Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..
+8
அப்துல்லாஹ்
kalainilaa
முனாஸ் சுலைமான்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
ஹம்னா
இன்பத் அஹ்மத்
சர்ஹூன்
12 posters
Page 1 of 1
ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..
அன்புள்ள அம்மாவுக்கு,
நான் நலமாய் உள்ளேன். நீ எப்படி இருக்கின்றாய்?
நீ நலமாய் இருக்க மாட்டாய் என்பது எனக்குத்தெரியும் அதனால்த்தான் எப்படி இருக்கின்றாய் என கேட்டேன்.
நான் எப்போதும் நலமாய்த்தான் இருக்கின்றேன் இருந்திருக்கின்றேன் உன் தயவால்.. அதனால் எனது ஆரோக்கியத்துக்கு ஒன்ரும் குறைவில்லை.. ஆனாலும் உன்னை நினைத்தால்தான் தொண்டைவரி எதுவோ வந்து என்னை சுவாசிக்க முடியாமல் செய்துவிடுகின்றது.
அம்மா, நீ இல்லாத ஒரு உலகில் இப்போது நான் ஓரளவு நான் வாழப் பழகிவிட்டேன்.. ஆனாலும் நீ இன்னும் அப்படி ஒன்று பற்றி சிந்திக்க மறுப்பது எனக்கு எப்போதும் ஒரு உறுத்தலாகவே இருந்து கொண்டிருக்கின்றது. நான் ஒரு வேளை சுயநலமிக்க ஒருவனாக மாறிவிட்டேனோ என்ற சுய பச்சாதாபம் இப்போது என்னை அலைக்கழிக்கின்றது. அப்படியா அம்மா?. இப்போதும் நீ, ஏதும் பங்கிடும் போது எனக்கெனவும் எடுத்துவைப்பதாக என் தங்கைகள் சொல்லும் போது நீ எந்தளவு நானில்லா உலகொன்றினை நிராகரிக்கின்றாய் என்பதன் தீவிரம் எனக்கு புரிகின்றது.
ஆனாலும் இது நானோ நீயோ விரும்பி ஏற்ற ஒன்றல்ல. நிர்ப்பந்தம் என்னை இங்கே கொணர்ந்துவிட்டது அது உனக்கும் தெரியும் ஆனாலும் அதிலிருந்து மீள உனக்கு தெரிய வில்லை.
உனக்கு நான் எடுக்கும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்புகளின்போதும் உன் குரலின் நெகிழ்ச்சி என்னை உருக்கிவிடும். அப்போதெல்லாம் எல்லாவற்றையும் அள்ளி எறிந்துவிட்டு உன்னிடமே வந்துவிட வேண்டும் என்று எண்ணுவேன். ஆனாலும் அதன்பின்னான நிஜங்கள் அதற்கு அனுமதிப்பதில்லை.
நீ இன்னும் ஏன் என்னைப்பற்றி அதிகம் கவலை கொள்கின்றாய்? என அன்றொரு தரம் உன்னிடம் கேட்டேன். அதற்கு ஒரு சிரிப்புடன், “ போடா இவரு பெரிய ஆளு” என்றாய். எனக்கு அதற்கப்பால் சொல்ல ஒன்றும் இல்லை. ஒன்றும் மட்டும் புரிந்தது. நான் என்றும் உனக்கு ஒரு கைக்குழந்தையாக / ஒரு சிறுவனாகத்தான் இருக்கின்றேன். எனக்கும் அதுதான் வேண்டும்.
உன்னுடனான் ஒவ்வொரு உரையாடல்களும் எனக்கு முடியும் போது இதயம் கனத்து கண்கள் கசிந்த படியே முடிகின்றன. என் மீதான உன் விசாரணைகள் அதிகமாக இருக்காது. அவை அனேகமாக, “ என்ன சாப்பிட்டாய்?” ஒழுங்கா சாப்பிடுறாயா?” “உடம்ப பாத்துக்கோ” என சாப்பாடு பற்றியோ அல்லது, என் எதிர்காலம் பற்றிய உனது கவலைகளாகவோ , அல்லது நான் வருகின்ற நாள் பற்றிய உன் ஆவலாகவோ இருக்கும். இதையும் மீறி, உனது விசாரணைகள் ஒன்றினையும் நான் கேட்டில்லை. நீ சுகமாக இருக்கின்றாயா என நான் கேட்டால், உற்சாகக்குரலுடன் “ஆமாம்” என்பாய். அது பொய் என்பது எனக்கும் தெரியும் உனக்கும் தெரியும். ஆனாலும் நீ மகிழ்வாய்த்தான் இருப்பதாக நானும் காட்டிக்கொள்வேன்.
உனக்கென நான் இதுவரை எதுவும் செய்யவில்லை என நான் ஒவ்வொருநாளும் குமைந்து கொண்டே இருக்கின்றேன். ஆனால் நீ சொல்லலாம் நான் வாங்கித்தந்த சேலைகள் , நகைகள் பற்றி.. அவை உனக்கான கைமாறுகளா என்றால் இல்லை என்றே நான் சொல்வேன். வேறு உனக்கு என்ன செய்வது என்பது பற்றி இன்னும் எனக்கு குழப்பம் மட்டுமே எஞ்சியுள்ளது அம்மா.
நீ இப்போது எனது திருமணக்கவலைகளில் மூழ்கி உள்ளதாக என் தங்கைகள் என்னைக்கேலி செய்கின்றனர். அதை நான் வினவிய போது அதே கவலைகளுடன் நீ சொன்னாய், உன்ன எனக்கு பிறகு பாக்க ஒருத்தி தேவைதானே என்று. ஐயோ, எப்போதும் என்னையே நினைத்து உன்னை மறந்து போகின்றாயே. முதலில் உன்னைப்பார்த்துக்கொள் அதெல்லாம் இப்போது அவசியமில்லை என்ற என்னிடம் நீ இன்னும் ஒன்றும் சொல்லவில்லை. என்னிடம் வார்த்தைகளில்லை அம்மா..
இனி எனக்கும் எதுவும் வேண்டியதில்லை. உன் கையினால் சாப்பிட்டுவிட்டு, உன்னை திட்டுக்களினை கேட்டவாறே உன் சேலைத்தலைப்பினை பற்றிக்கொண்டே உன் பின்னால், ஒரு மிட்டாய்க்காகவோ அல்லது வேறு ஏதோ புகார் ஒன்றுடனோ சிணுங்கியவாறு அலைந்த அக்காலங்கள் வேண்டும். அதுவும் நீதான் எனக்கு தரவேண்டும்..இன்னும் நான் உன்னிடமிருந்துதான் எதிர்பார்க்கின்றேன் பார்த்தாயா? என்ன செய்வது எனக்கு உன்னிடமிருந்து எதையும் பெற்றுத்தானே பழக்கம்.
ஆனாலும் உன்னிடம் ஒன்று சொல்லுகின்றேன்.. நீ ஒன்றும் கவலைப்படாதே, நான் உன்னை நோக்கி எனது நாட்களினை கடத்துகின்றேன். அதுவரையிலும் நீ காத்திரு..
ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..
சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..
அருமையான கருத்துக்களுடன் பாசமுள்ள அம்மாவுக்கு எழுதிய
அன்பான மடல் அருமை நண்பரே நன்றி பகிர்வுக்கு
அன்பான மடல் அருமை நண்பரே நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..
உன் கையினால் சாப்பிட்டுவிட்டு, உன்னை திட்டுக்களினை கேட்டவாறே உன் சேலைத்தலைப்பினை பற்றிக்கொண்டே உன் பின்னால், ஒரு மிட்டாய்க்காகவோ அல்லது வேறு ஏதோ புகார் ஒன்றுடனோ சிணுங்கியவாறு அலைந்த அக்காலங்கள் வேண்டும். அதுவும் நீதான் எனக்கு தரவேண்டும்..இன்னும் நான் உன்னிடமிருந்துதான் எதிர்பார்க்கின்றேன் பார்த்தாயா? என்ன செய்வது எனக்கு உன்னிடமிருந்து எதையும் பெற்றுத்தானே பழக்கம்.
என் கண்கள் கலங்கி விட்டது சர்ஹூன். இந்த மடலை உங்கள் தாய்க்கும் அனுப்பி வையுங்கள் அவங்க படித்தால் இன்னும் சந்தோஷப்படுவாங்க.
என் கண்கள் கலங்கி விட்டது சர்ஹூன். இந்த மடலை உங்கள் தாய்க்கும் அனுப்பி வையுங்கள் அவங்க படித்தால் இன்னும் சந்தோஷப்படுவாங்க.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..
அப்துல் றிமாஸ் wrote:அருமையான கருத்துக்களுடன் பாசமுள்ள அம்மாவுக்கு எழுதிய
அன்பான மடல் அருமை நண்பரே நன்றி பகிர்வுக்கு
:”@: :”@: :”@: :”@:
சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..
@. @. @.ஹம்னா wrote: உன் கையினால் சாப்பிட்டுவிட்டு, உன்னை திட்டுக்களினை கேட்டவாறே உன் சேலைத்தலைப்பினை பற்றிக்கொண்டே உன் பின்னால், ஒரு மிட்டாய்க்காகவோ அல்லது வேறு ஏதோ புகார் ஒன்றுடனோ சிணுங்கியவாறு அலைந்த அக்காலங்கள் வேண்டும். அதுவும் நீதான் எனக்கு தரவேண்டும்..இன்னும் நான் உன்னிடமிருந்துதான் எதிர்பார்க்கின்றேன் பார்த்தாயா? என்ன செய்வது எனக்கு உன்னிடமிருந்து எதையும் பெற்றுத்தானே பழக்கம்.
என் கண்கள் கலங்கி விட்டது சர்ஹூன். இந்த மடலை உங்கள் தாய்க்கும் அனுப்பி வையுங்கள் அவங்க படித்தால் இன்னும் சந்தோஷப்படுவாங்க.
உண்மையாகவே சந்தோசப்படுவார்கள்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..
அப்துல் றிமாஸ் wrote:@. @. @.ஹம்னா wrote: உன் கையினால் சாப்பிட்டுவிட்டு, உன்னை திட்டுக்களினை கேட்டவாறே உன் சேலைத்தலைப்பினை பற்றிக்கொண்டே உன் பின்னால், ஒரு மிட்டாய்க்காகவோ அல்லது வேறு ஏதோ புகார் ஒன்றுடனோ சிணுங்கியவாறு அலைந்த அக்காலங்கள் வேண்டும். அதுவும் நீதான் எனக்கு தரவேண்டும்..இன்னும் நான் உன்னிடமிருந்துதான் எதிர்பார்க்கின்றேன் பார்த்தாயா? என்ன செய்வது எனக்கு உன்னிடமிருந்து எதையும் பெற்றுத்தானே பழக்கம்.
என் கண்கள் கலங்கி விட்டது சர்ஹூன். இந்த மடலை உங்கள் தாய்க்கும் அனுப்பி வையுங்கள் அவங்க படித்தால் இன்னும் சந்தோஷப்படுவாங்க.
உண்மையாகவே சந்தோசப்படுவார்கள்
நன்றிகள் றிமாஸ்.. ஏற்கனவே இது அவர்களுக்கு அனுப்பிவிட்டேன்.
நன்றிகள் மீண்டும்...
சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..
நான் இந்த மடலை படிக்கும் போது என்னருகில் என் தோழனும் இருந்தான் முடித்தபோது என்னைப் பற்றி எழுதியிருக்கிறார் என்று சொன்னார் அவ்வாறே நானும் உணர்ந்தேன் உணர்வு ரீதியான மடல் மனம் கனக்கிறது எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி அனைவரது நிலையும் சரிவரும் இறைவன் எமக்குத் துணை
Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..
மிகவும் அருமையாக உள்ளது அமைதியாகப் படித்தேன் நானே அம்மாவுக்கு எழுதியதாக உணர்ந்தேன் நன்றி சர்ஹுன்
தாயின் பாதத்தின் கீழ் சுவர்க்கத்தை தேடிக்கொள்ளுங்கள்
தாயின் பாதத்தின் கீழ் சுவர்க்கத்தை தேடிக்கொள்ளுங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..
நேசமுடன் ஹாசிம் wrote:நான் இந்த மடலை படிக்கும் போது என்னருகில் என் தோழனும் இருந்தான் முடித்தபோது என்னைப் பற்றி எழுதியிருக்கிறார் என்று சொன்னார் அவ்வாறே நானும் உணர்ந்தேன் உணர்வு ரீதியான மடல் மனம் கனக்கிறது எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி அனைவரது நிலையும் சரிவரும் இறைவன் எமக்குத் துணை
Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..
மகனின் மனம் இங்கு பேசியது உண்மை .
தாய் இறப்பதில்லை ,உண்மை .
உமது ஒவ்வொரு தொகுப்பும் ஏதோ மனதை நெருடுகிறது .
தொடருங்கள் தோழரே .
தாய் இறப்பதில்லை ,உண்மை .
உமது ஒவ்வொரு தொகுப்பும் ஏதோ மனதை நெருடுகிறது .
தொடருங்கள் தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..
நேசமுடன் ஹாசிம் wrote:நான் இந்த மடலை படிக்கும் போது என்னருகில் என் தோழனும் இருந்தான் முடித்தபோது என்னைப் பற்றி எழுதியிருக்கிறார் என்று சொன்னார் அவ்வாறே நானும் உணர்ந்தேன் உணர்வு ரீதியான மடல் மனம் கனக்கிறது எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி அனைவரது நிலையும் சரிவரும் இறைவன் எமக்குத் துணை
ஒரு படைப்பாளிக்கான நிஜமான சந்தோசம் இது போன்ற அங்கீகாரங்கள்தான் மிக்க மகிழ்ச்சி ஹாசீம்..
நன்றி உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும்
சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..
kalainilaa wrote:மகனின் மனம் இங்கு பேசியது உண்மை .
தாய் இறப்பதில்லை ,உண்மை .
உமது ஒவ்வொரு தொகுப்பும் ஏதோ மனதை நெருடுகிறது .
தொடருங்கள் தோழரே .
நன்றிகள் கலைநிலா
சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..
நண்பன் wrote:மிகவும் அருமையாக உள்ளது அமைதியாகப் படித்தேன் நானே அம்மாவுக்கு எழுதியதாக உணர்ந்தேன் நன்றி சர்ஹுன்
தாயின் பாதத்தின் கீழ் சுவர்க்கத்தை தேடிக்கொள்ளுங்கள்
மிக்க நன்றிகள் நண்பன் .
நீங்கள் சொன்ன வார்த்தை நிதர்சனமானது
சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..
உம்மாவை நினைக்க வைக்க இந்தத் திரி பயன்பட்டது...
என் உள்ளத்தோடும் உணர்வுகளோடு ஒருமித்துக்கலந்துவிட்ட என் தாய் என்னுடன் சிறிது நேரம் என்னோடு அளவளாவிச் சென்றது போல உணர்ந்தேன். நன்றி தம்பி
என் உள்ளத்தோடும் உணர்வுகளோடு ஒருமித்துக்கலந்துவிட்ட என் தாய் என்னுடன் சிறிது நேரம் என்னோடு அளவளாவிச் சென்றது போல உணர்ந்தேன். நன்றி தம்பி
Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..
இந்த கடிதம் படித்ததும் எனக்கு இந்த பாடல் தான் நினைவு வருகிரது
தாய் அழுதாளே நீ வர
நீ அழுதாயே தாய் வர
தாய் அழுதாளே நீ வர
நீ அழுதாயே தாய் வர
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..
என் கண்கள் கலங்கி விட்டது சர்ஹூன்.
அம்மா என்றால் சும்மா இல்லை இன்னும் தாயை மதிக்கதெரியாத மானிடர்கள் பாரில் உள்ளார்கள்.அப்படிபட்டவர்கள் இப்படியான பதிவுகளை பார்க படிக்க வேண்டும் படிக்க வேண்டும்.
தாயின் பாதத்தின் கீழ் சுவர்க்கத்தை தேடிக்கொள்ளுங்கள் :+=+:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..
மிக மிக அழகாக உள்ளது அம்மாவிற்கு எழுதிய கடிதம் :!#: :];:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..
மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் பதிவு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..
@. @. @.பானுகமால் wrote:மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் பதிவு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..
நண்பனின் உண்மையான ஒரு கடிதம் உருக வைத்தது என் கண்களையும் குழிர வைத்தது...
உண்மையான அன்பு என்றும் மறணிப்பதில்லை
அதற்கு உங்கள் கடிதமே சாட்சி...
நன்றி...தொடருங்கள்.
உண்மையான அன்பு என்றும் மறணிப்பதில்லை
அதற்கு உங்கள் கடிதமே சாட்சி...
நன்றி...தொடருங்கள்.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum