சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நுரையீரல் Khan11

நுரையீரல்

2 posters

Go down

நுரையீரல் Empty நுரையீரல்

Post by *சம்ஸ் Thu 1 Sep 2011 - 18:44

நுரையீரல் Bronchiole



மனித உடலின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு உறுப்பும் இன்றியமையாததாகும்.
இதில் உடலுக்கு மெயின் சுவிட்சு போல் செயல்பட்டு, காற்றை உள்வாங்கி,
வெளிவிட்டு உடலுக்கு உயிர் சக்தியைத் தரும் மோட்டார்தான் நுரையீரல்.
வாயுப் பரிமாற்றம் (Exchange of gas) நுரையீரலின் முக்கிய பணியாகும்.
மேலும் சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்குவதற்கும், வேறு சில வேதிப்
பொருட்களை செயலிழக்கச் செய்வதும் இதன் மற்ற பணிகளாகும். நுரையீரலானது
உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்ஸிஜனை உள் எடுத்துக் கொள்வதற்கும்
கார்பன்-டை- ஆக்ஸைடை வெளியேற்றுவதற்கும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது.
ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு மனிதன் 22,000 முறை மூச்சு விடுகிறான்.
கிட்டத்தட்ட 255 கன மீட்டர் (9000 கன அடி) காற்றை உள்ளிழுத்து
வெளிவிடுகிறான்.

நுரையீரலின் செயல்பாடு

நுரையீரல் எவ்வாறு தன்னுடைய பணியை திறம்பட செய்கிறது என்பதைப் பார்ப்போம்.

மூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும் காற்று மூச்சுக் குழாய் (Trachea)
வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. மூச்சுக் குழாய் மார்புப் பகுதியில்
இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரலுக்குச் செல்கிறது. நுரையிரலுக்குள்
நுழைந்தவுடன் மூச்சுக்குழல் ஒவ்வொன்றிலிருந்தும் கிளைகள் பிரியும்.
பின்னர் அவற்றிலிருந்து இன்னும் சிறு கிளைகள் என நிறைய பிரிவுகள் ஒரு
மரத்தின் பெரிய கிளையிலிருந்து பரந்து பிரிந்து சின்னச்சின்ன தளிர்கள்
வருவதுபோல் பிரிகின்றன. அதனாலேயே இதனை மூச்சுமரம் (Respiratory tree)
என்று அழைக்கின்றோம். முதல் நிலை மூச்சுக் குழல் (Primary bronchi),
இரண்டாம் நிலை மூச்சுக் குழல், மூன்றாம் நிலை மூச்சுக்குழல், மூச்சுக்
குறுங்குழல் (bronchiole) என்று படிப்படியாகப் பிரிந்து கடைசியாக சின்னச்
சின்ன பலூன்கள் மாதிரி தோன்றும் குட்டிக்குட்டி அறைகளுக்குள் இந்த
குழல்கள் நீட்டிக் கொண்டிருக்கும். இவற்றை காற்று நுண்ணறைகள் (Alveoli)
என்று அழைக்கிறோம். நாம் இழுக்கும் மூச்சுக்காற்று மூச்சு மரம் வழியாக
காற்று நுண்ணறைகளுக்குள் வந்துவிடும்.

உடலில் பல பாகங்களிலும் இருந்து பயன்படுத்தப்பட்ட ரத்தம் இதயத்தின் வலது
வெண்டிரிக்கலை அடையும். அங்கிருந்து நுரையீரல், தமணி மூலம்
நுரையீரலுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. நுரையீரல் தமணியும், வலது கிளை,
இடது கிளை, என்று இரண்டாகப் பிரிந்து இரண்டு நுரையீரலுக்கும் செல்கிறது.
இதுவும் பலமுறை கிளைகளாகப் பிரியும். இப்படிப் பிரியும்போது காற்று
நுண்ணறைகளின் பக்கத்தில் தமணிகளின் மிக மிகச் சிறிய கிளைகள்
அமைந்திருக்கும். இந்தச் சின்ன தமணிக் கிளைகள்தான் தந்துகிகள்
(Capillaries) எனப்படுகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நுரையீரல் Empty Re: நுரையீரல்

Post by *சம்ஸ் Thu 1 Sep 2011 - 18:45

காற்று நுண்ணறை பக்கத்திலேயே தந்துகிகள் இரண்டின் சுவர்களும் மிக மிக
நுண்ணியவையாக இருக்கும். அடுத்தடுத்து நுண்ணறைக்குள் காற்று
நிறைந்திருக்கும் தந்துகிக்குள் ரத்தம் நிறைந்திருக்கும்.

வெளியிலிருந்து மூச்சுக்குழல் மூலம் உள்ளிழுக்கப்பட்ட காற்றில் நிறைய
ஆக்ஸிஜன் இருக்கும். எனவே, நுண்ணறைக்குள்ளும் அதே அளவு ஆக்ஸிஜன்
இருக்கும். தந்துகியில் உள்ள ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவு குறைவு. கார்பன்டை
ஆக்ஸைடின் அளவு அதிகம். உடலுக்கு வேண்டாத உடலிலிருந்து வெளியேற்றப்பட
வேண்டிய மற்ற சில பொருட்களும் தந்துகியில் உண்டு.

இந்த நிலையில் நுண்ணறை – தந்துகி சுவர்களின் வழியாக ஒரு பரிமாற்றம்
நடக்கிறது. நுண்ணறையில் அடர்த்தியாக இருக்கும் ஆக்ஸிஜன் தந்துகிக்குள்
பாயும். தந்துகியில் அடர்த்தியாக இருக்கும் கார்பன்டை ஆக்ø-ஸடு
நுண்ணறைக்குள் பாயும். இதுதான் வாயுப் பரிமாற்றம் (Exchange & gases).
இதைத்தான் ரத்த சுத்திகரிப்பு என்று அழைக்கிறோம்.

ஆக்ஸிஜன் ஊட்டப்பட்ட ரத்தம் நுரையீரலிலிருந்து சிரைகள் மூலமாக இதயத்தின்
இடது வெண்டிரிக்கிளுக்குள் எடுத்துச் செல்லப் படுகிறது. அங்கிருந்து
மீண்டும் உடலின் பல பாகங்களுக்கு தமனிகள் மூலம் இந்த சுத்த ரத்தம்
எடுத்துச் செல்லப்படுகிறது.

நுரையீரலைச் சுற்றி இரண்டு உறைகள் உள்ளன.

1. வெளிப்படலம் (Outer pleura)

2. உள்படலம் (Inner pleura)

இந்த இரண்டு படலங்களுக்கும் இடையே ஒரு இடம் உண்டு. அதற்கு ஃப்ளூரல்
இடம் என்று பெயர். இதனுள் மிகச் சிறிய அளவு ஃப்ளூரல் திரவம் இருக்கும்.
இந்தத் திரவம்தான் சுவாசத்தின் போது நுரையீரல்களின் அசைவினால் உராய்வு
ஏற்படாமல் தடுக்கிறது. சுவாசத்தைக் கட்டுப்படுத்தி சீராக வைப்பதே
முகுளப்பகுதி. அதாவது ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 18 முதல் 20 சுவாசம் என
சீராக வைப்பது மூளையில் உள்ள முகுளத்தின் வேலை.

மொத்த நுரையீரலின் கொள்ளளவு சராசரியாக 6 லிட்டர் தான். மிகவும்
இழுத்து மூச்சுவிடும் போது காற்றின் அளவு 5 லிட்டர்தான். எப்போதும்
நுரையீரலுக்குள்ளே இருந்துகெண்டிருக்கும் காற்றின் அளவு 1 லிட்டர்.

பொதுவாக நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற நீர்மம் சில தூசிகளை அகற்றி
வெளியேற்றும். இதுபோல் மூச்சுக் குழாய்களில் மேல் சிலியா என்ற பொருள்
இருக்கும். இதுவும் மிக நுண்ணிய தூசியைக் கூட அகற்றிவிடும்.

இது மூச்சுக் குழாய்களில் வரும் தூசியை மேல்நோக்கி திருப்பி
அனுப்பிவிடும். நாம் அறியாமலே சில சமயங்களில் அதை விழுங்கிவிடுவோம்.
உடல் நலம் சரியில்லாமல் போனால் மட்டுமே அவை சளியாக மூக்கின் வழியாக
வெளியேறும். இதையும் தாண்டி ஏதேனும் தூசு உள்ளே நுழைந்தால் இருமல்,
தும்மல் முதலியவற்றால் வெளியேற்றப் பட்டுவிடும்.

நுரையீரலின் பணிகள்

காற்றில் உள்ள ஆக்ஸிஜனை (ஆக்ஸிஜன்= உயிர்வளி, பிராணவாயு) இரத்தத்தில்
சேர்ப்பதும், இரத்ததில் உள்ள கார்பன்-டை ஆக்ஸைடை (கரியமில வாயு) பிரித்து
உடலிலிருந்து வெளியேற்றுவதும் நுரையீரலின் முக்கிய பணியாகும்.

இதயத்திற்கு இரு புறமும் பாதுகாப்பாக இருந்து இதயத்தை அதிர்வுகளிலிருந்து காப்பாற்றுகிறது.

சில முக்கிய வேதிப் பொருட்களை உற்பத்தி செய்வது, வேறு சில வேதிப்
பொருட்களை செயலிழக்கச் செய்வது போன்ற உடலுக்கு உயிர்தரும் வேலைகளை
நுரையீரல் செய்து வருகிறது.

நுரையீரல் பாதிப்பு

உலகில் இலச்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு வருடமும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

காற்று மாசுபாடு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நுரையீரல் Empty Re: நுரையீரல்

Post by *சம்ஸ் Thu 1 Sep 2011 - 18:45

காற்று மாசுபாடு அதாவது சிலிகா, ஆஸ்பெட்டாஸ், கந்தகம், போன்றவற்றைப்
பயன்படுத்தும் தொழிற் சாலைகளில் பணி புரிபவர்களின் நுரையீரல்கள் அதிகம்
பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புகை பிடிப்பது உடல்
நலத்துக்கு கேடு என்ற செய்தி அனைவரும் அறிந்ததே.

புகைபிடிப்பது

புகை பிடிக்கும்போது நிறைய கரித் துகள்கள் (Carbon particles)
நுரையீரலுக்குள் சென்று அங்கேயே படிந்து விடுகின்றன. இதனால் ஆக்ஸிஜன்-
கார்பன்டை ஆக்ஸைடு பரிமாற்றம் தடைபடுகிறது. மற்றும் சிகரெட், சுருட்டு,
இவற்றிலுள்ள நிகோடின் என்ற வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக்
குறைத்து கனிமப் பொருள்களின் அளவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, ரத்தக்
குழாய்களின் அடைப்பை உண்டாக்குகிறது. புகைப் பழக்கத்தால் மூச்சுக்குழல்
அலர்ஜி, காற்றறைகளின் சுவர்கள் சிதைந்துபோதல், எம்ஃபசிமா, நுரையீரல்
புற்றுநோய் ஆகியவை உண்டாகின்றன. புகைப் பிடிப்பவர்களுக்கு மட்டுமல்ல,
பக்கத்தில் இருப்பவர்களுக்கும் (Passive smoking) இதே தீங்குகள் நேரிடும்.

நுரையீரல் பாதிப்பின் அறிகுறிகள்

இருமல்

மூச்சு வாங்குதல்

மூச்சு இழுப்பு

நெஞ்சுவலி

ஹீமாப்டிஸிஸ் (இருமும்போது ரத்தம் வெளியேறுதல்)

நுரையீரலைத் தாக்கும் சில முக்கிய நோய்கள்

மூச்சுக்குழாய் அலர்ஜி(Bronchitis), நுரையீரல் அலர்ஜி (Pneumonia),
காற்றறைகள் சிதைந்து போதல்(Emphysema), மூச்சுக்குழல்கள் சுருங்கிக்
கொள்ளுதல் (Asthma).

நுரையீரலை பாதுகாக்க சில எளிய வழிகள்

· தூசு நிறைந்த பகுதிகளுக்கு செல்லும் போது மூக்கில் துணியைக் கட்டிக்கொள்வது (Mask) நல்லது.

· பிராணயாமம், நாடி சுத்தி, ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி போன்றவற்றை தினமும் கடைப்பிடிப்பது.

· புகைப் பிடிப்பதை தவிர்ப்பது

· உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை சாப்பிடுவது

இன்றைய சூழ்நிலையில் மாசடைந்த காற்று அதிகம் இருப்பதால் நுரையீரல்
சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலும் அதிகம் இருக்கிறது. இதனால்
எதிர்காலத்தில் மினரல் வாட்டர் பாட்டிலைப் போல் ஆக்ஸிஜனை பாக்கெட்டுகளில்
வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். இந்நிலை மாற சுற்றுப்புறத்தை
தூய்மையாகவும், பசுமை நிறைந்த பகுதிகளாகவும் மாற்றினாலே போதும்..
ஆரோக்கிய வாழ்வைப் பெற்றிட முடியும்.


நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நுரையீரல் Empty Re: நுரையீரல்

Post by Atchaya Thu 1 Sep 2011 - 18:46

இதயம் அடுத்து நுரையீரல்....ம்ம்ம்மம்மம்ம்ம்ம்......சூப்பர் .... :!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

நுரையீரல் Empty Re: நுரையீரல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum