சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

தூக்கு மர நிழலில்...நக்கீரனில் சோலை சொல்லுவது என்ன  Khan11

தூக்கு மர நிழலில்...நக்கீரனில் சோலை சொல்லுவது என்ன

Go down

தூக்கு மர நிழலில்...நக்கீரனில் சோலை சொல்லுவது என்ன  Empty தூக்கு மர நிழலில்...நக்கீரனில் சோலை சொல்லுவது என்ன

Post by அப்துல்லாஹ் Tue 6 Sep 2011 - 9:55

வேலூர் மத்திய சிறைச்சாலை. மரண அமைதி நிலவியது. துருப்பிடித்துப் போய்விட்ட தூக்குமேடை பல்லாண்டுகளுக்குப் பின்னர் புதுப்பிக்கப்பட்டது. அதற்கும் உயிர் பறிக்கும் ரத்தப் பசி.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட் டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் இறுதி ஆயுளைக் கணித்திருக் கிறார்கள். அவர்கள் செப்டம்பர் மாதம் 9-ந் தேதி தூக்குமேடையில் நிறுத்தப்பட வேண் டும் என்று மரண ஓலை வாசிக்கப்பட்டது.

எனவே அவர்கள் சிறை விதிகளின்படி தனித்தனிக் கொட்டடிகளில் தன்னந்தனியாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக் காக இன்றைக்குத் தமிழகமே... ஏன் தமிழ் உலகமே கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறது. மனிதாபிமானம் துக்கத்தில் துவண்டுபோய் இருக்கிறது.

1991-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத் திற்கு வந்த ராஜிவ்காந்தி திருபெரும் புதூரில் படுகொலைக்கு ஆளானார். அந்தத் துயர நிகழ்வை நியாயப்படுத்த முடியாது. அதேசமயத்தில் இன்னும் சிலரின் உயிர் பறி போகுமானால் மரித்தவர்கள் உயிர்த்தெழப் போவதில்லை.

தூக்குமேடை நிழலில் நின்றுகொண்டிருக் கும் தம்பி பேரறிவாளன், அய்யா பெரியாரின் அடிச்சுவட்டில் நடைபோட்ட சுயமரியாதைச் சுடரொளி.

ராஜிவ்காந்தியைக் கொலை செய்யும் நோக்கில் தாணு என்ற பெண் இடுப்பில் "பெல்ட்' அணிந்தாள். அந்தப் பெல்ட்டில் உள்ள வெடிமருந்தை இயக்க பேட்டரிகளை வாங்கிக் கொடுத்தவன் தம்பி பேரறிவாளனும் இன்னும் இருவரும் என்றுதான் குற்றச்சாட்டு. அந்தக் குற்றச் சாட்டை அவன் தொடர்ந்து இறுதிவரை மறுத்துவந்தான். ஆனாலும் அவனுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போது தூக்குமேடையின் நிழலில் நிறுத்தப்பட்டிருக்கின்ற சாந்தன், முருகன்கூட நேரடி யாகக் கொலைக்குற்றம் செய்த வர்கள் அல்ல. அதற்கு அவர் கள் உடந்தையாக இருந்தவர் கள் என்பதுதான் குற்றச்சாட்டு. கொலையில் நேரடியாகத் தொடர்புடைய இருவரும் தற்கொலை செய்து தங்களுக்குத் தாங்களே தீர்ப்பு எழுதிக் கொண்டுவிட்டனர்.

ஆனால் ராஜிவ்காந்தி யின் மரணத்திற்குப் பின்னர் ஈழத்தையே எரித்துவிட்டார் கள். லட்சோப லட்சம் தமிழர் கள் படுகொலை செய்யப் பட்டார்கள். விடுதலைப்புலிகளை வேட்டையாடுகிறோம் என்ற பெயரால் தமிழ் இனத்தை யே தகனம் செய்துவிட்டார்கள். இத்தகைய மாபெரும் மனித இனப் படுகொலைகளுக்குக் காரணமானவர்கள் இன்னும் சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.



பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருமே இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் கண்டுவிட்டனர். இதற்குமேல் அவர்களுக்கு என்ன தண்டனை வேண்டும்?

ராஜிவ்காந்தி கொலைவழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. அதன் பின்னர் அவர்கள் குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு போட்டனர்.

கே.ஆர்.நாராயணன் குடியரசுத் தலைவராக இருந்தபோதும் அதன் பின்னர் அப்துல்கலாம் குடியரசுத் தலைவராக அமர்ந்தபோதும், அவர்களுடைய கருணை மனுக்களை மத்திய உள்துறை அமைச்சகம் அவர்களுக்கு அனுப்பியது. இந்தியக் குடியரசின் இரண்டு தலைவர்களுமே அவர்களுடைய கருணை மனுவை ரத்து செய்யவில்லை. மரண தண்டனையை உறுதி செய்யவில்லை. எந்த முடிவும் எடுக்காது அந்த மனுக்களை திருப்பி அனுப்பினர்.

இப்படி பதினொரு ஆண்டுகள் கருணையை எதிர்பார்த்து அந்த மனுக்கள் காத்துக் கிடந்தன. அந்த மனுக்களை இன்றைய குடியரசுத் தலைவருக்கு மீண்டும் மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியது.

கருணைக்கும் பாசத்திற்கும் இனி வேலையில்லை. தூக்குமேடை யின் பாசக் கயிற்றிற்குத்தான் வேலை என்று சொல்லிவிட்டார்கள்.

இதுதான் இறுதித் தீர்ப்பா? மறைந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சி.ஏ.பாலனுக்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

கருணை மனுக்களெல்லாம் காலத்தை முடித்துக்கொண்ட பின்னர் அவரைத் தூக்கில் போடுவதற்கும் நாள் குறித்தனர். தூக்குமேடையும் தயாரானது. இன்னும் ஒரே வாரம்தான். உன்னதமான ஓர் உயிர் பிரிந்துவிடும் என்ற நிலை.

அன்றைக்கு கேரளத்தில் இ.எம்.எஸ். தலைமையில் கம்யூனிஸ்ட் அமைச்சரவை செயல்பட்டது. அந்த அமைச்சரவையில் பிரபல வழக்கறிஞர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அங்கம் பெற்றிருந்தார். அவருடைய முயற்சியால் மீண்டும் குடியரசுத் தலைவர் மாளிகையின் கதவுகள் திறந்தன. பாலனின் தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட்டது.

சிறைவாசம் முடித்து வந்த பாலன் சிறந்த இலக்கியவாதியானார். "தூக்கு மரத்தின் நிழலில்' என்று அவர் எழுதிய தொடர் ஓவியம் குமுதத்திலும், கேரளத்து ஏடுகளிலும் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளத் திரைப்படத்துறையும் அவரை அழைத்து அணைத்துக்கொண்டது.

ஆமாம். அந்த சி.ஏ.பாலன் தூக்கிலிடப்பட்டிருந்தால் இந்தியா ஒரு போராளியை, எழுத்தாளரை இழந்திருக்கும்.

அந்த சி.ஏ.பாலனின் அறிவாற்றல் இன்றைக்குத் தம்பி பேரறிவாளனிடம் ஒளி வீசுகிறது. அவனுடைய படைப்பு டெல்லிக்கே படையெடுத்துவிட்டது.

ராஜிவ்காந்தி மரணம் பற்றி விசாரித்த ஜெயின் கமிஷன் என்ன சொன்னது? வழக்கில் இன்னும் பல அம்சங்களை விசாரிக்க வேண்டி யிருக்கிறது என்று சுட்டிக்காட்டியது. இப்படி இன்னும் விசாரணை நடைபெற வேண்டிய நிலையில் மூவருக்கும் மரண தண்டனை உறுதி படுத்தப்பட்டிருக்கிறது.

நீதிமன்றத்தில குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் தண்டனையைக் குறைப்பதற்கும் ரத்து செய்வதற்கும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. அந்த அதிகாரத்தை அரசியல் சட்டம் நிரம்பவே வழங்கியிருக்கிறது.

அதேபோல ஒரு குற்றவாளியின் தண்டனை யைக் குறைப்பதற்கும் ரத்து செய்வதற்கும் மாநில கவர்னருக்கு அதிகாரம் உண்டு. அந்த அதி காரத்தை அரசியல் சட்டம் வழங்கியிருக்கிறது.

அதேபோல் ஒருவரின் தண்டனையைக் குறையுங்கள், ரத்து செய்யுங்கள் என்று ஒரு மாநில சட்டமன்றம் கோருவதற்கு எந்தத் தடையும் இல்லை. அதன் பரிந்துரையை ஏற்பதும் ஏற்காத தும் கவர்னரின் பொறுப்பு. எனவே காலத்தோடு சட்டமன்றமும் செயல்பட்டு கவர்னரும் செயல்பட்டால் அந்த உயிர்கள் காக்கப்படும்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கு வேறு, ஈழ விடுதலை இயக்கத்தை ஆதரிப்பது வேறு என்று சிலர் விவாதம் செய்கிறார்கள். கூர்ந்து பாருங்கள்... அவர்கள் ஈழ விடுதலை இயக்கத்தை என்றும் ஆதரித்தவர்கள் அல்ல. அரசியல் ஆதாயத்திற்காக அவர்கள் உதட்டளவில் ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுதான் உண்மை.

இப்படிப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்பவர்கள் வரலாற்று நிகழ்வுகளைத் தொகுத்துப் பார்க்க வேண்டும். ஈழத்தில் அமைதி காக்கப் போவதாகச் சென்ற இந்திய ராணுவத்தினர் செயல்பாடுகள் என்ன? அதனால் தமிழ் உலகம் கொதித்துப் போகவில்லையா? அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அமைதியான குளத்தில் கல்லெறியும்போது சலனங்கள், அலைகள் ஏற்படுவது இல்லையா? ஆனாலும் எந்தக் கொலையையும் நாம் நியாயப்படுத்தவில்லை.

ஈழ விடுதலை இயக்கம் என்பது வேறு. விடு தலைப்புலிகள் இயக்கம் என்பது வேறு என்பது தான் இவர்களுடைய முந்தைய வாதமாகும். என்றாலும் இப்போது இதயத்தில் ஈரம் ஊற் றெடுக்க வேண்டிய நேரம் அல்லவா? மூன்று உயிர் களைக் காக்க தமிழகம் என்ன செய்யப் போகிறது என்று நம் அனைவரின் அசைவுகளையும் உலகம் உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது.

நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்புடைய அப்சல் குருவிற்கும் மரண தண்டனை விதிக்கப் பட்டது. அந்தத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று பி.ஜே.பி.யும் இதர இந்துத்துவா சக்திகளும் போராடிவருகின்றன. அதேபோல ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் உடனடியாகத் தூக்கில் போடவேண்டும் என்று பி.ஜே.பி.யும் இங்கே இந்து முன்னணி இராம.கோபாலனும் கோரி வருகிறார்கள். சில அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் -அதற்காகத் தரும் வியாக்கியானங்களெல்லாம் அந்த இந்துத்துவா சக்திகளுக்கு ஆதரவானவை என்ற சந்தேகம் பிறந்திருக்கிறது.

எனவே அந்த சந்தேகங்களுக்கு இடமில்லாத வகையில் கருணையும் மனிதாபிமானமும் மிக்க அனைத்து மக்களும் பேரறிவாளன், சாந்தன், முருகனின் விடுதலைக்காக மேலும் மேலும் அணிதிரள வேண்டும். அத்தகைய ஆவேசம் எவரும் அழைப்பு விடாமலே இப்போதே தமிழகத்தில் அலையடிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த எழுச்சியில் தங்களை இணைத்துக் கொள்ளாதவர்கள் கற்கால மனிதர்களாகத்தான் கருதப்படுவார்கள்.

மூவரின் மரண தண்ட னைக்கு உயர்நீதிமன்றம் அளித்துள்ள 8 வாரத் தடையும், தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வலியுறுத்தி சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானமும், அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள் ஆகியவற்றின் ஒருமித்தக் குரலும் புதிய நம்பிக்கை வெளிச்சத்தை உருவாக்கியுள்ளன.

அகல் விளக்குகள் காற்றில் அணைந்து போகலாம். ஆனால் துருவ நட்சத்திரங்கள் சிதைந்துபோவதில்லை. அந்த நட்சத்திரங்களுக்கு அழிவில்லை. வேலூர் சிறைக் கொட்டடியிலிருந்து வரும் புரட்சி கீதங்கள் அதனைத்தான் அறி விக்கின்றன.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum