Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
+2
நேசமுடன் ஹாசிம்
செய்தாலி
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
மணமாலை சூடலுக்குப் பின்
மங்கள கரமாக அரங்கேறுகிறது
கடமையான கட்டில் சடங்குகள்
உறவுகள் தாம்பத்யம் உணரும்முன்
நடுவீட்டில் அவிழ்க்கப் படுகிறது
சில தொட்டில் கயிறுகள்
மூன்றாம் வயிற்றுக்கான ஓட்டம்
தொடரும் நெட்டோட்ட முடிவில்
உதிர்கிறது நல்ல பருவங்கள்
காலச் சக்கரத்தில் விழுந்து
செல்லரித்துச் சிதைந்து விடுகிறது
அந்த நாட்களின் நிகழ்வுகள்
தலை தூக்கும் வாரிசுகள்
உறவுக் கடமைகள் குறைந்து
சற்று இளைப்பாறும் தருணங்கள்
பழுத்து நரைத்த பருவம்
தனிமைகளில் எட்டிப் பார்க்கிறது
அகத்தில் புதைந்த ஆசைகள்
பருவம் மறந்த ஆசைகள்
ஒத்துழைக்க மறுக்கும் உடல்
காலம் போர்த்திய நோய்கள்
ஒவ்வொரு இரவுக்கும் காரணங்கள்
உறவுகளில் விழும் இடைவெளிகள்
காலங்கடக்கும் கட்டில் பந்தம்
இருளை இம்சை செய்யும்
வெட்டங்களை அணைத்த பின்னும்
அணையாமல் கட்டில் ஏக்கம்
அகத்தில் சுவாசமுட்டும் ஆசைகள்
நாளத்தில் ஸ்தம்பிக்கும் குருதி
மௌனமாகிறது துடிக்கும் இதயங்கள்
உறவில் கிட்டா உறவுத் தேடல்
நடுவீதிகளில் நாணம் கெட்டு
எங்கோ வேலிதாண்டும் ஆசைகள்
உறவு விலக்கப் படுகையில்
வாழ்நாளின் ஆயுள் குறைகிறது
நவ மருத்துவ குறிப்புக்கள்
உறவில் உறவை நீட்டுங்கள்
உடலில் நோயை துரத்துங்கள்
ஐம்பதில் இளமையை சுவையுங்கள்
-செய்தாலி
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
அறுபதிலும் ஆசைவரும் என்ற வரி ஞாபகத்திற்கு வந்தது கவிதையினை படித்த போது உண்மைதான் இளமை வாலிபமாகி முதுமையாகும் தருணம் அதிலும் தொடரவேண்டும் வாலிபத்தின் முறுக்கு என்று பிரதிபலிக்கும் உங்களின் எண்ணம்
வயது ஏறினாலும் உடல் தேவை குறைவதில்லை 85 வயதிலும் குழந்தை பெற்றுக் கொண்ட வாலிபர்களைப் பார்க்கிறோம் அவர்கள் வாழ்வில் ஏக்கங்கள் பிரச்சினைகள் இருப்பதாக தெரிவதில்லை
இவைகளைப் புரிந்து கொள்ளாத குழந்தைகள் தான் தன் பெற்றோரை பாடாத பாடுபடுத்தி இருவரையும் பிரித்து பெண்வீட்டில் ஒருவரும் மகன் வீட்டில் ஒருவருமாக தனிமைப்படுத்தி அவஷ்த்தைக்குள்ளாக்குகிறார்கள் அவர்கள் எமது திருப்பதி கருதும் போது முதுமையானவர்களின் திருப்தியையும் நாம் ஏன் கருதக்கூடாது என்ற உங்களின் கேள்விகள் கவிதையில் நன்றாக வினவி நிற்கிறது உங்களை அடைந்த முதுமையானவர்கள் பாக்கியசாலிகளே நல்ல சிந்தனை பாராட்டுகள் தோழரே

நேசமுடன் ஹாசிம் wrote:அறுபதிலும் ஆசைவரும் என்ற வரி ஞாபகத்திற்கு வந்தது கவிதையினை படித்த போது உண்மைதான் இளமை வாலிபமாகி முதுமையாகும் தருணம் அதிலும் தொடரவேண்டும் வாலிபத்தின் முறுக்கு என்று பிரதிபலிக்கும் உங்களின் எண்ணம்
வயது ஏறினாலும் உடல் தேவை குறைவதில்லை 85 வயதிலும் குழந்தை பெற்றுக் கொண்ட வாலிபர்களைப் பார்க்கிறோம் அவர்கள் வாழ்வில் ஏக்கங்கள் பிரச்சினைகள் இருப்பதாக தெரிவதில்லை
இவைகளைப் புரிந்து கொள்ளாத குழந்தைகள் தான் தன் பெற்றோரை பாடாத பாடுபடுத்தி இருவரையும் பிரித்து பெண்வீட்டில் ஒருவரும் மகன் வீட்டில் ஒருவருமாக தனிமைப்படுத்தி அவஷ்த்தைக்குள்ளாக்குகிறார்கள் அவர்கள் எமது திருப்பதி கருதும் போது முதுமையானவர்களின் திருப்தியையும் நாம் ஏன் கருதக்கூடாது என்ற உங்களின் கேள்விகள் கவிதையில் நன்றாக வினவி நிற்கிறது உங்களை அடைந்த முதுமையானவர்கள் பாக்கியசாலிகளே நல்ல சிந்தனை பாராட்டுகள் தோழரே
ரெம்ப நன்றி செல்லம்
உங்கள் மீது மதிப்பு கூடியதால் அப்படி சொன்னேன்
இதை பதிந்து இதுவரை யாரும் பின்னூட்டம் இடவில்லை
ஒரு நல்ல விஷயத்தை கருவாக கொண்டு எழுதப்பட்ட இந்த கிறுக்கலை யாரும் புரிந்து கொள்ளவில்லையே
என்ற ஒரு சின்ன மண வருத்தம் இருந்தது எதுவும் தவறுதலாக எழுதி விட்டோமோ என்ற ஒரு எண்ணமும் உறுத்தியது
ஒரு மருத்துவ குறிப்பில் உறவை குறித்து ஒரு கட்டுரை வாசித்தேன்
ஆரோக்கிய மானவாழ்விற்கும் ,உடல் நலத்திகும் உடல் உறவு நன்மை பயக்கும் என்பதும்
ஐம்பது கடந்த பின்னும் துணைவி விரும்பினால் உறவு கொள்ளுங்கள் என்றும் இருந்தது
நிறை ஆண் பெண்களுக்கு இந்த வயதில் உறவு கிடைக்காத நிலை வருவதால் மண அழுத்தம்
ஏற்படுவதாகவும் அதில் எழுதி இருந்தது
அதை உறவுகளுடன் பகிர ஆசைப்பட்டேன் அதனால் இந்த கிறுக்கல் உருவானது
உங்களின் புரிதலுக்கு என்னோட :+=+: :+=+: :+=+: உறவே
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
நான் காலையிலேயே படித்திருந்தேன் எழுதிய போது வேலைப்பழு வந்தது அதனால் விட்டகன்றேன் இப்போதுதான் வந்து மழுவதுமாக இருதடவை படித்தேன் மிகவும் பிடித்திருந்தது உண்மையான தேவையான உணரவேண்டிய கரு இதைப் புரிந்து கொள்ளாத இளயவர்களுக்கான வேண்டுகோள்தான் இக்கவிதை பாராட்டுகள்
Last edited by நேசமுடன் ஹாசிம் on Mon 19 Sep 2011 - 14:15; edited 1 time in total
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
நேசமுடன் ஹாசிம் wrote:நான் காலையிலேயே படித்திருந்தேன் எழுதிய போது வேலைப்பழு வந்தது அதனால் விட்டகன்றேன் இப்போதுதான் வந்து மழுவதுமாக இருதடவை படித்தேன் மிகவும் பிடித்திருந்தது உண்மையான தேவையான உணரவேண்டிய கரு இதைப் புரிந்து கொள்ளாத இளயவர்களுக்கான வேண்டுகோள்தான் இக்கவிதை பாராட்டுகள்
மிக்க நன்றி உறவே
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
அருமையான கருத்தினை கவியில் எடுத்துரைத்த எங்கள் செய்தாலி சார் அவர்களுக்கு நன்றி
அருமையான கவிவரிகள் தொடருங்கள் சார்
அருமையான கவிவரிகள் தொடருங்கள் சார்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
அப்துல் றிமாஸ் wrote:அருமையான கருத்தினை கவியில் எடுத்துரைத்த எங்கள் செய்தாலி சார் அவர்களுக்கு நன்றி
அருமையான கவிவரிகள் தொடருங்கள் சார்
மிக்க நன்றி உறவே
சார் வேண்டாம் உறவே நான் உங்களைப் போன்ற ஒரு சிறுவன்தான்
நண்பன் ,தோழர் உறவு இதில் எதுவேண்டுமானாலும் அழையுங்கள்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி உறவே
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
சரிங்க நண்பா எப்புடி............................செய்தாலி wrote:அப்துல் றிமாஸ் wrote:அருமையான கருத்தினை கவியில் எடுத்துரைத்த எங்கள் செய்தாலி சார் அவர்களுக்கு நன்றி
அருமையான கவிவரிகள் தொடருங்கள் சார்
மிக்க நன்றி உறவே
சார் வேண்டாம் உறவே நான் உங்களைப் போன்ற ஒரு சிறுவன்தான்
நண்பன் ,தோழர் உறவு இதில் எதுவேண்டுமானாலும் அழையுங்கள்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி உறவே
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
அப்துல் றிமாஸ் wrote:சரிங்க நண்பா எப்புடி............................செய்தாலி wrote:அப்துல் றிமாஸ் wrote:அருமையான கருத்தினை கவியில் எடுத்துரைத்த எங்கள் செய்தாலி சார் அவர்களுக்கு நன்றி
அருமையான கவிவரிகள் தொடருங்கள் சார்
மிக்க நன்றி உறவே
சார் வேண்டாம் உறவே நான் உங்களைப் போன்ற ஒரு சிறுவன்தான்
நண்பன் ,தோழர் உறவு இதில் எதுவேண்டுமானாலும் அழையுங்கள்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி உறவே
உறவை ஈர்க்கும் காந்தம் நட்பு
இப்படியே அழையுங்கள் நண்பா
நன்றி
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
செய்தாலி wrote:அப்துல் றிமாஸ் wrote:அருமையான கருத்தினை கவியில் எடுத்துரைத்த எங்கள் செய்தாலி சார் அவர்களுக்கு நன்றி
அருமையான கவிவரிகள் தொடருங்கள் சார்
மிக்க நன்றி உறவே
சார் வேண்டாம் உறவே நான் உங்களைப் போன்ற ஒரு சிறுவன்தான்
நண்பன் ,தோழர் உறவு இதில் எதுவேண்டுமானாலும் அழையுங்கள்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி உறவே
அதுதானே அதென்ன சார்
ஒன்று சொல்லட்டுமா சார் என்று சொல்லும்போது மிகவும் தூரமாகும் மரியாதை மிகுதியால் தோழா சகோதரா நண்பா என்னும்போது நட்பில் மிகவும் நெருக்கத்தைக் கொண்டு வரும்
அதற்காக சார் என்று அழைக்க வேண்டியவர்களை சார்என்றே அழைக்கணும் @.
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
ஆகா என்ன அருமையான வரிகள்
mr.செய்தாலி :!+: :!+:
mr.செய்தாலி :!+: :!+:
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
அனுபவம் பேசுது :,;: :,;: :,;:நேசமுடன் ஹாசிம் wrote:அறுபதிலும் ஆசைவரும் என்ற வரி ஞாபகத்திற்கு வந்தது கவிதையினை படித்த போது உண்மைதான் இளமை வாலிபமாகி முதுமையாகும் தருணம் அதிலும் தொடரவேண்டும் வாலிபத்தின் முறுக்கு என்று பிரதிபலிக்கும் உங்களின் எண்ணம்
வயது ஏறினாலும் உடல் தேவை குறைவதில்லை 85 வயதிலும் குழந்தை பெற்றுக் கொண்ட வாலிபர்களைப் பார்க்கிறோம் அவர்கள் வாழ்வில் ஏக்கங்கள் பிரச்சினைகள் இருப்பதாக தெரிவதில்லை
இவைகளைப் புரிந்து கொள்ளாத குழந்தைகள் தான் தன் பெற்றோரை பாடாத பாடுபடுத்தி இருவரையும் பிரித்து பெண்வீட்டில் ஒருவரும் மகன் வீட்டில் ஒருவருமாக தனிமைப்படுத்தி அவஷ்த்தைக்குள்ளாக்குகிறார்கள் அவர்கள் எமது திருப்பதி கருதும் போது முதுமையானவர்களின் திருப்தியையும் நாம் ஏன் கருதக்கூடாது என்ற உங்களின் கேள்விகள் கவிதையில் நன்றாக வினவி நிற்கிறது உங்களை அடைந்த முதுமையானவர்கள் பாக்கியசாலிகளே நல்ல சிந்தனை பாராட்டுகள் தோழரே
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
நேசமுடன் ஹாசிம் wrote:செய்தாலி wrote:அப்துல் றிமாஸ் wrote:அருமையான கருத்தினை கவியில் எடுத்துரைத்த எங்கள் செய்தாலி சார் அவர்களுக்கு நன்றி
அருமையான கவிவரிகள் தொடருங்கள் சார்
மிக்க நன்றி உறவே
சார் வேண்டாம் உறவே நான் உங்களைப் போன்ற ஒரு சிறுவன்தான்
நண்பன் ,தோழர் உறவு இதில் எதுவேண்டுமானாலும் அழையுங்கள்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி உறவே
அதுதானே அதென்ன சார்
ஒன்று சொல்லட்டுமா சார் என்று சொல்லும்போது மிகவும் தூரமாகும் மரியாதை மிகுதியால் தோழா சகோதரா நண்பா என்னும்போது நட்பில் மிகவும் நெருக்கத்தைக் கொண்டு வரும்
அதற்காக சார் என்று அழைக்க வேண்டியவர்களை சார்என்றே அழைக்கணும் @.
நன்றி தோழா உங்களின் கருத்துக்கு
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
ஷஹி wrote:ஆகா என்ன அருமையான வரிகள்
mr.செய்தாலி :!+: :!+:
மிக்க நன்றி உறவே
Mr . வேண்டாம் நண்பா நண்பன் ,தோழன் இப்படி அழையுங்கள்
நன்றி நண்பா
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
ஷஹி wrote:அனுபவம் பேசுது :,;: :,;: :,;:நேசமுடன் ஹாசிம் wrote:அறுபதிலும் ஆசைவரும் என்ற வரி ஞாபகத்திற்கு வந்தது கவிதையினை படித்த போது உண்மைதான் இளமை வாலிபமாகி முதுமையாகும் தருணம் அதிலும் தொடரவேண்டும் வாலிபத்தின் முறுக்கு என்று பிரதிபலிக்கும் உங்களின் எண்ணம்
வயது ஏறினாலும் உடல் தேவை குறைவதில்லை 85 வயதிலும் குழந்தை பெற்றுக் கொண்ட வாலிபர்களைப் பார்க்கிறோம் அவர்கள் வாழ்வில் ஏக்கங்கள் பிரச்சினைகள் இருப்பதாக தெரிவதில்லை
இவைகளைப் புரிந்து கொள்ளாத குழந்தைகள் தான் தன் பெற்றோரை பாடாத பாடுபடுத்தி இருவரையும் பிரித்து பெண்வீட்டில் ஒருவரும் மகன் வீட்டில் ஒருவருமாக தனிமைப்படுத்தி அவஷ்த்தைக்குள்ளாக்குகிறார்கள் அவர்கள் எமது திருப்பதி கருதும் போது முதுமையானவர்களின் திருப்தியையும் நாம் ஏன் கருதக்கூடாது என்ற உங்களின் கேள்விகள் கவிதையில் நன்றாக வினவி நிற்கிறது உங்களை அடைந்த முதுமையானவர்கள் பாக்கியசாலிகளே நல்ல சிந்தனை பாராட்டுகள் தோழரே
எந்த அனுபவத்த சொல்றிங்க
இன்னும் அந்த வயசு வரல வரும்போது உங்ககிட்ட சொல்றன் தேவையானத்த தயார்செய்விங்கதானே
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
இங்கே செய்தாலியின் கவிதை மனித உடலின் வயதுக்கு மீறிய வாலிப ஆசியை சாடுவது போல சாடி..
என்று...
கவிதையின் இறுதி வரிகளில் பாலியல் ஆசையால் மனிதன் ஒழுக்கக் கேடுகளில் ஈடுபடும் போது அவனுக்கு விளையும் துன்பங்களையும் புட்டுப் புட்டு வைக்கிறார் இறுதியில் உறவோடு உறவை நிட்டினால் உடலிலிருந்தும் நோயை விரட்டலாம் என மூப்புக்கு மருந்தும் சொல்கிறார்..... இந்த அனுபவம் மிக்க அன்பு இளவல் கவிஞர் செய்தாலி... சொன்னது அததனையும் முக்காலும் ஒப்புக்கொள்ளும் முழு உண்மை...
வாழ்க தமிழ்.
உறவில் கிட்டா உறவுத் தேடல்
நடுவீதிகளில் நாணம் கெட்டு
எங்கோ வேலிதாண்டும் ஆசைகள்
உறவு விலக்கப் படுகையில்
வாழ்நாளின் ஆயுள் குறைகிறது
நவ மருத்துவ குறிப்புக்கள்
உறவில் உறவை நீட்டுங்கள்
உடலில் நோயை துரத்துங்கள்
ஐம்பதில் இளமையை சுவையுங்கள்
என்று...
கவிதையின் இறுதி வரிகளில் பாலியல் ஆசையால் மனிதன் ஒழுக்கக் கேடுகளில் ஈடுபடும் போது அவனுக்கு விளையும் துன்பங்களையும் புட்டுப் புட்டு வைக்கிறார் இறுதியில் உறவோடு உறவை நிட்டினால் உடலிலிருந்தும் நோயை விரட்டலாம் என மூப்புக்கு மருந்தும் சொல்கிறார்..... இந்த அனுபவம் மிக்க அன்பு இளவல் கவிஞர் செய்தாலி... சொன்னது அததனையும் முக்காலும் ஒப்புக்கொள்ளும் முழு உண்மை...
வாழ்க தமிழ்.
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
அப்துல்லாஹ் wrote:இங்கே செய்தாலியின் கவிதை மனித உடலின் வயதுக்கு மீறிய வாலிப ஆசியை சாடுவது போல சாடி..

@. @. :];:

இந்த கிறுக்கலில் 75 /100 இவ்வளவுதான் உண்மை இருக்கா :!#:
அடுத்த கிறுக்கலில் 25 / முயற்சி செய்கிறேன் ஆசிரியரே :)
25 / இந்த இது இல்லாமல் போனது என் வயது மற்றும் அனுபவம் காரணமாக இருக்கலாம் :.”:
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி )((
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
மார்க்கு போடுறதெல்லாம் மறந்தாச்சு என் அன்பு மாணவரே செய்தாலி...செய்தாலி wrote:அப்துல்லாஹ் wrote:இங்கே செய்தாலியின் கவிதை மனித உடலின் வயதுக்கு மீறிய வாலிப ஆசியை சாடுவது போல சாடி..
உறவில் கிட்டா உறவுத் தேடல்
நடுவீதிகளில் நாணம் கெட்டு
எங்கோ வேலிதாண்டும் ஆசைகள்
உறவு விலக்கப் படுகையில்
வாழ்நாளின் ஆயுள் குறைகிறது
நவ மருத்துவ குறிப்புக்கள்
உறவில் உறவை நீட்டுங்கள்
உடலில் நோயை துரத்துங்கள்
ஐம்பதில் இளமையை சுவையுங்கள்
என்று...
கவிதையின் இறுதி வரிகளில் பாலியல் ஆசையால் மனிதன் ஒழுக்கக் கேடுகளில் ஈடுபடும் போது அவனுக்கு விளையும் துன்பங்களையும் புட்டுப் புட்டு வைக்கிறார் இறுதியில் உறவோடு உறவை நிட்டினால் உடலிலிருந்தும் நோயை விரட்டலாம் என மூப்புக்கு மருந்தும் சொல்கிறார்..... இந்த அனுபவம் மிக்க அன்பு இளவல் கவிஞர் செய்தாலி... சொன்னது அததனையும் முக்காலும் ஒப்புக்கொள்ளும் முழு உண்மை...
வாழ்க தமிழ்.
இந்த கிறுக்கலில் 75 /100 இவ்வளவுதான் உண்மை இருக்கா :!#:
அடுத்த கிறுக்கலில் 25 / முயற்சி செய்கிறேன் ஆசிரியரே :)
25 / இந்த இது இல்லாமல் போனது என் வயது மற்றும் அனுபவம் காரணமாக இருக்கலாம் :.”:
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி )((
அதனாலே குத்துப் பழி கொலப்பழிஎல்லாம் பாத்தாச்சு... அதநேனச்சாலே பயமாவும் இருக்கு. :.”: :.”: :.”: :.”: :.”: :.”: :.”:
உங்களுக்காக திரும்பவும் கையில் எடுத்து இதோ 100/100......
அன்புடன்
அப்துல்லாஹ்
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
இது சரிப்படாது கேட்டியளோ மார்க்கு போட்டா போட்டதுதான் உங்க மாணவன்னா இப்படி திருத்தலாமா
சமுதாயமே கேட்க மாட்டிங்களா
சமுதாயமே கேட்க மாட்டிங்களா
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
நேசமுடன் ஹாசிம் wrote:இது சரிப்படாது கேட்டியளோ மார்க்கு போட்டா போட்டதுதான் உங்க மாணவன்னா இப்படி திருத்தலாமா
சமுதாயமே கேட்க மாட்டிங்களா
படிக்கிற நேரத்தில ஆசிரியரிடம் 40 /100 மார்க்குதான் வாங்கி இருக்கேன்
முதல் தடவையா ஆசிரியர் 100 /100மார்க்கு கொடுத்தாங்க
உங்களுக்கு ஏன் இந்த பொறாமை நூற் மார்க்கு என் கனவு
அதுக்கு நீங்கள் இப்படி எதிர்ப்பு கொடி எழுப்புவதே சரியா என் உறவே :!#:
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
அப்துல்லாஹ் wrote:
மார்க்கு போடுறதெல்லாம் மறந்தாச்சு என் அன்பு மாணவரே செய்தாலி...
அதனாலே குத்துப் பழி கொலப்பழிஎல்லாம் பாத்தாச்சு... அதநேனச்சாலே பயமாவும் இருக்கு. :.”: :.”: :.”: :.”: :.”: :.”: :.”:
உங்களுக்காக திரும்பவும் கையில் எடுத்து இதோ 100/100......
அன்புடன்
அப்துல்லாஹ்
சும்மா ஒரு விளையாட்டுதான் சார்
உங்களின் கருத்தே என் மனதிற்கு நிறைவானது
நான் எழுதிய பள்ளிக்காலத்தில் என்னை ஊக்குவித்த
முதல் மாமனிதர் என் தமிழ் ஆசிரியர்தான்
ஆங்கிலத்தில மார்க்குகம்மி
பாடத்தை கவனிக்காம
என்னகவிதை வேண்டிருக்கு
கணக்கே தலைகீழ்
கவிதை ஒருகேடா
இந்த திறமையை
அறிவியலிலும் காட்டு
பரவா இல்லையே
நல்ல எழுதிருக்கியே
சமூகவில் வாத்தியார்
இன்னும் நிறையஎழுது
சிறுபிழைகளை திருத்தி
தோள்தட்டி எழுப்பி
எழுதியதை படிக்கவைத்து
மைபேனா பரிசளித்தும்
வகுப்பு மாணவர்களை
கைதட்ட சொன்னார்
தமிழ் ஆசிரியர்
-செயதாலி கிறுக்கலில் இருந்து
http://nizammudeen-abdulkader.blogspot.com/2010/09/blog-post_08.html
என் தமிழ் ஆசிரியர் மேல் எனக்கு அவ்வளவு மத்திப்பு உள்ளது
நீங்கள் பாராட்டுகையில் அவர் என்னை பரட்டுவதுபோல் உணர்கிறேன்
மிக்க நன்றி ஆசிரியர் பெருந்தொகையே
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
அடப் போப்பா ...செய்தாலி wrote:நேசமுடன் ஹாசிம் wrote:இது சரிப்படாது கேட்டியளோ மார்க்கு போட்டா போட்டதுதான் உங்க மாணவன்னா இப்படி திருத்தலாமா
சமுதாயமே கேட்க மாட்டிங்களா
படிக்கிற நேரத்தில ஆசிரியரிடம் 40 /100 மார்க்குதான் வாங்கி இருக்கேன்
முதல் தடவையா ஆசிரியர் 100 /100மார்க்கு கொடுத்தாங்க
உங்களுக்கு ஏன் இந்த பொறாமை நூற் மார்க்கு என் கனவு
அதுக்கு நீங்கள் இப்படி எதிர்ப்பு கொடி எழுப்புவதே சரியா என் உறவே :!#:
இது தாளைப் பாத்து தர்ற மார்க்கு இல்ல ஆளைப பாத்து தாற மார்க்கு... :.”: :.”: :.”:
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
மூன்றாம் வயிற்றுக்கான ஓட்டம்
தொடரும் நெட்டோட்ட முடிவில்
உதிர்கிறது நல்ல பருவங்கள்
காலச் சக்கரத்தில் விழுந்து
செல்லரித்துச் சிதைந்து விடுகிறது
அந்த நாட்களின் நிகழ்வுகள்
தலை தூக்கும் வாரிசுகள்
உறவுக் கடமைகள் குறைந்து
சற்று இளைப்பாறும் தருணங்கள்
பழுத்து நரைத்த பருவம்
தனிமைகளில் எட்டிப் பார்க்கிறது
அகத்தில் புதைந்த ஆசைகள்
பருவம் மறந்த ஆசைகள்
ஒத்துழைக்க மறுக்கும் உடல்
காலம் போர்த்திய நோய்கள்
ஒவ்வொரு இரவுக்கும் காரணங்கள்
உறவுகளில் விழும் இடைவெளிகள்
காலங்கடக்கும் கட்டில் பந்தம்
இருளை இம்சை செய்யும்
வெட்டங்களை அணைத்த பின்னும்
அணையாமல் கட்டில் ஏக்கம்
அகத்தில் சுவாசமுட்டும் ஆசைகள்
நாளத்தில் ஸ்தம்பிக்கும் குருதி
மௌனமாகிறது துடிக்கும் இதயங்கள்
உறவில் கிட்டா உறவுத் தேடல்
நடுவீதிகளில் நாணம் கெட்டு
எங்கோ வேலிதாண்டும் ஆசைகள்
ஏக்கங்களும் நல்ல தகவல்களும் நிறம்பிய ஒரு கவிதை பாராட்டுக்கள் செய்தாலி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
கவனிக்கிறேன் சார் ம்ம் நடக்கட்டும்அப்துல்லாஹ் wrote:அடப் போப்பா ...செய்தாலி wrote:நேசமுடன் ஹாசிம் wrote:இது சரிப்படாது கேட்டியளோ மார்க்கு போட்டா போட்டதுதான் உங்க மாணவன்னா இப்படி திருத்தலாமா
சமுதாயமே கேட்க மாட்டிங்களா
படிக்கிற நேரத்தில ஆசிரியரிடம் 40 /100 மார்க்குதான் வாங்கி இருக்கேன்
முதல் தடவையா ஆசிரியர் 100 /100மார்க்கு கொடுத்தாங்க
உங்களுக்கு ஏன் இந்த பொறாமை நூற் மார்க்கு என் கனவு
அதுக்கு நீங்கள் இப்படி எதிர்ப்பு கொடி எழுப்புவதே சரியா என் உறவே
இது தாளைப் பாத்து தர்ற மார்க்கு இல்ல ஆளைப பாத்து தாற மார்க்கு...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum