்ற
நூலிலிருந்து எடுத்தாளப்பட்டது. இதற்கு ஆதாரப்பூர்வமான தொடர்ச்சி உள்ளது.
1. அபுல் காசிம் இஸ்மாயீல் இப்னு முஹம்மத் அல்-அஸ்ஃபஹானி அவர்கள் (இவர் ஹிட535 ல்
இறந்தார்) தொகுத்த நூலின் பெயராகும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ - Page 2 Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun 9 Jan 2011 - 14:10

நபிமொழி - 42
பெருமானார் (ஸல்) அவர்கள் அருளியதாக அனஸ் (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
எல்லாம் வல்ல இறைவன் சொல்கிறான் : ''ஆதமின்
மகனே, நீ எதுவரை என்னிடம் கோரிக் கொண்டு, என்மீது நம்பிக்கை வைத்துக்கொண்டு இருப்பாயோ அதுவரை நீ எந்த நிலையில் இருப்பினும் நான் உன்னை மன்னித்துக் கொண்டிருப்பேன்.
அதை நான் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. ஆதமின் மகனே, உன்னுடைய
பாவங்கள் வானத்தை எட்டும் அளவிற்கு உயர்ந்து விட்டாலும் பின்னரும், நீ
என்னிடம் மீண்டு மன்னிப்புக் கோருவாயானால், நான் உன்னை மன்னிக்கவே செய்வேன்.
ஆதமின் மகனே, நீ பூமியை நிறைத்திடும் அளவிற்கு பாவங்கள் செய்து விட்ட பிறகும் கூட, எனக்கு
இணை வைக்காத நிலையில் என்னிடம் மீளுவாயானால் அப்போதும் உன்னுடைய அந்த அளவிற்கான பாவங்கள்
அனைத்தையும் மன்னிக்கவே செய்வேன். - அத் திர்மிதி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ - Page 2 Empty Re: நபிமொழிகள்........

Post by அர்சாத் Sun 9 Jan 2011 - 16:38

நல்ல பகிர்வுக்கு நன்றி........ நண்பன் நபிமொழிகள்........ - Page 2 331844
அர்சாத்
அர்சாத்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

நபிமொழிகள்........ - Page 2 Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun 9 Jan 2011 - 19:14

அர்சாத் wrote:நல்ல பகிர்வுக்கு நன்றி........ நண்பன் நபிமொழிகள்........ - Page 2 331844
நபிமொழிகள்........ - Page 2 930799 நபிமொழிகள்........ - Page 2 930799 நபிமொழிகள்........ - Page 2 105779


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ - Page 2 Empty Re: நபிமொழிகள்........

Post by இன்பத் அஹ்மத் Sun 9 Jan 2011 - 19:22

நல்ல பகிர்வுக்கு நன்றி........ நண்பன்
:];: :];: :];: :];: :];:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

நபிமொழிகள்........ - Page 2 Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun 9 Jan 2011 - 23:19

அன்பு wrote:நல்ல பகிர்வுக்கு நன்றி........ நண்பன்
:];: :];: :];: :];: :];:
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ - Page 2 Empty Re: நபிமொழிகள்........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum