சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

இலங்கை-இந்தியா ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து Khan11

இலங்கை-இந்தியா ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து

Go down

இலங்கை-இந்தியா ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து Empty இலங்கை-இந்தியா ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 8:58

சம்பு+ர் அனல் மின் நிலையம்:

இலங்கை-இந்தியா
ஒப்பந்தம் நேற்று
கைச்சாத்து




கொழும்பில் ஆவணங்கள் பரிமாற்றம்

500 மில்லியன் அமெ. டொலர் செலவு

500 மெகாவாற்ஸ் மின்சாரம்
உற்பத்தி


எம்.எஸ். பாஹிம்

500 மெகா வாற்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யும் திருகோணமலை சம்பூர் அனல் மின்
நிலையத்திற்கான கூட்டு ஒப்பந்தம் நேற்று இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில்
கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை-இந்தியா ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து N1இலங்கை சார்பாக மின்சார சபை தலைவர் பேராசிரியர் விமலதர்ம அபேவிக்ரமவும் இந்தியா
சார்பாக இந்திய என்.ரீ.பீ.சி. கம்பனி தலைவர் அருப்ரோய் செளத்ரியும் கைச்சாத்திட்ட
னர்.
மின்சார சபையும் என்.ரீ.பீ.சி. கம்பனியும் இணைந்து ஆரம்பிக்கும் முதலீட்டு
சபையின் அனுமதியுள்ள கூட்டுக் கம்பனியினூடாக அனல் மின் நிலையம்
நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட உள்ளதோடு இதற்கான
செலவை இரு நாடுகளும் சரி பாதியாக ஏற்க உள்ளன.

இதற்கு இந்தியா 200 மில்லியன்
அமெரிக்க டொலர்கள் கடனுதவி வழங்க உள்ளதோடு மின் உற்பத்தி நிலையத்திற்கான 500 ஏக்கர்
காணி, உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி என்பவற்றை இலங்கை வழங்குகிறது. அனல் மின்
நிலையத்திற்கான உபகரணங்களை இந்தியா வழங்கும் 25 வருடங்களுக்கு குறித்த ஒப்பந்தம்
அமுலில் இருக்கும்.
இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடும் வைபவம் நேற்று கலதாரி ஹோட்டலில்
நடைபெற்றது. இந்த வைபவத்தில் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க அமைச்சின்
செயலாளர் பொ எம்.எம்.சி. பேர்டிணன்டஸ், இந்திய மின்சக்தி அமைச்சின் செயலாளர் உமா
சங்கர், மின்சார சபை தலைவர் விமலதர்ம உட்பட பல உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சின் செயலாளர் பேர்டிணன்டஸ்; இலங்கையின் மின்சாரத்
தேவை வருடாந்தம் 8- 9 வீதத்தினால் அதிகரித்து வருகிறது. 1985 களிலும் அனல் மின்
நிலையம் அமைக்க திட்டமிடப்பட்ட போதும் பல காரணங்களினால் அது தடைப்பட்டது.
சம்பூர் அனல் மின்நிலையத்திற்கான ஆரம்ப ஒப்பந்தம் 2006 இல் கைச்சாத்திடப்பட்டது.
இதற்கு 500 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்திய மின்சக்தி அமைச்சின் செயலாளர் உமா சங்கர் கூறியதாவது;
இரு பிரதான மின்சார நிறுவனங்கள் இணைந்து சம்பூர் அனல் மின் நிலைய பணிகளை
முன்னெடுக்க உள்ளன. இதற்காக பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன. இதனை 2016
நடுப்பகுதிக்குள் துரிதமாக பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனை உயர் மட்ட
குழு கண்காணிக்கும் இலங்கையின் மின்சாரத் தேவையை இந்த திட்டம் நிறைவு செய்யும்
என்றார்.
மின்சார சபைத் தலைவர் வி. அபேவிக்ரம கூறியதாவது;
2005 இல் ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் செய்ததையடுத்தே இதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டன. முதற்தடவையாக மின்சார சபை வேறு நாட்டுடன் கூட்டிணைந்து இத்தகைய
திட்டமொன்றை முன்னெடுக்கிறது என்றார்.
இந்திய உயர் ஸ்தானிகர் அசோக்கே காந்தா கூறியதாவது;
இந்த கூட்டுத்திட்டத்துக்கு இரு நாடுகளும் முழு ஒத்துழைப்பு வழங்குகிறது. இது இரு
நாடுகளுக்குமிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும். பொருளாதார ரீதியான ஒத்துழைப்பை
மேலும் மேம்படுத்தும் இதற்கான பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்படும். இதற்கு இந்தியா
200 மில்லியன் கடனுதவி வழங்குகிறது என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum