Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
விளையாட்டு என்பதே குழந்தைகளுக்கு மறந்து விட்டது
5 posters
Page 1 of 1
விளையாட்டு என்பதே குழந்தைகளுக்கு மறந்து விட்டது
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களின் வீதிகளில் சிறுவர்களும், சிறுமியர்களும்
கூட்டம் கூட்டமாய் கூடி விளையாடிக்கொண்டிருப்பார்கள். இன்றைக்கு தொலைக்காட்சிகளின் ஆக்கிரமிப்பு தவிர கல்வியில் போட்டி என்ற பெயரில் அளவிற்கு அதிகமான வீட்டுப்பாடங்களை திணிப்பனாலும் விளையாட்டு என்பதே குழந்தைகளுக்கு மறந்து விட்டது.
ஓடி ஆடி தெருக்களில் குழுவாக விளையாடியதை இனி கதைகளில் மட்டுமே படிக்க வேண்டும் போல ஏனென்றால் இன்றைய தலைமுறையினருக்கு விளையாட்டு என்றாலே அது கிரிக்கெட்தான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவிற்கு கிரிக்கெட்டின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. மறந்து கொண்டிருக்கும் கிராமத்து விளையாட்டுக்களை நினைவு படுத்தவே இந்த கட்டுரை.
Re: விளையாட்டு என்பதே குழந்தைகளுக்கு மறந்து விட்டது
கிராமத்து விளையாட்டுக்கள்
விளையாட்டுக்கள் வீட்டினுள் விளையாடுவது ஒரு வகை. வீட்டிற்கு வெளியே சென்று ஆடுவது மற்றொன்று.
ஆடுபுலி ஆட்டம், கபடி, சல்லிக் கட்டு, உறியடி, வழுக்கு மரம், சிலம்பாட்டம், வண்டிப் பந்தயம். கால்தூக்கிக் கணக்குப் பிள்ளை, பந்து, பச்சைக் குதிரை, பம்பரம்,
புளியங் கொட்டை, கபடி, கள்ளன் போலீஸ் இவை சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு
பல்லாங்குழி, தாயம், சில்லுக் கோடு, தட்டா மாலை, கும்மி,
கோலாட்டம், பாண்டி, கண்ணா மூச்சி, பூசணிக்காய், குலைகுலையா முந்திரிக்காய், எலியும் பூனையும், ஒரு குடம் தண்ணி ஊத்தி, பூப்பறிக்க வருகிறோம், கரகர வண்டி, சில்லுக் கோடு, பூப்பறிக்க வருகிறோம், கிச்சுக்
கிச்சுத் தாம்பாளம், பல்லாங்குழி, கொழுக்கட்டை, நொண்டி இவை சிறுமியர்கள் மற்றும் குமரிப்பெண்களுக்கான விளையாட்டு. இளமைக்காலம் முழுவதும் விளையாடித் திரிந்ததால்தான் நமக்கு இன்றுவரை விளையாட்டாய் இருக்கிறது வாழ்க்கை.
நாட்டுப்புறங்களில் 126 வகை விளையாட்டுக்கள் விளையாடப்பட்டதாக வரலாற்றுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவற்றில் கண்ணாமூச்சி, உருண்டை திரண்டை, அந்தக் கழுதை இந்தக் கழுதை, கல்லுக் கொடுத்தான் கல்லே வா, ராஜா மந்திரி, பருப்புக் கடைந்து, அத்தளி புத்தளி, கில்லாப் பறண்டி, அக்கக்கா கிளி செத்துப்போச்சு, சீப்பு விக்கிது. தொட்டுப் பிடிச்சு, ஐஸ் பால் போன்ற விளையாட்டுகள் ஒரே குழுவாக விளையாடும் விளையாட்டுகளாகும். இந்த விளையாட்டுகளில் தாய்ச்சி எனப்படும் தலைவர் ஒருவர் இடம் பெற்றிருப்பார்.
மெல்லவந்து மெல்லப்போ, பூச்சொல்லி போன்ற விளையாட்டுகளில் இரு உத்திதார் இருக்கிறார்கள். இவை அணி பிரிந்து விளையாடும் விளையாட்டுகள். குழுவாக பிரிந்து விளையாடும் சில விளையாட்டுக்களில் உத்திதாய்ச்சி எனப்படும் துணைத்தலைவர் இடம்பெற்றிருப்பார்.
Re: விளையாட்டு என்பதே குழந்தைகளுக்கு மறந்து விட்டது
கண்ணாமூச்சி
கண்ணாமூச்சி விளையாட்டில் தலைவராக கருதப்படுபவர், குழுவில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுக்கிறார். அவரை பட்டவர் என்று கூறுகின்றனர். அவரது கண்ணினை, தலைவர் மூடிக்கொள்ள, மற்ற குழந்தைகள், ஓடி ஒளிந்து கொள்வர். அவர்கள் ஓடி ஒளிந்து கொள்ளும் நேரத்தில் தலைவரானவர்
“கண்ணா மூச்சி ரேரே…
காரே முட்டே ரே ரே …
ஒருமுட்டையை தின்னுபுட்டு….
ஊளை முட்டைய கொண்டுவா ….” என்று பாடுவார்.
பாடல் முடிந்தவுடன் தலைவர் அந்த நபரின் கண்களைத் திறந்து விடுவார். ஒளிந்திருக்கும் குழந்தைகளை அந்த நபர் தேடிக்கொண்டு போகும் போது அவரிடம் சிக்கியவர் அவுட்டாகிறார். இதன் பின்னர் அவுட்டான நபரின் கண்கள் மூடப்படும். மீண்டும் விளையாட்டு தொடரும். தேடும் நபரிடம் அகப்படாமல் குழந்தைகள் அனைவரும் தலைவரை தொட்டுவிட்டால் அவர்கள் பழமாவார்கள். இதுபோன்ற சுவாரஸ்யமான விளையாட்டுகளை எல்லாம் கிராமங்களில் காண முடிவதில்லை என்பதுதான் வேதனை. சிறுவர்களின் உலகத்தை இப்பொழுது கார்டூன் சேனல்களும், வீடியோ விளையாட்டுக்களும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதால் நாட்டுப்புறவிளையாட்டுக்களை இனி கதைகளில் மட்டுமே படிக்கவேண்டியிருக்கும்.

ஒன்றா இரண்டா. நம்முடைய இலம்தளிர்கள் அவர்களின் இன்பமான இளமைக் காலத்தை முற்றிலும் இழந்து விட்டார்கள்... கையில் ஒரு சாதனத்தை வைத்துக் கொண்டு அவர்கள் கேம் விளையாடுவதும் இல்லாவிட்டால் தொலைக்காட்சியில் காட்டப்படும் வக்கிர காட்சிகளை பெற்றோருடன் பார்க்கவும் நிர்பந்திக்கப் படுகிறார்கள். அவர்களே ஏதாவது விளையாட்டுப் பெயர் சொல்லி வெளிய அடக கிளம்பினாலும் வேண்டாம் எனத் தடுக்கப் படுகின்றனர். போகட்டும் அவர்களின் இழப்பு பிற்காலத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய ஒரு சோகத்தை தான் தரும். விளையாட்டில் கிடைக்கும் ஆரோக்கியம்,சகிப்புத்தன்மை, நட்பு, மகிழ்ச்சி, வெல்லவேண்டும் எனத் துண்டும் வெறி ஆகியன அவர்கள் இழக்கும் விலைமதிக்க முடியாத விஷயங்கள்...
காலத்தின் கோலம வேறென்ன செய்வது,,,,
காலத்தின் கோலம வேறென்ன செய்வது,,,,
Re: விளையாட்டு என்பதே குழந்தைகளுக்கு மறந்து விட்டது
மலரும்நினைவுகளாய் ,மாறாத என்ற ஏக்கத்தோடு ,நானும் படித்தேன் .நன்றி தோழா .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: விளையாட்டு என்பதே குழந்தைகளுக்கு மறந்து விட்டது
இது போன்ற விளையாட்டுக்களை இப்படி செய்திகளிலும் கதைகளிலும்தான் படிக்க முடியும் இனிமேல் அப்படித்தான்
இன்றைக்கு தொலைக்காட்சிகளின் ஆக்கிரமிப்பு தவிர கல்வியில் போட்டி என்ற பெயரில் அளவிற்கு அதிகமான குழந்தைகள் மாறி விட்டனர் :oops:
இன்றைக்கு தொலைக்காட்சிகளின் ஆக்கிரமிப்பு தவிர கல்வியில் போட்டி என்ற பெயரில் அளவிற்கு அதிகமான குழந்தைகள் மாறி விட்டனர் :oops:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விளையாட்டு என்பதே குழந்தைகளுக்கு மறந்து விட்டது
மறந்து கொண்டிருக்கும் கிராமத்து விளையாட்டுக்களை நினைவு படுத்தவே இந்த கட்டுரை.
குழந்தைகளை விளையாடவே அனுமதிக்காத நவீன யுவதிகள், இருக்கும் வரை கிராமத்து விளையாட்டுகள் நிலை ?
குழந்தைகளை விளையாடவே அனுமதிக்காத நவீன யுவதிகள், இருக்கும் வரை கிராமத்து விளையாட்டுகள் நிலை ?
Re: விளையாட்டு என்பதே குழந்தைகளுக்கு மறந்து விட்டது
Atchaya wrote:மறந்து கொண்டிருக்கும் கிராமத்து விளையாட்டுக்களை நினைவு படுத்தவே இந்த கட்டுரை.
குழந்தைகளை விளையாடவே அனுமதிக்காத நவீன யுவதிகள், இருக்கும் வரை கிராமத்து விளையாட்டுகள் நிலை ?
மறைமுகமா யாரையோ திட்டுவது மாதிரி தெரிகிறது ? :,;: :,;: :,;:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum