Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
லிபியாவின் அயல் நாடான நைகரில் ஆயுதம் தாங்கிய கடாபி ஆதரவுப்படை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1

லிபியாவின் அயல் நாடான நைகரில்
ஆயுதம் தாங்கிய கடாபி ஆதரவுப்படை
இராணுவத்துடன் 200 க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணி வகுப்பு
லிபியாவின் முஅம்மர் கடாபி ஆதரவு இராணுவம் அண்டைய நாடான நைகரின் பாலைவன எல்லையை
கடந்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனரக ஆயுதங்களை தாங்கி 200 முதல் 250 வாகனங்கள் வரை நைகர் எல்லையை தாண்டியதாக
அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை பிரான்ஸ் இராணுவமும் உறுதி
செய்துள்ளது.
அத்துடன் இந்த இராணுவத்தில் சக்திவாய்ந்த தூரப் பழங்குடியின வீரர்கள்
இடம்பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த இராணுவத்திற்கு தூரப் பழங்குடியின
தலைவர் ரிஸ்ல் அக்பவுலா தலைமை வகிப்பதாகவும் நேற்றைய தினம் இவர்கள் நைகரின் அகடாஸ்
நகரை எட்டியதாகவும் நைகர் இராணுவம் தெரிவித்துள்ளது.
பிரமாண்ட இராணுவ அணிவகுப்பொன்று நேற்று அகடாஸ் நகரை தாண்டி தலைநகர் நோக்கி சென்றதாக
அங்குள்ள தனியார் பத்திரிகை நிறுவன உரிமையாளர் ஒருவர் ஏ. பி. செய்திச் சேவைக்கு
தெரிவித்துள்ளார்.
‘அகடாஸ் இன்போ’ பத்திரிகையின் உரிமையாளர் அப்துலே ஹரூனா கூறும் போது, ஆயுதம்
தாங்கிய வாகன அணிவகுப்பொன்று கடந்த திங்கட்கிழமை அகடாஸ் நகரை எட்டினர். அவர்கள்
நேற்று அதிகாலை தலைநகர் நியாமியை நோக்கி பயணித்தனர் என்றார்.
எனினும் இந்த இராணுவத்தினருடன் கடாபியோ, அவரது குடும்ப உறுப்பினர்களோ அல்லது அவரது
அரசின் முக்கிய நபர்களோ இருப்பதற்கான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அத்துடன்
இந்த இராணுவம் குறித்து பல முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இராணுவத்தினருடன் கடாபி மற்றும் அவரது மகன் சைப் அல் இஸ்லாம் புர்கினா போசோ
பகுதியில் வைத்து இணைந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக பிரான்ஸ் இராணுவம் சந்தேகம்
தெரிவித்துள்ளது. இவர்கள் வேறு நாடொன்றில் தஞ்சம் புக வாய்ப்பு இருப்பதாகவும் அது
கூறியுள்ளது.
இதேவேளை, முஅம்மர் கடாபி தொடர்ந்து லிபியாவில் இருப்பதாக கடாபி அரசு பேச்சாளர் மூஸா
இப்ராஹிம் தெரிவிதுள்ளார். சிரியாவில் இருந்து இயங்கும் “அராய்” தொலைக்காட்சிக்கு
மூஸா இப்ராஹிம் கூறும்போது, முஅம்மர் கடாபி நல்ல தேக ஆரோக்கியத்துடன் உற்சாகமாக
லிபியாவுக்குள்ளேயே இருக்கிறார். அவர் இருக்கும் இடத்தை அந்த முரண்பட்ட குழு
அடையவில்லை என்றார்.
இதற்கிடையில் “என்னை சட்ட விரோதமாகக் கடத்திச் சென்று சித்திரவதை செய்ததற்காக
பிரிட்டன் மற்றும் அமெரிக்க நாடுகள் மன்னிப்பு கேட்க வேண்டும்” என
கிளர்ச்சியாளர்களின் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
விபிய தலைநகர் திரிபோலியில் உள்ள கடாபியின் குடியிருப்பு வளாகமான “பாப் அல்
அசீசியாவில்” உளவுத்துறை அலுவலகத்தில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட ரகசிய உளவு
ஆவணங்கள் மூலம், கடாபியின் அரசுக்கும், அமெரிக்க புலனாய்வுப் பிரிவான சி. ஐ. ஏ.
மற்றும் பிரிட்டனின் உளவுத்துறையான எம். ஐ. 6 ஆகியவற்றுக்கிடையில் ரகசிய தொடர்புகள்
இருந்தது வெளியானது.
லிபியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான “லிபிய
இஸ்லாமிய போராட்டக் குழு”வில் இருந்தவரும், தற்போதைய லிபியா கிளர்ச்சியாளர் இராணுவப்
பிரிவில் தளபதியாகப் பணியாற்றுபவருமான அப்துல் ஹக்கீம் பெல்ஹாஜ், 2004 இல்
பாங்கொக்கில் இருந்த தன்னை சி. ஐ. ஏ. மற்றும் எம். ஐ. 6 உளவாளிகள் லிபியாவுக்கு
கடத்திச் சென்றதாகவும், தன்னை கடுமையாகச் சித்திரவதைப்படுத்தியதாகவும்
தெரிவித்திருந்தார்.
இது குறித்து பெல்ஹாஜ் அளித்த பேட்டி ஒன்றில், “எனக்கும் என்
குடும்பத்துக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகள் சட்ட விரோதமானவை. இந்தக் கொடுமைகளுக்காக,
இருஉளவு நிறுவனங்களும் என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்றார். பெல்ஹாஜின்
இந்தப் பேட்டி குறித்து, பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் கருத்து கூற மறுத்து விட்டது.
இந் நிலையில் கடாபி ஆதரவுப் படை சரணடைவதற்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடையும்வரை
அவர்களுடனான பேச்சுவார்த்தை தொடரும் என கிளர்ச்சியாளர்களின் தேசிய மாற்ற கெளன்ஸில்
தலைவர் முஸ்தபா அப்துல் ஜலில் தெரிவித்துள்ளார். கடாபி ஆதரவுப் படையினர் சரணடைவதற்கு
வரும் சனிக்கிழமை வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் லிபியாவின் முக்கிய நான்கு நகர்கள் கடாபி ஆதரவுப் படை வசமே தொடர்ந்தும்
நீடிக்கிறது. முஅம்மர் கடாபியின் பிறந்தகமான சிர்த், ஜப்ரா, சபா மற்றும் பானி வலீத்
பகுதிகள் கடாபி ஆதரவாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ளது. எனினும் மேற்படி பகுதிகளை சுற்றி
கிளர்ச்சியாளர்கள் தரித்து நிற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கடாபி சுட்டுக்கொலை: லிபியாவின் இடைக்கால அதிபர் முஸ்தபா அப்துல் ஜலீல்
» மலர்களைத் தாங்கிய முற்கள்
» லிபியாவின் தலைவர் கடாபிக்கு எதிரான வலுப் பெறும் போராட்டங்கள்
» அயல் கவிதை
» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்.
» மலர்களைத் தாங்கிய முற்கள்
» லிபியாவின் தலைவர் கடாபிக்கு எதிரான வலுப் பெறும் போராட்டங்கள்
» அயல் கவிதை
» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum