Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதைby rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
இந்திய மருந்து சந்தை ரூ.2 லட்சம் கோடியாக உயரும்
Page 1 of 1
இந்திய மருந்து சந்தை ரூ.2 லட்சம் கோடியாக உயரும்
ராஜ்கோட் : இந்திய மருந்து சந்தையின் மதிப்பு, வரும் 2020ம் ஆண்டில், 2 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இதையடுத்து, மருந்து பொருள்களுக்கான சந்தையில், முன்னணி 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெறும் என ஐகான் மார்க்கெட்டிங் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்நிறுவனத்தின் நிறுவனரும், முதன்மை ஆலோசகருமான அசாஸ்மோதிவாலா கூறும்போது, "சர்வதேச மருந்து சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில், இச்சந்தையின் வளர்ச்சி 7 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2020ம் ஆண்டில், உலகளவிலான மருந்து சந்தையின் மதிப்பு 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி டாலராக உயரும்' என்று தெரிவித்தார். இந்தியாவை பொறுத்தவரை, ஒருவர் தமது மொத்த வருவாயில், மருந்துகளுக்காக ஒரு சதவீத தொகையை செலவிடுகிறார். இது, அடுத்த 9 ஆண்டுகள் வரை தொடரும். எனினும், தனி நபர் வருவாய் உயர்ந்து வருவதால், மருந்துகளுக்காக செலவிடுவது மும்மடங்காக அதிகரித்து 33 டாலர் (1,538 ரூபாய்) என்ற அளவிற்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நமது நாட்டில், வரும் 2020ம் ஆண்டுவாக்கில், ஆரோக்கிய காப்பீட்டுதாரர்களின் எண்ணிக்கை 65 கோடியாக உயரும். அதே சமயம், இதே காலத்தில், இத்துறை சார்ந்த தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் ஆண்டு வளர்ச்சி 15 சதவீதம் என்ற அளவிற்கு உயரும். அடுத்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் ஆரோக்கிய பராமரிப்பு துறையின் சந்தை மதிப்பு 27 ஆயிரத்து 560 கோடி டாலராக (12 லட்சத்து 67 ஆயிரத்து 760 கோடி ரூபாய்) அதிகரிக்கும் என, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கலாச்சாரம், மாறி வரும் உணவுப் பழக்கம், மன அழுத்தம், அதிகரித்து வரும் நோய்கள் என பல்வேறு காரணங்களால், இந்திய மருந்து சந்தையின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. பெருகி வரும் நீரிழிவு நோய், பல்வேறு புதிய மருத்துவ முறைகளின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. இது, இவ்வகை நோய்க்கான புதிய மருந்துகளின் கண்டுபிடிப்புகளுக்கும், விற்பனைக்கு துணைபுரிகிறது. வரும் 2020ம் ஆண்டில், நீரிழிவு நோயின் தாக்கம் 6 மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுவும், மருந்து துறையின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் தற்போது 5 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடிய வியாதியால் ஆண்டுதோறும் 40 லட்சம் பேர் இறப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. நீரிழிவு மட்டுமின்றி, வேறு பல நோய்களும் மருந்து துறையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. குறிப்பாக, ஆஸ்துமா, இதய நோய், சிறுநீரக கோளாறுகள், எலும்பு சார்ந்த நோய்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, இவ்வகை நோய்களுக்கான மருந்துகளின் தேவைப்பாடு உயர்ந்து வருகிறது. வரும் 2020ம் ஆண்டில், இந்திய மருந்து சந்தையில், இத்தகைய மருந்துகளின் பங்களிப்பு 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன், உயிரி தொழில்நுட்பத்திலான மருந்துகள், அடிப்படை பண்பியல் மருந்துகள் மற்றும் மருந்துகளை பேக்கிங் செய்யும் பிரிவுகளும் சிறப்பான வளர்ச்சியை கண்டு வருகின்றன. இப்பிரிவுகளின் வளர்ச்சி, ஒட்டுமொத்த மருந்து சந்தையின் வர்த்தகத்தை அதிகரிக்க துணை புரிகின்றது. கடந்த 5 ஆண்டுகளில், பெருநகரங்கள் மற்றும் சிறிய நகர்புறங்கள், 14-15 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளன. இவை, இந்திய மருந்து சந்தையில் 60 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. இவற்றின் சந்தை மதிப்பு, வரும் 2020ம் ஆண்டில் நாட்டின் மருந்து சந்தையில், 3,300 கோடி டாலர் என்ற அளவிற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் ஒட்டு மொத்த மருந்து சந்தையில், கிராமப்புறங்களின் பங்களிப்பு 20 சதவீதமாக உள்ளது. இது, அடுத்த 9 ஆண்டுகளில் 25 சதவீதமாக உயரும் என்று, ஐகான் மார்க்கெட்டிங் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மருந்து நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவிற்கு, இந்திய மருந்து நிறுவனங்களும் வேகமாக வளர்ச்சி பெற்று வருகின்றன. மருந்து துறையின் வளர்ச்சி காரணமாக, பல்வேறு இந்திய மருந்து நிறுவனங்கள், அயல்நாட்டு நிறுவனங்களை கையகப்படுத்துவது அல்லது கூட்டாக செயல்படுவது குறித்த திட்டங்களில் ஈடுபட்டுள்ளன.
Similar topics
» வாகன உதிரிபாகங்கள் சந்தை மதிப்பு ரூ.5லட்சம் கோடியாக வளர்ச்சி காணும்
» 4 ஆண்டுகளில் செல்போன் இணைப்புகள் எண்ணிக்கை 25 கோடியாக உயரும்
» அடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 219 கோடியாக உயரும்
» 2100-ல் உலக மக்கள் தொகை ஆயிரத்து நூறு கோடியாக உயரும்
» பரிசுத் தொகையை ரூ. 5 கோடியாக உயர்த்த இந்திய வீரர்கள் கோரிக்கை
» 4 ஆண்டுகளில் செல்போன் இணைப்புகள் எண்ணிக்கை 25 கோடியாக உயரும்
» அடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 219 கோடியாக உயரும்
» 2100-ல் உலக மக்கள் தொகை ஆயிரத்து நூறு கோடியாக உயரும்
» பரிசுத் தொகையை ரூ. 5 கோடியாக உயர்த்த இந்திய வீரர்கள் கோரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum