சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

இந்திர லக்ஷ்மி ஒரு தைரிய லக்ஷ்மி... Khan11

இந்திர லக்ஷ்மி ஒரு தைரிய லக்ஷ்மி...

2 posters

Go down

இந்திர லக்ஷ்மி ஒரு தைரிய லக்ஷ்மி... Empty இந்திர லக்ஷ்மி ஒரு தைரிய லக்ஷ்மி...

Post by அப்துல்லாஹ் Tue 6 Sep 2011 - 9:14

இந்த வேலை நமக்கு வொர்க் அவுட் ஆகும்னு மனசுக்குத் தோணிட்டா... மத்தவங்க சொன்னாங்களேனு அதை மாத்திக்காம, நம்பிக்கையோட இறங்கி வேலை பார்த்தா, ஏறி வந்துடலாம்!''
- விறுவிறு வார்த்தைகளில் ஆரம்பித்தார் சென்னை, மின்ட் பகுதியைச் சேர்ந்த இந்திரலட்சுமி.

இந்திர லக்ஷ்மி ஒரு தைரிய லக்ஷ்மி... Inthra

'ஃப்ரெண்ட்ஸ் ஸ்டார்ச்’ என்ற பெயரில் இங்கே இயங்கும் இவருடைய புடவை டிரை வாஷ் கடையில், அம்பத்தூர், தி.நகர், பல்லாவரம், தண்டையார்பேட்டை, பெரம்பூர் என சென்னையின் சுற்றுவட்டாரப் பெண்கள் எல்லாம் தேடி வந்து தங்கள் புடவைகளை ஒப்படைக்கிறார்கள். ஏழு பணியாட்கள், நூற்றுக்கணக்கான நிரந்தர வாடிக்கையாளர்கள், மாதம் 25 ஆயிரத்துக்கு மேல் லாபம் என்று அசத்திக் கொண்டிருக்கும் இந்திரலட்சுமி... இந்தத் தொழிலில் நிமிர்ந்திருக்கும் கதை... 'என்ன பண்ணலாம்..?’ என்று காத்திருக்கும் இல்லத்தரசிகளுக்கு இன்னுமொரு நம்பிக்கைக் கிளை!



''சின்ன வயசுல இருந்தே நான் துறுதுறு. ஏதாச்சும் வேலை செஞ்சுட்டே இருக்கணும் எனக்கு. பி.எஸ்சி. படிச்சு முடிச்சதும் திருமணத்தை முடிச்சுட்டாங்க. வீட்டுல சும்மா இருக்கப் பிடிக்காம... கிராஃப்ட், பெயின்ட்டிங்னு பொழுதுகளை சுவாரஸ்யமானதா மாத்திக்கிட்டேன். ரெண்டு குழந்தைகளும் என் வாழ்க்கையை இன்னும் அழகாக்கினாங்க'' எனும் இந்திரலட்சுமியின் வாழ்வில் அந்தத் திருப்பம் நிகழ்ந்திருக்கிறது.

''2000-ம் வருஷம் ஒரு மேஜர் ஆபரேஷனுக்குப் பிறகு, சில மாதங்கள் ஓய்வுல இருந்தப்ப... 'சும்மா’ இருக்கறோமேங்கற உணர்வு... என்னைப் படுத்துச்சு. புடவை டிரை வாஷ் பண்ணும் என் தோழி ஒருத்திகிட்ட, 'எனக்கும் சொல்லிக் கொடு’னு கேட்டு பொழுதுபோக்கா கத்துக்கிட்டேன். பீரோவுல இருந்த புடவைகளுக்கு எல்லாம் கஞ்சி போட்டு, டிரை வாஷ் செய்றதுனு பொழுதுகளை ஓட்டினேன்.

டிரை வாஷ் செய்யக் கத்துக்கொடுத்த அந்தத் தோழி, 'இப்போ டிரை வாஷ் கடைகளைத் தேடிப் போற பெண்களுக்கு ஈடுகொடுக்கற எண்ணிக்கையில இங்க கடைகள் இல்லை’னு ஒருமுறை சொன்னா. 'அப்படினா... டிரை வாஷ் கடையை நானும் ஆரம்பிக்கலாமா?'னு கேட்க, 'கண்டிப்பா!’னு சொன்னவ... எனக்கு நம்பிக்கையும், உத்தரவாதமும் கொடுத்ததோட தொழில் நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுத்தா.

வீட்டுல என் விருப்பத்தைச் சொன்னதும்... 'நாம ஆசாரமான குடும்பம். ஊர்ல இருக்கறவங்க சேலையை எல்லாம் துவைச்சுக் கொடுக்கற தொழில் நமக்கெதுக்கு?’னு பதறினாங்க. அர்த்தமில்லாத அந்த அட்வைஸ்கள புறந்தள்ளி, 'இந்த தொழில்ல நான் ஜெயிப்பேன்!’னு உறுதியா நின்னேன். என் கணவர் வாழ்த்து சொல்ல, 14 வருஷத்துக்கு முன்ன ஆரம்பமானதுதான் இந்த 'ஃப்ரெண்ட்ஸ் ஸ்டார்ச்’!'' என்றவர், அசராத உழைப்பால் இத்தொழிலில் வென்றிருக்கிறார்.

இந்திர லக்ஷ்மி ஒரு தைரிய லக்ஷ்மி... Inthra1

''கடை ஆரம்பிச்சபோது, தெரிஞ்ச வங்ககிட்ட வாய்மொழியாப் பேசிப் பேசித்தான் விளம்பரம் செய்தேன். பெண்கள் விடுதிகள், லேடீஸ் கிளப்கள், கல்லூரிகள்னு நேர்ல கேன்வாஸ் செய்து ஆர்டர்கள் வாங்கினேன். சொன்ன நேரத்துக்கு முன்னதாவே டெலிவரி, திருப்திகரமான ரிசல்ட்னு அவங்ககிட்ட எல்லாம் நல்ல பெயர் கிடைக்க, அடுத்தடுத்த ஆர்டர்கள் சிரமமில்லாம கிடைச்சுது. பாந்தினி சாரி, டிசைனர் சாரி, சில்க் காட்டன், ரா சில்க்னு மார்கெட்டுக்கு புதுசா வர்ற புடவை ரகங்களுக்கு ஏற்ப தொழிலை அப்டேட் செய்ய நான் தவறினதில்ல. அந்த அக்கறைக்கும் உழைப்புக்கும் பரிசாதான்... இப்போ ஏழு பணியாளர்களோட, சீஸனைப் பொறுத்து மாசம் 25 முதல் 40 ஆயிரம் வரை லாபம் பார்க்கற அளவுக்கு தொழில்ல ஸ்திரமாகி இருக்கேன். கடை ஆரம்பிச்ச நாள்ல இருந்து கடையோட நிர்வாகப் பொறுப்பை ஏத்துக்கிட்டு திறம்பட நடத்தி வர்ற என் தோழி சித்ராவும் இந்த வெற்றிக்கு ஒரு காரணம்'' என்று பெருமையோடு குறிப்பிட்டார் அனைவரையும் அறிமுகப்படுத்தியபடியே!

''இந்த சாரி டிரை வாஷ் தொழிலுக்கு கடை வாடகை, சலவைப் பொருட்கள், பணியாளர்னு ஆரம்பகட்ட முதலீடா 20 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். புடவையின் ரகத்துக்கு ஏற்ப டிரை வாஷ், ஸ்டார்ச் ரேட்-ஐ வசூலிக்கலாம். தொடக்க மாதங்கள்ல சில ஏற்ற இறக்கங்கள் இருக்கும். தொழில் சீரானதுக்கு அப்புறம் போட்ட முதலைவிட மாத லாபத்துக்கு கியாரன்ட்டி!'' என்று சொல்லும் இந்திரலட்சுமிக்கு, பி.எஸ்சி படிக்கும் அபிநயா, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பாலாஜி என்று இரண்டு குழந்தைகள். கணவர் ஷங்கர், பலவிதமான கண்ணாடிகள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலில் இருக்கிறார்.

'' 'டிரை வாஷ்’ தொழில் வகுப்புகள் எடுக்கறது என்னோட அடுத்தகட்ட திட்டம். இன்னும் நிறைய பெண்கள் இந்தத் தொழிலுக்கு வரணும். என் தோழி எனக்குக் கொடுத்த உத்தரவாதத்தை நான் அவங்களுக்குக் கொடுக்கிறேன்!'' - நிறைவாகச் சிரிக்கிறார் இந்திரலட்சுமி!
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இந்திர லக்ஷ்மி ஒரு தைரிய லக்ஷ்மி... Empty Re: இந்திர லக்ஷ்மி ஒரு தைரிய லக்ஷ்மி...

Post by நண்பன் Tue 6 Sep 2011 - 9:35

வாவ் செய்யும் தொழிலே தெய்வம் பாராட்டுக்கள் வெற்றி பெற்று விட்டார் இன்னும் நிறையப்பேர் இப்படி முன்னுக்கு வரனும் முயற்சிதான் வெற்றி வகுக்கும் தகவலுக்கு நன்றி சார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum