Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
Yuvan Yuvathi யுவன் யுவதி
3 posters
Page 1 of 1
Yuvan Yuvathi யுவன் யுவதி
காதலனை கைப் பிடிக்க அமெரிக்காவுக்குப்
பயணமாகக் காத்திருக்கும் ரீமா கல்லிங்கல். உசிலம்பட்டி கலாசாரத்தில்
இருந்து நழுவி அமெரிக்காவுக்குச் சென்று நவீன வாழ்க்கையை வாழ ஆசைப்படும்
பரத். இருவருக்குள்ளும் நடக்கும் காதல் விளையாட்டுகளே 'யுவன் யுவதி'.
'கடல் மீன்கள்' தொடங்கி 'மகராசன்' வரை கமலை நாயகனாகக் கொண்டு தொடர்ந்து
வெற்றிப் படங்களை தந்த, மூத்த இயக்குநர் ஜி.என்.ரங்கராஜனின் மகன்
ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கியிருக்கும் இரண்டாவது படம்.
இந்தியாவே வேண்டாம் எப்படியாவது அமெரிக்கா சென்று செட்டிலாகிவிட
வேண்டும் என்பது பரத்தின் கனவாக உள்ளது. ஆனால் உசிலம்பட்டியில் இருக்கும்
அவரது தந்தை சம்பத்தோ, மகனுக்கு உள்ளூரிலேயே பெண் பார்த்து கல்யாணம் செய்து
வைத்து அவனை உசிலம்பட்டியிலேயே தங்க வைத்து விட வேண்டும் என்று
ஆசைப்படுகிறார்.
அமெரிக்கா செல்ல விசா பெறுவதற்காக வரும்போது, ரீமாவை சந்திக்கிறார்
பரத். ஆனால் முதல் சந்திப்பிலேயே இருவரும் மோதிக்கொள்கிறார்கள். ஒவ்வொரு
முறையும் இப்படி முட்டிக்கொண்டாலும் பரத், ரீமாவை காதலிக்கிறார்.
ஒருகட்டத்தில் தொலைந்து போன தனது பாஸ்போர்ட் கிடைக்க பரத் முன்வந்து உதவி
செய்வதால் அவருடன் நட்பாகிறார் ரீமா. தனது காதலை ரீமாவிடம் பரத் சொல்லிவிட
நினைக்கும்போது, தனது கல்யாணத்துக்காகத்தான் ரீமா அமெரிக்காவே செல்கிறார்
என்ற விவரம் தெரியவருகிறது. இந்த சூழ்நிலையில் அப்பா பார்த்த பெண்ணை பரத்
திருமணம் செய்தாரா? அமெரிக்கா மாப்பிள்ளையை ரீமா மணந்தாரா? என்பதே
மீதிக்கதை.
'அழகான பொண்ணுக்கு திமிர் ஜாஸ்தின்னு கேள்விப்பட்டேன், அது உண்மைங்களா?'
என்று ரீமாவிடம் முதலில் முறைத்து 'நிறைய பேசற பொண்ணுங்க பசங்களை ரொம்ப
அலைய விடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்' என்று சரணடைவது வரை காதல்
காட்சிகளில் உருகி உருகி ரொமான்ஸ் காட்டும் பரத்துக்கு கச்சிதமான
கதாபாத்திரம். ஆனால் பல காட்சிகளில் உடல்மொழியில் தேவையற்ற அலட்டல்களை
குறைத்திருக்கலாம்.
பரத் நிஜமாகவே திறமையான டான்ஸர்! அப்படிப்பட்டவரையே நடனத்தில் துக்கிச்
சாப்பிட்டு விடுகிறார் அறிமுக நாயகி ரீமா கல்லிங்கல். நடிப்பிலும் ரீமா பல
காட்சிகளில் பரத்தை பின்னுக்கு தள்ளிவிடுகிறார்.
"என்னது உசிலம்பட்டிக்காரன்னா கேவலமா? டேய்.. சச்சின் டெண்டுல்கரே கேரளா
போனாலும் அவரை யாரும் கொச்சின் டெண்டுல்கரேன்னு கூப்பிட மாட்டாங்க..
சச்சின் டெண்டுல்கரேனு தான் கூப்பிடுவாங்க" என்று சந்தானத்துக்கே உரிய
கிண்டலில் தியேட்டர் அதிர்கிறது! சிஷெல்ஸில் பரத்தை தேடி அலைந்து
கறுப்பர்களிடம் சிக்கி அல்லோலப்படுவது கலகலப்பு.
பல படங்களில் வில்லனாக ரசித்த அதே சம்பத்துதான் பரத்தின் அப்பா. ஆ...
ஊ... என்றால் அரிவாளை தேடும் அவரது கையும் முரட்டு பார்வையும் கிராமத்து
ஆசாமிகளுக்கேயுரிய மிடுக்கு. அவ்வளவு கடுமையை கண்களில் காட்டினாலும்,
தியேட்டரையே நகைக்க வைக்கிறார் மனிதர்.
ஆனால் என்னதான் ஊரில் அதிகாரம் வாய்ந்த பெரிய மனிதராக இருந்தாலும், எந்த
நேரமும் நாலு சுமோக்கள், பத்துக்கும் மேலான மீசை வைத்த வெள்ளுடை
மனிதர்களுடன் இருப்பது கொஞ்சம் ஓவர்.
ஒரேயொரு காட்சியில் வரும் சத்யன் கலகலக்க வைக்கிறார்.
தமிழ்சினிமாவுக்கு வசனகர்த்தாவாக அறிமுகமான எஸ்.ராமகிருஷ்ணன், இந்த
படத்துக்கு எழுதியிருக்கும் வசனங்களில் நவீன வாழ்க்கை முறை தெறிக்கிறது.
குறிப்பாக கிராமத்தில் மகன் பரத்திடம் அப்பா சம்பத் பேசும் காட்சிகள்.
கதையில் முக்கிய இடம் பிடிக்கிறது சிஷெல்ஸ் தீவு. தீவைப் படம் பிடித்ததில் செலுத்திய கவனத்தை திரைக்கதையில் செலுத்தியிருக்கலாம்.
ஆச்சரியம், ரொமான்ஸ், சில்மிஷங்கள் இல்லாத காதல் படம். கண்கள் கலங்கி
வார்த்தைகளை மென்று விழுங்குவது, உணர்ச்சிவசப்படும் காட்சிகளில் கண்ர்
விடுவது என காதல் தோல்வி அடையும் நம்மூர் சினிமா நாயகன் போல் இல்லாமல் படம்
முழுவதுமாக மாடர்னாக வந்து நிற்கும் பரத்தின் கேரக்டர் பிளஸ்ஸா? மைனஸா?
அதெப்படி அமெரிக்காவுக்கு விசா கிடைக்காதவர்களுக்கெல்லாம், சிஷெல்ஸ்
தீவிற்கு விசா கொடுத்து விடுவார்களா என்ன...?, சென்னை சிட்டிக்குள் ஏ.சி.,
டி.சி., ஆஃபீஸ்தான் உண்டு என்பதை மறந்து, எஸ்.பி., ஆஃபீஸ் வரை போய்
வருகிறேன் மாப்பிளை என்று பரத்திடம் இன்ஸ் மாமா சொல்வது என படத்தில் நிறைய
லாஜிக் மிஸ்டேக்குகள்!
பரத்-ரீமா காதல் மேட்டர் போரடித்து விடக்கூடாது என்பதற்காக சந்தானத்தை
படத்தின் இறுதிக்காட்சிவரை பரத்கூடவே விட்டு காமெடி செய்திருக்கிறார்
இயக்குநர். என்றாலும் யுவன் யுவதி பெருசாக எடுபடவில்லை. அமெரிக்கா சென்று
ரீமாவை பரத் சந்திக்கும் காட்சிகள் மிகச்சாதாரணமாக உள்ளது. சென்ற இடத்தில்
மனசு மாறி பரத்தை ரீமா காதலிப்பதெல்லாம் பழைய பஞ்சாங்கம். இதுதான் நடக்கும்
என்பதை முதலிலேயே யூகித்து விட முடிகிறது என்பதால் ஸ்கிரிப்ட்டில்
சுவாரஸ்யமில்லை.
விஜய் ஆண்டனி இசையில் 'ஓ மை ஏஞ்சல்', 'மயக்க ஊசி' பாடல்கள் கேட்க
வைக்கின்றன. வசனங்களில் எஸ் ராமகிருஷ்ணனை ஓரிரு இடங்களில் பார்க்க
முடிகிறது. குறிப்பாக கிராமத்தில் மகனிடம் சம்பத் பேசும் காட்சிகள்.
கோவி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவில், சிஷெல்ஸூக்கே போய் வந்த உணர்வு. அதேபோல,
உசிலம்பட்டி என படத்தில் காட்டப்படும் இடங்களும் கண்களில் ஒற்றிக்
கொள்ளலாம் போல அத்தனை அழகு. கிராமத்தில் நடக்கும் ட-வடிவ கிணற்று
சண்டைக்காக சண்டை இயக்குநரை பாராட்டலாம்.
யுவன் யுவதி - தீவில் மட்டும்!
நடிகர்கள்
பரத், ரீமா கல்லிங்கல், சந்தானம், சம்பத், சத்யன்
இசை
விஜய் ஆண்டனி,
இயக்கம்
ஜி.என்.ஆர். குமரவேலன்
தயாரிப்பு
பைஜா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: Yuvan Yuvathi யுவன் யுவதி
காரணம் தெரியாமல் பிடிக்க வில்லை என்று சொல்லி விட்டீர்கள் பரத் நடிப்பு எப்படி உள்ளது பர்ஹாத் அத சொல்லுங்கபர்ஹாத் பாறூக் wrote:படம் பார்த்தேன் ஏனோ பிடிக்கல்ல..
:?:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: Yuvan Yuvathi யுவன் யுவதி
நண்பன் wrote:காரணம் தெரியாமல் பிடிக்க வில்லை என்று சொல்லி விட்டீர்கள் பரத் நடிப்பு எப்படி உள்ளது பர்ஹாத் அத சொல்லுங்கபர்ஹாத் பாறூக் wrote:படம் பார்த்தேன் ஏனோ பிடிக்கல்ல..
:?:
சந்தானம் படத்தில இருக்கு செம காமெடி இருக்கும்னு படம் பார்த்தேன்..
அதுவும் என்னை ஏமாத்திடுச்சு..
பரத்திட நடிப்பு ஓவர் பில்டப்..
Re: Yuvan Yuvathi யுவன் யுவதி
அப்போ நான் பார்கல உங்களுக்குப் பிடிக்காத படம் எனக்கு வேண்டாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சாட்டை படத்தில் யுவன்
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
» யுவன் சங்கர் ராஜா - ஷில்பா திருமண புகைப்படங்கள்
» யுவன் சங்கர் ராஜாவை 'மேஸ்ட்ரோ' என புகழ்ந்த செல்வராகவன்
» இஸ்லாத்தை தழுவிய இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
» யுவன் சங்கர் ராஜா - ஷில்பா திருமண புகைப்படங்கள்
» யுவன் சங்கர் ராஜாவை 'மேஸ்ட்ரோ' என புகழ்ந்த செல்வராகவன்
» இஸ்லாத்தை தழுவிய இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum