Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு
+4
lafeer
kalainilaa
முனாஸ் சுலைமான்
gud boy
8 posters
Page 1 of 1
கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு
கோலா குளிர்பானங்களை பருகுவோர் எண்ணிக்கை உலகளவில் அதிகம். கோடிக் கணக்கான லிட்டர் கோலா பானங்கள் ஆண்டுதோறும் பருகப்படுகின்றன. இது போன்ற பானங்கள் இன்றி, உயிர் வாழ முடியாது என்றே கூட பலர் நினைக்கின்றனர். கோககோலா, பெப்சி, லிம்கா போன்றவை, பட்டி தொட்டிகளில் கூட கிடைக்கின்றன. சூப்பர் மார்க்கெட்டுகளில், கோலா பானங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை பருக, சினிமா நட்சத்திரங்களும் ஊக்குவிக் கின்றனர். கோலா பானங்களில் உள்ள ஆபத்தை உணராமல், கர்ப்பிணிகள், குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளோர் கூட, இவற்றை பருகுகின்றனர்.
இந்த பானங்களில் அப்படி என்ன உள்ளது? என்ன ஆபத்து?
பாஸ்பாரிக் அமிலம், சர்க்கரை, காபீன், நிறமி மற்றும் வாசனை ஊட்டி ஆகியவை இதில் உள்ளன. துருவை கரைத்தல், ஆணியை கரைத்தல், சுண்ணாம்பை கரைத்தல் ஆகிய பணிகளைத் திறம்பட செய்யும், பாஸ்பாரிக் அமிலம், இதில், 55 சதவீதம் உள்ளது. இதனால், கோலாவில் அமிலத்தன்மை, 2.6 பி.எச்., அளவு எகிறுகிறது. உணவை பதப்படுத்த பயன்படும் வினிகரும், இதே அளவு அமிலத்தன்மை கொண்டது. கோலாவில் சர்க்கரையும், வாசனை ஊட்டியும் சேர்க்கப் படுவதால், வினிகரை விட சுவையாக உள்ளது.
வினிகரை குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?
கோலாவை குடித்தால் பற்கள் பாதிப்படையும்; பல்லில் குழி விழும். நம் பல்லை, இது போன்ற பானங்களில் இரண்டு நாட்கள் போட்டு வைத்தால், பல் மிருதுவாகி விடும். 250 மி.லி., பானத்தில், 150 கலோரிச் சத்து உள்ளது. உடலுக்குத் தேவை யான சத்துக் களோ, வைட்டமினோ, தாதுப் பொருட்களோ இதில் இல்லை. இதில் உள்ள சர்க்கரை, உடனடியாக ரத்தத்தில் கலந்து, கொழுப்பாக மாறுகிறது. தொடர்ந்து பருகினால், உடல் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. குழந்தைகள் இந்த பானத்திற்கு வெகு சீக்கிரம் அடிமையாகி விடுகின்றனர். சர்க்கரையும், காபீனும் இதில் இருப்பதால், இந்த நிலை ஏற்படுகிறது. ஒரு கப் காபியில் 70 – 125, டீயில் 15 – 75, கோகோவில் 10 – 17 மற்றும் ஒரு சாக்லேட் கட்டியில், 60 – 70 மி.கி., அளவுள்ள காபீன், 360 மி.லி., கோலா பானத்தில், 50 – 65 அளவு உள் ளது. இதில் உள்ள அமிலமும், காபீனும், வயிற்றில் அல்சரை அதிகரிக்கின்றன. உடலி லிருந்து சுண்ணாம்புச் சத்து வெளியேற, காபீன் காரணமாக அமைகிறது. காபீனுடன், குளிர் பானங்களில் உள்ள பாஸ்பரசும் சேர்ந்து, எலும்பு தேய் மானத்தை உருவாக்கி விடுகின்றன. இதனால், எலும்பு முறிவு ஏற் பட்டு விடுகிறது. காபீன், இதய செயல்பாட்டையும், மத்திய நரம்பு மண்டலத்தையும் ஊக்குவிக்கிறது. இதனால், அதிக இதயத் துடிப்பு மற்றும் தூக்கமின்மை ஆகியவை ஏற்படு கின்றன. குழந்தைகள் அதிகத் துடிப்புடன், தூக்கம் வராமல் அவதிப்படுவர். தூங்கினாலும், அடிக்கடி விழித்துக் கொள்வர். இதனால், பெற்றோர் திண்டாடும் நிலை ஏற்படும். காபீன், ரத்த அழுத்தத் தையும் அதிகரிக்கச் செய்யும்.
எனவே, எப்போதும் படபடப்பாய் இருப்பவர்கள், காபீன் அடங்கிய பானங்களை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள், நாள் ஒன்றுக்கு, 300 மி.கி., அளவு காபீன் பருகலாம்; அதற்கு மேல் பருகக் கூடாது. இந்த பானங்களை குடிப்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு எந்த பலனும் ஏற்படாது; பணம் செலவழிவது மட்டுமே மிஞ்சும்.
நன்றி-தினமலர்:
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு
இன்று இப்பானங்களை குடிப்பதனை நிறையப்பேர் நிறுத்தியுள்ளனர் உதாரணமாக பேஸ்புக்கில் எனது அறிக்கையை வாசித்த சில தோழர்கள் இனிமேல் நாங்கள் இப்படியான பானங்கள் அறுந்த மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள் இப்படி எல்லாரும் சொன்னால் நன்றாக இருக்கும்.
Re: கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு
முனாஸ் சுலைமான் wrote:இன்று இப்பானங்களை குடிப்பதனை நிறையப்பேர் நிறுத்தியுள்ளனர் உதாரணமாக பேஸ்புக்கில் எனது அறிக்கையை வாசித்த சில தோழர்கள் இனிமேல் நாங்கள் இப்படியான பானங்கள் அறுந்த மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள் இப்படி எல்லாரும் சொன்னால் நன்றாக இருக்கும்.
இதை தயாரிக்கும் ,நிறுவனமே ,எனது நிறுவனத்தின் ,ஒரு பகுதி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு
தகவல்தந்தமைக்கு நன்றி கொஞ்சம் உசார இருந்தா சரி
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு
lafeer2020 wrote:தகவல்தந்தமைக்கு நன்றி கொஞ்சம் உசார இருந்தா சரி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு
மிக்க நன்றி... நல்ல பதிவு. இதை சிறிய குழந்தைகளுக்கு வேறு நம் குடும்பங்களில் பழக்கியுள்ளனா்.
கொக்ககோலா பானத்தில் ஒரு சிறிய ஆட்டு எழும்பினை போட்டு வைத்துவிட்டு 4 நாள் கழித்து பாருங்கள் ... என்ன பாதிப்பு நமது குடலுக்கு வரும் என்று தெரியும்.
கொக்ககோலா பானத்தில் ஒரு சிறிய ஆட்டு எழும்பினை போட்டு வைத்துவிட்டு 4 நாள் கழித்து பாருங்கள் ... என்ன பாதிப்பு நமது குடலுக்கு வரும் என்று தெரியும்.
anandstarct- புதுமுகம்
- பதிவுகள்:- : 10
மதிப்பீடுகள் : 10
Re: கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு
ஐஸ் கிரீம் கடைகளை வாங்குவதற்கு தெரிவு செய்யும் முன்னா், மலிவான ஒன்றை வாங்கி அதில் சிறிது தூள் உப்பினை தூவி வைத்து விட்டு 2 நாள் கழித்து பாருங்கள். புழுக்கள் நெழிந்தால் அந்த கடை பக்கம் போகாதீ்ர்கள்.
anandstarct- புதுமுகம்
- பதிவுகள்:- : 10
மதிப்பீடுகள் : 10
Re: கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு
anandstarct wrote:ஐஸ் கிரீம் கடைகளை வாங்குவதற்கு தெரிவு செய்யும் முன்னா், மலிவான ஒன்றை வாங்கி அதில் சிறிது தூள் உப்பினை தூவி வைத்து விட்டு 2 நாள் கழித்து பாருங்கள். புழுக்கள் நெழிந்தால் அந்த கடை பக்கம் போகாதீ்ர்கள்.
புது அறிவுக்கு :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum