Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
Mankatha -மங்காத்தா
+2
பர்ஹாத் பாறூக்
நண்பன்
6 posters
Page 1 of 1
Mankatha -மங்காத்தா
ஒரு கொள்ளைக்கும்பல், பிளான்
பண்ணி வங்கியிலிருந்து தங்ககட்டிகளை கொள்ளையடிக்கிறது. கும்பலில் ஒருத்தன்
மற்ற உறுப்பினர்களுக்கு நாமம்போட்டு தங்ககட்டிகளுடன் எஸ்ஸாகிறான்.
ஏமாற்றப்பட்டவர்கள் அந்த டுபாக்கூரிடமிருந்து மீண்டும் தங்ககட்டிகளை எப்படி
கைகப்பற்றுகிறார்கள் என்பதே கதை.
கிரிக்கெட் சூதாட்டத்திற்காக கொண்டு செல்லப்படும் ஐநூறு கோடி பணத்தை
கடத்த முயற்சிக்கும் கும்பல், அதில் கடைசியாக வந்து சேர்ந்து கொ(ல்)ள்ளும்
விநாயக்காக அஜித். அஜித் நாற்பது வயது நிரம்பிய சஸ்பெண்ட் ஆகியிருக்கும்
போலீஸ் அதிகாரி. அர்ஜுன் கிரிக்கெட் சூதாட்டக் கும்பலை வளைத்துப் பிடிக்க
நியமிக்கப்படும் ஸ்பெஷல் ப்ராஞ்ச் போலீஸ் ஆஃபீசர். கிரிக்கெட்
சூதாட்டத்தின் மையமாக மும்பையும் அதன் முக்கியப் புள்ளியாக ஜெயப்பிரகாஷும்
இருக்கிறார்கள். ஜெயப்பிரகாஷின் மகளான த்ரிஷாவும், அஜித்தும் லவ்வர்ஸ்.
ஐபிஎல் போட்டி நடைபெறும் நேரத்தில் 500 கோடி ரூபாய் பணம் மொத்தமாக மும்பை
வந்து பிரியப்போவதை அர்ஜுன் தெரிந்து கொண்டு, மும்பையில் தன் டீமுடன்
களமிறங்கிறார்.
ஜெயப்பிரகாஷிடம் வேலை செய்யும் அடிப்பொடி வைபவ் தன் நண்பர்கள் 3 பேருடன்
சேர்ந்து அந்தப் பணத்தை பிரிக்க திட்டமிடுகிறான். சஸ்பெண்ட் ஆன போலீஸ்
அதிகாரி அஜித்தும், த்ரிஷா மூலம் ஜெயப்பிரகாஷை நெருங்கி, அந்தப் பணத்தை
நோட்டம் இடுகிறார். பணம் வந்து சேரும் நாளில் போலீஸ் கெடுபிடி அதிகம் ஆக,
ஜெயப்பிரகாஷ் குரூப் அதிகம் உஷாராகிறது. திருட ப்ளான் போட்ட 4 பேரும்
அஜித்தும் ஒன்றாக கைகோர்த்து பணத்தை லவட்டுகிறார்கள். ஒரு பக்கம் அர்ஜுன்
விரட்ட, மறுபக்கம் ஜெயப்பிரகாஷ் விரட்ட, அது போதாதென்று திருடிய 5 பேரும்
மாற்றி மாற்றி அடித்துக்கொள்கின்றனர். இறுதியில் அந்தப் பணம் யாருக்குச்
சேர்ந்தது... திட்டம் போட்ட அஜித்திற்கா, வில்லன் குரூப்பிற்கா,
போலீஸிற்கா... அல்லது அம்போவா என்பது விறுவிறுக்க வைக்கும் இறுதிக்காட்சி.
கதையே இல்லாமல் படம் எடுக்கிறார்கள் என்று பலரும் சொன்னதாலோ என்னவோ
வெங்கட் பிரபு இவ்வளவு சிக்கலான கதையை எடுத்துக்கொண்டு களம் இறங்கி
இருக்கின்றார். அஜித், ஜெயப்பிரகாஷ், த்ரிஷா, அர்ஜுன் என நாலு பேருமே
கதையின் முக்கிய பாத்திரங்களாக இருப்பதால் எல்லோரின் கேரக்டரையும் தெளிவாக
சொல்ல வேண்டிய கட்டாயம். அப்படி எல்லோரையும் சொல்லி முடிக்கவே 45
நிமிடங்களுக்கு மேல் ஆகிவிடுகிறது. இன்னும் எத்தனை புது கேரக்டர் வரபோகுதோ
என்று பயப்படும் அளவிற்கு ஒவ்வொரு சீனிலும் ஒரு கேரக்டர் வந்துகொண்டே
இருக்கிறது. அது செட்டில் ஆனவுடன் ஆரம்பிக்கிறது மங்காத்தா ஆட்டம். அதன்
பிறகு செம விறுவிறுப்புதான்.. திரைக்கதைக்கு அதிகம் மெனக்கட்டிருக்கிறார்
வெங்கட் பிரபு.
தமிழ் சினிமா ஹீரோக்கள் இதையெல்லாம் பண்ணக்கூடாது என இலக்கணம்
இருக்கிறது. அதிலும் குறிப்பாக மாஸ் ஹீரோக்கள் அந்த இலக்கணங்களை
கடைப்பிடிப்பது அவசியம். கதாநாயகியை ஏமாற்றாதது, கெட்ட வார்த்தைகளை
தவிர்ப்பது, உண்மையான வயதை மறைப்பது என மாஸ் ஹீரோக்களுக்குண்டான அத்தனை
இலக்கண விதிகளையும் துணிச்சலாக உடைத்து மங்காத்தா விளையாடி இருக்கிறார்
அஜித்.
தனது முக்கியமான 50வது படத்தில் பிற நடிகர்களுக்கு முக்கிய தோற்றங்கள்
கொடுத்து, கதைக்கு முன்னுரிமை கொடுத்து நடித்திருக்கும் அஜித்தின்
பெருந்தன்மை பாராட்டுதலுக்குரியது. அதிலும் தனக்குண்டான மாஸ் ஓபனிங்,
ரசிகர்கள், இமேஜ் என எதைப்பற்றியும் யோசிக்காமல் ஒரு பக்கா நெகடிவ்
கதாபாத்திரத்தை செய்திருப்பது அஜித் மேல் உள்ள மரியாதையை ரசிகர்களுக்கு
நிச்சயம் அதிகரிக்கும்.
அர்ஜுன் இப்போதும் தான் ஒரு ஆக்ஷன் கிங் என்று நிரூபித்திருக்கிறார்.
சண்டைக்காட்சிகளில் அதே வேகம். அஜித்திற்கு இணையாக கதையில் முக்கியத்துவம்
உள்ள கேரக்டர். இருவரும் மோதும் காட்சி அமர்க்களம். வைபவ் உள்ளிட்ட நான்கு
பேரில் வழக்கம்போல் பிரேம்ஜி, நம் கவனத்தை ஈர்க்கிறார். படத்தில்
காமெடிக்கு இவர் மட்டுமே என்பதால் அடர்த்தியான திரைக்கதையில் பெரிய
ரிலீஃபாக இவர் இருக்கிறார்.
வழக்கம் போல் ஜெயப்பிரகாஷ் தன்னுடைய பாத்திரத்திற்கு ஏற்றாற்போல்
அருமையாக நடித்துள்ளார். எந்த பாத்திரத்திற்கும் பொருந்த கூடிய ஒரு நடிகர்
நாசர் போல். த்ரிஷா நடிப்பதற்கு வழங்கப்பட்ட நேரம் கொஞ்சம் என்றாலும் அழகாக
சொந்தக்குரலில் பேசி மனதில் அழகாய் நிலைத்திருக்கிறார். கூடவே அஞ்சலி
அமைதியான முகம் ப்ளஸ் அமைதியான அழகு, ஆனால் காட்சிகளில் அவ்வளவு
முக்கியத்துவம் வழங்கப்பட்டதாக தெரியவில்லை. ஆனாலும் தோன்றும் காட்சிகளில்
ரசிக்க வைக்கிறார்.
மகாகவி பாரதியாரின் பேரனான நிரஞ்சன் பாரதி எழுதிய 'கண்ணாடி நீ...
கண்ஜாடை நான்...' பாடலுக்கு வைபவ்-அஞ்சலி ஜோடியும், அர்ஜுன்-ஆன்ட்ரியா
ஜோடியும் ஆடிப் பாடுகிறார்கள். அழகாய் கண்ணில் நிறைகிறார்கள். பார்
நடத்துனரின் தோழியாக வரும் லட்சுமிராய் 'விளையாடு மங்காத்தா' பாடலுக்கு ஆட
மட்டுமே பயன்பட்டிருக்கிறார்.
படத்தினை முக்கியமாக தூக்கிநிறுத்திய விஷயம் அஜித்-அர்ஜுன் கூட்டணி.
இவர்கள் இருவரும் வரும் காட்சிகள் அத்தனையும் அப்லாசுகளை அள்ளிக்கொண்டது.
அதுவும் அஜித் 'வாயா ஆக்ஷன் கிங்கு' என்கிறதும் பதிலுக்கு 'வாயா தல'
என்கிறதும் அப்ளாஸ். தமிழ் சினிமாவில் இப்படியான ஆரோக்கியமான நிகழ்வுகள்
நடக்குறது வரவேற்கத்தக்கது.
படத்தில் பஞ்ச் சீன்கள் என்றவுடன் ஒரு பஞ்ச் டயலாக் ஞாபகத்திற்கு
வருகிறது, ஆனால் இது வழக்கமான தமிழ் சினிமா பஞ்ச் டயலாக் போல் இல்லை,
லைட்டாக, இயல்பாக அஜித் பேசும் "எவ்ளோ நாளுக்குதான் நான் நல்லவனாக
நடிக்கிறது" என்ற டயலாக்கிற்கு அதிர்கிறது தியேட்டர்.
படத்தில் அஜித் பைக் ஓட்டும் சீனில் யாரும் சீட்டில் உட்காரவில்லை.
அஜித் தண்ணியடித்துக்கொண்டு கூட்டாளிகளை கொல்வதற்கு செஸ் போர்டில் ப்ளான்
பண்ணும் காட்சி வெங்கட் பிரபுவின் ஸ்பெஷல் பஞ்ச்.
படத்தில் குறையென்று பார்த்தால்........ அதிக கேரக்டர்களும்,
ஆரம்பத்தில் அதை ஞாபகம் வைக்க ரசிகர்கள் அவஸ்தைப்படுவதும் முக்கியக் குறை.
அடுத்து காமெடி என்ற பெயரில் அந்த நான்கு பேர் குறிப்பாக பிரேம் அஜித்துடன்
அடிக்கும் லூட்டி; டயலாக்குகள் நிறைய நேரம் மொக்கையாகவே உள்ளது. இவ்வளவு
தூரம் கதைக்கு மெனக்கெட்டவர்கள் லாஜிக்கும் கொஞ்சம் பார்த்திருக்கலாம்.
எவ்வளவு ப்ளாப் கொடுத்தாலும், அஜித் படத்திற்கு எப்படி இவ்வளவு ஓப்பனிங்
கிடைக்கிறது? அதுவும் மன்றங்களை கலைத்து அறிவிப்பு கொடுத்தவருக்கு?
அரசியல் ஆசை காட்டாதவருக்கு?
தமிழக மக்களுக்கு ஒரு நடிகரை பிடிக்க வேண்டுமென்றால், சினிமாவில் நன்றாக
நடிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. நிஜ வாழ்வில், ஒரு நல்லவராக மனதில்
பதிய வேண்டும். திறமையை காட்டுபவரை விட, நல்லவராக காட்டுபவரையே, உயரத்தில்
வைப்பார்கள். எந்த திட்டமிடலும் இல்லாமல், அஜித்திற்கு அது அதுவாகவே
நடக்கிறது.
இசை யுவன்சங்கர் ராஜா. வெங்கட் பிரபு-யுவன் கூட்டணி பற்றி சொல்லவே
வேண்டாம். நான்காம் முறையாக ஆட்சியை பிடித்திருக்கிறது இந்த கூட்டணி.
'அம்பானி பரம்பர' பாட்டுக்கு தியேட்டரே எழுந்து ஆடுகிறது
ரீரிக்கார்டிங்கில் தூள் கிளப்பி இருக்கிறார் யுவன். குறிப்பாக எதிரிகள்
மீது தீப்பிடித்து எரியும்போது அஜித் மேலிருந்து ஜம்ப் செய்யும் காட்சியில்
வரும் வயலின் எக்ஸ்ட்ரார்டினரி.
கேமிரா மேன் சக்தி சரவணன் படத்தின் கதைக்கேற்ற டோனில் நன்றாக
செய்திருக்கிறார். படத்தின் முக்கியபலம் எடிட்டிங் அதை சிறப்பாக
செய்திருக்கிறார்கள் பிரவீன் மற்று ஸ்ரீகாந்த் இருவரும். மும்பை தாராவி
பகுதியா இல்லை செட்டா என்று கண்டுபிடிக்க முடியவில்லை அதனால் ஆர்ட்
டைரக்டரை பாராட்டுவதா வேண்டாமா என்று தெரியவில்லை.
பலவீனம் என்று பார்த்தால், பாடல்கள் நன்றாக இருந்தாலும் மெலடி பாடல்கள்
படத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. 'பின்லேடா' பாடலில் வரும்
கிராஃபிக்ஸ் காட்சிகள் நன்றாக இருந்தாலும் கொஞ்சம் ஹெவியாக இருக்கிறது.
மற்றபடி மங்காத்தா கலக்கலான மேட்ச்தான்.
மங்காத்தா - செம தில்லான ஆட்டம் மச்சி!
நடிகர்கள்
அஜித், த்ரிஷா, அர்ஜுன், அஞ்சலி, பிரேம்ஜி, ஜெயப்பிரகாஷ், ஆன்ட்ரியா, லட்சுமி ராய், வைபவ், அஸ்வின், மஹத் ராகவேந்திரா
இசை
யுவன்சங்கர் ராஜா
இயக்கம்
வெங்கட் பிரபு
தயாரிப்பு
தயாநிதி அழகிரி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: Mankatha -மங்காத்தா
டிக்கட் எடுக்கப்பட்டதே பெரும் பாடாப்போச்சி பர்ஹாத் முதல் நாள் பார்க்க கிடைக்க வி்ல்லை இரண்டாம் நாள்தான் பார்த்தோம் படம் அருமைபர்ஹாத் பாறூக் wrote:தல ராக்ஸ்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: Mankatha -மங்காத்தா
"சினிமா " என்கிற திரியின் கீழ் இவ்விமரிசனம் பதிவிடுங்கள். சொல்லாமலே ஒரு புது திரி ஆரம்பிக்கப்பட்டது. அதில் குறும் படம், டவுன்லோட், சொங்க்ஸ் மட்டும், எனை கவர்ந்த காட்சி, எனக்கு பிடித்த சண்டைக்காட்சி என தலைப்பிட்டு இன்றே ஆரம்பித்து விடுங்கள். நல்ல விஷயத்திற்கு நாளும் கிழமையும் பார்க்க வேண்டாம் அன்பு உறவே....
விமர்சனம் நன்றாக உள்ளது.... :!@!: படம் பார்த்தால் தான் மார்க் போடணும்....படம் பார்த்து விமரிசனத்திற்கு பின் ஏன் மார்க் போடவில்லை?
விமர்சனம் நன்றாக உள்ளது.... :!@!: படம் பார்த்தால் தான் மார்க் போடணும்....படம் பார்த்து விமரிசனத்திற்கு பின் ஏன் மார்க் போடவில்லை?
Re: Mankatha -மங்காத்தா
உங்களைப் போன்று விசயம் தெரிந்தவங்க வந்து சொல்லும் போதுதான் கற்றுக்கொள்ள முடிகிறது நன்றி ஐயா நன்றிAtchaya wrote:"சினிமா " என்கிற திரியின் கீழ் இவ்விமரிசனம் பதிவிடுங்கள். சொல்லாமலே ஒரு புது திரி ஆரம்பிக்கப்பட்டது. அதில் குறும் படம், டவுன்லோட், சொங்க்ஸ் மட்டும், எனை கவர்ந்த காட்சி, எனக்கு பிடித்த சண்டைக்காட்சி என தலைப்பிட்டு இன்றே ஆரம்பித்து விடுங்கள். நல்ல விஷயத்திற்கு நாளும் கிழமையும் பார்க்க வேண்டாம் அன்பு உறவே....
விமர்சனம் நன்றாக உள்ளது.... படம் பார்த்தால் தான் மார்க் போடணும்....படம் பார்த்து விமரிசனத்திற்கு பின் ஏன் மார்க் போடவில்லை?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: Mankatha -மங்காத்தா
அர்ஜுன் இப்போதும் தான் ஒரு ஆக்ஷன் கிங் என்று நிரூபித்திருக்கிறார்.
சண்டைக்காட்சிகளில் அதே வேகம். அஜித்திற்கு இணையாக கதையில் முக்கியத்துவம்
உள்ள கேரக்டர். இருவரும் மோதும் காட்சி அமர்க்களம். வைபவ் உள்ளிட்ட நான்கு
பேரில் வழக்கம்போல் பிரேம்ஜி, நம் கவனத்தை ஈர்க்கிறார். படத்தில்
காமெடிக்கு இவர் மட்டுமே என்பதால் அடர்த்தியான திரைக்கதையில் பெரிய
ரிலீஃபாக இவர் இருக்கிறார். :”@:
சண்டைக்காட்சிகளில் அதே வேகம். அஜித்திற்கு இணையாக கதையில் முக்கியத்துவம்
உள்ள கேரக்டர். இருவரும் மோதும் காட்சி அமர்க்களம். வைபவ் உள்ளிட்ட நான்கு
பேரில் வழக்கம்போல் பிரேம்ஜி, நம் கவனத்தை ஈர்க்கிறார். படத்தில்
காமெடிக்கு இவர் மட்டுமே என்பதால் அடர்த்தியான திரைக்கதையில் பெரிய
ரிலீஃபாக இவர் இருக்கிறார். :”@:
Re: Mankatha -மங்காத்தா
அவ்வளவு வேலைப்பழுக்களுக்கு மத்தியிலும் படம் பார்க்கவும் நேரம் உள்ளதாமுனாஸ் சுலைமான் wrote:அர்ஜுன் இப்போதும் தான் ஒரு ஆக்ஷன் கிங் என்று நிரூபித்திருக்கிறார்.
சண்டைக்காட்சிகளில் அதே வேகம். அஜித்திற்கு இணையாக கதையில் முக்கியத்துவம்
உள்ள கேரக்டர். இருவரும் மோதும் காட்சி அமர்க்களம். வைபவ் உள்ளிட்ட நான்கு
பேரில் வழக்கம்போல் பிரேம்ஜி, நம் கவனத்தை ஈர்க்கிறார். படத்தில்
காமெடிக்கு இவர் மட்டுமே என்பதால் அடர்த்தியான திரைக்கதையில் பெரிய
ரிலீஃபாக இவர் இருக்கிறார். :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: Mankatha -மங்காத்தா
இப்ப அரசியலுக்காக சரியான வேலை கிளிநொச்சிக்கும் போக வேண்டியுள்ளது அதுக்குள் சும்மா இடைக்கிடை பார்ப்பதுதான்நண்பன் wrote:அவ்வளவு வேலைப்பழுக்களுக்கு மத்தியிலும் படம் பார்க்கவும் நேரம் உள்ளதாமுனாஸ் சுலைமான் wrote:அர்ஜுன் இப்போதும் தான் ஒரு ஆக்ஷன் கிங் என்று நிரூபித்திருக்கிறார்.
சண்டைக்காட்சிகளில் அதே வேகம். அஜித்திற்கு இணையாக கதையில் முக்கியத்துவம்
உள்ள கேரக்டர். இருவரும் மோதும் காட்சி அமர்க்களம். வைபவ் உள்ளிட்ட நான்கு
பேரில் வழக்கம்போல் பிரேம்ஜி, நம் கவனத்தை ஈர்க்கிறார். படத்தில்
காமெடிக்கு இவர் மட்டுமே என்பதால் அடர்த்தியான திரைக்கதையில் பெரிய
ரிலீஃபாக இவர் இருக்கிறார். :”@:
Re: Mankatha -மங்காத்தா
நல்லது உடல் ஆரோக்கியம் பாருங்கள் மற்றவை பிறகு பார்க்கலாம்முனாஸ் சுலைமான் wrote:இப்ப அரசியலுக்காக சரியான வேலை கிளிநொச்சிக்கும் போக வேண்டியுள்ளது அதுக்குள் சும்மா இடைக்கிடை பார்ப்பதுதான்நண்பன் wrote:அவ்வளவு வேலைப்பழுக்களுக்கு மத்தியிலும் படம் பார்க்கவும் நேரம் உள்ளதாமுனாஸ் சுலைமான் wrote:அர்ஜுன் இப்போதும் தான் ஒரு ஆக்ஷன் கிங் என்று நிரூபித்திருக்கிறார்.
சண்டைக்காட்சிகளில் அதே வேகம். அஜித்திற்கு இணையாக கதையில் முக்கியத்துவம்
உள்ள கேரக்டர். இருவரும் மோதும் காட்சி அமர்க்களம். வைபவ் உள்ளிட்ட நான்கு
பேரில் வழக்கம்போல் பிரேம்ஜி, நம் கவனத்தை ஈர்க்கிறார். படத்தில்
காமெடிக்கு இவர் மட்டுமே என்பதால் அடர்த்தியான திரைக்கதையில் பெரிய
ரிலீஃபாக இவர் இருக்கிறார். :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum